கம்பராமாயணம்...மகாபாரதம்... வெற்றி தொடர்களை தொடர்ந்து....

நெல்லை கார்த்திகா ராஜா, பட்டிமன்ற பேச்சாளர், தமிழ் பேச்சாளர், இலக்கிய சொற்பொழிவாளர், ஆன்மீக சொற்பொழிவாளர்,

கம்பராமாயணம்...மகாபாரதம்... வெற்றி தொடர்களை தொடர்ந்து....
பட்டிமன்ற பேச்சாளர் நெல்லை கார்த்த்கா ராஜா

இறைவனுக்கு நன்றி...

சிலப்பதிகாரம் 
இலக்கியங்கள் இதிகாசங்கள் மன்னரை தெய்வங்களை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடுவார்கள்ஆனால் ஒரு அரசனே ஒரு குடிமகனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட காப்பியம் உண்டா? வரலாற்று நூல்,விதி பற்றி பேசுகிற நூல், முத்தமிழ் சொல்லுகிற நூல்,பாத்திரங்களால் பெயர் பெற்ற நூல், படைப்பால் உயர்வு பெற்ற நூல் என்று போற்றப்படும் காப்பியம் சிலப்பதிகாரம். சிலம்பால் விளைந்த கதை,மன்னர் பாடிய மக்கள் பாட்டு, குடிமக்கள் காப்பியம், முத்தமிழ் காப்பியம் நம் சிலப்பதிகாரம்."யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்வள்ளுவனைப் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை" என்ற பாரதியார் கூற்றுக்கிணங்க இசை சிறப்பு, இசைக்கருவிகள் சிறப்பு,நாடக மேடைகளில் அமைப்பு,இயற்கை வர்ணனைகள், அந்தக்கால மக்கள் வாழ்வு,மன்னர்களின் பெருமை என்று சிலப்பதிகாரம் புகழ் பெற்ற நூலாக காப்பியமாக உருவெடுத்தது அதற்கு காரணம் இளங்கோவடிகள் தவறிய ஒரே காரணத்துக்காக தன் உயிரை துறந்து தன் ஆட்சி திறத்தை நிரூபித்த பாண்டிய மன்னன்,ஆண்களுக்கு சிலை வைத்த காலத்தில்கூட சேரன் செங்குட்டுவனால் ஒரு பெண் கண்ணகிக்கு சிலை வைத்து அவளை பெருமைப்படுத்திய காப்பியம் சிலப்பதிகாரம்.

திங்களைப் போற்றுதும் 
ஞாயிறு போற்றுதும்
மாமழை போற்றுதும் 
என்று சூரியன்,சந்திரன், மழை என்று இயற்கையை வணங்கி தொடங்குகிறார் இளங்கோவடிகள்.
"அரசியல் பிழைத்தோருக்கு  
 அறம் கூற்றாகும்" என்ற கோட்பாட்டை வலியுறுத்த " நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்" என்று எழுதிய சிலப்பதிகாரம் மிகச் சிறப்பு வாய்ந்த காப்பியமாக அமைகிறது.
கம்ப ராமாயண மகாபாரத கதாபாத்திரங்களை தொடர்ந்து சிலம்பு கூறும் கதாபாத்திரங்கள் வாயிலாக உங்களோடு உங்கள் 
நெல்லை கார்த்திகா ராஜா
ஆகிய நான் பயணிக்க இருக்கிறேன். கண்ணகி வழக்கின் பெருமையை வழக்குரைகாதை சொல்கிறது.
 சேரன் செங்குட்டுவன் பெருமையை வஞ்சிக்காண்டம் வியந்து பேசுகிறது. நேர்மறை கதாபாத்திரங்கள் யாவும் இளங்கோவடிகளின் நேர்மறை எண்ணங்களை அள்ளித் தருகிறது. நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்
உலக இலக்கியத்தின் வரம் 
சிலம்பு கூறும் அறம என்னுடைய ஒவ்வொரு முயற்சிக்கும் உற்ற துணை நிற்கும் அன்புக் கணவர் ராஜாவிற்கும் உயிர் நண்பன் vins sijuவுக்கும் அன்பின் நன்றிகள் பல...

அன்புடன்
நெல்லை கார்த்திகா ராஜா..