பிஞ்சு நெஞ்சங்களின் அன்பு...004

சிந்தனைச் சிற்பி விருது சிறுகதை போட்டி

பிஞ்சு நெஞ்சங்களின் அன்பு...004

பிஞ்சு நெஞ்சங்களின் அன்பு...

கண்ணுக்கு அழக எழில் கொஞ்சும்இயற்கை காட்சியோடு சுற்றிலும் பசுமையாகவும் மலையின் அடிவாரத்தில் அழகான ஒரு கிராமம் அமைந்துள்ளது.
     அந்த கிராமத்தில் சிறுவர்கள் அதிகம் வீட்டிற்கு இரண்டு, மூன்று பிள்ளைகள் அனைவரும் எப்பொழுது மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டு அங்கும் இங்கும் ஊரை சுற்றிக்கொண்டு தான் இருப்பார்கள்.
     அப்படி சிறுவர்கள் ஒருவரை ஒருவர் தள்ளி விட்டு அடித்துக் கொண்டு பின்பு சண்டையிட்டு பின்பு ஒன்று கூடி மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருப்பார்கள்.
     அன்று ஒரு நாள் கனமழை அந்த கனமழை ஓய்ந்த உடன் சிறுவர்கள் அனைவரும் மழை தண்ணீரில் விளையாடி சட்டை எல்லாம் சேரும் சகதியும் ஆக விளையாடும் வேளையில் மழை நீர் தேங்கிய தில் நீருக்குள் இருந்த கண்ணாடி ராகுல் காலை கிழித்தது அவன் காலில் இருந்த ரத்தம் பெருக்கெடுத்து வந்தது.
     ராகுல் அம்மாவிடம் சென்று ராகுளுடன் விளையாண்ட அவன் நண்பர்கள் போய் சொல்கிறார்கள் அவன் அம்மா வந்ததும் ராகுலை அடி நொறுக்கி எடுத்துறாங்க இதை பார்த்து அனைவரும் ஓடிவிடுகிறார்கள் ராகுல் நெருங்கிய நண்பன் முரளி மட்டும் நிற்கிறான் ராகுல் அம்மா இனிமேல் இவன் கூட சேர்ந்த உனக்கும் அடிதான் அப்படி என்று திட்டிவிட்டு ராகுலை வீட்டிற்கு அழைத்துச் சென்று அவனின் காலுக்கு மருந்து போட்டு விடுகிறார்.
     அவனுடன் விளையாண்ட அத்தனை பேர் வீட்டிற்கும் சென்று உன் மகன் தான் என் மகனை கண்ணாடியில் தள்ளி விட்டான் என்று சொல்லி ராகுல் அம்மா சண்டையிடுகிறார் அன்று முதல் அவனுடைய நண்பர்கள் அனைவரும் அவனுடன் சேராமல் இருக்க அனைவரின் அப்பா அம்மாவும் அடி உதை என்று நொறுக்கி விடுகிறார்கள் ஆனால் முரளி அவனின் அப்பா அவனை அடித்தாலும் ராகுலுக்கு என்ன ஆச்சு சரியாகி இருக்குமா என்று கவலையில் தான் இருக்கிறான் அவன் வீட்டுக்கு போன அவன் அம்மா திட்டுவாங்க அவனுக்கும் அடி விழும் என்று நினைத்து வருந்துகிறான் முரளி.
     வழக்கம்போல் விடுமுறை முடிந்தது பள்ளி திறக்கிறது அனைவரும் பள்ளி வருகிறார்கள் முரளி முதல் ஆளாக வருகிறான் ராகுலை பார்த்து பேச வேண்டும் என்று அனைத்து நண்பர்களும் வருகிறார்கள் அனைவரிடமும் முரளி பேசுகிறான் இருப்பினும் அவன் கண் தேடுவது என்னவோ ராகுலைத்தான் இதை கவனித்த மதுபாலன் முரளியிடம் சொல்கிறான் ராகுலால் தான் நாம் அனைவரும் வீட்டில் அடி வாங்கினேன் நாங்க யாரும் அவனுடன் பேச மாட்டோம் நீயும் பேசாத இல்லனா நீ எங்க கூட பேச கூடாது என்று சொல்கிறான் மதுபாலன் அனைத்து நண்பர்களும் ராகுவுடன் பேசக்கூடாது என்று முடிவு எடுக்கிறார்கள்.
