உலக சுற்றுச்சூழல் தினம் சிறப்பு கவிதைகள்

உலக சுற்றுச்சூழல் தினம் சிறப்பு கவிதைகள்

உலக சுற்றுச்சூழல் தினம்  சிறப்பு கவிதைகள்

உலக சுற்றுச்சூழல் தினம்  சிறப்பு கவிதைகள்

001. இயற்கையை பாதுகாப்போம்

கடவுள் மனிதனை ஒரு மகத்தான
இயற்கை நிறைந்த பூமியில் படைத்தான்...
செயற்கையை விரும்பி இயற்கையை அளிக்கிறோம்
அழிவது இயற்கை மட்டுமல்ல
நம் வாழ்க்கையும் தான்...
நெகிழியை புதைத்து மண்ணின் வளமையை குறைத்தோம்..
மரத்தை வெட்டி காற்றை கரைத்தோம்
காற்றை கூட காசுக்கு வாங்குவோம்...
நீர் இன்றி அமையாது உலகு ஆனால்
நீர் வீழ்ச்சிகளில் குப்பையை கொட்டி குட்டிசுவராக்கினோம்..
நிலத்தை அளித்தோம்!
நீரை குறைத்தோம்!
காற்றை அடைத்து
கண்ணீர் விடுகின்றோம்!
போதுமே இந்த போராட்டம்
இயற்கையை காத்து இண்பமாய் வாழ்வோம்!!
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்போம்
நம் வாழ்வின் அழகிய இயற்கை செல்வங்களை..

 பவித்ரா. பா
 II Bsc DCFS
 நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
 கோயம்புத்தூர்

***********************************************************************************
002.  இயற்கை

பஞ்சபூதங்கள் தந்த வரம் நீ

வான் தந்த பாடம் அனைவரும் சமமே

பசுமை இனிமை குளுமை வலிமை

மை வரை சூழ்ந்த நிலப்பரப்பு

வளைந்து கொடுக்கும் பண்பு உன்னிடம்

 வண்ண பூக்கள் வகை வகையாய் பூக்கள்

பிணி தீர்க்கும் மருத்துவராய் நீ...

 தேடுவதும் ஒடுவதுமான வாழ்வில் நிழலாய்

 உன்னைக் கல்லால் அடித்தாலும் கம்பால் அடித்தாலும்

 கனிதந்து பசியாற்றும் தாய்_இயற்கை

காலால் உதைத்தாலும் கடப்பாறையால் இடித்தாலும்

 பொறுமையாய் இருந்து போதிக்கும் போதிமரம்  ...

சுறுசுறுப்பாக இயக்கும் அழகிய சூரியன்

வாழ்வை விசாலமாக்கி வசந்தமாக்கும் வெண்ணிலவு

வண்ணத்தால் மகிழ்ச்சி தரும் வானவில்...

இறைவனின் படைப்பு இயற்கை அற்புதம்..

முனைவர் ப.விக்னேஸ்வரி
உதவிப்பேராசிரியர்
தமிழ்த்துறை
நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
கோவை.
 
**************************************************************************************
003.இயற்கை. 
 

மனதில் பல துன்பங்கள்
இருந்தாலும் இனிய
சாரலோடு மழையில்
நனையும் போது
துன்பங்கள் கூட
சந்தோசமாக
மாறி விடுகிறது..
பொழியும் மழைத்
துளிகளுக்கு தெரிவதில்லை
பல உயிர்களின் தாகத்தை
தீர்க்கத் தான் சென்று கொண்டு
இருக்கிறோம் என்று..
தங்கள் வீடுகளை இழந்து
அகதிகளாக அலையும்..
பறவைகளுக்கு தான்
புரியும் மரங்களின் அருமை.
தினமும் இரவு வந்தால்
கருப்பு நிற உடையை
அணிந்து கொள்கிறது பகல்.
சில நொடிப் பொழுது
வாழ்ந்தாலும் தானும்
குதூகலமாகவும் தன்னை
ரசிப்பவர்களையும்
பரவசமாக்கும் பனித்துளி.
மரத்தடியில் உதிர்ந்து
கிடக்கும் மலர்கள்..!
தன்னை வளர்த்து விட்ட
வேர்களை மரம் பூப்போட்டு
வணங்குகிறதா..?
கடல் அலைகளுக்கு
எவ்வளவு அன்பு கரைகள்
மீது ஒவ்வொரு முறையும்
முத்தமிட்டு தன் அன்பை
வெளிப்படுத்துகின்றன.
இந்த உலகில் யாரும்
அனாதை அல்ல
இனிமையை தர காற்றும்
வழிகாட்ட வானமும்
இருக்கும் வரை.
இயற்கை செழிக்க
வைத்தால் இயற்கை
நம்மை செழிக்க வைக்கும்.
இயற்கையை நாம் அழிக்க
நினைத்தால் இயற்கை
நம்மை அழித்து விடும்.
ஆறாத காயங்களுக்கு
நீண்ட தூர பயணமும்
இயற்கையும் தான்
சிறந்த மருந்தாக
இருக்கின்றது.
இயற்கையின் ரகசியம்
தினமும் வெளி உலகிற்கு
தெரியாமல் மூடி
மறைகின்றது.             இரவு
யாரை தேடி அலைகின்றது
என்று தெரியவில்லை
இந்த நிலா இரவு முழுவதும்
அலைந்து கொண்டே
இருக்கின்றது இந்த நிலா..!
இயற்கையின் மடியில்
அவ்வப்போது வந்து
இளைப்பாறுகிறது
இடியும் மின்னலும்..!
இரு மேகங்கள் ஒன்றோடு
ஒன்று இணையும் பொழுது
மின்னல் மோதிரம்
மாற்றிக் கொள்கிறது.
மேகம் குளிக்கும் போது
இந்த பூமி சுத்தமாகின்றது
இப்படிக்கு மழை.
நீல வான மாளிகையில்
வெள்ளை நிற
தேவதை நிலா.
தனக்கென பாராமல்
பிறரை மகிழ்விப்பது
இயற்கை தான்
செயற்கைக்காக அதனை
அழிப்பது மனிதன்
செய்யும் பாவம்.
பூமி குளிர்ந்து பயிர்கள்
வளர்ந்து மனித இனம்
வாழ உயிர் பிச்சை
போடுகிறது வானம்
இப்படிக்கு மழை.
கோபங்கள் சீற்றங்கள்
மனிதனுக்கு மட்டும் அல்ல
இயற்கைக்கும் உண்டு.
நாம் இயற்கையை அடக்க
நினைத்தால் அது நம்மை
அழித்துவிடும்.
இயற்கையின் அருமை
புரியால் மனிதனே
மனிதனுக்கு எமனாக
மாறுகிறான் இயற்கையை
காப்போம்..
செயற்கையை குறைப்போம்.
நீ செய்யும் செயலை
மற்றவர்கள் ரசிக்கவில்லை
என்பதற்காக நிறுத்தி விடாதே
சுட்டெரிக்கும் சூரியனை
எவரும் ரசிக்கவில்லை
என்பதற்காக
சூரியன் உதிக்காமலா
போய் விடுகிறது.
வானத்தில் இருந்து வரும்
மழைத்துளி மண்ணை
நனைக்க முன் பல
விவசாயிகளின் மனதை
நனைத்து விடுகின்றது.

ஏழையின் சிரிப்பில்
இறைவன் இருக்கிறான்
என்பார்கள் ஆனால்
தரிசிக்க தான் இவ்வுலகில்
யாரும் இல்லை..!

மலையின் உச்சியில்
இருந்து விழுந்தாலும் எனக்கு
மரணமில்லை
இப்படிக்கு நீர்வீழ்ச்சி.


செ.லாவண்யா
தமிழ்த்துறை மாணவி
அந்தியூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
ஈரோடு மாவட்டம்
அந்தியூர்.
********************************************************************************
 
004.இயற்கையை பாதுகாப்போம்


 நான் விடும் மூச்சு காற்றில் தான் நீ  வாழ்கிறாய்
 
என்னை அழிப்பது உன்னை நீயே வதைப்பதற்கு சமம்

இந்த உலகில் நிரந்தரமானவர் என்று எவறும் கிடையாது

நிரந்தரமானது இயற்கையும் இயற்கையின் நிகழ்வுகளும் மட்டுமே

இயற்கை நம் முன்னோர்கள் நமக்கு விட்டு சென்ற பரிசு

இயற்கைய காப்போம்
நல்ல இயற்கையை விட்டு செல்வோம்
அடுத்த தலைமுறைக்கு பரிசாக

ஏழைபணக்காரர் என்ற பாரபட்சம் இல்லாமல் கொடுப்பது இயற்கை மட்டுமே

நீ  இயற்கையை அழிப்பது சரி தான் என்றால்
உன்னை இயற்கை அழிப்பதும் சரி தானே...!

வீட்டுக்கு வீடு மரம் வளர்து வீதி அனைத்தும் பசுமை செய்வோம்...!
பூமியை நாம் குளிர்வித்து பூவுலகை நாம் காத்திடுவோம்...!

தமக்கு தானே குழி பறித்து கொள்கிறான் மனிதன்
இயற்கையை அழித்து

 வா வாசமில்லா மலர்களுக்கும் வாசம் கொடுப்போம்
நேசமில்லா நெஞ்சங்களிலும் அன்பை விதைப்போம்
துயர் வரும் வேலைகளில் தோள் கொடுப்போம்
இயற்கையை தாய் போல் கண்டு மதிப்போம்...!!

இயற்கை இறைவணின் பரிசு
உருவாக்கி விட்டு அழித்தால் நியாயம்
அழிப்பதை மட்டுமே வேலைக்காக கண்டால் அது பாவம்
அடுத்த தலைமுறைக்கு செய்யும் துரோகம்
 
அரை அடி நோண்டி செடி நட்டிருந்தால்
ஆயிரம் அடி தோண்டி போர்போடும் அவசியம் ஏற்பட்டிருக்காது.....!!  

தினந்தோறும் காணும் அழகு பூவின் இயற்கை.
இவ்வுலகை வியக்க வைக்கிறது
உன் அழகு புல்வெளி மேல் படர்ந்திருக்கும பணித்துளிகள் அழகு சில் லென்று தூறும் மலைச்சாரல் அழகு
மரங்கள் ஓன்றோடு ஒன்று இனைந்து பாடும் இன்னிசை அழகு
மழைக்காலங்களில் மாலையில் வரும் வானவில் அழகு
வண்ண வண்ணங்களாய் பூக்கும் பூக்கள் அழகு என்று  வர்ணித்துக் கொண்டே போகலாம்

மி. லோகேஸ்வரி
தமிழ்த்துறை மாணவி
அந்தியூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
ஈரொடு மாவட்டம்.

 
**********************************************************************************
 
005.இயற்கைவளம் பாதுகாப்பு

இறைவன் தந்த வளங்கள் யாவும்,
இயற்கை வளப் பாதுகாப்பு.

விருட்சத்தை விருட்டென்று வெட்டிவிட்டு விதைக்கருவை எங்கே போய் தேடுவது.

கற்பகத்தருவை கரடுமுரடாய் சிதைத்திட்டு கருப்பையை கிழித்துதான் போடுவதா?

பசுந்தளிர் இலைகளை மக்கச் செய்து, இளந்தளிர் சிசுக்கள் கழுத்தை நெறிப்பதா?

இயற்கையை அழிக்க நினைத்திட்டால், உயிர்க்கோளம் என்பது பொய்த்துவிடும்.

உயிர்மை என்பது இல்லையென்றால் உயிர்,மெய் என்பது நீர்த்துவிடும்.

பச்சையங்கள் வெளுத்துப் போனால் நிச்சயம் வறட்சிவிதி தலைத்தூக்கும்.

இயற்கையெனும் முதலாளி. நாமெல்லாம் தொழிலாளி.

ஒன்றுபட்டு, உடன்பட்டு வாழ்ந்திட்டால்,
(இயற்கை வளம் காத்திட்டால்) மனிதவளம் நீடிக்கும்.

    தன.மகேஸ்வரி.
******************************************************************************
006.இயற்கை - தென்னை மரம்.  
வானுயர்ந்து  வளமாக வளர்ந்து இருக்கும்!!!         
உனது இலைகள் தென்னங் கீற்றாகும்!!!         
கீற்று ஓலை பின்ன பயன்படும்!!!                              
வீடு கூட்டும் விளக்குமாறுக்கு உதவிடும்!!!                            
தென்னை மரம் வீடுகட்ட உதவும்!!!                                 
சிறார் கைகளில் கடிகாரமாக கீற்றிருக்கும்!!!                      
விழாக்களில் வாசலில் தோரணமாக ஆடுவாய்!!!         
கும்பத்தில் தென்னம்பூவாக விரிந்து இருப்பாய்!!!                          
 பூரண கும்ப மரியாதை தேங்காயுடன்தான்!!!            
தேங்காய் உடைக்காத ஆலயமே இல்லை!!!              
பூசையில் தட்டில் தேங்காய்தான் முதலில்!!!                              
 வேண்டுதலுக்கும் கோவிலில் கணக்கில்லாமல் உடைபடுவாய்!!!     
தேங்காய்ப் பால் மருந்தாக உதவிடும்!!!          
தேங்காய்ப்பால்  சாதம் சுவையோ  சுவை!!!                
இட்லி என்றாலே தேங்காய் சட்டினிதான்!!!        
தேங்காய் இல்லாத குழம்பே இல்லை!!!                 
தேங்காய் பூண்டு சட்டினி ஓகோ!!!                                        
தேங்காய் துறுவல் போடாத பொரியலா?                    
இளநீர் குடிக்க இனிமையோ இனிமை!!!       
உடல் சூட்டைத் தணிக்க உதவும்!!!!                                      
தேங்காய் பாரை மிட்டாய் சுவையாகும்!!!                        
பலவிதமான பலகாரம் தயாரிக்க உதவிடும்!!!             
தேங்காய் எண்ணை கூந்தலுக்கு தடவலாம்!!!      
கேரளாவில் எண்ணை சமையலுக்கு உதவும்!!!    
கல்கோனா மிட்டாய் தயாரிக்க உதவிடும்!!!!          
நல்ல வியாபார பயிராக உதவும்!!!                                
தென்னை வைத்தவன் பணக்காரன் ஆவான்!!!        
தென்னங் காற்று தென்றலாக வீசிடும்!!!       
தென்னை ஒரு கற்பக மரமாகும்!!!                              
பிள்ளையை விட தென்னையை உயர்த்துவர்!!!                        
எல்லாம் தரும் தென்னை மரதேவதை!!!    
இந்த தென்னையை போற்றி வளர்ப்போம்!!!       
 
