ஆங்கில மாதமும் மார்கழியும்..

ஆங்கில வருடப் பிறப்பு

ஆங்கில மாதமும் மார்கழியும்..

ஆங்கில மாதங்களும் மார்கழியும்
***********************************
1)ஜனவரி மாதம்
******************
1)ஜேனஸ் என்ற ரோமானியக் கடவுளின்
பெயரிலான மாதம்.
2)கடந்த காலம்/எதிர்காலம் குறிக்கும்
இரு தலைகளுடன்/சுக வாழ்வினைத்
தரும் கடவுள்.
3)இவள் அருளின்றி சொர்க்கவாசல் நுழைய முடியாது.

பாதகங்கள் தீர்க்கும்
பரமனடி காட்டும்
வேதங்கள் நான்கினுக்கும் வித்தாகும்
கோதை நாச்சியார் அருளிய
30 திருப்பாசுரத்தில் 2 ஆவது பாசுரம்
உணர்த்தும் செய்தியில்...

பாற்கடலில் அழகாகத் துயில்கின்ற
திருமாலின் திருவடிகளைப் பாடி/
நெய்,பால் உண்ணுவதை தவிர்த்து/
விடியற்காலையில் எழுந்து நீராடி/
கண்களுக்கு மை தீட்டாமல்/கூந்தலில்
மலர்களை சூடாமல்/செய்யத்தகாத செயல்களைச் செய்யாமல்/சொல்லக்கூடாத சொற்களைச் 
சொல்லாமல்/முடிந்த உதவிகளைச்
செய்ய/கடைந்தேறும் வழி எனும் இறை
பாதம் அடையும் பாக்கியம் கிட்டும்!

உதாரணமாக...
காசியிலே/கங்கையில் நீராட புண்ணியம்
கிட்டி மோட்சம் கிடைக்குமா என்ற
சக்தியின் சந்தேகம் தீர்க்க/தன்னை கிழவனாக்கி/கிழவியான சக்தி மடியில்
படுத்து/உயிருக்கு போராடிய நிலையில்/
ஒரு வாய் கங்கை நீர் கேட்டு அவவழி போவோரிடம் கேட்க/யாரும் தராத நிலையில்/ஒரு திருடன் முன்வர/அவன் வாழ்நாளில் செய்த நற்செயல் ஒன்றை
கூறி தர்ப்பணம் தர சொல்லி சக்தி கேட்க/
இதோ இப்போது செய்யும் நற்காரியம் தர்ப்பணம் என சொல்லி நீரை கிழவர்
வாயில் விட/இறைவரும் மறைந்து/
சிவ-சக்தி ரூபமாக காட்சி தந்து
திருடனை ஆசிர்வதித்து/மோட்சம்
கிட்டும் என சொன்னதன் அர்த்தம்..
முழு மனதோடு மார்கழியில் செய்யும்
தானம் மோட்சப் பதவி தரும் என்பதாகும்.

2)பிப்ரவரி மாதம்
******************
1)பெப்ரூவா எனும் ரோமானியக் கடவுளின் பெயரிலான /தூய்மை
செய்து கொள்ளுதல் எனும்
பொருள் கொண்ட மாதம்.
2)நாம் புரியாமல் செய்த/தெரியாமல் 
செய்து கொண்டுள்ள/அறியாமல்
செய்யவுள்ள பாவங்களுக்குப்
பரிகாரங்கள் அளிக்கும் கடவுள்.

"மாதங்களில் நான் மார்கழி!" என
கிருஷ்ணன் கூறிய சிறப்பான 
மாதத்தில்/அரங்கனை அன்பினால்
ஆண்டதால் ஆண்டாள் எழுதிய பாடல்
ஐந்தாவதில்....
"மாயனை/வடமதுரை தலைவனை/
யமுனை ஆற்றின் கரையில் 
வசிப்பவனை/ஆயர்களின் குடியில் தோன்றிய விளக்கு போன்றவனை/
பெற்றெடுத்த தேவகி&வளர்த்து விட்ட
தேவகியின் புகழை உலகறியச் செய்த
தாமோதரனை/உடலும், உள்ளமும்
தூய்மையுடன்/தூய மலர்களைத் தூவி/
அவன் புகழை வாயினால் பாடி/
மனதினால் சிந்திக்க/நம் பாவங்கள்
நெருப்பில் விழுந்த பஞ்சு போல
மறைந்து விடும்"!

