தீபாவளி

தீபாவளி கவிதை

தீபாவளி

மூங்கில் இலை மேலே 
தூங்கும் பணி நீரே
தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோளே!

சரி  சரி கதிரவனின் மகளே!'

விழிகளில் மத்தாப்பூ 
கொளுத்திப் போடுகிறவள்
தெருவில் கொளுத்திப் போட்டுவிட்டுப் போ

இதயத்தில் கொளுத்தாதே
.
நானோ உளறளை நகைச்சுவையாக்கி
நகைச்சுவையை 
கடைச்சரக்காக்கி விற்பவன்

ஆனால் நீ என்னை முழுநேரப்பித்தனாக்கி விடுவாய்
போல தெரிகிறதே
பித்தா பிறை சூடி பெருமானே
அருளாளா|
என்னடா பொழப்பு?

ஒரு தீபாவளிக்கே
விழி பிதுங்குகிறது
தினம் தினம் தீபாவளி தானா
உனக்கு?

தேற்றாதன சொல்லித்தான்
திரிவேனோ நான் ?

தங்கேஸ்