-முனைவர் பீ.ரகமத் பீபி, திருவையாறு.
***********************************************************************************
007
இயற்கை

 

இயற்கை

இறைவன் படைத்த எண்ணில் அடங்கா உயிரினம் வாழும் அழகிய பூமியில் 
அற்புதமான ஒன்று இயற்கை..

இயற்கையான உரம் உண்டு செழிப்பாக வளரும் உன்னை பார்ப்பதற்கு இரண்டு கண்கள் போதுமா..??

அன்று ஆதி மனிதன் பாதுக்காத்த பொக்கிஷம் இயற்கை  அதை இன்று நாம் தோண்டி எடுத்து சிதைக்கிறோம்...

என்னை வெட்டும் உனக்கு தங்கும் இடத்தில் நிழல் தரும் நண்பன் இயற்கை..

பழங்கள் காய்கறிகள் மருத்துவப்பொருள் நறுமணம் காகிதம் மரம் என நினைத்து பார்க்க முடியாத அளவில் 
வியக்கவைக்கும் இயற்கை... 

வேப்பமரதில் இருக்கும் மருத்துவம் யாருக்கும் அதிகம் தெரிவதில்லை... 
இலை முதல் வேர் வரை மரம் முழுவதும் இயற்க்கை தான்

*வயிர்புண்க்கு வேப்ப வேர், சளிக்கு வேப்ப மட்டை, உடல் குளிர்ச்சிக்கு வேப்ப இலை, கழிவு நீங்க வேப்பம் பூ, ஏண்ணெய் எடுக்க வேப்பம் காய், பல் வேர் வலுவாக வேப்பம் குச்சி, வேப்பம் மர நிழல் கூட உடலுக்கு குளிர்ச்சி தான்...ஒவொரு மரத்திலும் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு மருத்துவ குணம் நிறைந்து உள்ளது... 


இயற்கை காப்பது அவசியம்... 
மழை  நீர் காற்று உணவு இருப்பிடம் நோய் இல்லா வாழ்வு என அனைத்தையும் கொடுத்து நம்மை காப்பது இயற்கை ஒன்றே...

தானியங்களை விதைப்போம், மழை நீர் சேமிப்போம் -இயற்கை காப்போம்..


 கவிஞர் மு. வான்மதி பி.ஏ

திருச்செந்தூர்

 
*************************************************************************
 
008.இயற்கை


மலர்களின் எத்தனை அதிசயம்  கண்டேன்

பச்சை வண்ணச் செடியில் பல வண்ணம்

மனித மூளைக்கு உகந்த வல்லாரை

எலும்புகளுக்கு  உகந்த பிரண்டை

நோய் தீர்க்கும் அரிய அருவிகள்

கண் கவர் மலர்கள்

எண்ணிலடங்காத வனப்பு என்னே பூரிப்பு

பஞ்சு துண்டுகளாய் வெண் மேகங்கள்

இடி மின்னல்  நிலா வானவில்

கொட்டும் அருவி விண்மீன்கள் தவமும் நட்சத்திரங்கள்

பிணி தீர்க்கும் நீர் ஊற்றுகள்

அன்பானவர்களுக்குத் தென்றல் கோபக்கார்களுக்கு புயல்

எத்தனை அவதாரம் மண்ணில் எடுக்கிறாய்
 
பஞ்சபூதங்கள் தந்த வரம் நீ

வான் தந்த பாடம் அனைவரும் சமமே

பசுமை இனிமை குளுமை வலிமை

மை வரை சூழ்ந்த நிலப்பரப்பு

வளைந்து கொடுக்கும் பண்பு உன்னிடம்

 வண்ண பூக்கள் வகை வகையாய் பூக்கள்

பிணி தீர்க்கும் மருத்துவராய் நீ...

 தேடுவதும் ஒடுவதுமான வாழ்வில் நிழலாய்

 உன்னைக் கல்லால் அடித்தாலும் கம்பால் அடித்தாலும்

 கனிதந்து பசியாற்றும் தாய்_இயற்கை

காலால் உதைத்தாலும் கடப்பாறையால் இடித்தாலும்

 பொறுமையாய் இருந்து போதிக்கும் போதிமரம்  ...

சுறுசுறுப்பாக இயக்கும் அழகிய சூரியன்

வாழ்வை விசாலமாக்கி வசந்தமாக்கும் வெண்ணிலவு

வண்ணத்தால் மகிழ்ச்சி தரும் வானவில்...

இறைவனின் படைப்பு இயற்கை அற்புதம்..

முனைவர் ப.விக்னேஸ்வரி
உதவிப்பேராசிரியர்
தமிழ்த்துறை
நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
கோவை.

///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
009.இயற்கை

 மனதில் பல  துன்பங்கள்
இருந்தாலும் இனிய
சாரலோடு மழையில்
நனையும் போது
துன்பங்கள் கூட
 சந்தோசமாக மாறி விடுகிறது..

 பொழியும் மழைத்துளிகளுக்கு தெரியவில்லை
பல உயிர்களின் தாகத்ததை தீர்க்க தான் சென்று கொண்டடு
இருக்கிறோம் என்று...

தங்கள் வீடுகளை இழந்துஅகதிகளாக அலையும்..
 பறவைகளுக்கும் தான்
 புரியும் மரங்களின் அருமை..

தினமும் இரவு வந்தால்
கருப்பு நிற உடையை அணிந்து கொள்கிறது பகல்..

 சில நொடிப் பொழுது
 வாழ்ந்தாலும் தானும்
 குதுகலமாகவும் தன்னை ரசிப்பவர்களையும்
 பரவசமாக்கும் பனித்துளி...

 மரத்தடியில் உதிர்ந்து
 கிடக்கும் மலர்கள்..!!
 தன்னை வளர்ந்து விட்ட
 வேர்களை மரம் பூப்போட்டு
 வணங்குகிறதா...?

 கடல் அலைகள்
 எவ்வளவு அன்பு கரைகள் மீது ஒவ்வொரு முறையும்
முத்தமிட்டு தன் அன்பை வெளிப் படுத்துகின்றன..

 இந்த உலகில் யாரும்
 அனாதை அல்ல
 இனிமையை தர காற்றும்
 வழிகாட்ட வானமும்
 இருக்கும் வரை...

 இயற்கை செழிக்க
 வைத்தால் இயற்கை
 நன்மை செழிக்க வைக்கும்...
 இயற்கையை நாம் அளிக்க நினைத்தால்
 இயற்கை நம்மை அழித்து விடும்...

  ஆறாத காயங்களும்
 நீண்ட தூர  பயணமும்
 இயற்கையும் தான்
 சிறந்த மருந்தாக இருக்கிறது...
 இயற்கையின் ரகசியம்
 தினமும் வெளி உலகிற்கு
 தெரியாமல் மூடி
 மறைக்கிறது இரவு....!!
 
G. Karthika
 College 2nd year
 BA Tamil
 Anthiyur
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 
010. இயற்கை


கண்ணுக்கு விருந்தாய் எழில்கொண்ட இயற்கை...  
இறைவன் படைப்பில் ஞானத்தின் கொடை...
இயற்கையென்னும் அழகு அதிசயம் நிறைந்த அற்புதம்...
இயற்கைதரும் சுவாசம் யுகம்தவழும் உயிர்களின்விசுவாசம்..
பூத்துக்கொழிக்கும் பூஞ்சோலை இயற்கை அழகு...
நீண்டநீல வானம்
வானம் மருவிஓடும்
மேகம்...
மேகம் திரண்டுபுரண்டு கருமேகமாய் பொழியும் மழை...
பொழியும்மழையில்
ஒலித்துஒளிரும் ஒலிஒளி நாதம்...
பச்சைவண்ண அடர்ந்த வனம் அழகு...
அதனுள் நிறைந்த மருத்துவகுணத்தின் மனம் ...
பலபலமரத்தின்
இலைகளில் தவழும் நறுமணம்...
நறுமணம் உதிர்க்கும் வனங்களின் எழில் கூட்டும்மலைகள்...
மலைகள் மேனிதழுவி சிதறும்சிற்றோடை அழகு...
நிலம் தவழ்ந்து மகிழ்ந்து துள்ளளலில்...
வழிந்தோடி ஆறாய் உருவெடுத்து முக்கூடலாய்....
சங்கமித்து கலக்கும் நீண்டநீல வான்தொடும் கடலழகு...
இயற்கைதன் மலர்ச்சியாய் இரவின் நிலவொளி மின்னி...
ஒளிரும் விண்மீன்கள் பார்ப்பதற்கு அழகு...
பருவத்தின் மாற்றத்தில் பொழியும் பனியழகு...
பசுமையின்சுமையாய் போர்த்தி படரும் பயிரின் அழகு..

மானுடஜென்மத்தின் உடலுறுப்பாய் இருகை அழகென்றால்...
ஞாலத்தின் ஞானமாய் இயற்கை  அழகு...
ஞாலம் பிறந்துயிர் வாழவுதவும் நாம்....                                            

இயற்கையினை இரு கைகொண்டு அணைப்போம்...
செயற்கையில்லாத இயற்கையை மரங்களால் பாதுகாப்போம்...     

 நெகிழியில்லாத மண் வளமாக மாற்றுவோம்...          

பஞ்சபூதங்களை அழிக்காமல் நீர் வளத்தைசேமிப்போம்....
இயற்கையை என்றும் இயற்கையாய் வாழ விடுவோம்....                

என் கைவிரல்கொண்டு வடித்த இயற்கை எழில் வரிகளை....
எழுதும்போதே எண்ணங்கள் புத்துணர்ச்சி பெறுகிறது....

இயற்கையை சாபமாய் மாற்றாமல் வரமாய்மாற்ற...

வீட்டுக்கு ஒரு மரங்களை நட்டு அணைத்துக் கொள்வோம்
(இக்கவிதையை இக்குழுவிற்காக மட்டுமே சமர்ப்பிக்கிறேன்)


 வி . கணேஷ் பாபு , ஆரணி
./////////////////////////////////////////////////////////////////////////////////////////////
011.
இயற்கை அழகு   ..... 
தினந்தோறும் காணும் இயற்கை அழகு....               
  *பூக்கும் பூக்கள் அழகு....                              
 * மரங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து பாடும் இன்சை அழகு....  
மழையும் வெயிலும் கூட மனிதனின் மனதைப்போலதான்
மாறிக் கொண்டே இருக்கும் அதுதான் இயற்கையின் அழகு....       
கடந்தகால நினைவுகள் எல்லாம் நீங்காமல்
இடம்பெற்றது இதுதான் இயற்கையின் அழகு....                               
 எத்தனை யுகம் கடந்தாலும் அழியாத வரம்பெற்றது இயற்கை....
இறைவனின் அற்புத படைப்பு இயற்கை.... 
இந்த உலகில் நிரந்தரம் என்று எவறும் இல்லை ....
 நிரந்தரம் இயற்கையும் இயற்கையின்
நிகழ்வுகளும் மட்டுமே....  \
சூரியன் உதிப்பதும் மறைவதும் இயற்கையின் அழகுதான்....
என்றும் மாறாதது இயற்கை மட்டுமே.....  
 சொத்து என்று சொன்னால் அது இயற்கைவளம் மட்டுமே....
மனிதன் உயிர்வாழ்வது இயற்கையின் மூலமே...
 
த.மாலதி MA Bed  தாரமங்கலம் ஒன்றியம் சேலம் மாவட்டம்
//////////////////////////////////////////////////////////////////////////////////
 
012.இயற்கை..//
@@@@@@@@

அழகான சுற்றி
வளம் வரும் இயற்கை..//

ஐம்பூதங்கள் கொண்டாடும்
அதிசயம் இயற்கை..//

பார்க்கும் இடமெல்லாம்
வண்ணமானது இயற்கை..//

எண்ணென்ற அதிசயங்களை
தன்னை வைத்துக்கொள்கிறது..//

விசித்திரங்களும் வியந்து
பார்க்கும் விபரீதம்..//

இன்பங்களும் கூட்டும் அழிவுகளும் உண்டாகும்..//

எதிர்பாராத நேரங்களில்
நடத்திச்செல்லும் இயற்கை..//

அழகும் ஆபத்தும் சேர்ந்தது இயற்கை..//

படமகுரு பச்சையப்பன்
செஞ்சிக்கோட்டை
******************************************************************************
 
013.இயற்கை வளம் பாதுகாப்பு

ஒரு மகனை வளர்ப்பது
அவன் , குடும்பத்துக்கே !!
பயன் தருமொரு  மரத்தை வளர்ப்பது ,
அடுத்த சந்ததிக்கு பயன் தருமே !!

ஒரு குழந்தை
அவதரிக்கும் போது
ஒரு மரமும் நடுவோமே !!
மரமாக பாராமல்
குழந்தையாய் வளர்த்திடுவோமே !!

வீடுக்கொரு மரம் நடுவோமே !!
தூர்ந்துபோன குளத்தை திருத்துவோமே !!
பாலித்தீன் பையை நிறுத்துவோமே !!
குப்பைகளை , குப்பை தொட்டிக்குள் போடுவோமே !!

இயற்கையை காப்போமே !!
ஆரோக்கியமாய்
வாழ்வோமே !!

அதிகமான இயற்கை வளத்தை சுரண்டும்
மனிதரை பார்த்தால் ,நெஞ்சு பொறுக்குவது
இல்லையே !!

