அம்பேத்கர் கவிதை 014

அறிவர் அம்பேத்கர் விருது கவிதைப் போட்டி

அம்பேத்கர் கவிதை 014

புரட்சியாளர் அம்பேத்கர்

அண்ணலாக வந்து நம் இன்னலை போக்கிய- எந்தையே,

ஆண்டான்அடிமை முறையை 
மாற்றியது ,நீ செய்த விந்தையே,

இந்திய அரசியல் அமைப்புச் 
சட்டத்தின் தந்தையே,

ஈடில்லா பொருளாதார பற்றி சிந்தித்தது உன் சிந்தையே,

உலகம் வியக்கும் கல்வியாளன் 
அமர்ந்து படித்ததோ கோணிக்கந்தையே,

ஊக்கத்தை தருவதில் உன் பேச்சுக்கும் உள்ளது உடந்தையே,

எத்தனை எத்தனை பட்டங்கள் 
பெற்றாய் நீ படித்து,
 
ஏற்றம் தரும் சட்டதிட்டங்கள் 
வந்தன உன்னால் வகுத்து ,

ஐயமின்றி சொல்லலாம் சமூக சீர்திருத்தமே நீ முன்மொழிந்த கருத்து,

ஒன்றே குலம்- மனிதகுலம்  என்பதை சொன்னாய் நீ- உரத்து,

ஓதுவதில் சிறந்து சட்டத்தில் 
வடித்தாய் பல - சரத்து,

ஒளவை வழி வாழ்ந்து எங்களுக்கு 
கிடைத்த நீ - நல் முத்து,

இஃது போல் மனிதன் உண்டா என வியக்கும் நீ - எங்கள் சொத்து.

பெயர்: மு.நந்தினி, வயது :17,
வகுப்பு :12 ,
பாலினம் :பெண், திருவண்ணாமலை,
கைப்பேசி: 8610878502.