சட்டங்கள் இயற்றிய சரித்திர நாயகன் 016

அறிவர் அம்பேத்கர் விருது கவிதைப் போட்டி

சட்டங்கள் இயற்றிய சரித்திர நாயகன் 016

சட்டங்கள் இயற்றிய சரித்திர நாயகன்...

நவீன இந்தியாவை செதுக்கிய நல்சிற்பி
ஒடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல
ஒட்டுமொத்த மக்களுக்குமான தலைவர்..
அவர் சாதி தலைவர் அல்ல
சாதித்துக் காட்டிய தலைவர்...

சாதிதான் சமூகம் என்றால்
காற்றில் விஷம் பரவட்டும் என்ற
புரட்சியின் பூர்வீகம் அவர்...
அறிவில் சிறந்து ஒழுக்கத்தில் உயர்ந்தவர்
கல்விக்கு முதலிடம் தந்திட்ட காவியத் தலைவர்...

மனித இன மேம்பாட்டின் மாமன்னன்
அரசியல் சட்டத்தின் சிற்பி
அரசியல் சாசனத்தின் தந்தை..
தீண்டாமை அழித்த திரைக்கடல்
சட்டங்கள் இயற்றிய சரித்திர நாயகன்...

சமத்துவம் நிலைநாட்ட
பெண்களும் கொடிநாட்ட
பாடுபட்ட புரட்சியாளர்... 
கற்பி.. ஒன்று சேர்.. போராடு...
அஞ்சாதே..நிமிர்ந்து நில்...என்ற
பகுத்தறிவு தந்திரங்களை
மக்கள் மனதில் விதைகளாய் 
விதைத்திட்ட வல்லவர்... 

சட்டங்களாலும் பல பட்டங்களாலும்
இந்தியாவின் மானத்தைக்
காத்தவர்...
புத்தகங்களாலும் எழுதுகோல்களாலும்
பூசிக்க பட வேண்டியவர்..
வரலாற்றில் நிலைத்த அவர் புகழ்
வையம் உள்ளவரை வாழும்...

கவிஞர் சசிகலா திருமால்
கும்பகோணம்.