கெட்டதை உள் வாங்கியே !!
நல்லதை வெளிவிடும் அறிவே !!
கண்ணுக்கு தெரியாத காற்றையே !!
உணர்வைக்கும் அழகே !!

அற்புதங்களை
கொண்ட மரத்தை அஃறிணையாக
கருதாமல் , உயர்திணையாக
மதிப்போமே !!

  கவிதை தருவோர்                  

கவிஞர்.பொ.கி.சந்தண குமார் ,
தூத்துக்குடி மாவட்டம் .
 
***************************************************************************
014.
இயற்கையைக் காப்போம்!

சோலையில் குயில்கள் கூவும்
      சுரும்புகள் இசைந்தே பாடும்!
காலையில் எழுந்தே புட்கள்
      கருக்கலில் பறந்தே செல்லும்!
ஓலையாம் குடிசை தன்னில்
     ஒலியினை எழுப்பும் சேவல்;
காலையில் கதிரோன் காட்சி
       கண்ணுக்கு விருந்தும் ஆகும்!

மலையினில் அருவி தோன்றும்
       மனங்குளிர் தென்றல் தீண்டும்!
தொலைவினில் உள்ள மேகம்
        தூறலைத் தூறிச் செல்லும்!
குலைகளைச் சாய்த்துத் தென்னை
       குமரிபோல் காட்சி நல்கும்!
கலைமிகு காட்சி காண
      களிப்பினில் உள்ளம் துள்ளும்!

வண்ணமாய்ப் பூக்கள் பூத்து
      வண்டது வரவை நோக்கும்!
தண்நிழல் தன்னைத் தந்துத்
       தருக்களும் தலையை ஆட்டும்!
வெண்ணிலா வரவைக் காண
       விரிகதிர் பதுங்கும் மாலை!
எண்ணிலா இன்பக் காட்சி
        இயற்கையாய் எங்கும் தோன்றும்!

விண்ணிலே தோன்றும் யாவும்
      வெளியினில் காணும் யாவும்
மண்ணிலே இருக்கும் யாவும்
      மாக்கடல் ஆறு யாவும்
உண்மையில் இறைவன் தந்த
      ஒப்பிலா வளங்கள் ஆகும்!
திண்ணமாய் அதனைக் காக்க
      திகழ்ந்திடும் இயற்கை யாவும்!
     
பாவலர் க.சண்முக சிதம்பரம்
தரகம்பட்டி,
கரூர் மாவட்டம்
 
*****************************************************************************
015.இயற்கை காப்போம்

இயற்கை நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம்

இயற்கை நாம் அனைவரும் பாதுகாக்க வேண்டும்
இயற்கை ஒரு போதும் சிதைக்க கூடாது

இயற்கை காற்று வாசிக்க வேண்டும்
இயற்கை கிடைக்கும் அனைத்து உணவு பொருட்கள் உண்ண வேண்டும்
இயற்கை இல்லையென்றால் மனிதர்கள் இல்லை

இயற்கை வளத்தை பேணி காத்தல் வேண்டும்

இயற்கை மனிதனின் உயிர் மூச்சாக கருத வேண்டும்

இயற்கை வளங்கள் நன்றாக இருந்தால் மட்டுமே
மனிதர்கள் நோய் நொடி இல்லாமல் வாழமுடியும்

இயற்கை உணவு பழக்கத்திற்கு மாறுங்கள்

மரங்கள் செடிகள் நம் வீட்டு பிள்ளைகள் போல் பாதுகாக்க வேண்டும்
 இயற்கை வளத்தை முழுமையாக பெற்று இருக்க வேண்டும்
அவ்வாறு நாடு முன்னேற்று பாதைக்கு செல்கிறது
இயற்கை மழையினை ரசிக்க வேண்டும்
இயற்கை விவசாயம் செய்ய வேண்டும்
விவசாயத்தில் இயற்கை உரங்கள் மட்டும் பயன்படுத்த வேண்டும்
செயற்கை உரங்கள் பயன்படுத்த கூடாது
வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம்
பொது இடங்களில்
பராமரிப்பு செய்வோம்

 
இரா கார்த்திக்ஏம்ஏ சமூக சேவகர் கரூர் மாவட்டம்.
 
*******************************************************************
016.மரமே வரமாய்

*** ***

மரம் நடமாற்றம் ஏற்படும்

ஆம், வெயிலில் இருக்கும் நாமும்
நிழலுக்கு மாறலாமே

மழலைகளும் விளையாடுமே
முதிய மழலைகளும் அரட்டை அடிக்குமே

சின்னச்சின்ன பூச்சியும் புழுக்களும்
ஊர்ந்து திரியுமே...

கொழுத்தும் கோடை வெப்பமும்
சற்று தணியுமே

பறவைகளும் வந்தமருமே
விலங்குகளும் ஆனந்தம் காணுமே

விதைகள் விருட்சமாய் மாறினால்
மாரியும் மண்ணில் பொழிந்திடுமே
மண்மனம் வீசிடுமே

நெகிழியில்லா நிலமாய்
சுற்றுப்புறமும் அழகாய்

தொற்றுகளும் முற்றிலும்
ஒழிந்து ஒளியேற்றுமே

விதையும் விருட்சமாய் வளரும் என்பதை
வளரும் தலைமுறைகளுக்கு எடுத்து சொல்வோம்

செயற்கையை இயற்கையால் வெல்வோம்

விதைத்து செல்
விருட்சம் வளரும்
விசும்பின் துளியும்
தேகம் நனைக்கும்

நம் முயற்சி
மரம் வளர்ச்சி

சே. லோக சுந்தரம்
      பென்னாகரம் ( தருமபுரி )

 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 
017. இயற்கை
....................
கரு நீல வண்ணம் பூசிய வானத்தில்
நிலவு பூத்துக் குலுங்கும்
மேகங்கள் கண்ணாமூச்சி விளையாடும்
நட்சத்திரங்கள் ஒழிந்து பின் முகங்காட்டும்

பசும் போர்வை போர்த்திய பூமி
படுத்துறங்கும் பனித்துளி
கடல் குடித்துக் கண்விழிக்கும் சூரியன்
உடல் நடுங்கித் துடிதுடிக்கும் பனித்துளி

படபடக்கும் பறவைகள் சலசலக்கும் ஓடைகள்
பூ காய் கனி என பூத்துக் குலுங்கும் சோலைகள்
பூக்களை முயங்கிய வண்டுகளால் புதுப் பிறப்பெடுக்கும் தாவரங்கள்

அலைபேசிகளால் தொலைந்துபோகும் பறவைகள்
செயற்கை உரங்களால் மலடாகும் மண்கள்
நெகிழியால் வரண்டு போன வளங்கள்
இவற்றை வேரறுப்போம் வேளாண் நிலங்களில் சோறறுப்போம்

ஓங்கி உயர்ந்த மலை முகடுகளில் வழிந்தோடும் மேகக் கூட்டங்கள்
இடிமின்னல் களுக்குப் பயந்தோடி கண்ணீர் வடிக்கின்றன

வெண்குருதி பூமியெங்கும் பாய்ச்சும் கோடைச் சூரியன்
வெந்து கருகும் வெம்மை பூசிய பாலை
கடல்நீர் ஆவியாகி ஆகாயம் சென்று மழையாக மறுசுழற்சியாகும் மந்திரம்

இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்வோம்
ஆயுள் முழுதும் ஆரோக்கியத்தோடு இன்புறுவோம்

முனைவர் பெ.முத்துராஜ்,
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
வேப்பந்தட்டை.


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 
018.
இயற்கை
காலை வணக்கம் சொல்லி,
காவிய முழக்கம் மொழிந்து,
கிழக்கில் உதிக்கும் சூரியனோடு,
தினம் தினமாய் திகில் நடை போட்டு,
பாதையோரமாய் இழுத்துச் செல்லும் இயற்கை ரசனையின்
அருமையே ஒரு சுகம் தான் அல்லவா,
மூச்சுக் காற்றை மென்றவாறு,
இயற்கை காற்றை கொள்ளும் வாடையின் சுகம் தான் என்ன,
 எத்தனை முகிழ் கூட்டங்கள்  சூழ்ந்திட்டு நிழல் தரும்
மரங்களோடு காரியமாய் பலன் தந்திட,
 இயற்கை வாசல் சுகம் சொல்லும் மகிமையின் களமே வேறு,
எத்தனை ரகசிய அலைகள் ,
எத்தனை ரகசிய மொழிகள்,
எத்தனை ரம்யமான பொழுதுகள் என இயற்கை
கொள்ளும் தத்ரூபங்களின் அழகு தான் என்ன!
மர தோட்டங்களின் அழகும்,
மறை தோற்றங்களின் அருமையும் வரு வகை ரசனை தான் போலும்,
வழக்கத்தில் வாடிய பூவை கூட,
வருட வைக்கும் பலமான தளம் இயற்கையடா,
வீட்டு மல்லிகை வீசும் மணமும்,
விலை கொடுத்து வாங்கும் தளமும் இயற்கை
எது என்று உணர வைத்து விடுகின்றது.

கவிஞர் சஜ்ஜாத் ஷரீப்(கபூரி),
இளம்கலை பட்டதாரி மாணவன்,
இலங்கை.
 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 
019. வாழை மரம்

இயற்கை படைத்தான் இறைவன் இன்பமாய் வாழ மனிதனை படைத்தான்//

 மனிதனைப் படைத்து பண்படுத்தி இயற்கை வளங்களை அளித்தான்//

மனிதன் வாழ மரங்களை படைத்தான் மரங்களிலிருந்து உயிர் வாழ காற்றினை பெற்றார்//

மனிதன் பல தலைமுறை தாண்டி வாழ்வது போன்று
மரங்களை மனிதனுக்காக பயன் அளிக்க வாழச்செய்தான்//

வெட்ட வெட்ட துளிர் விடும்  வாழைமரம்

இலை முதல் சருகு வரை மனிதனுக்காக படைத்தான்

இலைகளும் உணவுக்காகவும் உணவாகவும் உள்ளது//

 கனிகளும் காலம் கடந்து ருசிக்கலாம்//

 காய்களும் உணவுக்காக காத்திருக்கிறது//

 பூக்களும் உணவாக பயன்படுகிறது//.

 அகிலத்தில் அலங்காரம் பொருளாகவும் மரங்களுடன் பயணிக்கிறது//

 தான் வெட்ட வெட்ட தன் பிள்ளைகளையும் துளிர் செய்யும்//

 மண்புழுக்களுக்கும் வரமாக அமையும்//

 நீரோடை போன்று காற்றிற்கும் பயன்படும்//

 அலங்கார மரங்கள் அழகாக்கப்படுகின்றன //

வெட்டப்பட்ட மரங்கள் தண்டுகள் கூட தரம் பிரிக்கப்படுகின்றன//

மரத்தின் நீர் கூட மருந்தாக பயன்படும்//

 இறைவன் படைத்தான் மரத்தை இறைவனுக்கே பழம் படைத்தான் மனிதன்//

சருகுகள் கூட பூக்கள் தொடுக்க பயன்படும்//

தண்டின் சாறு மருந்தாக பயன்படும்//

பட்டைகள் கூட மருந்தாக பயன்படுகிறது//

பழங்களும் பலகாரம் ஆகிறது//

பண்டமாற்று முறைக்கும் பக்குவப்படுகிறது

பயன்படுத்திப் பார் பலனளிக்கும் உனக்கு வாழ்நாள் முழுவதும்//

வாழ்ந்து பாரதனுடன் தலைமுறையை தாண்டி வாழும் உன்னிடம்//

அதனை உண்டு பார் உன்னையும் அழகாக்கும்
//
சுவைத்துப் பார்  கனிகளை சொர்க்கத்தை அடைவாய்//

பாதுகாத்துப்பார் நீ மட்டுமல்ல உன் தலைமுறையின் தலைப்பு//

அதனை நீ காப்பாற்றினால் உன் பிள்ளைகளை அது காப்பாற்று//

மனிதனுக்கு மட்டுமல்ல மரங்களுக்கும் மனித நேயம் உண்டு//

மரங்களை பாதுகாப்போம் மனித வளத்தை பெருக்குவோம்//

இயற்கையை பாதுகாப்போம் இன்பமாய் வாழ்வோம்//

உலகத்தை காப்போம் வாழும்போதே சொர்க்கத்தை காண்போம்


-முனைவர் இரா.அன்சல்யா ,
உதவி பேராசிரியர் தமிழ் துறை 
குயின்ஸ் கலை மற்றும் அறிவியல்
 மகளிர் கல்லூரி புனல் குளம் ,புதுக்கோட்டை
 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 
020.
இயற்கை

இவ்வுலகில் பிறந்து,
இயற்கையை மணர்ந்து,
அம்மாவின் கற்றளை உணர்ந்து,
காற்றின் இசையை அறிந்து,
தள்ளாடி தள்ளாடி வாழ்க்கையை கற்றேனே,
அப்போது புரியவில்லை இயற்கையின் அருமை,
இயற்கை இல்லை என்றால் இயற்கையாகவே நாம் இல்லை,
பழம் சாப்பிட்டு தூக்கி எறியப்பட்ட கொட்டை,
தொலைதூரத்தில் விழுந்து,
 வெயிலில் காய்ந்து,
மன்னீரை உறிஞ்சி,
வானத்தில் மழை பொழிந்து,
மண்வாசம் அடித்து,
மகியா வண்ணம் பெரும் பூமி,
ஈரக்காற்றில் என் நெஞ்சம் குளிர,
மண்ணில் மறைந்ததே,
ஆலா சூரியன் ஆகாயத்தில் தெரிய,
புது உயிராய் தோன்றி இயற்கையே,
எனக்குதெரியவில்லை,
தூக்கி எரியப்பட்ட
கொட்டைக்கு,
உயிர் வரும் மென்று,
அந்த உயிர்,
தாகத்திற்குதண்ணீர் கேட்டது,
என்கண்ணீர் கூட தண்ணீரை கலந்து
பன்னீரை கொடுத்து,
எனக்குத் தேவையான
ஆக்சிஜனை நீகொடுத்தாயே,
காற்றில்லாமல்நாம் வாழ,
இயற்கையை அழிக்காமல்,
இயற்கையை
காப்பாற்றுங்கள்,
இயற்கையோடு
இணைந்து வாழும்
வாழ்க்கையே மென்மையானது சிறப்பானதும் கூட.

