வேலைக்காரியின் திறமை

சிறுகதை

வேலைக்காரியின் திறமை

வேலைக்காரியின் திறமை

பட்டணத்தில் இருந்து வேலை செய்கையில் நந்தனும் சுதாவும்  வேலை பார்க்கும்  ஆபீசில் வைத்து ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்தவர்கள்  தற்போது குழந்தை வேண்டாமென முடிவோடு இருந்தனர். திருமணமாகி நான்கு வருடம் முடிந்து ஐந்தாவது வருடம் ஆரம்பித்து விட்டது.
ஊரார் பேச்சும் காதில் லேசாகக் கேட்டது.
 "என்ன சுதா குழந்தை பெத்துக்காம இருக்கா மலடியா இவ" என்றது போக.....

 நந்தனின் அம்மாவும் கிராமத்தில் இருந்து ஒருநாள் வந்து விட்டாள்.
மகனிடம் என்னடா "நந்தா சுதாவுக்கு ஒரு புள்ள பூச்சியைக் கூடக் காணல" என்றாள்.
 "வேற பெண் பார்க்கட்டுமா நமக்கு சந்ததி வேணாமா"  என அம்மாவில் குமுறள் கொந்தளித்தது
சுதாவும்
 "அத்த அப்படியெல்லாம் பண்ணிடாதீங்க.... எணணிப் பத்து மாதத்துல உங்க கைல பேரனோ பேத்தியோ இருக்கும் என்றாள். நந்தனின் அம்மாவும் "நான் அடுத்தமுற வரும்போது எனக்கு நல்ல விசயம் சொல்ல வேண்டும் "
என்று கண்டிப்பாகச் சொல்லிப் போனாள்.
 
நந்தனும் சுதாவும் கலந்து பேசி முடிவெடுத்து ஒரு தீர்மானத்துடன் இருந்தார்கள். அவர்களின் வாழ்க்கை எப்போதையும் விட இப்போது அதிக மகிழ்ச்சியும் அன்பும் காதலும் அதிகரித்து ஊடலாகவே இருந்தது.
சுதா கற்பமாக இருந்தாள். அப்படி இருந்தும் வேலையும் வீடும்  வீட்டிலும் வேலையும் என இழுத்துப் போட்டு செய்து ....களைப்பும் சோர்வும் ....
பாவம் அவளும் தனிமனுசிதானே என்ன தான் செய்வாள். நந்தன் யோசித்து 
தன் ஆபீசிஸ் சுத்தம் செய்யும் பொன்னனின் மனைவி பொன்னம்மாவை  தன் வீட்டில் வேலைக்கு அமர்த்தினான். 
பொன்னம்மா கெட்டிக்காரி சுறுசுறுப்பானவள்

(2)

அதிகாலை வருவாள் அனைத்து வேலைகளும் சமையலும் செய்து பின் நந்தனும் சுதாவும் வீட்டிற்கு வந்ததுமே தன் வீட்டிற்குப் போவாள். இப்படியாக பத்தாம் மாதம் தொடக்கம் ஆகிவிட்டது.  அன்றும் வழமை போல இருவரும் ஆபீஸ் கிளம்பினர்.  "சுதா "என்னங்க எனக்கு உடம்பு சோர்வா இருக்கு என்னால ஆபிஸ் வர முடியாது லீவு சொல்லிடுங்க" என்று கணவனிடம் கூறினாள்.
 "சரி கவனம்  உடம்பப் பாத்துக்கம்மா"
 என்றவாறு நந்தனும் ஆபீஸ்  போய்விட்டான்.

பொன்னம்மா வேலை செய்து கொண்டே சுதாவை கவனித்தாள்.
 "என்னமா ஒரு மாதிரியா இருக்கீங்க" உடம்பு சரியில்லையா டாக்டர்கிட்ட போவோமா" என்றாள்
சுதாவும் "இல்லம்மா கொஞ்சம் சோர்வா இருக்கு ரெஸ்ட் எடுத்தால் சரியாகிடும் என்றாள்.
"சரிம்மா 
நான் செடிகளுக்குத் தண்ணீர் போட்டுட்டு வாரேன் என்று பொன்னம்மா சென்றாள்.
சுதாவுக்கு இது தலைப்பிரசவம் அதனால் அவளுக்கு  என்ன செய்கிறது என அறியாமல் வயிறு சுள் சுள்னெ விட்டு விட்டு வலித்தும் அடக்கிக் கொண்டு படுத்திருந்தாள்.

