பெண்ணின் பெருமை 038

புதுமைப் பெண் விருது கட்டுரைப் போட்டி

பெண்ணின் பெருமை 038

பெண்ணின் பெருமை

முன்னுரை

பெண்ணியம்> அனைத்துப் பாகுபாடுகளையும் நீக்கி ஆண்களுக்குச் சமமான பொருளாதார சமூக மேம்பாட்டினைப் பெண்ணுக்குத் தோற்றுவிப்பதை நோக்கமாகக் கொண்டது. பெண்ணியம் என்பது பெண்களுக்கு மட்டும் மிகுந்தளவு உரிமை வேண்டும் என்று கேட்கவில்லை. சமத்துவமுடைய சமூகம் உருவாக வேண்டுமென்பதே பெண்ணியத்தின் அணுகுமுறை. அதில் ஆணும் பெண்ணும் பாலினப்பாகுபாடுகள் இன்றி மனிதர்களாகப் போற்றப்படவேண்டும் என்பதே அதன் கோரிக்கையும் நோக்கமுமாகும்.

பெண் சொல் விளக்கம்;

    பெண் என்ற சொல்லிற்கு> பெண்களின் பண்புகள் அடிப்படையில் பல்வேறு விளக்கம் தருகின்றனர் அறிஞர்கள்.

“பெண் என்னும் சொல் பெண்களுக்குரிய இயல்புகளை உடையவள் என்று பொருள்படும்”1

என்று முத்துச்சிதம்பரம் கூறுகிறார்.

“பெண் ஓர் ஆண்மகனை மணம் செய்து கொண்டு அன்பு> தியாகம்> தொண்டு> பொறுமை> அறிவு> அழகு என்று கணவனுக்காக அவன் மகிழ்ச்சிக்காகப் பயன்படுத்துகிறாள்”2

என்கிறார் ஜெயக்குமார்.

பெண் (அ) பெண்மை என்பது அமைதி> அடக்கம்> தன்னலத்துறவு> அருள்> அழகு> பணி முதலியவற்றை உணர்த்துவதாகும்”3

என்பார் இரா. சண்முகம்.

“மெல்லியல்புகள் நிறைந்த அவளை அவள் இனிமையை நயத்தை நம்மால் கூ  றமுடியாது. பெண் சமூகச் சிறப்புக்குச் சிகரம் போன்றவள்”4

என்கிறார் எஸ். குலசேகரன்.

        “அன்பும் அறமும்

        அடக்கமும் பொறுமையும்

        பண்பும் கொண்டவர் பெண்கள்”4

என்கிறாh.; பெண் குறித்தும்> பெண்மை குறித்தும் அறிஞர்கள் இவ்வாறாகச் சித்தரிக்கின்றனர். இவை அனைத்தும் பொதுவாக மனிதனுக்கு இருக்க வேண்டிய பண்புகள் என்றாலும் இச்சமூகம் பெண்ணிற்கு மட்டும் கட்டாயம் இருக்க வேண்டிய பண்புகளாக இவற்றை வரையறை செய்கிறது. 

பெண்ணின் இயல்புகள்

அன்பு> பொறுமை> தியாகம்> பாசம்> பரிவு இவை யாவும் மனிதருக்கான பொதுவான குணங்களே.  ஆனால் பெண் இயல்பிலேயே இக்குணங்களின் தன்மையில் அதிகம் ஆட்படுத்தப்படுகிறாள்.  பிறரையும் இக்குணங்களுக்கு உட்படுத்தும் வலிமை படைத்தவளாய் இருக்கிறாள்.

        “அன்பும் ஆர்வமும் அடக்கமும் சேர்ந்தும்

        உண்மைத்தன்மையும் உறுதியும் மிகுந்தும்

        தன்னல மறுப்பும் சகிப்புத் தன்மையும்

        இயல்பாய் அமைந்தும் இன்பச் சொரூபமாய்த்

        தாயாய் நின்று தரணியைத் தாங்கும்

        தாரமாய் வந்து தளர்வைப் போக்கும்

        உடன்பிறப்பாய் உறுதுணைபுரியும்

        மகளாய் பிறந்து சேவையில் மகிழும்”5

என்று பெண்ணின் இயல்புகளைப் பட்டியலிடுகிறார் நாமக்கல் கவிஞர்.