ம.பூவரசன்
திருவள்ளூர்.

 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 
021.இயற்கையை பாதுகாப்போம்...

இந்த பூமிக்கு பொக்கிஷம் இந்த..!//
இயற்கை தான் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும்..!//
அடைக்கலம் தருகிருக்கிறாள் ஒரு அன்னையே..!//
போல பறவைகளுக்கும் தன்  இடத்தில்..!//
வீடு கட்டி கொள்ள அனுமதி..!//
தந்தாய் மனிதர்களுக்கு நிழல் தந்து..!//
தன் தாய்மையை காட்டினாள் இவள்..!//
எங்கள் சுவாசத்தில் நீதான் வாழ்ந்து..!//
கொண்டிறுகிறாய் பூமி வாழும் வரை..!//
மழையிலும் வெயிலும் ஒற்றை காலில்..!//
நின்று கொண்டே அனைவருக்கும் நல்லது..!//
செய்பவள் நீ மண் வாசத்தில்..!//
அதிகம் நேரம் வாழ்பவளே வான்..!//
மகள் உன்னை தானே அதிகமாக..!//
முத்தம் இடுவாள் உன் ஒவ்வொரு..!//
துளியும் பொக்கிஷம் தான் எங்களுக்கு..!//

கவிஞர். ஜெ. உ . தரணி ஜெகதீசன்  
ஆங்கில இலக்கியம்
திருப்பூர்.
 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 
022. 
ஆலமரம்

ஆயிரம் பேருக்
 நிழல் தரும்!?

அனைவருமே இளைப்பாறி
அகமகிழ்வு பெற்றிடுவர்!

சித்திரை பிறந்துவிட்டால்
எத்தனையோ கொண்டாட்டம்!

நித்திரையே கொள்ளாது
நீண்டகூத்து நடக்குமங்கே!

வடமோடி தென்மோடி
வகைவகையாய்க் கூத்தங்கே

பாய்விரித்துப் பார்த்தபடி
பார்த்திடுவார் ஊரார்கள்!

தேனீர்க்கடையும் வரும்
தித்திப்புக்கடையும் வரும்!

அப்பம்சுட்டு விற்கின்ற
ஆச்சியும் வந்திடுவார்!

கடலையும் வறுப்பார்கள்
கச்சானும் வறுப்பார்கள்!

கமகமக்கும் வாசனையால்
களைகட்டும் ஆலையடி!

குடும்பமெலாம் ஒன்றாக
குதூகலமாய் இருப்பார்கள்!

குழந்தைகளும் குறும்புசெய்து
குதூகலத்தில் மிதப்பார்கள்!

அமைதியாய்ப் பார்த்துநிற்கும்
அதையெல்லாம் ஆலமரம்!

ஆர்வந்து போனாலும்
ஆலமரம் அகமகிழும்!

போரொன்று வந்ததனால்
ஊரெல்லாம் ஓடிற்று!

யாருமே ஊரிலில்லை
ஊரிப்போ உறங்குகிறது!

களைகட்டி நின்றவிடம்
நிலையிழந்து நிற்கிறது!

யாருமே வருவதில்லை
ஆலமரம் நிற்கிறது!

ஆலமரம் மட்டுமிப்போ
அப்படியே இருக்கிறது!

ஆலடியைப் பார்ப்பதற்கு
அழுகைதான் வருகிறது!

மரம்மட்டும் பேசிவிடின்
வக்கிரங்கள் தெரிந்துவிடும்!

மரமாக இருப்பதனால்
வக்கிரங்கள் தொடர்கிறது!

ஆலமரம் அழுதுவிடின்
ஆறாக ஆகிவிடும்!

வேர்கள்வீழ்த்தமுடியாமல்
புயல்கள் புலம்பினர்!

நீரைதேடி நிலத்தில் ஓடினர் வேர்கள்!

வறட்சியை தாங்கி
வளர்ந்த மரம்!

உழைக்கும்பறவைகளின் உற்சாகக் கூடாரம்!

என் வேர்கள் எப்போதும் உழைக்கும்!

விதைகள் கசந்தாலும்
கனிகள் இனிமையே!

ஆயிரம் ஆண்டுளுக்கு
வாழக்கூடிய மரம்!

ஊருக்கு ஊர் ஆலமரம் நடுவோம் !!

அதுமரமாய் நிற்பதனால்
நாம்எழுந்து நிற்கின்றோம்!

கவிஞர். இ. ஜீனத் நிஸா
பி. ஏ. தமிழ்
காயல்பட்டினம்.
 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 
023.
இயற்கை

இயற்கையை வருணிக்க வார்த்தைகளே இல்லை

செயற்கை நவீனம் ஆயிரம் வந்தாலும்

இயற்கை எழிலுக்கு முன் தோற்கும்

புல்வெளியில் படர்ந்திருக்கும் பனித்துளிகள் அழகு

பூத்துக் குலுங்கும் சோலைகள் அழகு

சில்லென்று தூறும் மழைச்சாரல் அழகு

இசை பாடும் குயில்கள் அழகு

உதிர்ந்து விழும் பூக்கள் பேரழகு

நதி அருவியின் ஓசைகளும் அழகு

மழைக்காலங்களில் வரும் வானவில் அழகு

கரைகளை முத்தமிடும் கடலலைகள் அழகு

இன்னும் ஏராளம் இயற்கை அழகுகள்

இயற்கை இறைவன் கொடுத்த வரம்

இயற்கை அழிப்பு நமக்கே பாதிப்பு

இயற்கை அழிவு வருங்காலம் அழிவு

மரங்களின் சுவாசமில்லையேல்  மனிதன் சுவாசமில்லை

இயற்கையை காப்போம்  இன்பமாக வாழ்வோம்!!

ந.ராஜேஸ்வரி
கரூர்.
 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 
023.
வாழைமரம்
=================

மங்கலநாளில் மனைவாயிலில்  குலையுடன் வாழை அழகூட்டுமே!!!

தசைகளை உறுதியாக்க அசோகப்பூவை நம்பிக்கையோடு உண்போமே!!!

வாரமிருமுறை பூவையுண்டு பூவையரின் ரத்தப்போக்கை குறைக்கலாமே!!!

அரேசிகக்காயை அவியலாக்கி உண்ண மாவுச்சத்தும் கிடைக்குமே!!

கதலிபழம் குடலைச் சுத்தமாக்கி மலச்சிக்கலையும் நீக்கிடுமே!!!

தண்டு தேவையற்ற உப்பை சிறுநீராக்கி  வெளியேற்றுமே!!!

தண்டுசூப்புடன் மிளகு சீரகம் சேர்த்து அருந்தலாமே!!!

நார்ச்சத்து மிக்க வாழைத்தண்டால் உடலையும் மெலியவைப்போமே!!!!

சூடான உணவை இலையிலிட்டு உண்டால் இரும்புச்சத்தும் கிடைத்திடுமே!!!

பச்சையமும் அதிகமாக இருப்பதால் சுவையும் அதிகரிக்குமே!!!

கல்லீரல்,நிமோனியா நோய்களைத் தடுக்க இலையையே பயன்படுத்துவோமே!!!

கழிவுகளும் கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தி வாழ்வோமே!!!

தானியங்களில் உள்ளதைவிட ஊட்டச்சத்து அதிகமாக உள்ளதே!!!!

இழைகளினால் மென்மையான துணிகளையும் நெய்து அணியலாமே!!!

குலையுடன் மரம் கனவில் வருவது மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்துமே!!!

பட்டையைப் பிழிந்து பாம்புகடிக்கு முதலுதவி அளிப்போமே!!!

அம்பணக் குருத்தை தீப்புண்களில் கட்ட விரைந்து மறையுமே!!!

பிஞ்சுவைக் கூட்டாக்கி உண்டு உடலுறுதியை அதிகரிப்போமே!!!

பூவை பருப்புடன் சமைத்துண்டு இன்பமாக இருப்போமே!!!!

பித்தமும் தலைக்கேறாமல் இரத்தத்தை விருத்தியாக்கலாமே!!!

முக்கணிகளில் முக்கியமான கனியின்றி பூசை,சடங்குகள் இல்லையே!!!

நாரிலே பூத்தொடுத்து மாலையணிந்து மணமுடிப்போமே!!

திரியில் விளக்கேற்றி சகலபாக்கியங்களை அடைந்திடுவோமே!!!

நார்பொருட்களை ஏற்றுமதியாக்கி பொருளாதாரத்தை உயர்த்துவோமே!!!

வாழ்வும் செம்மையாகி மேன்மையாக மேலோங்குமே!!!

நார் கழிவிலிருந்தது மண்புழு உரமும் தயாரிக்கலாமே!!!!

பழத்தினாலான சிற்றுண்டிகள் சிந்தையைத் தூண்டுமே!!!

சுற்றுசூழலுக்கும் நார்ப்பொருள்கள் ஏற்றமளித்து உதவுகிறதே!!!!

குலை ஈன்றபின் இறந்தும் இன்னொரு தண்டும் முளைத்திடுமே!!

தலைவாழை இலையிட்ட விருந்தோம்பலே தன்னிறைவைத் தந்திடுமே!!!

வடக்கில் குலைத்தள்ளி வறுமையையும் போக்கி வளமாக்குமே!!!

வாழவைக்கும் வாழையால் வையகத்தில் தழைப்போமே!!!

கவியருவி.
த.கலைச்செல்வி
காவேரிப்பட்டினம்.
 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 
024. 
இயற்கை வளம் பாதுகாப்பு

தென்றலின் காற்று அசைவில் நிற்கவில்லை

தென்றலின் காற்று என்றும் தீண்டவில்லை

உன்னே எதிர்பார்த்து நிற்கிறேன் ...

வளத்தை நான் கண்டது இல்லை

வளங்களின் செழிப்பின் அழகில் மயங்கியது

வளங்கள் அனைத்தும் நிறைந்து இருந்தது எதோ ஒரு காலத்தில்

வளமாகிய இந்நாடு மீட்டெடுக்க காத்திருக்கிறேன்...

அழித்தும் அழித்து கொண்டும் இருக்கிறோம்

அழிவது கண்களுக்கு புலப்படவில்லை

அழிந்த பிறகு தான் கண்கள் தேடுகின்றன

இயற்கையின் பாதுகாப்பு வளத்தை காத்திருக்கலாம் என்று...

பே.நா.ஈஸ்வர பிரியா,
கன்னியாகுமரி மாவட்டம்.
 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 
025.
காப்போம் இயற்கை வளம்

நீரும் நெருப்பும் வானும் மண்ணும்/
காற்றும் தானே இயற்கை- ஆம் /
அதின் கொள்ளை கொள்ளும் வெள்ளை /
 அழகோ அள்ளி செல்லும் மனதை /
காணும் அழகை ரசிக்க மறந்து/
அளித்துச் செல்லும் செயற்கை உன் /
வாழ்வில் தினமும் ஏங்க வைக்கும் வேட்கை /
அசையும் கிளையில் அழகாய்மரும் பறவை/
அதன் அழகை காண மறந்த/
நீயோ கொண்டு அலைந்தாய் செருக்கை /
தொட்ட உடனே பொன்னாய் வளங்கள்/
தந்தது இந்த நல் பூமி /
அதை கீறி பிளந்து புண்படுத்தி/
பல கொடுமைகள் செய்தாய் நீயும் /
அதன் பயனாய் பெற்றது என்ன /
தெரியுமா உனக்கு மனிதா நீ/
பேராசை கொண்டதாலே உணவுக்கு வழியின்றி நிற்கிறாய் /
வளமான தாய்நாட்டை  சீர் குலைத்தாயே /
உணவு என்ற பெயரில் தினம்/
உடல் கெடுத்தாயே உள்ளம் துடிக்கிறதே /
உன் போக்கால் உள்ளம் துடிக்கிறது /
கொட்டும் அருவி செல்லும் நதிகள் /
நீந்தும் மீனாய் அழகாய் வந்து
ஆனந்தம் தந்ததடா
மனிதா உன்னால் இன்று ஓடிச் சென்றதடா /
ஆலைகள் எல்லாம் வளமே என்று/
கணக்கு போட்டாயே மனிதா இன்று/
நீ கலங்கி நின்றாயே மனம் வாடிநின்றயே /
காலம் கடந்தால் பயனில்லை மனிதா
விழித்துக்கொள் நீ சடுதியிலே இயற்கையை
காப்போம் ஓடிவா வளமான நாட்டை
உருவாக்க ஓடிவா....
 
முனைவர் விஜி சிரோமணி,
உதவிப் பேராசிரியர்,
பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஷ்வரா 
கலை மற்றும் அறிவியல் கல்லூரி, 
கௌரிவாக்கம், சென்னை -73.
 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 
026.
பூக்கள்
காதலை சொல்லிட கணிதமும்
     நீதான் பூவே
மங்கையின் கூந்தலுக்கு
     கிரீடமும் நீதான் பூவே
பவள ஒளி படுக்கையிலே
     சட்டென்று மலர்ந்த பூவே
பனித்துளியும் ஆசைகொண்டு
     உன்மேல் பகல் தூக்கம் போடும்
அழகுக்கு அழகாகிறாய்
     பெண்ணின் கூந்தல் உன்னை ஏற்கும் போது
காற்றோடு பேசுகிறாய் உன்
     வாசத்தை வீசுகிறாய்!உன்
புன்னகையால் ஆங்கிலத்தின்
     அழகை கூட்டுகிறாய்
ரோஜா பூவே என் காதலுக்கு
தூதுவராக மாற துடிக்கிறாய் என்
     காதலியின் கூந்தலுக்குள்
இடம்பிடிக்க வருகிறாய்
பல வண்ண முகம்காட்டி
பஞ்சவர்ண இதழ்கள் விரித்து
பஞ்சமின்றி சிரிக்கின்றாய்!
நெஞ்சமெல்லாம் இனிக்கின்றாய்!