     ஆனால் முரளி என்ன ஆனாலும் சரி அவனிடம் பேச வேண்டும் அவனுக்கு காயம் சரியாகி விட்டதா என்று கேட்க வேண்டும் என்று எண்ணத்தில் இருக்கிறான்.
     வழக்கத்தை மீறி அன்று ராகுலை அவனுடைய அம்மா பள்ளிக்கு அழைத்து வருகிறார் அதனை கவனித்த மற்ற நண்பர்கள் அதனை கவனிக்காத மாதிரி அவர்கள் பாட்டிற்கு விளையாடிக் கொண்டிருந்தார்கள். முரளி பேச நினைத்தான் அவன் அம்மா ஏதாவது சொல்லி விடுவார்களோ என்று நினைத்து பேசவில்லை ஆசிரியர் வந்ததும் சில குறிப்பிட்ட நண்பர்களை காட்டி ராகுல் இவர்களுடன் சேர்ந்துதான் கீழே விழுந்து கால்கையே ஒடிக்கிறான் இவங்க கூட சேர கூடாதுன்னு சொல்லுங்க என்று சொல்கிறார் ஆசிரியர் சின்ன பையன் ஏதோ தெரியாமல் விழுந்து இருப்பான் நான் பார்த்துக்குறேன் அவங்க கூட சேர மாட்டான் நான் பார்த்துக்கிறேன் என்று சொல்கிறார்.
     மாணவர்கள் அனைவரும் ஆசிரியர் இடம் ராகுல் அம்மா சொல்வதைக் கேட்டு ராகுலுடன் யாரும் பேசாமல் சேராமல் இருந்தார்கள் தனிமையாக இருப்பதாக உணர்ந்தான் ராகுல் முரளி மட்டும் இதற்கு இடையில் ராகுல் உடன் பேசிக் கொள்வான் யாருக்கும் தெரியாமல் இது ராகுலுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது யாரும் பேசவில்லை ஆனால் முரளி மட்டும் நம் மீது இவ்வளவு பாசமாக இருக்கிறான் என்று ராகுலும் அவனும் ரொம்ப நெருங்கிய நண்பர்கள் ஆனால் இது யாருக்கும் தெரியவில்லை.
     விடுமுறை நாட்களில் ராகுல் வெளியே சென்று விடுவான் என்பதற்காக ராகுலின் சட்டை டவுசரை அவுத்துவிட்டு துண்டு இடுப்பில் கட்டி விடுவார் ராகுல் அம்மா அப்பொழுதுதான் அவன் வெளியே செல்ல மாட்டேன் என்று அப்படி இருந்தும் முரளியை காண சென்று அவனிடம் பேசிவிட்டு அவன் ஏதாவது ராகுலுக்கு கொண்டு வந்து கொடுப்பான் அதையும் தின்றுவிட்டு வருவான் இது மற்ற நண்பர்களுக்கும் தெரியாது ராகுல் அம்மாவிற்கும் தெரியாது.மற்ற நண்பர்களும் ராகுல் அம்மாவிற்கு பயந்து பேசவில்லை ராகுல் கூட.
     அன்று முரளி அம்மா ஊரில் திருவிழா பத்து நாட்கள் நடைபெறும் அந்த திருவிழாவிற்கு முரளி வீட்டில் இருந்து அனைவரும் சென்று விட்டார்கள் முரளி ராகுல் இடம் சொல்லவில்லை திருவிழாவிற்கு ஊருக்கு போறோம் என்று அவனுக்கும் தெரியாது தன் பாட்டி வீட்டிற்கு திருவிழாவிற்கு நாம் போறோம் என்று திடீர் என்று கிளம்பி விட்டார்கள்.
     ராகுலுக்கு முரளி எங்கு போனான் என்று தெரியவில்லை மற்ற நண்பர்கள் யாரும் பேசவில்லை இதனால் மனமுடைந்த ராகுல் வீட்டில் அம்மாவும் தன்னை வெளியே விடமாட்டாங்க என்று மனமுடைந்த ராகுல் நாம் எங்காவது போய் விடுவோம் என்று நினைக்கிறான்.
