அறிஞர் அண்ணா அறிவுச் சுடர் விருது 64

அறிஞர் அண்ணா அறிவுச் சுடர் விருது 64

அறிஞர் அண்ணா என்னும் ஆகாயம்..

கண்ணியமான அரசியல் ஆளுமையாய்
காஞ்சிநகரில் உதித்த கதிரவனாம்
தமிழ்நாடென பெயரைச் சூட்டி
தமிழ்நாட்டிற்குத் தந்தையானவராம்!

முற்போக்கு முதல்வராய்
முத்தமிழை முன்னிறுத்தி
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
காத்து நின்ற உத்தமராம் !

தம்பிக்குக் கடிதங்கள்
தனித்தமிழில் தானுரைத்து
திரையுலகில் முத்திரை பதித்த
திராவிட இனத்தின் தலைவராம் !

பெரியாருக்குத் துணை நின்று
பெருஞ்சாதனைகள் பல படைத்து
சுயமரியாதை திருமணங்களை
சட்டத்தால் அங்கீகரித்தவராம் !

மும்மொழிக் கொள்கை விலக்கி
இருமொழிக் கொள்கையே இலக்காய்
அறிவுலக மேதையாய் ஆற்றலுடன்
அரசியலில் ஆளுமை செய்தவராம் !

பேச்சாற்றலுக்கும் எழுத்தாற்றலுக்கும்
இலக்கணங்கள் இயற்றியவராம் 
மக்களாட்சி தந்த மனிதநேயரை
மண்ணுலகம் மதித்துப் போற்றுமே.... !

முனைவர் சி.முத்துமாலை
சென்னை.