மனித இறப்பிலும் மலர்
     மாலையை அழகு சேர்ப்பது
       நீதான் பூவே
பூத்து விட்ட சோலையில் நீ
     கொடுத்து வைத்த மாலையில் நீ
சேரத்து வைத்த கூந்தலில் நீ
     காத்து வரும் கடவுளில் நீ
சிரிக்கின்ற மலரே இதழ்
     விரிகின்ற அழகே அசைகின்ற
     அமுதே அசைகின்ற இசையே
பூவே இளம் பூவே பூமியில்
     நானும் உன்னை போல் ஒரு நாள்
மட்டும் வாழ்ந்தாலும் பாசமாய்
     சிரித்திட வேண்டும் தேசமாய்
வாழ்ந்திட வேண்டும் மண்ணிலே
     மணமாக மனதளவில் நல்ல
      குணமாக
சிறிய பூவாய் இருந்தாலும்
     சிரிக்கின்றாய் அழகாய்

- முனைவர். எஸ்.கிரேசிராணி.
தமிழ்த்துறை தலைவர்.
விநாயகா மகளிர் கலை அறிவியல் கல்லூரி
கீழப்பழுவூர்.
 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 
027.
இயற்க்கை வளம் பாதுகாப்பு

தென்றலின் பரிசம் இனிமை அருவியின் வீழ்ச்சி இனிமை
கடலின் அலை இனிமை பனியின் குளிர்ச்சி இனிமை இவையெல்லாம் இயற்கையே!

மரங்களை வெட்டும் முன் யோசி நாளை நிழலும் மழையும் தருவது யாரென்றே!

நெகிழியை எரித்து ஓசூன் ஓட்டையைப் பெரிதாக்கும்
முன் யோசி நாம் தங்க வேறு பூமி உள்ளத நீ என்றே!

நிலத்தை ஏர் தீண்டினால் விவசாயம் செழிக்கும்
ஏர் தொழுவ விவசாயிகள் போதுமா நீ யோசி நாளைக்கான உணவு தீருமுன்பே!

மரத்திற்கும் நம்பிக்கை நிழல் தருமென அதை
வெட்டி அதன் நம்பிக்கையொல்லாம் கெடுத்து விடாதே மானிடனே!

கடலின் அலை நிலவின் அழகு வானவில்லின்
ஏழு நிறங்கள் சூரியனின் ஒளி இவையாவும் இறைவன்
நமகளித்த எழில்மிகு இயற்கை இதைக் காப்பதெல்லாம் நம் பொறுப்பே!

வெள்ளியை உருக்கி ஊற்றிய பனிமலை இது இயற்கையின் அழகே!

தீயாய் வெடித்துச் சிதறும் எரிமலை இது இயற்கையின் வினோதமே!

ஆர்ப்பரிக்துக் கொட்டும் நீர்வீழ்ச்சி இது இயற்கையின் வாழ்வியலே!

மழை பெய்து குளம் நிரம்பி வழியும் இது இயற்கையின் பசுமையே!

நீண்ட நெடிய உயர்ந்த மலை இயற்கையே உன்னால் இன்னும் எவ்வளவு வளர முடியும் தெரியவில்லையே!

வானத்தில் நிலவாய் கடலில் அலையாய் காற்றில் தென்றலாய் எங்கும் நீயே!
 
ச. திரிஜா பாலா
கும்பரையூர், கொடைக்கானல்.
 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 
028.
பனை மரம்.  
 
பழமையை பறை சாற்றும் பாரம்பரிய மரம்.  

பார் போற்றும் சிறந்த மரம்.  

பிறர் சுவாசிக்க காற்று தரும் நிழல் மரம்.  
 
பீர்க்கங்காய் போல் நாட்டிற்கு நலன் பயக்கும் மரம்.

புயலை தாங்கும் இரும்பு மரம்  

பூக்கள் பூத்து முற்றும் பழமை வாய்ந்த நல் மரம்.

பெட்டியில் வைத்து அடக்கமுடியாத சிறந்த மரம்.

பேரின்பம் தரும் பாரினில் சிறந்த மரம்.                          

பைந்தமிழ் சொல்லும் பனையின் பழம் பேசும் மரம்.                

பொது மரமாய் இல்லாமல் தனித்த தனித்தமிழ் மரம்.      

போதும் என்ற மனதுடன் இருக்கும் மனிதனுக்கு சிறந்த மரம்.                    
நம் நாட்டின் தேசிய மரம்.              

ஏழைகளின் கற்பக தரு மரம்.      

நெல்லையில் மக்களின் பசியைப் போக்கி மரம்.                              

நீரை அதிகம் உட்கொள்ளா மரம்.  

அனைத்து பாகமும் பயன்படும் மரம்.      

பனம் பழதை உண்டாக்கும் பழம் மரம்.                            

பனம் ஓலையை உண்டாக்கும் மரம்.

உடலுக்கு புத்துணர்வு கொடுக்கும் மரம்.    

உடலுக்கு குளர்ச்சியை தரும் அமுதசுரபி மரம்.      

கோடைக்கு புத்துணர்ச்சி தரும் நுங்கு தரும் அருமை மரம்.            

பனங்கிழங்கு தரும் கற்பகதரு மரம்.                              

மக்களின் பசியைப் போக்கும் அன்னையான பன மரம்.                            
பசியை போக்கும் பசுமையான மரம்.  

என்றும் நிழல் தரும் கொடை மரம்.                      

அடி முதல் நுனி வரை பயன் தரும் நிழல் மரம்.                

என்றும் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் பனை மரம்.
 
-சே.ஜெய பாக்கிய லட்சுமி, காஞ்சிபுரம்.
 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 
029.
மரங்கள் பேசினால்...

விதைக்குள்
ஒளிந்தே
விருட்சமாகும்
மரம் ..

கதைக்குள்
கருத்தாகும்
கற்பகமாய்
மரம் ..

அரும்புகளில்
துள்ளிடுவேன்
பூக்களில்
சிரித்திடுவேன் ..

காய்களில்
களித்திடுவேன்
கனிகளில்
இனித்திடுவேன் ..

மனங்களின்
மகிழ்வுக்கும்
நானே
முதலாவேன் ..

மனிதர்களின்
இறுதிக்கும்
கட்டையாய்
முதலாகிடுவேன் ..

என்னை
இழித்துப்
பேசிட
விருப்பமா .!

என்னால்
வாழ்ந்து
இகழ்ந்திடல்
நியாயமா .!

ஊரே
வந்தாலும்
உள்ளுக்குள்
ஆனந்தம் ..

ஊஞ்சலாய்
ஆடினாலும்
உவகையின்
பேரானந்தம் ..

எத்தனையோ
கதைகளை
என்னிடமே
மொழிவதுண்டு .!

எத்தனையோ
வசைகளினை
இசையாய்க்
கேட்டதுண்டு .!

காய்களைப்
பறிக்கையிலும்
கல்லடி
எனக்குண்டு !

பழங்களைப்
பறிக்கையில்
கீறல்களும்
எனக்குண்டு !

தங்கும்
பறவைகளின்
புகலிடமும்
நானேதான் ..

மயங்கும்
விலங்குகளின்
சேட்டைகளும்
என்னிடம்தான் ..

இளைப்பாற
வந்தோருக்கு
இதமாக
நானிருப்பேன் ..

இலைகளை
உதிர்த்தாலும்
பசுமையாக
வாழ்ந்திருப்பேன் ..

வெயிலடிக்கும்
நேரமெல்லாம்
காய்ச்சலும்
வந்திடுமே .!

மருந்தாக
மழைதான்
நோயினைப்
போக்கிடுமே .!

காற்றடிக்கும்
பொழுதெல்லாம்
கண்விழித்துக்
காத்திருப்பேன் ..

காதலிக்கும்
சூழலிலே
பூக்களாய்ப்
பூத்திருப்பேன் ..

வண்டுகள்
வருகையில்
இசையினைக்
கேட்டிடுவேன் ..

வாண்டுகள்
ஆடுகையில்
பிள்ளைத்தமிழ்
அறிந்திடுவேன் ..

கொத்தும்
பறவைக்கு
இருப்பிடம்
நானே !

தொங்கும்
கூட்டினைப்
பாதுகாப்பதும்
நானே !

வெட்டும்
முன்னர்
ஒருமுறை
யோசித்துவிடு .!

துடிக்கும்
குழந்தையாய்
மரத்தை
நினைத்துவிடு .!

உச்சிமுதல்
பாதம்வரை
பயனாவோர்
உண்டோ .!

இறந்தாலும்
பயனாகும்
மரத்திற்கு
ஈடுண்டோ .!

இழிந்த
சடலமாய்
மரமதை
நினைக்காதீர் ..

உடலை
சுமப்பதும்
மரந்தான்
மறவாதீர் ..

முனைவர் இரா. இராமகுமார்
உதவிப் பேராசிரியர் தமிழ்த்துறை
விவேகானந்தா கல்லூரி அகஸ்தீஸ்வரம்
கன்னியாகுமரி மாவட்டம்.
 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 
030.
வேம்பு

உறுதிக் கொண்டு வளர்ந்தவன் நானே!!!

உனக்கென உறுதுனையாய் நின்றவன் நானே!!!

கசக்கும் பழம் கொடுப்பதும் நானே!!!

இனிக்கும் காய்க்  கொடுப்பதும் நானே!!!

கத்தியாய் இலையைக் கொண்டவன் நானே!!!

வேர்கள் படைத்து பார்த்தவன் நானே!!!

நீரைத் தேக்கிஎன்னுல் வைத்தவன் நானே!!!

சுவாச காற்றைக் கொடுத்தவன் நானே!!!

கசப்பான குணம் கொண்டவன் நானே!!!

உயிர்காக்க மருந்தாகி காப்பதும் நானே!!!

வாடாது நின்ற உயிரும் நானே!!!

வரட்ச்சியில் எம்மைக் காப்பதும் நானே!!!

வெயிலில் உன்னைக் காப்பதும் நானே!!!

உன்னுடைய தலைமுறைகள் கண்டதும் நானே!!!

குழந்தை தாலாட்டும் தாயிம் நானே!!!

நீவந்து நிற்க்கும் நிலற்கூடம் நானே!!!

நீரையும் சுத்தம் செய்வதும் நானே!!!

சிறுதுளி பூவைக் கொண்டவன் நானே!!!

பறவையில் வீடாய் இருப்பதும் நானே!!!

தூரம்செல்ல உறவின் ஓய்வகடம் நானே!!!

தூயக் காற்றைத் தருவம் நானே!!!

தூசியை விரட்டி அடிப்பதும் நானே!!!

கசந்தும் இனிக்கும் குணமும் நானே!!!

காதலர் அடையாளம் கொண்டவன் நானே!!!

மறைகத்துக் காட்டி பார்ப்பதும் நானே!!!

காற்றோடு கதைக்கும் கதலன் நானே!!!

இலைகள் அசையநீ பார்ப்பதும் நானே!!!

காற்றோடு பாடல் பாடுவதும் நானே!!!

சிலசமயம் விலங்கின் ஓய்விடம் நானே!!!

இத்தனை அன்பும் கொண்டவன் நானே!!!

உன்னோடு கதைக்க நினைப்பதும் நானே!!!

உம்மைக் காக்க நினைப்பதும் நானே!!!

ஏனோ என்னைத் தீராக் கோபம்
       
 கொண்டு வெட்டுகிறாயே என்னை!!!!

உனக்கு என்னைப் பிடிக்க வில்லையா????

ஓர் அறிவு மரம் மனிதன் ஆனது.....

மனிதனோ மரமாய் மாறி விட்டான்???!!!

    ம.சக்திபாலமீனா.
 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 
031.
வெட்கமின்றி வெட்டவேண்டிய மரம்

இயற்கை வெற்றிக் கொடிக் கட்டி பாராளும்
இப்புவியில் எழில் கொஞ்சும் வளத்திற்கு
மரங்கள் தானேத் தெய்வ மகள்…! //

அம்மரங்களைக் காப்பதுத் தான்
உலக மக்களின் முதற்கடமை
என்பதை யாவரும் அறிந்ததே… //

இருப்பினும் தலைப்பில் உங்களுக்கு
ஒரு சிறிய ஐயம் எழும் - அவ்வாறு
எழுவதென்பது இயற்கை தான்… //

ஆம் எனக்கும் அதில் வருத்தம் உண்டு
என்றாலும் வெட்டப்பட வேண்டியதை
வெட்டித் தானே ஆக வேண்டும்? //

இந்திய வேளாண்மை செல்வத்தை
வெளிநாட்டான் அழிக்க நினைத்து
வெறி கொண்டு மௌனமாய் அன்று அவன்… //

செய்த செயல் இன்று விஸ்வரூபம்
கொண்டு நம் தாய்த்திரு நாட்டின்
விவசாயத்தையே வேரறுக்க நினைக்கிறதே
அதை அப்படியே நாமும் விட்டுவிடலாமா? //

விவசாயத்தை அழிக்க வந்த வந்தேரிக்கு
விவசாய மரம் என்ற பெயரும் உண்டு
இனியும் பொறுத்திருந்தால் இவ்வுலகில்
ஒன்றும் மிஞ்சி நிற்காது - உண்ணும்
உணவுக்கும் குடிக்கும் நீருக்கும் கூட
வேற்று நாட்டானிடம் நம்மை நாமே
விலை பேசி இலவசமாகக் கொடுக்க
வேண்டிய நிலை வந்து விடும்…

வந்தப் பின் வருந்தி என்னப் பயன்
வருமுனர்க் காப்பதே நம் பாட்டன்
நமக்குச் சொன்ன நற்பலன்…

சும்மாவேத் தூங்கிக் கிடந்து விட்டால்
சந்ததிகள் பிறக்காமல் போய்விடும்
பிறந்தச் சந்ததியும் சிறக்காமல் போய்விடும்…

சிந்தித்துச் செயல்படுவீர் இன்றே இப்போதே
மளுப்படை ஒன்றினைக் கையில் எடுப்பீர்
வெட்கப்படாமல் வெட்டி வீழ்த்திடுவீர்
இனி சீமைக் கருவேல மரத்தின் ஒரு வேர் கூட
இம்மண்ணில் வேரூன்றா வண்ணம்
வீர மறம் கொண்டு வெட்டி வீழ்த்திடுவீர்…

முனைவர் கவிஞர் அ. ஞானவேல், தருமபுரி மாவட்டம்.
 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 
032.
பயன்தரும் பனை!
       (சிறுவர் பாடல்)
*********
பனைமரமாம் பனைமரம்
     பயன்தருமாம் பனைமரம்!
அனைவருமே விரும்பிடும்
       அரியபொருள் அளித்திடும்!