பொன்னாம்மா வேலைகள் அனைத்தையும் வேகமாகச் செய்து  சமையலையும் முடித்தாள். மேசையில் சாப்பாட்டை எடுத்து வைத்து ஒழுங்கு செய்தாள். திடீரென சுதாவின் குரல் கேட்டு ஓடினாள்.
 "சுதாம்மா" "சுதாம்மா"
என்னாச்சும்மா"

சுதாவும் வயிற்றைத் தாங்கிப் பிடித்தவாறு  வலி பொறுக்காது அழுது கொண்டிடருந்தாள்.
 "சுதாம்மா உங்களுக்கு பிரசவ வலிதாம்மா வந்திருக்கு இப்ப உடனே ஆஸ்பத்திரிக்குப் போகனுமே" நத்தா ஐயாவுக்கு போன் பண்ணுணிங்களாம்மா என்றாள் பொன்னம்மா.

சுதாவும் அவர் போன் ஆப்ல இருக்கும்மா என்று அழுது கொண்டே சொன்னாள். அம்மா பயப்படாதீங்க கொஞ்சம் பொறுத்துக்கோங்க நான் ஏதாச்சும் ஆட்டோ பிடிச்சுக்கிட்டு வந்துடுறேன்.  என்றவாறு தெருமுனைக்கு மின்னலாக ஓடினாள். பின் ஒரு ஆட்டோவை பிடித்து வந்து கைத்தாங்களாக சுதாவை கூட்டி ஏற்றிக்கொண்டு ஆஸ்பத்திரியை நோக்கிப் பறந்தனர்.
உடனே ஆஸ்பத்திரில் சுதாவுக்கு அதிகவலியும் கூடியதால் சுதா ஓவென வாய்விட்டு அழுதாள். பொன்னம்மா உடனே தகவலை தன் கணவனுக்குக் கூறி நந்தா ஐயாவை அழைத்து சீக்கிரம் ஆஸ்பத்திரி வரும்படி கூறினாள். அடுத்த நிமிடம் நந்தா  ஆஸ்பத்திரியில் நின்றிருந்தான். சுதாவுக்கு ஆப்ரேசன் என்றதும்  அதிர்ந்து போனான். அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தது. நந்தகுமார் களங்கி நின்றான். தகுந்த நேரத்தில் சுதாவை ஆஸ்பத்திரில் சேர்த்ததால் பரவாயில்லை இல்லையென்றால் ஆபத்துதான் என மருத்துவரும் கூறினார்.

 பொன்னம்மா "ஐயா கவலைப்படாதீங்க இறைவன் எல்லாத்தையும் பார்த்துப்பார் "என்றாள். குழந்தையின் அழுகுரல் கேட்டது
 நர்ஸ் வந்தாள்  "சார் உங்களுக்கு பெண்குழந்தை பிறந்திருக்கு" தாயும் சேயும் நலமாக உள்ளர் என்றாள்.
நத்தனும்  மகிழ்ச்சியடைந்தான்  மனைவியைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் சிந்தினான்.  முத்தம் பதித்தான். பொன்னம்மா கையில் இருந்த குழந்தையை வாங்கிய வாறு தகுந்த நேரத்தில் என் மனைவியை ஆஸ் பத்திரியில் சேர்த்து என் மனதில் பாலை வார்த்தீர்கள் அம்மா என... தன் நன்றியைத் தெரிவித்தான். சுதாவும் பொன்னம்மாவுக்கு நன்றி கூறி  மகிழ்ந்தாள்.

முற்றும்.

- எழுத்தாளர் கிருஷ் அபி
இலங்கை