பாரதி (தீ) யின் நினைவுகள்

பாரதியார் நினைவு தினம் கவிதை

பாரதி (தீ) யின் நினைவுகள்

பாரதி(தீ)யின் நினைவுகள்

பாரதியின் தாய் சுமந்தது
சாதாரணக் கருவையல்ல
கவிதையின் கருவை...
இம்மண்ணுலகம் மறவா மகாகவி யாரோ?
எழுத்துக்களுக்கு எழுச்சியூட்டிவன் யாரோ?
அவனுக்கு பாரதி என்ற பேரோ
அவர் பாரதி(தீ)யாரோ...

பெண்ணியம் பேசியவனே
மாந்தர்க்குண்டு சுதந்திரம் என்று மார்த்தட்டியவனே...
நாட்டு விடுதலையும் பெண் விடுதலையும்
இரு கண்களென்றுக் கொண்டவனே...
உந்தன் எழுதுகோலால் தீட்டிய புதுமைப் பெண்கள்
ஏராளம் இப்பாரினில்...

தீண்டாமையை தீயிலிட்டுப் பொசுக்கி
நல்லதோர் வீணை செய்தவனே...
காக்கையும் குருவியும் எங்கள் சாதி என்றுரைத்தவனே
பதினான்கு மொழிகளறிந்த பன்மொழி வித்தகனே...
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பதில்லையே என்று
வீரத்தினை பறைச்சாற்றியவனே..

"தேடிச் சோறுநி தன் தின்று- பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்
வாடித் துன்பம் மிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து- நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப்போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ!"

என்றுமே வீழ்ந்து விடா
பெரும் வியப்பு நீ - பாரதி( தீ)
தமிழ் உள்ளவரைத் தழைத்தோங்கும் நின்புகழ்
என்றும் எங்களின்
நீங்காத நினைவுகளில் நீ - பாரதி(தீ)!

-சசிகலா திருமால்
கும்பகோணம்.