கருப்பட்டி தந்திடும்
      கற்கண்டாய் மாறிடும்!
பருகிடவே பதநீரைப்
      பக்குவமாய்க் கொடுத்திடும்!

நிலந்தன்னில் மழைநீரை
     நிலைநிறுத்தச் செய்திடும்!
உளமகிழ நுங்கினையும்
      உண்பதற்குக் கொடுத்திடும்!

படுப்பதற்குப் பாய்தரும்
     பாதையோரம் நின்றிடும்!
தடுப்பினையும் அமைத்திட
    தம்மையுமே தந்திடும்!

கூரையினை வேய்ந்திட
     கொட்டகையும் போட்டிட;
நாரைகளும் கொக்குகளும்
       நாடிவந்தே அமர்ந்திட;

ஓலையிலே எழுதிட
      உருவபொம்மை செய்திட
ஓலைப்பாய்ப் பின்னிட
      உயர்ந்தபனை உதவிடும்!

வெயிலாலே வந்திடும்
    வெக்கையினை நீக்கிடும்!
கயிறுதும்பு திரித்திட
        காலமெல்லாம் உதவிடும்!

கரைமீது வளர்ந்திருக்கும்
     காற்றாடி விசிறிதரும்!
தரைமீது நிமிர்ந்திருக்கும்
    தமிழர்களின் மரமாகும்!

பாவலர் க.சண்முக சிதம்பரம்.
 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 
033.
ஆலமரம்.

அம்மன் கோவில் ஆல மரம்
அருகமர அமைதி தரும்.
விழுதுகளாம் தம் கைகளை நீட்டி
விளையாட அழைக்கும் எம் மூதாட்டி
கூலிக்குழைத்தோர் சற்று கண்ணயற
தன் கிளைகளை விரித்த செல்ல சீமாட்டி
பறவைகளும் அணில்களும்
சுற்றிச் சுற்றி வரும்
கோவிலவள்
தெருவில் திரியும் ஆவினங்கள் இரவில்
தேடியடையும் புகலிடமவள்
தென்றலை நாளும் தவணை முறையில் தந்திடுவாள்.
வெள்ளாடுகளுக்கு தன் இலைகளத் தின்னத்தரும் தாயவள்
தள்ளாடும் கிழவர்களுக்கு
ஊன்றி ட த் தடிகளும் தருவாள்
செம்மை நிறபழங்கள் பொறுக்க
சிறகடித்து வரும் பச்சைக்கிளிகள்

இளங்குருத்து ஆல இலைகள்
அழகாய்

இளவெயிலில் பளபளக்கும்

பழம் பறித்து உண்ணவே பள்ளிக்குழந்தைகள் பர பர க்கும்

மேலே சிகப்பும் உள்ளே மஞ்சளுமாய்
மெத்த சுவைக்கும் அப்பழங்கள்

ஆலமர ஊஞ்சலிலே ஆடிக் களிக்க ஆனந்தமே
கால்கடுக்க நடந்தவரும்
களைப்பாற நாடுவதும்
ஆலமரமடியே
பண்டிகை நாட்களிலே யானைகளும்
படுத்து ஒய்வெடுப்பது இவள் மடியே
அண்டியவர்க்கெல்லாம்  அவள் தன் நிழலை  அள்ளி இறைத்திடுவாள்

   மு. கிருஷ்ணன்
நெல்லை மாவட்டம்.
 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 
034. 
மழையை பெற வேண்டும் மரம்//
மரத்திற்கு வேண்டாம் செயற்கை உரம்//
மரங்கள் தருமே உயிர் காற்று//
அதை அழிக்கும் எண்ணத்தை மாற்று//
சாலை ஓரத்தில் மரக்கன்று நடு//
காலை மாலை தண்ணீர் விடு//
மரங்கள் தருமே சத்தான பழங்கள்//
காக்க வேண்டும் விளை நிலங்கள்//
மரங்கள் காற்றையும் சுத்தம் செய்யும்//
பசுமையை போற்றினால் உலகம் உய்யும்//
பறவை இனங்கள் வசிக்கும் வீடு//
மரத்தை வெட்டினால் இழக்கும் கூடு//
மரத்தின் இலைகள் ஆட்டின் உணவு//
தழையை போட்டால் செழிக்கும் உழவு//
கதவு காலதர் இருக்கைக்கு பலகை//
எல்லாம் அளித்து காக்கும் உலகை//
மண் அரிப்பை தடுக்கும் வேர்//
நிலத்தடி நீரை உயர்த்தும் பார்//
வெயிலில் இளைப்பாற தருமே நிழல்//
கண்ணென போற்றி  காப்போம் சுற்றுச்சூழல்//
காடுகள் அடர்ந்தால் மாசு//
ஓசோன் படலத்தில் குறையும் தூசு//
உறுதி எடுப்போம் சூழல் காக்க//
நாட்டின் வளர்ச்சிக்கு பெருமை சேர்க்க!

சு.சிவசுந்தரி
பெரம்பலூர்.
 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 
035. 
மரத்தை நீ அழித்தாலும்
     உன்னை சுமக்க
காத்திருக்கும் சுடுகாட்டில்
     விறவா

மலையின் உச்சியிலிருந்து
     குதித்தாலும் மரணம்
நிகழ்வது இல்லை
     நீர்வீழ்ச்சிகளுக்கு

மலைகளை தரணியில்
     அழகாக சுற்றி வருகிறது
பனி!பனியை அன்பாக
     மேனியில் பற்றிக் கொள்கிறது மலை!

மழை குழந்தை இடி
     தாயின் தாலாட்டை  
கேட்டவுடன் அழுகையை
     நிறுத்தி விடுகிறதோ...???

காலையில் வீரமாக
     எழுந்து மாலையில் ஏனோ
சந்திரன் காலடியில் போய்
சரணாகதியாகிறது அந்த
     சூரியன்
பசுமையின் வீட்டில்
விடியும் வரை படுத்து
உறங்குகிறது பனிகளின் கூட்டம்

உரசி சென்றால் தென்றல்
     உறுமி சென்றால் புயல்
        என மாறும்

இ.அருந்ததி
விநாயகா மகளிர் கலை அறிவியல் மகளிர் கல்லூரி
கீழப்பழுவூர்.
 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 
036. 
இயற்கை
இயற்கை
     இறைவன் மறைத்து கொடுத்த கொடை
இயற்கை
     தமிழரின் கடவுள் பற்றிற்கான விடை
வெளிச்சம் தந்ததால் இயற்கை
     மழைதேவன் கடல் தேவியானது
பூமியின் இருப்பினால் விளைச்சலால்
     இயற்கை பூமித் தாயானது
காற்றின் சுவாசத்தால் இயற்கை
     வாயுதேவன் ஆனது
பணத்தின் ஆளுமையால் மரம்கூட
 பணமும் பணம் கூட லட்சுமியும் ஆனது
     படிக்கும் படிப்பு அறிவு,பகிரதல்
     கற்பித்தல்
கலை கூட கலைவாணி ஆனது
இயற்கைக்கு நன்றி சொல்ல
எழுதுகோல் எடுத்தேன்
      என் எழுதுகோல் கூட கவிதையானது!!!

-ஜே.ஆண்டனி பிரகாஷ்
அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
தஞ்சாவூர்.
 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 
037.
இயற்கை வளம் பாதுகாப்பு

இயற்கையைச் சார்ந்தே மனிதனின் வாழ்க்கை

இயற்கையின் கொடையில் இன்பமாய் வாழ்கிறோம்

அடிப்படை வசதிகள் அனைத்தையும் தருவது

காடுகளையும் நீர் நிலைகளையும்
கொண்ட செழிப்பான இயற்கை வளங்கள்

இயற்கையின் செழிப்பே மனிதனின் செழிப்பு

இயற்கை நம்மைக் காக்கிறது

நாம் இயற்கையைக் காக்கிறோமா?

இயற்கையின் துணையில்லாமல் ஒரு நொடி கூட வாழ முடியாத நீ

இயற்கை வளங்களை எடுத்துக் கொண்டாய்

அதனைப் பாதுகாத்தாயா?

உன் தலைமுறைக்கு நீ

இயற்கை வளங்களைக்

கொடுக்க வேண்டாமா?

மண்வளத்தை மாசுபடுத்தினாய்

காட்டு வளத்தைக் காயப்படுத்தினாய்

நீர் வளத்தை நிர்மூலமாக்கினாய்

வளிமண்டலத்தை வதைத்தாய்

கனிம வளங்களைச் சுரண்டினாய்

இயற்கை வளங்களை
இருட்டடிப்பு செய்தாய்

இயற்கைச் சீற்றங்களும்
வளத்தைப் பாதிக்கும்

இயற்கை வளத்தைப் பாதுகாக்க

ஒருவர் மட்டுமே நினைத்தால் முடியாது

தனிமனிதன் ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும்

தேவைக்கேற்ப பயன்படுத்து தேவையின்றி வீணாக்காதே !

நன்மை செய்யும் இயற்கைக்குத்  தீமை செய்யாதே!

வாகனங்கள், பிளாஸ்டிக் போன்றவற்றின் பயன்பாட்டைக் குறை

அறிவியல் வளர்ச்சியில் ஆக்கம் கண்டு

இயற்கையின் கொடையை மறக்காதே

பல்வேறு காரணங்கள் இயற்கை மாசடைய

இயற்கை வளங்களைப் பாதுகாப்போம்

இன்பமாய் வாழ்வோம் !

மரம் வளர்ப்போம் !

தூய காற்று ,
மழையைப் பெறுவோம்!

அடுத்த தலைமுறைக்கும் வளங்ளைச் சேமித்து பாதுகாப்போம்.

நாட்டு வளம் காப்போம்.

முனைவர் இ.மாரி மகேஸ்வரி
சிவகாசி.
 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 
038.
இயற்கை

மாந்தோப்பு நிழலிலே
குயிலெல்லாம் இசை பாடும்
பூந் தோப்புக்குள்ளே யிருந்து
புள்ளி மானும் துள்ளி யோடும் !

மூங்கில் காட்டினிலே
முறுக்கிருக்கும் முள்ளுக்குள்ளே !
முகாரி ராகம் வந்து
தேவாரம் பாடி வரும் !

உயர்ந்த மலையினிலே
வெள்ளிக் கம்பியறுந்து
நிலத்தில் வந்து விழ !
கோடைப் பயிறெல்லாம்
தலைத் தூக்கி பார்த்து வரும் !

சாரல் மழையினிலே
சோலைக் குறுத்தெல்லாம்
சேலைக் கட்டிக் கொள்ளும் !

பாலைச் சுமந்து வரும்
காராம் பசுவைத் தேடி
வாலைத் தூக்கிக் கொண்டு
கன்றெல்லாம் ஓடி வரும் !

காலைப் பொழுதினிலே
காட்டுப் பறவையெல்லாம்
வீட்டு வாசலிலே
வீனை வாசிக்கும் !

கதிரவன் கை குலுக்கி
கட்டியனைக்கும் போது
தோட்டத்து மொட்டெல்லாம்
பட்டென்னுப் பூ பூக்கும் !

மாலைப் பொழுதினிலே
தென்றல் காற்று வந்து
மெல்லத் தலைக்கோத
தேகம் சிலிர்க்கும் !

பெய்த மழையினிலே
விழுந்த துளிகளெல்லாம்
இலையின் விளிம்பினிலே
சாய்ந்து ஊஞ்சாலாடும் !
கிளையை உலுப்பிவிட
விளிம்பின் துளி களெல்லாம்
எ(ம)ன் மீது பூவாய்க் கொட்டும் !

கோடை வெய்யினிலே
சோடைத் தனித்திடவே
தாவர யிலை யெல்லாம்
சாமரம் வீசி விடும் !

பட்ட மரத்திலே
பூத்துக் குலுங்கும் பட்டாம் பூச்சிகள் !
மொட்ட மரத்திலே
மயிருனத்தும் சிட்டுக் குருவிகள் !

பரந்தப் புல்வெளியில்
படுத்துறங்கும் பனித்துளிகள் !
சூரியன் உசிப்பி விட
உயிர் நீத்துப் போகும் !

இடி முழக்கத்தில்
நொடியில் பூத்திடும் காளான் !
செடிக் கொடிகள் - தன்
மடியை நிரப்பும் காலம் !

ஆடித் திங்களில்
பசுமை போர்த்தும் நிலம் !
கூடிப் பறந்திடும் பறவை
நிலத்தை விருட்சமாக்கும் காலம் !

அதிகாலை வேலையிலே
வெள்ளை, நீல சீருடையில்
வகுப்பு செல்லும் வானம் !
மாலையில் மண்ணில் விளையாடி
ஆடையெல்லாம் செம்மண்
பூசி வரும் கோலம் !

இரவு வேலையில்
விழித்திருக்கும் சந்திரமுகி !
இமைக்கொட்டாமல் பார்க்கும்
விடியும் வரை !

