உலக காற்று தினம்

உலக காற்று தினம் ஜூன் 15

உலக காற்று தினம்

காற்றின்றி உலகில்
உயிர்கள் வாழாது
உயிர்த் துடிக்க 
சுவாசமே வளி

சுவாசமின்றி சிலவினாடிகள் கூட வாழமுடியாது
விஞ்ஞான வளர்ச்சியின் காரணத்தால்
சுற்றுப்புரச் சூழலை மாசுபடுத்தி வருகின்றோம்

வாகனப் புகை அனல்மின்நிலையம் தொழிற்சாலைகளின்
கழிவுகளும் புகையுமே பெருமளவு
சுற்றுப்புறத்தை மாசுபடுத்துகிறது
அதன்விளைவு நோய்களும்
காலநிலை மாற்றங்களும்
மனிதனைத் துன்புறுத்துகிறது

எத்தனை விழிப்புணர் செய்தாலும்
எவரும் விழித்துக் கொள்ளப் போவதில்லை
உலகே கருத்தில் கொண்டால் தான்
உன்னத சுவாசம் கிடைக்கும்

இயற்கை பாதுகாத்து
இனியபூமி காப்போம்
மரங்களை வெட்டாது
மழை வளம் சேர்ப்போம்..


தமிழ் நதி
கிருஷ் அபி இலங்கை.

**********************************************

வளியின்றி
வாழ வழி ஏது???

நான்
அசைந்து
வந்தேன்
*தென்றல்*
என்றீர்கள்...

நான்
ஆடி
வந்தேன்
*காற்று*
என்றீர்கள்...

நான்
சுழற்றி
வந்தேன்
*சூறாவளி*
என்றீர்கள்...

என்னை
*அடைத்து*
வைத்தீர்கள்
*உருவம்*
கொடுத்தேன்...

என்னை
*சுற்ற*
வைத்தீர்கள்
*மின்சாரம்*
கொடுத்தேன்...

என்னை
*இழுத்து*
விட்டீர்கள்
*உயிர்*
கொடுத்தேன்...

எனக்கு
*ஆதாரமான*
*மரத்தை*
வெட்டி
வீழ்த்தினீர்கள்...
*கட்டிட*
*காடுகள்*
*ஆக்கினீர்கள்*
உன்னையே
*நீ*
*இழந்தாய்*
மனிதா...

உங்கள்
*ஆக்கத்திற்கும்*
*ஆற்றலுக்கும்*
*ஆனந்தத்திற்கும்*
*ஆருயிர்க்கும்*
ஆதாரமே
*நானே(காற்றே)*
       *நானே(காற்றே)*
              *நானேதான்* *(காற்றே தான்)*

கவிஞர்
*ப.சூர்யசந்திரன்*
கம்மங்குடி-நன்னிலம்.

(15-ஜூன்)
உலக காற்று தினம்.

உலக காற்று தினம் ஆண்டுதோறும் ஜூன் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது காற்றாற்றலைக் கொண்டாடும் தினமாகும்.

இதை ஐரோப்பிய காற்று ஆற்றல் ஆணையமும், உலகளாவிய காற்று ஆற்றல் மன்றமும் ஒழுங்குப்படுத்தி வருகின்றது. மேலும் காற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு நாளாக உலக காற்று தினம் அனுசரிக்கப்படுகிறது.

*************************************************