தாயின் கண்ணிர் துளிகள்...

தாயின் கண்ணிர் துளிகள்...

தாயின் கண்ணீர்வரிகள்

என் வயிறு எரியுதம்மா! விறகுஇல்லா கொள்ளியாட்டும்!

என் உசுரு பதறுதம்மா !இடியில் பட்ட உடலாட்டம்!!

பட்டுப்பாவாடை எடுத்து !படபடத்து பள்ளிக்கு போன யம்மா!!

நீ வேண்டியதை கேட்ட அனுப்பு!
 வர்ற புள்ளைங்க கிட்ட நான் கொடுத்தனுப்ப! நேத்து வேற நல்லாத்தான பேசணும்மா !
நேற்று இரவு நடந்தது தான் என்னம்மா!!

நீ சொல்லாம படுத்திருக்க !உன் தேகமெல்லாம் சிதைந்து கிடக்க!

பள்ளிக்கூடம் கட்டி இருக்காங்னுதானம்மா !
அனுப்பி வச்சேன்!

கொல்லி குடம் உடைக்க வச்ச! கொடூர காரங்க பள்ளி ,எதுக்கு வச்சான்!!

உன் பிஞ்சு முகத்தை பார்க்கையிலே !
அந்த நேரம் நான் இருந்தா! வீரத்தமிழச்சியா! விதைர நானும் புடுங்கிருப்பேன்!

 செல்ல மக நீயோ! சின்ன புள்ள!
பயிரில்லா காட்டுக்குள்ள! பட்ட முயலாட்டம்! வெறிநாய் துரத்தி வர வேகம் கொண்டு ஓடினையோ!!
 முட்டி மோதி உன் உதிரம் கொட்டி கிடக்க!

முட்டாப்பய பெத்த மகனனோ !!
முண்டச்சி தான் பெத்த மகனோ!

அக்கா தங்கையோடு பிறந்தானோ !இல்லகூட கிடந்து உறங்கினானோ!

காடு மேடு ஏரி! உழைச்சி வச்சதெல்லாம்,,!

கட்டிமக உனக்கு கொட்டி வச்சோம்!!
வட்டிக்கு வாங்கி எல்லாம் !வாடாம உன்னை படிக்க வச்சோம்!!

கூட மார்க் எடுத்து! கூடுன ,,வேலைக்கு போவேன்னு!!
கூட்டமா படிக்கும் ஹாஸ்டல்ல தங்க வெச்சோம்!!

என் புள்ள! என் குல சாமிக்கு என்னாச்சோ! ஏதாச்சோ !!
என் பிள்ளை இறந்து கிடக்க!
 சேதி ஒன்னு சொல்லலையே!
பத்து மாசம்சுமந்த வயிறு பத்தி எரியுது!

பாலா போன அரசாங்கம் ,படும் சட்டம் வகுக்களையோ!!

படுபாவி பயக எல்லாம்!!
படுபயங்கரம பாலியல் தொல்லை செய்யுராக!!

பாத்திகிட்டுத்தா அரசாங்கம் இருக்கு!!
படுத்துகிட்டுத்தான்
நீதி தோக்கு!!

வழக்காட படிச்சவுக!
வக்காளத்த்து வாங்க வராதீக!!

பொம்பளபுள்ள‌ பெத்ததிருந்த! புத்திஇருக்கும்!
ஏம்புள்ள போய்யிட்டாளும்!!

இனியொரு பொம்பளபுள்ளைக்கு 
இதுமாரி நடக்காம
நல்லதொருதிட்டம்போடட்டும் !சட்டம்!

இதுல பின் வாங்காது!
தமிழச்சி பொம்பளைங்க கூட்டம்!!

வாரிஇறைச்சபோட்ட மண்ணும்!! உன்னை. தீண்டாது!
வாயால‌திட்டியதும்
உன்னைச் சுடாது!

சட்டம்தன் கடமைசெய்யாட்டா!
சட்டெனவே
சங்கறுக்க தயங்ஙமாட்டா!!
இந்த
வீரத்த்தமிழச்சி!

பொட்டபயல வெளிவாடா!

தாயின் கதறல் 

கவிதை மாணிக்கம்