கைகள் நீட்டி வரவேற்றால்
மேகச் சீலையில் முகம் மறைப்பாள் – மெல்ல
சேலைத் தலைப்போரம் எட்டிப் பார்ப்பாள் !

தென்னங்கீற்று வீட்டினிலே
தென்றல் வந்து குடியிருக்கும் !
பனை மரத்து மட்டையெல்லாம்
பட படன்னு இசை யடிக்கும் !

கோரப்புல்லு பாயினிலே
குளிர் காற்று குவிந்திருக்கும் !
கூழைக் குடித்து படுத்து விட்டால்
குளு குளுன்னு தூக்கம் வரும் !

ஆடி மாத அட மழையில்
அயர மீனும் துள்ளி வரும் !
அயல் நாட்டுப் பறவையெல்லாம்
அணி அணியாய்த் திரண்டு வரும் !

ஈரக்காற்று இதமாக – என்
மேனித் தொட்டுச் செல்லும் !
நகரத்து நாகரிகம் – எங்கள்
கிராமத்தை நாடி வரும் !

கவிஞர்
அ.இளையராஜா
சேதுவராயன்குப்பம்
கடலூர் மாவட்டம்


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 
039.
இயற்கைவளம் பாதுகாப்பு

இயற்கையே நல்வரமே,தவமே,
பாதுகாப்பே//

இளம்தென்றலும்,
குளிர்ந்தகாற்றும்
நல்கும் கருணையே//

பூத்துக்குலுங்கும்
மலர்கள்//
சோலைகளின் காட்சிக்கூடமே//

நீர்நிலைகள்,
மலைகளின் அழகிய
பிம்பமே//

நீராக காக்கின்றாய்//

நிலமாக தாங்குகிறாய்//

நெருப்பாக தெறிக்கிறாய்//

ஆகாயமாக ஒளிவீசுகிறாய்//

இரவாக குளிர்ச்சி
தருகிறாய்//

விண்ணாக ,
மண்ணாக காக்கிறாய்//

காற்றாய் சுவாசம்
தருகிறாய்//

கடலாக முத்துக்கள் அளிக்கிறாய்//

மரமாக நற்பயன்கள் அருள்கிறாய்//

மழையாக கருணை புரிகிறாய்//

மனித உயிர்கள்,
விலங்கினங்கள்,
பூச்சியிங்களின் உயிர்மூச்சாகிறாய்//

எல்லாவளமும் நல்கும் இயற்கை தாயே//
உனை காப்பதே அறமே// மறமே//

இயற்கைவளம் காப்போம்// மானுடம் காப்போம்//

ந.ராஜசுலோச்சனா,
ஆவடி,திருவள்ளூர்
மாவட்டம்.
 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 
040. 
எழிலே இயற்கை
கண்ணுக்கு இனிமை
     கருத்துக்கு உவகை
சீர்பெற்ற பூவலகு
     சிறப்புற வாழ்வு
நீர் நில வளமுடன்
     நெடிதான மலைவளம்
     பார் போற்ற நாளும்
     பகட்டாக வாழ்ந்திடவே
தார்மீக பூவுலகின் திண்ணிய
     தனிந் சொத்தாய் எழிலே
       இயற்கை

புத வருடம் சித்திரையாய்
     சிறப்பாய் மகிழ்வுடனே
     உற்றாரும் உறவினர்களும்
உளம் நிறைந்து கொண்டாட
     இறைவன் எமக்களித்த
அருட்கொடை எழிலே இயற்கை

முனைவர்.ஆர்.திவ்யபிரகாஷ்
முதல்வர் விநாயகா மகளிர் கலை அறிவியல் கல்லூரி
கீழப்பழுவூர்.
 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 
041. 

 இயற்கை

 நம் உயிரை காக்கும் இயற்கையை பாதுகாப்போம்!

 மனித வளம் காக்க இயற்கை வளம் பேணுவோம்!

 மரம் வெட்டுவதை தவிர்ப்போம்!

நிறைய மரக்கன்றுகளை நடுவோம்!

 மழையை பொழிய வைப்போம்!

காடழித்து நாடாக்கும் திட்டத்தை கைவிடுவோம்!

 தொழிற்சாலை கழிவுகளை நீரில் கலக்க விடாமல் தடுப்போம்!

 தொழிற்சாலை புகை உயிர்க்காற்றை
மாசு படுத்தாமல் பார்த்துக் கொள்வோம்!

 நெகிழி பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்ப்போம்!

நீர் நிலைகளில் குப்பைகளை கொட்டாமல் இருப்போம்!

 நிலத்தை அசுத்தம் செய்யாமல் இருப்போம்!

ஐம்பூதங்களையும் நம் முயற்சியால் பாதுகாப்போம்!

 அருவி ஆறு போன்ற நீர் நிலைகளில் இரசாயன
சோப்புகளை பயன்படுத்தாமல் இருப்போம்!

நீர் நிலைகளை தூர்வாரி பராமரிப்போம்!

 கிணற்றை தூற்றுவதை தவிர்த்து நீர் ஊற்ற செய்வோம்!

 பூமியில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த மழைநீர்
சேகரிப்பு தொட்டியை கட்டுவோம்!

கடலை மாசு  செய்யாமல் இருந்து மீன்
 இனப்பெருக்கத்தை தடுக்காமல் இருப்போம்!

 பூமியில் உள்ள இயற்கையால் படைக்கப்பட்ட,
ஒவ்வொரு உயிரையும் தன் உயிராய் நினைத்து அழிக்காமல் வாழ வழிவகை செய்வோம்!

 பச்சை புல்வெளியை உற்றுப் பார்த்தால் நோய் தீர்க்க அதை பாதுகாப்போம்!

 மழையை தந்து உயிரை மீட்கும் பூமியில் உள்ள அனைத்து
இயற்கை வளங்களையும் பாதுகாப்போம்!

 பாதுகாக்கும் அதை கடமையாக உணர்ந்து செய்வோம்// செய்ய வைப்போம்!!

 அனைவரையும் நம் முயற்சியால் ///

மிஜினா
புதுவை.
 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 
042.
இயற்கையை இயற்கையாய்வாழ  விடு....

இயற்கையை இயற்கையாய் வாழ விடு //
இயங்கிடும் அது அதன் போக்கில் போக விடு //
உன் நலத்திற்காக அதை நீ அழிக்காதே //
உன் சுயநலத்திற்காக அதை வெட்டாதே //

யார் வைத்தது என்று யாருக்குமே தெரியாது உண்மை//  நீ
யாரடா அதை நீ அழிக்க உனக்கு என்ன உரிமை //
காடுகள் செழித்தால் நாட்டின் வளம் தினம் ஓங்கும்//
காடுகளில் வாழும் உயிரினங்களும் உடன் வாழும் //

சந்தன மரம் தரும் காடுகளையும்  நீயே அழிக்கிறாய் //
சொந்தமான உன்னுரி
மை  தொழிற்சாலை கட்டுவதற்கு //
உந்தன் போக்கு உனக்கு லாபமே இயற்கையின் ‌அதன் சூழலை //
உந்தன் மனதில் ஏற்றி வைத்து பார்த்தாயா//

இரு பக்கம் அன்று
சாலை ஓரம் மரங்கள்அடர்ந்திருந்தது ஆனந்த பயணம் //
இருந்தும் இன்றென்ன இரு புரம் கடைகளின் வண்ணங்களே//
பயிர் செய்யும் பூமியை
கூறு போடுகிறாய் // நீ
உயிர் வாழ வெளிநாடு செல்கிறாய் இது என்ன கூத்து //

இயற்கையும் நமக்கு ஒரு தோழன் போல் தான் //
இயற்கையோடு வாழ்ந்து பார் உன் ஆரோக்கியத்தில் நீ வாழ்வாய் //
இயற்கையே நமக்கு வளம் தரும் நன்மை தேவதைகளே //
இயற்கையை அழிக்க
நினைத்தால் நீ மனிதனே இல்லை //

இயற்கையை அழித்தால் உனக்கே அழிவு வரும் நிசமே //
இயந்திரங்கள் வந்துவிட்டது என கர்வம் கொள்ளாதே //
இமயம் உருகினால் எல்லா அழிவும் வரும் நிச்சயமே //
இமைப்பொழுதுநமக்கு அழிவு வரும் உடனு க்குஉடனே //

பறவைகளின் சரணா லயம் இயற்கையின் சூழ்நிலையே //
பறந்துவந்துஅவைகள் இனப்பெருக்கத்தை செய்கின்றது //
வெளிநாடுகளில் இருந்தும் இவைகள் இயற்கையை நாடி வருகிறது //
ஒளிமயமான வாழ்வை நமக்குத் தருகிறது //

உனக்கே தெரியாது அழிவு வரும் என்று //
உனக்கு முன்னே இவைகள் அறிந்து வைத்திருக்கும் //
உனக்கே வந்த பின் தான் தெரியும் //
உலக சுற்றுப்புற சூழலை நீ மதித்திடு மகிழ்வாய் வாழ்ந்து
விடு //

அன்புடன் அஞ்சல் தஞ்சை  தாசன் ,
 கொளத்தூர், குமரன் நகர், சென்னை 600110.
 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 
043.
 இயற்கை

 நம் உயிரை காக்கும் இயற்கையை பாதுகாப்போம்!

 மனித வளம் காக்க இயற்கை வளம் பேணுவோம்!

 மரம் வெட்டுவதை தவிர்ப்போம்!

நிறைய மரக்கன்றுகளை நடுவோம்!

 மழையை பொழிய வைப்போம்!

காடழித்து நாடாக்கும் திட்டத்தை கைவிடுவோம்!

 தொழிற்சாலை கழிவுகளை நீரில் கலக்க விடாமல் தடுப்போம்!

 தொழிற்சாலை புகை உயிர்க்காற்றை மாசு படுத்தாமல் பார்த்துக் கொள்வோம்!

 நெகிழி பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்ப்போம்!

நீர் நிலைகளில் குப்பைகளை கொட்டாமல் இருப்போம்!

 நிலத்தை அசுத்தம் செய்யாமல் இருப்போம்!

ஐம்பூதங்களையும் நம் முயற்சியால் பாதுகாப்போம்!

 அருவி ஆறு போன்ற நீர் நிலைகளில்
இரசாயன சோப்புகளை பயன்படுத்தாமல் இருப்போம்!

நீர் நிலைகளை தூர்வாரி பராமரிப்போம்!

 கிணற்றை தூற்றுவதை தவிர்த்து நீர் ஊற்ற செய்வோம்!

 பூமியில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த மழைநீர் சேகரிப்பு தொட்டியை கட்டுவோம்!

கடலை மாசு  செய்யாமல் இருந்து மீன்  இனப்பெருக்கத்தை தடுக்காமல் இருப்போம்!

 பூமியில் உள்ள இயற்கையால் படைக்கப்பட்ட,
ஒவ்வொரு உயிரையும் தன் உயிராய் நினைத்து அழிக்காமல் வாழ வழிவகை செய்வோம்!

 பச்சை புல்வெளியை உற்றுப் பார்த்தால் நோய் தீர்க்க அதை பாதுகாப்போம்!

 மழையை தந்து உயிரை மீட்கும் பூமியில் உள்ள
அனைத்து இயற்கை வளங்களையும் பாதுகாப்போம்!

 பாதுகாக்கும் அதை கடமையாக உணர்ந்து செய்வோம்// செய்ய வைப்போம்!!

 அனைவரையும் நம் முயற்சியால் ///

மிஜினா
புதுவை.
 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 
044.
இயற்கையை நேசிப்போம் பாதுகாப்போம்.......

இயற்கையதை நேசித்தாலே  
இன்பமது பொங்குமே !  1
இயற்கையோடு ஒன்றினால்
இனிமையே மிஞ்சுமே ! 2
பச்சைப்பசேலென்ற பட்டுவிரிப்பில் பசுமையான வயலும் ! 3
பார்த்தால் மனதை கவரும் பரவசமாகுமே ! 4
இயற்கை கொடுத்த வரமதை
பாதுகாப்போம் ! 5
காடுகளை அழித்தது  போதும் இனி ! 6
மரங்கள் நடுவோம் மழையை பெறுவோம் ! 7
கழனியைக் காப்போம் மகசூலை அதிகரிப்போம் ! 8
செயற்கை உரம் இடுவதை தவிர்ப்போம் ! 9
பசுமை புரட்சியை விழிப்புடன் ஏற்படுத்துவோம் ! 10
அன்று விடுதலைப் பெறுவதற்காக வீட்டிற்கு ஒருவரை ! 11
தேர்வு செய்தே  போருக்கு அனுப்பினோம் !  12
விடுதலைப் பெற்றோம் சுதந்திரமாக இருக்கிறோம் ! 13
இன்றோ இயற்கையின் சீற்றத்திற்கு ஆளாகியிருக்கிறோம் ! 14.
இனியாவது சிந்தித்து ஒன்றிணைந்து செயல்படுவோம் ! 15
மண்வளத்தைப் பேணிக் காக்க பாடுபடுவோம் ! 16.

வசந்தாஶ்ரீதர்.
 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 
045.
 
இயற்கை வளம் பாதுகாப்பு   

அறிவியல் வளர்ச்சி அழிவின் ஆரம்பம்,
பறவைகளின் வீழ்ச்சிக்கு அதுவே காரணம் !   
இயற்கையோடு இணைந்து வாழ்ந்தான் பாட்டன்,
செயற்கையோடு பிணைந்து வாழ்கிறான் பேரன் !    

இயற்கை வேளாண்மைக்கு முதலிடம் கொடுப்போம்,
ஆபத்தை விளைவிக்கும் நோய்களைத் தடுப்போம் !    
விளைநிலங்களில் விவசாயத்தை மீண்டும் செய்வோம்,
பசுமை நிலங்கள் பங்கிடுவோரை எதிர்ப்போம்!      