உதாரணம்....
ராமாவதாரம் எடுக்கும் முன்னர்/
திருமால் தன் பாதுகையைக் கழற்றி/
ஆதிசேஷப் படுக்கையில் வைத்து /
தூங்கி விட/இறைவனின் கிரீடம்
பாதுகையை கீழே இறங்க சொல்ல/
பாதுகை  மறுக்க/இறைவனின் கிரீடம்,
சங்கு,சக்கரமும் ஒன்றாகி துரத்த/
இறைவனிடம் பாதுகை கண்ணீருடன்
சொல்ல/தன் செயலை சிலாகித்த
ஆதிசேஷன் பரதனாக/கிரீடம் 
ராம வனவாச காலத்தில் பாதுகை மேல்
அரசாட்சி செய்யும் பாவ விமோசன
செயலானது;

3)மார்ச் மாதம்
***************
1)மார்ஸ் என்ற போர்க் கடவுளின்
பெயரிலான மாதம்.
2)ஈட்டி/கேடயத்துடன் காட்சி தருபவர்.
3)எதிரிகளை வெல்ல சக்தி தரும் கடவுள்.

தீயிற் பொலிகின்ற செஞ்சுடராழி
திகழ் திருச் சக்கரத்தின் பொறியால்
எதிரிகளை வெல்லும் மாதவன்
சக்தியை எட்டாவது பாசுரத்தில்
ஆண்டாள் விளக்குகிறாள்....

இறைவனைப் பற்றிய பெருமைகளை 
இசைக் கருவிகளால் பாடி/குதிரை
வடிவம் எடுத்து கொல்ல வந்த கேசி
என்ற அரக்கனைக் கொன்ற கேசவனை/
மல்யுத்த வீரர்களைக் கொன்ற தேவாதி
தேவனாகிய கண்ணனை நாம்
வணங்கினால் நமக்கும் பகை வெல்லும்
அருளினை ஆராய்ந்து அருள்வான்;

4)ஏப்ரல் மாதம்
*****-******----**
1)ஏபேரியா என்ற வசந்த கால கடவுளின்
பெயரிலான/திறந்து விடு என்ற
லத்தீன் சொல்லின் பொருளினாலான
மாதம்.
2)ஆண்டின் செழிப்புக்கு வழி 
விடுபவர் எனும் இக்கடவுள் மனதினை
  குளிர வைத்தால் வாழ்க்கையில்
நல்ல திருப்புமுனை தருவார்.,

தூய்மையான மாணிக்க கற்கள் 
இழைக்கப்பட்ட மாளிகையில்/சுற்றிலும் விளக்குகள் எரிய/மணம் வீசும் புகை 
கமழ/பள்ளி கொண்டுள்ள மாயனை
வைகுந்தா/மாதவா எனும் நாமங்கள்
சொல்லி பாட/ஊமை/செவிடு/மந்திரத்தில் பிணைப்பு போன்ற
சிக்கல்களில் இருந்து விடுபடும் 
திருப்பம் வாழ்வில் அமையும் என
ஆண்டாள் ஒன்பதாவது பாசுரத்தில்
எடுத்தியம்பி இருப்பாள்.

உதாரணமாக.....
துறவி ஒருவரை வேலை கேட்டு 
இளைஞன் சந்திக்க/ஊரிலுள்ள
செல்வந்தரிடமிருந்து பொட்டல் நிலம்
2 ஏக்கர் பெற்று தர/பக்கத்து கழனி
உழவனிடம் மாடுகளை கடனாகப்
பெற்று/உழுது/பயிரிட்டு/கட்டாந்
தரையை விளைச்சல் நிலமாக்கி/
ஏழ்மை நிலையை மாற்றி/அவன்
வாழ்வின் திருப்பு முனையை காண
வைத்தது கடவுளின் கருணையே!

5)மே மாதம்
**-----******-*
1)உலகம் சுமக்கும் அட்லசின் மகள்
மேயா என்ற தேவதையின் 
பெயரிலான மாதம்!
2)செல்வ செழிப்பினை வாரி 
வழங்கும் தெய்வமிவள்.

