அறிஞர் அண்ணா 058

அறிஞர் அண்ணா அறிவிச்சுடர் விருது கவிதை போட்டி

அறிஞர் அண்ணா 058

அறிஞர் அண்ணா 

தலைப்பு : காஞ்சியின் கதாநாயகன் 

காஞ்சி கண்டெடுத்த முத்தான மனிதரே //

காவியம் படைத்த இலக்கிய வேந்தரே //

பெயரிலே உறவு கொண்ட புனிதரே //

முகத்திலே பொலிவு 
காட்டிய புன்னகையாளரே //

தலைகளை எண்ணிய தலைவர்களுக்கு மத்தியில் //

இதயங்களை 
எண்ணியவர் காஞ்சியின் கதாநாயகர் //

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு வகுத்தவர் //

கடைக்கோடி மக்களையும் கருத்தாய் பார்த்தவர்//

புகழைத் தேடி அலையக்கூடாது என்றவர் //

புகழினைத் தம்மை நெருங்கச் செய்தவர் //

தமிழ் நாடெனப் பெயரைத் தந்தவர் //

தமிழகத்தைத் தலைநிமிரச் செய்த சாணக்கியர் //

சாமானிய பிறப்பு சாதனை மரணம் //

சாலையில் நின்றதோ ஒன்றரைகோடி மக்கள் //

மண்ணில் மறைந்தாலும் வேறாக இருக்கின்றீரே  //

இதயத்தில் என்றும்  மாறாது நிற்கின்றீரே... //

கவிஞர்.வங்கனூர். த.சீனிவாசன்