தந்தை பெரியார்

பெரியார் பிறந்த தினம் கவிதை

தந்தை பெரியார்

பெரியாரின் கவிதை

ஈரோட்டில் பிறந்தவரே
ஈகை குணம் கொண்டவரே

கள்ளுக்கடையை
ஒழிக்க மறியலில் ஈடுபட்டவரே

முலைவரி போராட்டத்தில் ஈடுபட்டவரே

கோவிலுக்கு நுழைய இருந்த தடையை நீக்கியவரே

நாகம்மையை மணந்தவரே
நாட்டைக் காத்தவரே

தன்னிடம் மற்றவர் 
எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று

எண்ணுகிறோமோ அப்படியே நாமும. மற்றவரிடம் நடந்துகொள்ள வேண்டும் என்றவரே

சுயமரியாதை இயக்கம் தொடங்கிய தன்மானச்
சிங்கமே

அண்ணாவுடனான கட்சியை அழகாய்
நிர்வகித்தவரே

நித்தமும் சத்தியசோதனையில் நீந்தியவரே

சாமிகளை
எல்லாம்
கொண்டாட ஆசாமி 

நல்லநேரம. கெட்டநேரம் என்பதெல்லாமில்லை என்றவரே

சகுணம் பார்த்தலே கெட்ட சகுணமே என்றவரே

எங்கெங்கு யார் யார் இருந்தாலும்
தமிழகமெங்கும் தனக்கென

இடத்தை வைத்த தன்மானச்சிங்கமே
தரணியே புகழுதய்யா

உம்மையே
சிறைக்கு அஞ்சாத பறையே
சிரசுக்கு அஞ்சாத அரசே

எங்கள் பெரியாரே மீண்டும் பிறந்துவாருமய்யா நலங்களைத்தாருமய்யா 


முனைவர் கவிநாயகி
சு.நாகவள்ளி
மதுரை.