இலக்கியச் செழுமை/கருத்து நயம்/
ஆன்மீகப் பொலிவுடன் பாசுரம் 
வழங்கிய ஆண்டாள் மூன்றாவது
பாடலில் நீங்காத செல்வம் கிடைக்கும் வழியை சுட்டிக் காட்டியிருப்பாள்.

மண்ணை ஓரடியிலும்/விண்ணை
இரண்டாவது அடியிலும்/மாபலி
சக்கரவர்த்தியின் ஆணவத்தை
மூன்றாவது அடியிலும் காலால் அளந்த
வாமன அவதாரத்தில் உத்தமனாக
நின்றவனின் பெயரைப் பாடி/பாவை
நோன்பு தனை மார்கழியில் நோற்க/
வேதம் ஓதும் அந்தணர்க்கு ஓர் மழை,
நீதி பிறழா மன்னனுக்கு ஓர் மழை,
கற்புநெறி தவறாத பெண்டிர்க்கு
 ஓர் மழையென மாதம் மும்மாரி மழை/
(நீலப்புரட்சி)/ஓங்கி வளர்ந்த செந்நெல்
(பசுமைப் புரட்சி)/பால்குடங்களை
நிறைக்கும் பால்வளம் செறிந்த 
பசுக்கள் (வெண்மை புரட்சி)  போன்ற
வளங்கள் ஏற்பட நீங்காத செல்வம்
நிறைந்து/வாழ்வு மேம்படும்!

சுத்தமான/பண்ட பாத்திரங்கள் சத்தமிடாத/தானியங்கள் சிதறாத
அன்பு குறையாத/சண்டை சச்சரவு
இல்லாத/தாய் தந்தை பேணும்
இல்லங்களில் மகாலட்சுமி அருளோடு
நீங்காத செல்வம் நிறைந்திருக்கும்!

எடுத்துக்காட்டாக....
பணக்காரன் ஒருவன் கனவில்
ஓரிரவு மகாலட்சுமி தான் அவன்
 வீட்டை விட்டு போக உள்ளதால்/
கேட்கும் வரத்தை தருவதாக கூற/
அவன் மனைவியிடம் நடந்ததைக் கூற/
மனைவி பத்து வீட்டினையும்/மகள்
100 சவரன் நகையினையும்/மகன்
பீரோ நிறைய பணத்தையும் கேட்கச்
சொல்ல/கனவில் மறுபடி வந்த
லட்சுமியிடம் அவன் அம்மா கேட்கச்
சொன்ன அன்பு நிலைத்திருக்கும் வரம்
கேட்க/மகாலட்சுமி மனமகிழ்ந்து/அவனிடமே தங்க/செல்வந்தன்
நீங்காத செல்வம் கிடைக்கப் பெற்றான்!

6)ஜூன் மாதம்
****-*****--*-***
1)ஜூனோ என்ற இளமை தேவதையின்
பெயரிலான மாதம்!
2)பெண்களின் வாழ்வு சிறப்படைய
வரம் அருள்பவள்.

15 வயதிலே /மணப்பெண் கோலத்திலே/
ஸ்ரீரங்க கோயில் கருவறையில்
அரங்கனோடு ஐக்கியமான ஆண்டாள்
தன் முதலாவது பாசுரத்தில்...
இறைவனை அடையும் தலைசிறந்த
வழியாக மார்கழி மாதமெனும்
மார்க்கசீர்ஷத்தில்...
கூர்மையான வேலாயுதம் உடைய
நந்தகோபன்/அழகான கண்களை 
உடைய யசோதையின் 
மகனும்/இளஞ்சிங்கமும் ஆகிய
ஒளி வீசும் நிலவு முகம் உடைய 
நாராயணனை மார்கழி மாத நன்னாட்களில் நீராடி/வணங்க/
கேட்கும் பொருட்களை வழங்கும் அருள்/
உலகத்தார் புகழும் வண்ணம் நம்
வாழ்க்கையை அமைப்பான் என்ற
சிறப்பு கூறப்பட்டுள்ளது.

