ம்ம்.. ம்ம்...

காதல் கவிதை

ம்ம்.. ம்ம்...

அன்பே எனக்கு
 அதிகம்  பிடித்திருப்பது
உன் உரையாடல் அல்ல
 ஆனால்
அதை நீ முடிக்கும் போது
உச்சரிக்கும்
இரண்டு ம் ம் க்களுக்கும் பின்னால்
எப்போதும் தாவி வந்து கொண்டிருக்கும்
அந்த இரண்டு
முயல்குட்டிகள் தான்


-தங்கேஸ்