அண்ணா என்னும் ஆயிர சூரியப் பேரொளி

அறிஞர் அண்ணா அறிவு சுடர் விருது கவிதை போட்டி

அண்ணா என்னும் ஆயிர சூரியப் பேரொளி

அண்ணா என்னும் ஆயிர சூரியப் பேரொளி

காஞ்சியில் பிறந்த கருப்பு பட்டு,
அவர் பேர் சொன்னாலே அதிரும் திசைகள் எட்டு!

வறுமையிலும் வாடாத பூ ஒன்று,
கல்வி கற்றுக்கொண்டதாம் எழுந்து நின்று!
நடுத்தர வர்க்கமும் 
நாடாளும் வென்று!
மார்தட்டி சொல்லடா
அது அறிஞர் அண்ணா என்று!

அடுக்குமொழி பேசி
அரங்கையே ஆள்வார்,
எதிர்கட்சி தான் நமக்கு எதிரி கட்சி இல்லை என்பார்!

தாய்மொழி மீது தனித்த பற்றுண்டு,
அதனாலே மாற்றினார் மதராஸை தமிழ் நாடு என்று!

காங்கிரஸை தோற்கடித்த திராவிடர்,
ஆனால் காமராசர் தோள் சேர்ந்த நல்லவர்! 

 பெரியார் கொள்கையை கடைப்பிடித்தார்,
பின் முரண் பட்டு அவருக்கே எதிராய் கொடிப்பிடித்தார்! 

வந்த தடம் மறக்காத
மாமனிதர்,
பதவி ஏற்கும் முன்
பெரியாரின் வீட்டு படி ஏறி ஆசி பெற்ற முதன் திராவிட முதல்வர்!

இந்தி திணிப்பை நேரடியாய் எதிர்த்தார்
பாராளுமன்றத்தில் நேருவுக்கே முன் நின்று தன் பேச்சால் வெளுத்தார்!

ஏழைகளுக்கு சென்று சேரும் பல நலதிட்டங்கள் போட்டார்!
ஜன நாயகம் வென்று தழைக்க 
மக்களின் தேவை கேட்டார்!

அவர் ஆயிரம் சூரிய பேரொளி,
நாம் என்றும் நடப்போம் அவர் வழி!

தமிழன் என்றோர் இனமுண்டு,
அவருக்கென தனியே குணமுண்டு,
தமிழ் நாடென்னும் திராவிடத்தில்
எப்போதும் அண்ணாவுக்கு தனி இடமுண்டு!

- கனிமொழி விஜயகுமார்,
சென்னை