உதாரணமாக.....
தயிர் விற்கும் ஒரு பெண்/கடவுளை
 நம்பி வணங்கினால் வேண்டுவன
கிட்டும் என உபன்யாசம் கேட்டதன் படி/
வெள்ளம் பெருக்கெடுத்த நாளில்
இக்கரையிலிருந்து அக்கரை செல்ல
கூடையை தூக்கிய படி ஸ்ரீராமஜெயம்
சொல்லிய படி ஆற்றில் கால் வைக்க/
ஆற்று நீர் வழி விட்டு/அக்கரை
சென்று தயிர் விற்று திரும்பினாள்
என்பது கடவுள் பெண்மை நம்பி
அழைக்க/வரம் அருளுவான் /சிறப்பு
தர செய்வான்.

7)ஜுலை மாதம்
*****************
1)குவிண்டிலிஸ் என்ற சந்தோசக்
கடவுள் பெயரிலான மாதம்.
2)ஜூலியஸ் சீசர் பெயரால் வழங்கப்
பெற்று/ஜூலி என அழைக்கப்பட்டு/
19ஆம் நூற்றாண்டில் ஜூலை என
அழைக்கப்பட்டது.

ஆண்டாளின் 4வது பாசுரத்தில்
"கடலில் மூழ்கி/நீரை முகந்து/ஊழிக்காலத்திலும் அழியாத திருமால்
கரிய நிறம் போல மேகமாக மாறி/
பத்மநாபன் கையிலுள்ள சக்கரம் போல
மின்னலென மின்னி/வலம்புரிச் சங்கு
போல இடியாக ஓசையிட்டு/சாரங்கம்
எனும் வில்லிலிருந்து புறப்படும் அம்பு
போல இடையறாது மழை பொழிய/
மார்கழியில் நீராடி/மாதவனை 
வணங்க/மகிழ்ச்சி நிலைக்கும்  என
சந்தோசம் கிடைக்க வழியாக 
கூறப்பட்டுள்ளது!

உதாரணமாக....
தமிழுக்கு கதியெனும் இருவரில்
கம்பர்(இன்னொருவர் திருவள்ளுவர்)
தன்னிடமுள்ள/யாரும் தந்திராத
பொருளினை மகாவிஷ்ணுவிற்கு தர
நினைக்க/பாலாபிஷேகம் செய்ய பால்
தருவதில்.. பாற்கடல் வாசனுக்கு அப்பரிசு
சரியாகாது /பட்டு வழங்கலில்...பட்டு
பீதாம்பரிக்கு சிறிய பரிசது என 
நிராகரித்து/அலங்கார நகை ...லட்சுமி
தேவியே மார்பில் இருத்தியவனுக்கு
இது எம்மாத்திரம் என எண்ணி 
நினைத்ததை விட்டு விட/நிலம்...மூவடி
வைத்து விண்ணை,மண்ணை அளந்த,
நிலமகளின் புதல்வனுக்கு அப்பரிசும்
பொருந்தாது என விலக்கி/யாரும் தர 
முன் வராத..தன்னிடம் அதிகமாகவுள்ள
"அறியாமை"எனும் பரிசினை அகமகிழ்ந்து வழங்கி/சந்தோசக் கடலில்
திக்குமுக்காடினார்.

8)ஆகஸ்டு மாதம்
******************
1)அகஸ்டஸ் சீசர் எனும் ரோமானிய 
மன்னரை பெருமைப்படுத்துபவரின்
பெயரிலான மாதம்.
2)ராஜ்யம் ஆளும் தன்மை தரும் மாதம்.

தமயந்தி  நளனையும்/மகாலட்சுமி
மகாவிஷ்ணுவையும் அடையக்
காரணமாக இருந்த நோன்பு நோற்க
சிறந்த பாடல்களாம் பாசுரத்தில்.....

3ஆவது பாசுரத்தில்..
மாபலியை மூவடியால் ஆளுமை செய்த
வாமன அவதார பெருமையும்,

5வது பாசுரத்தில்...
மாயன்/வடமதுரை மைந்தன்/யமுனை
துறைவன்/ஆயர்குலத்தோரை அன்பினால் ஆளுமை செய்த கிருஷ்ண
அவதாரம் சிறப்பும்....

10வது பாசுரத்தில்...
இராவணனின் தம்பி கும்பகர்ணனை
யமனின் இடம் செல்ல வைத்த 
இராம அவதார மகிமையும்
அழகாக கூறப்பட்டுள்ளது!