மரபுகளை மதிக்கும் பெண்

    காலம் காலமாகவே பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற நியதி பெண்ணுக்கு மட்டுமே உரியதாய் இருக்கிறது. பெண் என்றாலே சமுகக் கட்டுப்பாடுகள் அவளுக்கென்று விதிக்கப்படுகின்றன. இபப்டிப்பட்ட தேவையற்ற கட்டுப்பாடுகள் பெண்களை அடிமைப்படுத்துகின்றன. பெரும்பாலானோர் இக்கட்டுகளை அவிழ்க்கக் கடுமையாக முயற்சித்தாலும் இக்கட்டுகள் முழுமையாகக் கட்டவிழ்க்கப்படவில்லை என்பதே உண்மை.

“நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்”6

என்னும் வாக்கு மெய்யாக வேண்டுமாயின் நல்ல வாழ்க்கைத் துணை அமைதல் அவசியம். கணவன்-மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் அடிப்படைப் புரிதலுடன் வாழும் போது குடும்பத்தில் அமைதி பெருகும் அன்பு ஓங்கும். 

    “கொண்டான் குறிப்பறிவான் பெண்டாட்டி”7

என்கிறது திரிகடுகம் கணவனின் குறிப்பறிந்து செயல்படுதலை மனைவியிடம் இருக்க வேண்டிய பண்பாக்கிக் குறிப்பிடுகிறது இலக்கியம். கணவன் மனைவி இருவரும்>

“ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டாலே உலகினிலே நிகரேது”8  

என்கிறார் கவிஞர் கண்ணதாசன்.

முடிவுரை

    தொடக்கக் காலத்தில் காணப்பட்ட பெண் அடிமைத்தனம் இன்றைய நிலையில் ஓரளவு மாற்றம் பெற்றுள்ளது. வளர்ந்து வரும் சமுதாயத்தில் பெண்> ஆணுக்கு நிகராகப் பல வேலைகளில் ஈடுபடுவதையும் காண்கிறோம். ஆண்களுக்கு இணையாகப் பெண்கள் வேலைக்குச் சென்றாலும் பெரும்பாலும் குடும்பப் பொறுப்பு பெண்ணைச் சார்ந்ததாகவே உள்ளது.

    பெண்களின் உணர்வுக்கு மதிப்பு அளித்து அவளும் சக உயிரி என்றும் அவளுக்கும் சிந்திக்கும் ஆற்றல்> எதையும் ஆராய்ந்து நோக்கும் திறன் உள்ளது என்பதையும் சமுதாயத்தில் வாழும் ஒவ்வொருவரும் உணர்ந்தால் மட்டுமே சமூகம் வளம் பெறும். பெண்கள் நாட்டின் கண்கள் என்ற சான்றோர் வாக்கினை மனிதர்களாகிய நாம் அனைவரும் உணர்ந்து பெண்ணுக்கு எதிரான நிலைகளைக் கொடுமைகளைக் களைய முயல வேண்டும்.

அடிக்குறிப்புகள்

1.   சு. முத்துச்சிதம்பரம்> பெண்ணியமும் தோற்றமும் வளர்ச்சியும்>  ப. 9.

2.   அ. ஜெயக்குமார்> பெண்களும் சமூகமும்> ப. 9.

3.   இரா. சண்முகம்> திரு.வி.க. ஒரு பல்கலைக்கழகம்> ப. 403.

4.   எஸ். குலசேகரன்> ஒளவை கண்ட பெண்கள் தமிழ்ச் சோலைப் பதிப்பக வெளியீடு> ப. 1.

5. பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்> ப. 94.

6. http//varathaichithiarangal.com .

7. பதினெண் கீழ்க்கணக்கு> தொகுதி-2> ப. 255.

8. கண்ணதாசன்> திரை இசைப்பாடல்கள்> ப. 261.

முனைவர் சகோ. ஜா. அருள் சுனிலா,

ஜெ.அ. மகளிர் தன்னாட்சிக் கல்லூரி,

பெரியகுளம், தேனி – 625601, தமிழ்நாடு,