     அன்று இரவு 9 மணி வழக்கம்போல் அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்கச் செல்லும் நேரம் ராகுல் அம்மாவும் சாப்பாடு கொடுத்துவிட்டு அனைவரும் தூங்குகிறார்கள் ராகுல் மட்டும் 11 மணியளவில் வீட்டின் கதவை திறந்து வீட்டை விட்டு வெளியே செல்கிறான் அவனுக்கு எங்கு செல்ல வேண்டும் என்று தெரியவில்லை அவன் நண்பர்களும் அவனுடன் பேசுவதும் இல்லை அதனால் அவன் தென்திசையில்  உள்ள மழையை நோக்கி செல்கிறான் தனியாக.
     மறுநாள் விடிந்தது ராகுல் அம்மா தேடி பார்க்கிறார் ராகுலை காணும் யாருடனாவது விளையாட போயிருப்பான் என்று நினைத்து விட்டு அவர் அன்றாட வேலைகளை பார்க்க தொடங்குகிறார் நேரம் ஆகியும் அவன் வரவில்லை ராகுலின் அம்மா கோபம் உச்சத்திற்கு செல்கிறது இன்னைக்கு வரட்டும் அவனை அடி வெளுத்தால்தான் கட்டுப்படுவான் என்று நினைத்தார் அவன் நெடுநேரம் ஆன பின்பும் வரவில்லை அனைவரிடமும் சென்று விசாரிக்க தொடங்கினார் ராகுல் அம்மா அவன் எங்கு தேடியும் கிடைக்கவில்லை ராகுலை காணும் என்று அவன் அம்மா அழுது புலம்புகிறார் அவன் இருக்கும் வரை அவனை யாரும் புரிந்து கொள்ளவில்லை முரளியை தவிர.
     ஊர் முழுக்க செய்தி தெரியப்படுகிறது ராகுலே காணும் என்று நெடு நேரமான பின்பும் அவன் காணவில்லை என்றவுடன் ஊரில் உள்ள அனைவரும் ராகுலுக்கு ஏதாவது ஆயிருக்கும் இல்லாவிடில் யாராவது அவனை தூக்கிட்டு போயிருப்பாங்களோ அப்படி இப்படி என்று எல்லாம் பலரும் பேசுகிறார்கள். பெரியவர்கள் பேசுவதை கேட்டு ராகுலின் நண்பர்களும் மிகவும் வருத்தப்படுகின்றார்கள் நாம் பேசாமல் இருந்தது அதனால் தான் ராகுலுக்கு இப்படி ஆகிவிட்டது என்று நினைத்து அனைவரும் புலம்பி அழுகிறார்கள் அனைவரும் ஊரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தேடுகிறார்கள் அவனின் நண்பர்களும் அழுது கொண்டே ராகுல் வந்துவிடு நாங்கள் உன்னிடம் பேசாமல் இருந்தது தவறு தான் நாங்கள் பேசுகிறோம் நீ வந்துரு நீ வந்துரு என்று அழுதார்கள் ஆனால் ராகுல் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
   ஒருவர் இருக்கும் போது அவரின் அருமை தெரியாது அவர் இல்லாத போது தான் அதன் அருமை தெரியும்.  ஆகவே குழந்தைகளே உங்களுக்குள் என்ன ஒரு கருத்து வேறுபாடு வந்தாலும் பெரியவர்கள் மூலமாக பிரச்சனை வந்தாலும் அவன் உங்களுடன் பழகும் சக தோழன் உங்கள் நண்பன் என்பதை நினைவில் வைத்து எல்லோரிடமும் அன்பாகவும் பாசமாகவும்  நண்பராகவும் பழகுங்கள். 

- சு .மகேந்திரன்
முதுகலைத் தமிழ்
சவேரியார் கல்லூரி.
முகவரி;
1/11 கிழக்குத் தெரு, சூரங்குடி, சங்கரன்கோவில் (தாலுகா), தென்காசி (மாவட்டம்). 627953.