எடுத்துக்காட்டாக...
குந்தி தேவியிடம் கிருஷ்ணன்
"அத்தை!வரம் கேள்! தருகிறேன்!
குருஷேத்திரப் போர் முடிவுற்றதால்/
அஸ்தினாபுரம் செல்லவுள்ளேன்!"
எனக் கூற/அவள் கலங்க/"நீ நினைக்கும்
நேரம் நான் உடனே வருவேன்!"என
மீண்டும் கூற/குந்தியோ" கிருஷ்ணா!
எனக்கு தினம் ஒரு துன்பம் கொடு!
அப்போது உன்னை நினைக்க/நீயும்
வர/உன்னுடன் இருக்கும் சந்தர்ப்பம்
கிடைக்கும்!"என சொல்ல/கிருஷ்ணன்
சிரித்து "உன் அன்பால் ஆள்கிறாய்
அத்தை! "என சொல்கிறான்.

9)செப்டம்பர் மாதம்
*********************
1)செப்டம் என்ற ரோமானிய மொழியில்
பிறந்து/சப்தம் என்ற சமஸ்கிருத 
அர்த்தம் தரும்/9ன் பெருக்கற்பலனில்
அதன் கூட்டுத்தொகை 9ஆக இருப்பது
போல இறைவனோடு ஒன்றியிருத்தல்
அவசியமென உணர்த்தும் மாதம்.

பாசுரம் 27 ல்.....
நல்வழிக்கு வராத பகைவர்களை
வெல்லும் சிறப்புடையவனை கோவிந்தா
என அழைத்து/நாட்டு மக்கள் வியக்கும் படியான சூடகம்/தோள்வளை/தோடு/
செவிப்பூ/பாடகம் எனும் அணிகலன்கள்
அணிந்து/புத்தாடை உடுத்தி/
நெய்யூற்றிய பால் சோறு முழங்கை வழிய/உன்னோடு கூடியிருந்து/உண்டு/
உள்ளம் குளிர்வோம்...
என இறைவனோடு கூடியிருத்தலையும்...

பாசுரம் 28ல்...
குறை ஒன்றுமில்லாத கோவிந்தனே!
உன்னோடு எங்கள் உறவு யாராலும்
பிரிக்க முடியாது...என சொன்னதிலும்...

பாசுரம்29 ல்....
நாங்கள் ஒன்று கூடி வந்திருப்பது
அருள் செய்யும் மோட்ச உலகை
பெறுவதற்காக அல்ல/
இன்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்
உன்னோடு நட்பு கொண்டு/உனதருகில்
இருந்து/தொண்டு செய்ய 
விரும்புகிறோம்...என கூறியிருப்பதிலும்
இறைவனோடு ஒன்றியிருத்தல்
தெளிவாக கூறப்பட்டுள்ளது!

எடுத்துக்காட்டாக...
உத்தாலகர் தனது மகன் சுவேதசேதுக்கு
கடவுள் சிறப்பு பற்றி கூறுகையில்/
பாத்திரத்து நீரில் உப்பினைக் கலக்கி/
உப்பு கரைந்து நீர் முழுதும் வியாபித்து
உள்ளது போல/இறைவன் நம்மோடு ஒன்றியுள்ள தன்மையை  குறிப்பிட்டு
சொல்ல இயலாது/நீக்கமற நிறைந்து
இருப்பவன் என விளக்கம் 
அளித்திருப்பார்!

10)அக்டோபர் மாதம்
**********************
A)அஷ்டம் என்ற சமஸ்கிருத 
வார்த்தையிலிருந்து பிறப்பான  மாதம்.
B)திருமாலின் பத்து அவதாரங்கள்
விளக்கமாக அறிவுறுத்தும் மாதம்.

1)மச்ச அவதாரம்.....
முதலாவது பாசுரத்தில்...
"ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்
சிங்கம்"என்ற வரியினில்
மச்ச அவதாரம் கூறப்பட்டுள்ளது.

2)கூர்ம அவதாரம்....
நான்காவது பாசுரத்தில்...
"ஆழியில் புக்கு முகந்த...
ஊழி முதல்வன்"...என கூறுகையில்
ஆமையாக நின்று /மேரு மலை கடைய/
தேவர்களுக்கு அமிர்தம் கிடைக்க
உதவிய கூர்ம அவதாரம் பற்றி
கூறப்பட்டுள்ளது.

