புரட்சியாளர் அம்பேத்கர் 015

அறிவர் அம்பேத்கர் விருது கவிதைப் போட்டி

புரட்சியாளர் அம்பேத்கர் 015

புரட்சியாளர் அம்பேத்கர்

பாருக்குள்ளே நல்லதோர், தலைவர்தான் யாரு?

 பாமரக்குடியிலே -14 வது குழந்தையாக பிறந்தவரே அவரு.

மத்திய பிரதேசம்-
தபோலி அவர் பிறந்த ஊரு,

சாதிய கொடுமையால் ஒதுக்கப்பட்டவரும் அவரு,

புத்தகம் படிப்பதிலே நாட்டம் -மிக கொண்டவரும் அவரு,

அவரைப் பற்றி உனக்கேதும்- தெரிந்தால் நீ கூறு.

புத்த மதத்தால் ஈர்க்கப்பட்டவரும் அவரு,

கல்வி கற்க ஒரு கையில் புத்தகப்பை, மறுகையில் அமர்வதற்கு சாக்கு பை எடுத்துச் சென்றவரும் அவரு,

அமெரிக்கா சென்று முதலில் பட்டம் பெற்றவரே அவரு,

'ஆண்டான் அடிமை' முறையை அழிக்க பாடுபட்டவரும் அவரு,

கல்வியால் பல புரட்சி செய்தவரும் அவரு,

வட்டமேசை மாநாட்டில் பங்கு பெற்றவரும் அவரு,

விடுதலைக்குப் பாடுபட்ட வீரரும் அவரு,

அரசியலமைப்புச்  சட்டத்தை தீட்டியவரும் அவரு,

பொருளாதாரத்தின் தந்தையாக விளங்கியவரும் அவரு,

நல்ல நல்ல திட்டங்களை வகுத்த வரும் அவரு,

உயர்ந்த நல் கருத்துக்களை சொன்னவரும் அவரு,
 
ஒடுக்கப்பட்ட மக்களின் ஓங்காரமும் அவரு,

நலிவடைந்த மக்களின் நாயகனும் அவரு,

தாழ்த்தப்பட்ட மக்களின் தவப்புதல்வனும் அவரு,

வீழ்த்தப்பட்ட மக்களின் விடிவெள்ளியும் அவரு,

ஓயாமல் ஊருக்காக உழைத்தவரும் அவரு,

பகுத்தறிவு சீர்திருத்தவாதியாக இருப்பவரும் அவரு,

வெள்ளை மனம்,நல்ல குணம் கொண்டவரும் அவரு,

'சட்டமாமேதை' என்பவரும் அவரு,

 யாரு?அவர் யாரு? 
 நீ கூறு?

'புரட்சியாளர்'அவரே- "அம்பேத்காரு".
ஆம்.
"புரட்சியாளர்"அவரே- 'அம்பேத்காரு'.

அண்ணல் காட்டிய வழியில் வாழ்ந்து, சிங்கம் என சீறு-நீ சிங்கம் என சீறு.


சு.உஷா,,
திருவண்ணாமலை.