கடைக்கண்ணால் கடைத்தேற்றினாய்..

கடைக்கண் பார்வை கவிதை

கடைக்கண்ணால் கடைத்தேற்றினாய்..

கடைக்கண்ணால் கடைத்தேற்றினாய்

அடைபட்ட மனதை
அறத்தினால் நிறைத்தாய்
கொடை கொண்ட
கொத்தான மலரே

கடைக் கண்ணால்
கடைத் தேற்றினாய்
சடையால் நெஞ்சத்தை
சாய்த்துச் செல்கிறாய்

விடை தெரியா
வித்தகனாய் நானே
மடைபோல வெள்ள
மகிழ்ச்சி பாய்கிறதே

தடை போடாத
தாமரை தடாகமே
குடை பிடித்தும்
குற்றாலத்தில் குளிக்கின்றேன்

நடையில் வீழ்ந்து
நட்சத்திரம் நானடி
வாடையாய் வீசி
வாசம் செய்கிறாய்

படைத்த பிரம்மனும்
பாக்கிய பிதாமகன்
உடையாத உயிராக்கி
உள்ளத்தில் தைத்தேனடி

இடையழகில் இம்சைகள்
இரக்கமின்றி தொடுப்பவள்
கடைகிறது எண்ணத்தைக்
காதல் கண்மணியே

மேடையில்லா இதயத்தில்
மேகமாய் அலைகிறாயடி
தாடையே நீயுமெனக்கு
தங்கத் தேரடி

-கவித்தாரகை ,
கிருஷ் அபி இலங்கை