3)வராக அவதாரம்....
இருபதாவது பாசுரத்தில்....
பூமாதேவியை பாதாளத்தில் இரண்யன்
வைக்க/வராக அவதாரம் எடுத்து/
மீட்டெடுத்து/ஆதிசேஷன் மேல் வைத்து/
தன் இரு கண்களிலிருந்து அரச மரம்/
துளசி செடி படைத்து/மேனி வியர்வை
கொண்டு நித்திய புஷ்கரணி தீர்த்தம்
படைத்து/தேவர்கள்&மக்களை படைக்க/
"முப்பத்து மூவர் அமரர்க்கு முன்
சென்று கப்பம் தவிர்க்கும் கலியே!"
எனும் வரிகளில் தெளிவாகியிருக்கும்.

4)நரசிம்ம அவதாரம்...
23வது பாசுரத்தில்....
"காயாம்பூ நிறமுடைய இறைவனை
அவன் குடி கொண்டுள்ள கோயிலிலிருந்து பிரகலாதன் பக்திக்கு
இரங்கி/தூணிலிருந்து/மூரி நிமிர்ந்து/
பிடரி மயிர் சிலிர்க்க/நாற்புரமும் 
கர்ஜனை செய்து/கண்களில் தீப்பொறி
பொங்க/மழைக்காலம் முடிய/
வந்த நரசிம்மம் போலே வெளியே
 வந்து/பக்தர்களின் மனமெனும் அரியாசனத்தில் அமர்ந்து/
வந்த காரியம் என்ன என்பதை
ஆராய்ந்து அருள் செய்க.....எனும் 
நரசிம்ம அவதாரம் சொல்லப்பட்டுள்ளது.

5)வாமன அவதாரம்....
24வது பாசுரத்தில்....
"அன்று இவ்வுலகம் அளந்தாய்
அடி போற்றி!" எனும் வரிதனில்
மாபலி சக்கரவர்த்தியின் ஆணவம்
அடக்க வாமன அவதாரம் எடுத்து வந்து/
திரிவிக்கிரமனாய் உலகளந்த
பெருமானின் பெருமை கூறப்பட்டது.

6 & 7 )பரசுராம/ராம அவதாரம்.....
தந்தை ஜமதக்னி முனிவர் பணிக்க/
தாய் ரேணுகாதேவி தலையைக்
கொய்தவன் பரசுராமன்/
தந்தை தசரதன் ஆணையிட 14 வருடம்
 வனவாசம் மேற்கொண்டவன் ராமன்.
12 வது பாசுரத்தில் ...
"சினத்தினால் தென்னிலங்கை
கோமான் இராவணனைக் கொன்ற
இராமனின் புகழை பாடுவோம்"என
கூறப்பட்டுள்ளது.

8)பலராம அவதாரம்....
17வது பாசுரத்தில்....
எளியவர்களுக்கு உடை/தண்ணீர்/
உணவு வழங்கும் நந்தகோபர்/
பெண்களுக்கு தலைவியான யசோதை/
தேவர்களின் தலைவன் கண்ணனை
எழுப்பி விட்டு/செம்பொன்னாலான
வீரக் கழலணிந்த பலதேவனை 
துயிலெழுப்பும் பாசுரமாக அமையப் பெற்றது.

9)கிருஷ்ணாவதாரம்.....
25 வது பாசுரத்தில்...
கம்சனின் சிறையிலிருந்த வசுதேவன்
மனைவி தேவகிக்கு மகனாகப் பிறந்து/
அதே இரவில் ஆயர்பாடி நந்தகோபர்
மனைவி யசோதையிடம் வந்து
சேர்ந்து மகனாக வளர்ந்தவன் கிருஷ்ணன் எனும் அவதார நிகழ்வு கூறப்பட்டுள்ளது!

