நான் ரசித்த கவிதைகள் கவிஞர்கள்...

தங்கேஸ் கவிதைகள்

நான் ரசித்த கவிதைகள் கவிஞர்கள்...

நான் ரசித்த கவிதைகள்  கவிஞர்கள்

ஜான் கீட்ஸ்(1795. - 1821

ஆங்கில இலக்கியத்தில்ஜான் கீட்ஸ்
 இவரது கவிதைகளுக்காகவே இவரை   ஷேக்ஸ்பியருக்கு அடுத்து இரண்டாமிடத்தில் வைத்து கொண்டாடுகிறார்கள் இலக்கிய மேதைகள்.

இவர் இருபத்தி ஐந்து ஆண்டுகளே இந்தப்பூமியில் வாழ்ந்தார். அதற்குள் அவருக்கு ஏற்பட்ட இழப்புகள் ஒன்றா இரண்டா? அவரை ஷயரோகம்  என்ற நோய்  கடுமையாக தாக்கியது அப்பொழுது ஒரு உயிர்க்கால்லியாக இருந்தது
 அடுத்தது காதல் நோய்   உயிராய் காதலித்த பெண் இவர் நோய் அறிந்து இவரை விட்டு விலகினாள் .அவரோ இந்நப்பிரிவு  இவரது மரண ஒத்திகை என்றார் .

,துன்பங்கள் தனித்து வருவதில்லை .அடுத்தது இவரது நிழலென உயிர்த்திருந்த   சகோதரன் டாமின்  மரணம் ,,பிறகு வாழ்க்கை என்பது ஒரு சாபமானது இவருக்கு.

 உலகில்இத்தனை இப்பிற்கும்  மத்தியிலும்  கவிதைமட்டுமே்அவருக்கு உயிர் கொடுத்துக்கொண்டிருந்தது
.உலகை அதன் சப்தங்களை அதன் அர்த்தங்களை  கவிதை  வழியாகவே கடந்து அவர் சென்றார்,அணையப்போகும் விளக்கு சுடர் விட்டு பிரகாசிப்பது போலகடைசி இரண்டாண்டுகளில் மகா கவிதைகள்  எழுதிச்சென்றார்.அந்த ரொமாண்டிக் கவிஞர்(பத்தொன்பதாம்  நுரற்றாண்டு கற்பனை வாதக்கவிஞர்களின் கடைசி மகா கவி)

 கவிதை பிறந்த கதை  (ஓட்  டு எ நைட்டிங்கேல்,,,,)

   இது ஒரு உலகப்புகழ் பெற்ற கவிதையாகும்
லண்டண் அருகில் ஹேம்ஸ்ட்டட் என்ற இடத்தில் நண்பர் சார்லஸ் ப்ரவுண் என்ற நண்பரின் வீட்டு முற்றத்தில் அமர்ந்திருக்கிறார். எப்பொழுதும் ஏழுதுவதற்கு கை  நிறைய வெற்றுத்தாள்கள்  கைவசம்உண்டு அப்பொழுதுகத்துகிறது. நைட்டிங்கேல் (இனிமையான  குரல் கொண்ட பறவை நம் ஊர்குயில் போல)
கவிஞருக்கு இந்த உலகத்தை விட்டுப்போய் விட இதை வட அருமையான சந்தர்ப்பம் இனி அமையாது.
அந்த நைட்டிங்கேல் கொடுத்து வைத்தது ஒரு மாகா கவிதைக்கு அது கருவாக இருந்திருக்கிறது.

அந்த பறவை  பறந்த பின்வீட்டிற்குள் நுழைந்த கவிஞரின் கைகளிலிருந்த வெள்ளைத்தாட்கள் எல்லாம் இப்பொழுது கவிதையாய் நிரம்பியிருந்தன என்று பின்னாட்களில் நினைவு கூர்ந்தார் அந்த நண்பர்.

இதோ அதிலிருந்து சில வரிகளின் தமிழாக்கம்

ஓ நைட்டிங்கேல் பறவையே,,,,,
உன்னுடைய பாடலைக்கேட்டு
என் இதயம் விம்மித்துடிக்கிறது,,

என் இதயத்தை மீண்டும் இந்த பூமிக்கே
கொண்டு வராத அல்லது
ஒரு போதும் காயம் பட்ட மனதுக்கு சுய உணர்வைத்தாராத

காலத்தை மறக்கடிக்க கூடிய 
அந்த ஹெம்லாக் போதை மருந்தை 
நான் உட்கொண்டதை விடவும்

அல்லது  பூமிக்கு வெகுஆழத்தில் ஓடுகின்ற 
லெத்தே  நதி
இறந்தவர்களின் கடந்த கால நினைவுகளை 
ஒரு முழ்குதலிலேயே 
மறக்கச்செய்வதை விடவும்  

உன்குரல்காந்தக்குரல் 
 என்னை  மறக்கச் செய்கிறது 
என்னை இந்த உலகையே

ஓ ஈடில்லாத போதையே

பூமியின் ஆழத்தில்  வெகு காலத்திற்கும் முன்பே
புதைக்கப்பட்டு
பூக்களின்கவர்ச்சிக் கடவுள் அந்த ப்ளோராவின் இதழ்களை
 விட போதை தரும் மகாபோதையே
உன்னை நான காற்றில் அணைத்து சிலிர்க்கறேன்

வசந்தத்தின் பாடலை விட உற்சாகமானது இது
ஒரு குளியலிலே  வாழ்நாள் முழுமைக்கும் முக்தி தரும்
 கிரீஸின் ஹிப்போ கிரின் நதி குளியலுக்கும் மேலானது இது்
 உனது பாடல்

உன் குரலைநான் என்னவென்று புகழ,,,

வாயகன்ற கண்ணாடிக் குடுவையில் 
பொங்கி வழிகிறது
அடர் இரத்த நிறத்தில் ஊற்றப்படும்
அந்த மது எனும் திரவம்

 குடுவையின் வாயருகில் 
அது நுரைத்துப் பொங்கி  
சிறிய சிறிய மது முட்டைகளாகி
போதையில்
தன்னைத்தானேதலை  உடைத்து
 காற்றில் கரைகிறது
அருந்தும் உதடுகளின் இடைவெளியின்  வழியே

நானோ அதை அருந்தி விட்டு
ஒரு   மறையும் போதையாகி
உலகில்  யார்கண்ணிலும் பட்டுவிடாமல
உன்னுடனே பறந்து வருகிறேன் கானகத்துக்கு

கூட்டிச்செல்வாயா  என் ப்ரிய சகியே,,,,

                       தங்கேஸ்

(தங்களின் கருத்துக்களைக்கூறவும்)