உலக சகிப்புத்தன்மை தினம்... சிறப்பு கவிதை
உலக சகிப்புத்தன்மை தினம் கவிதை
உலக சகிப்புத் தன்மை தினம்!
தந்தை தவறை ,தாய் பொறுத்து சகிக்க,,!
பிள்ளைகள் தவறை,
தந்தை,பொறுத்து சகிக்க,!!
வலியவர்தவறை! எளியவர் பொறுத்து சகிக்க!
கள்வனின் தவறை
இழந்தவன் சகிக்க!
மாணவர்கள் தவறை ஆசியர் பொறுத்து சகிக்க!
அரசியல் வாதிகள் ,அதிகாரிகள் தவறை,, பொதுமக்கள் பொறுத்து சகிக்க,,!
பொதுமக்கள், தவறை!!பூமி பொறுத்து சகிக்க!
பாவமன்னிப்பு என்றபோர்வையில்
சாமிகளே! நம்மைசகிக்கவே!!
பூமியே சந்தோஷத்தில் இயங்குகிறது!
சகிப்புத்தன்மை !
சில சின்ன சின்ன தவறுகளை பொறுத்துக் கொள்ளுதல்,,!
சகிப்புத்தன்மையில் சந்தோஷப்பட்டு! திரும்ப திரும்ப தவறுகள் செய்யாது பயணிப்போம் !!
உலக சகிப்புத்தன்மை தின வாழ்த்துக்கள்!
கவிதை மாணிக்கம்!

Comments (0)