10)கல்கி அவதாரம்...
30 வது பாசுரத்தில்...
கடமை தவறுதல்/வாழ்க்கை நெறி தவறுதல்/ஒழுக்கம் பிறழுதல்/
ஏமாற்றி பிழைத்தல்/வெளி வேஷமிடல்
அதிகமாக/திருமால்/ அந்தணருக்கு
தேவதத்தன் எனும் மகனாக/வெண் குதிரையிலேறி/உருவிய வாளுடன்/
கலியுகத்தில் அவதரித்து/அக்கிரமம்
அழித்து/சங்கத்தமிழ் மாலை 30ம்
தப்பாமல் சொல்பவர்/நான்கு தோள்கள்,
சிவந்த கண்கள்/அழகான முகமுடைய
திருமாலால் அருள் பெற்று/இன்புற்று/
அறம் நிலைநிறுத்தி/வாழ்வார்கள்
என்று விளக்கப்பட்டுள்ளது!

11)நவம்பர் மாதம்
*******************
25வது பாசுரம்...
மனிதனாகப் பிறந்தவருக்கு ...
ஒழுக்கம்/அமைதி/தியாகம்/தர்மம்/
சத்தியம்/விவேகம்/விட்டுக் கொடுத்தல்/
வீரம்/வளைந்து போகுதல்/ஞானம்/
பெரியோரை மதித்தல்...எனும்
11 குணங்கள் தேவை!
அக்குணமெல்லாம் நிரம்ப பெற்றவர்கள்
"இறைவனின் திருத்தக்க செல்வமும்/சேவகமும் பாட/வருத்தமும் தீர்ந்து/
மகிழ்ச்சி பெறுவர்"என்று கூறப்பட்டது.

உதாரணமாக....
இந்திரன் தனக்கு ஒழுக்கம் பெறும் 
பொருட்டு பிரம்மனை அணுக/
இரணியன் மகன் பிரகலாதனிடம் 
போகச் சொல்ல /பிரகலாதனும்
இந்திரனின் பணிவிடையை ஏற்று/
நிஷ்டையில் அமர/அவரிடமிருந்து
ஒளிப்பிழம்பாக அமைதி/ஞானம்/வீரம்/
செல்வம்/தர்மம்/சத்தியம்/விவேகம்/என அத்தனையும் விலகி/ இறுதியில்
பெரிய ஒளிப்பிழம்பாக ஒழுக்கத் 
தேவதை வெளி வந்து /இந்திரனிடம் செல்ல/நடைப்பிணமானான் பிரகலாதன்.
ஒழுக்கத்தின் சிறப்பு அத்தகையது /
உயிரையும்  விட மேம்பட்டது என்றும்
விளக்கப்படுகிறது!

12)டிசம்பர் மாதம்
*******************
30வது பாசுரத்தில்...
ஆண்டாளின் பாசுரங்கள் முப்பதும்
உரைப்பவரோ/கேட்பவரோ
திருமாலின் அருள் பெற்று இன்புற்று
வாழ்வார்கள் என கூறப்பட்டுள்ளது!

மாதங்களும்/வருடங்களும்/நாமம் கூறி/
இறைவனை பணிந்து அவனை ஒழுகுதற்கே என்பதை தான்...
பெரியாழ்வார்...
"அப்போதைக்கு இப்போதே சொல்லி
வைத்தேன் நாராயணா!" என்கிறார்.

திருமங்கை ஆழ்வாரும்....
"நலம் தரும் சொல்லை நான் கண்டு
கொண்டேன் நாராயணா!"என்கிறார்.

தொண்டரடிப் பொடியாழ்வாரோ...
பச்சை மாமலைப் போல் மேனி
பவளவாய் கலச் செங்கண்
அச்சுதா! அமரரேறே!....
இச்சுவை தவிர யான் போய்
இந்திரலோகம் ஆளும் 
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகருளானே!" என்கிறார்.

பட்டினத்தார் சொன்னது போல்...
"ஓ!மனமே! காலன் வருமுன்னே
கண் பஞ்சடை ஆகும் முன்னே
பாலுன் கடைவாய் ஒழுகும் முன்னே
மேல் விழுந்து உற்றார் அழும் முன்னே
ஊரார் சுடும் முன்னே
இறைவனை நாடு!"என்பதன் படி
புவியில் உள்ள நாட்களில்/இறைவனை
நினைத்து/வாழ்க்கை கடலில்
புண்ணிய அலைகளை இன்முகத்தோடு
எதிர்கொள்வோம்!

ஆண்டவள் திருவடிகளே சரணம்!
எம்பெருமான் திருவடிகளே சரணம்!

-முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி குணசேகரன்,
வாலாஜாப்பேட்டை..