கனிமவளங்களின் அதீத கொள்ளையைத் தடுப்போம்,
நிலத்தடி நீர்மட்டத்தை மீண்டும் உயர்த்துவோம்!      
இயற்கையின் கொடையாம் நீர்நிலைகளை ஆழப்படுத்துவோம்,  
நெகிழியால் பாழடையாமல் பத்திரமாய் காப்போம்!  

நவீனமயமாதல் பெயரில் அழிப்பதை நிறுத்துவோம்,
கற்பக விருட்சத்தை நட்டு வளர்ப்போம் !     
நிழல்நடு விழாவை அனைவரும் ஏற்போம்,
நிழலுக்கான மரங்களை தெருவெல்லாம் நடுவோம் !     

இயற்கை காடுகளின் அழிவு நிறுத்தப்படட்டும் ,
வன விலங்குகளின் சரணாலயம் பெருகட்டும் !     
அலையாத்தி காடுகளின் பரப்பளவு அதிகமாகட்டும்,
மண் அரிப்பு வெகுவாக குறையட்டும் !   

சுட்டெரிக்கும் சூரியனின் கோபத்தைத் தணிப்போம்,
சூளுரைத்து ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்!   
புகை கக்கும் வாகனங்களை புறக்கணிப்போம்,
பஞ்ச பூதங்களை பாதுகாக்க ஏகமாய் எழுப்புவோம் !  

பனிப்பாறைகள் உருகுவதை எடுத்து உரைப்போம் ,
பனிவாழ் உயிரினங்கள் அழிவைத் தடுப்போம் !    
காலநிலை மாற்றத்தை சரியாக கணிப்போம்,
ஆழிப் பேரலையின் ஆபத்தை குறைப்போம் !  

யுகம் கடந்தாலும் அழியாத செல்வங்களை,
பாதுகாக்கும் பொறுப்பை நாம் உணர்வோம் !  
தலைமுறைக்காக பத்திரபடுத்துவோம் இயற்கை வளங்களை,
தரணியில் பரம்பரை வாழட்டும் பத்திரமாய் !   

 -ஆ. ஜெசிந்த்
பள்ளி :- கேரள வித்யாலயம் மேல் நிலைப் பள்ளி ,
புரசைவாக்கம் , சென்னை – 600084
 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 
046.
பனைமரம்

ஓ, ஓ  உயர்ந்ததோங்கிய மரமே,
கேட்பாரற்று, பராமரிப்பற்று, கிளைகள் இல்லாத, எத்தனைக் காலமானாலும் சிதையாத மரமே !
ஆண் மரத்தை 'அலவு' என்றும் ,
பெண் மரத்தை, 'பருவப்பனை' என்றும், தனித்தனி பெயர்க் கொண்ட மரமே !
உன் இளமையை 'வடலி' என்பர்.
 சுவைத்துப் பருகுவதற்கு பதநீர் தருகின்றாய்.
 பதநீரின் மதிப்பு கூட்டு பொருளாக;
 மாலை பதிநீரும், கற்கண்டும், கருப்புக் கட்டியும்
மக்களுக்குத் தந்து வாழ்விக்கின்றாய்.
பசித்தவர்க்கு பனம்பழமும்  நுங்கும் வழங்குகின்ற வள்ளலே!
வேண்டாம் என்று வீசிய விதையிலும்
உன்னதமான தவணும் பனங்கிழங்கும் தருகின்றாய்.
உன் ஓலையிலும் கலைப்பொருள்கள் ஆயிரம்.
 கண் கவரும் அலங்கார பொருட்கள் பதினாயிரம்.
 செய்து வாழ்வாதாரத்தை உயர்த்துகின்றனர் பலர்.
உன் மரமோ, வீடுகட்ட உத்தரம், கழிக்கோல், பட்டியல், தூண் என்று உதவுகின்றன.
உன்னை ஒதுக்கிய மக்கள் காங்கிரீட் வீடுகள்
கட்டுகின்றனர். பறவைகளின் புகலிடமானாய்!
நீ ஆணிவேர் அற்றவன். சல்லி வேர் தொகுப்பு டையவன்.
இறைவன் அளித்த வரத்தினால் ஓங்கி,
உயர்ந்திருக்கின்றாய். உன் சல்லி வேர் தொகுப்பிலோ,
ஆச்சரியங்கள் ஆயிரம். மரத்தைத்  தாங்கும் தன்மை மட்டுமன்று. நிலத்தடி நீரையும் பாதுகாக்கின்றாய். மதிப்புக் கூட்டும் பொருள்களின் மூலதனமே!
உயிரினங்கள் விரும்பும் கற்பக விருட்சமே! மாநில சின்னமாக உயர்ந்த மரமே!
 நீ பூமியில் நீடூழி நிலைக்க;
 உன் சேவை பெருக; வாழ்த்துகின்றேன்.
 வரும் தலைமுறைக்கென்று  பனை மரத்தினைப் பாதுகாப்போம்.
 
 முனைவர் .சு.ஏஞ்சல் லதா, காயல்பட்டினம்.
 
 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 
047.
"பனைமரம் பேசுகிறது ".

பண்டைத் தமிழரின் பண்பாட்டைப் பறைசாற்றப் பிறந்தவன் நான்!//
அன்னைத் தமிழ்நாட்டின்
"தேசிய மரமாவேன்"!//
ஆன்றோர் என்னைப் பயன்படுத்தி எழுத்தாணி கொண்டு படைத்திட்ட//
இலக்கிய, இலக்கணங்கள் ஏராளம்.//
ஈடு,இணையற்ற பயன் தருவேன்.//
உண்ணும் உணவாய் பயன்படுவேன்.//
ஊரின் மண்வளத்தை "எல்லைச்சாமி"போல், அழகாய் காத்து நிற்பேன்.//
என்னை வளர்க்க நானே முயல்வேன்.//
ஏழை,பணக்காரன் என்ற
பேதமில்லாமல்,அனைத்துயிர்க்கும் நல்மருந்தாவேன்!//
ஐம்புலன்களும் நன்மையுற, கோடைக்காலத்தின்,
அட்சயப் பாத்திரமாய் நான் திகழ்வேன்!//
ஒரு கிளையுமில்லாமல் நீண்ட உயரம் வளர்ந்திருப்பேன்!//.
ஓடியாடும் குழந்தைகளுக்கு "விளையாட்டுப் பொருள்கள்" நான் தருவேன்!//.
ஔடதம் அருந்த,என்னில் மிகுந்த அமிர்தமுண்டு!//.
நல்லக் குளிர்ச்சி நான் தருவேன்!//.
தேவைப்படும் இடங்களிலே,நல்ல மேற்கூரையாய் நானிருப்பேன்!//.
மின்சாரமில்லா நேரத்தில், "கை விசிறி"யாய் நான் வருவேன்!//.
நான் இருக்குமிடத்தில் வறட்சியில்லை!//
"ஆழ்குழாய்த்"தோண்ட,
"ஊற்றுத்திறவுகோல்" தேவையில்லை!//.
நின்றவர்க்கு நிழல் தருவேன்!//
நீடூழி "நூறாண்டு" வாழ்ந்திடுவேன்!//.
எனது பனங்கீற்றின் "ஆயுள்" நானூறு ஆண்டுகளாம்!//.
பழுத்த பனம்பழம் விழுந்து, நான் காண மரமாகும்!//.
இயற்கையாய் வளர்ந்திடுவேன், இன்னுயிரைக் காத்திடுவேன்!//.
என்னைப் பற்றி ஏறுவதே சற்றே தயக்கம் வரக்கூடும்!//.
தைரியம்,துணிவு பெற்று ஏறிவிட்டால் ஏற்றம் பெறுவீர் வாழ்க்கையிலே!//.
இந்த நேரத்தில் வேண்டுகோளாய் விண்ணப்பிக்கின்றேன்!
விவரம் அறியா மானிடமே! என்னை வெட்டிச் சாய்க்காதீர்!//
"கற்பகத்தருவாய் " நான்
உங்களின் வாழ்வை உயர்த்திடுவேன்!//.
நான் "பனை மரம் " அல்ல உங்களின் "பண மரம்!//
  
-Dr.மீனாட்சி, சேலம் 
 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 
048. 
உலக சுற்றுச் சூழல் தினம்

இயற்கை வளம் பாதுகாப்பு..

தலைப்பு - ஆறின் செயலும் அண்டத்தின் அழிவும்...

" செயற்கையை தேடி ஓடிய பிறகு,

இயற்கையின் அருமை புரிகிறது...

இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதை,

இயல்பில் காட்டியது இயற்கையின் தேவை...

குளிர்சாதன கருவிகளை விட,

மரநிழலையே நாடுகிறது மனம்...

விதையில்லா பழங்களை உண்ண,

வியர்க்கிறது அடி வயிற்றில்...

இளநீரின் சுவையை ஈடு செய்ய,

ரசாயன பானத்தால் இயலவில்லை...

மலர்ந்து மணம் பரப்பும் மலரை விடுத்து,

போலி மலரில் நாட்டம் கொண்டதாய் வாழ்வு...

தோட்டத்தை தோண்டி வீடு கட்டி,

வீட்டின் மேலே தோட்டம் வைத்து,

வீட்டுத் தோட்டம் என்று பேசுவதோ

இயற்கை வள பாதுகாப்பு...

ஐந்து அறிவு உயிர்கள் கூட,

அழகாய் விதைக்கின்றன தாவரங்களை...

ஆறறிவு கொண்டும் ஏனோ,

அறியவில்லை இயற்கையின் மகிமையை...

ஏழு தலைமுறைக்கு முன்

ஏரியாய் இருந்த இடம் - இன்று

என்ன ஆனதோ யார் அறிவார்...

எத்தனை ஆர்வலர்கள் தோன்றினாலும்,

இயற்கையின் ஒப்பில்லாத மதிப்பை

இலவசமாய் அறிவுறுத்தினாலும்,

மதிகெட்ட மனிதனின் மனதில்

இயற்கையை அழிப்பதே மையம்...

வீட்டின் அருகே இருக்கும் மரம்;

அஸ்திவாரத்தை பாதிக்கும்,

என்ற எண்ணம் வேரூன்றியதால் ஏனோ,...

இயற்கை மேலிருந்த பற்றினை

பாழாக்கி விட்டது இந்த சுயநலம்..."

-சீ. மகாலட்சுமி
விருதுநகர் மாவட்டம்.
 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 
049.
 
இயற்கையின்  இனிய வாழ்க்கை

இயற்கை என்றால் இன்பம்.....
செயற்கை என்றால் துன்பம்........
துன்பத்தை பற்றி யோசி......
இன்பத்தை பற்றி நேசி........

இயற்கையின் வாழ்வை சிதைக்கிறோம்.......
செயற்கையின் வாழ்வை சுவாசிக்கிறேன்.......
சுதந்திர பறவையை சிறையில் அடைக்கிறோம்......
சுகாதார வாழ்வை அழிக்கிறோம்......

இலவச காற்றை தூசி என்கிறோம்.......        
செயற்கை காற்றை ஏசி என்கிறோம்........
இறைவனின் படைப்பை இழிவுப்படுத்துகிறோம்........
இயற்கையே மணித்துவிடு.....

மானிடனாய் பிறந்துவிட்டோம்......
மனிதநேயம் தெரிந்தளவுக்கு......
இயற்கையே உன் அருமை தெரியவில்லை.......
எங்கள் இயற்கை அழகே.......

எங்களை இன்ற தாயே......
மூச்சு காற்றாய் சுழல்கிறாய்.......
முகம்சுழிக்காமல் வாழ்கிறாய்........
காற்றாய் கடந்து செல்கிறாய்......

கடந்து செல்லும் சாலையில் கூட.....
உன் கண்ணீரை பொன் நீராக்க....
புதிய சிந்தனைகளை யோசிக்கிறேன்........
இயற்கையே என் கவிதை வரிகளில்......

வண்ணங்கள் இல்லா வண்ண தேவதையே.....
உன்னை வர்ணித்து தான் என் காவியமே.......
கடல் நீரிலும்  கண்ணீரிலும் கலந்து
செல்கிறாய்......
எங்கள் செல்ல காற்றே......

சிறையை திறக்கிறோம்.......
சிறைபட்ட இயற்கையே.......
பறந்து செல் பறவையே......
இனி உன் வாழ்கை இன்பமாக மாறட்டும் இயற்கையே.........

கவிதாயினி வ.ஜீவஸ்ரீ
 கரூர்
 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 
050.
இயற்கை

சித்திரைப் பிறந்ததடா!

செவ்வானம்சிவந்ததடா!  

வாட்டி வதைத்ததடா!

கோடை வெப்பமடா!

வெயிலின் தாக்கமடா!

மக்கள் தவித்தார்களடா!

வேதனையில் திளைத்தார்களாடா !

வேர்வையில் குளித்தார்களடா!
கடவுள் கருணையடா !

கடைக்கண் திறந்ததடா !

வானம்  கருத்ததடா !

கார்மேகம்மின்னியதடா!

கருணை
மழைப்பெய்ததடா!

நீரும்கரைபுரண்டு ஓடியதடா!

அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சியடா!

நிம்மதியான  உறக்கமடா !

சித்திரை கார்த்திகையானதடா !

இக்கோடையில் எங்கும்
பசுமையடா!

விளைச்சல் செழித்து வளர்ந்ததடா!

 காய்கறிகள் விலை குறைந்ததடா!

மென்மையான தென்றல் வீசுதடா !

என்னையும் கவிபாட அழைக்குதடா!

கி.மோனிஷா இளங்கலை இலக்கியத்தமிழ் இறுதியாண்டு
சி.கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி கடலூர்.
 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 
051.
இயற்கைவளம் பாதுகாப்பு

இறைவன் தந்த வளங்கள் யாவும்,
இயற்கை வளப் பாதுகாப்பு.

விருட்சத்தை விருட்டென்று வெட்டிவிட்டு விதைக்கருவை எங்கே போய் தேடுவது.

கற்பகத்தருவை கரடுமுரடாய் சிதைத்திட்டு கருப்பையை கிழித்துதான் போடுவதா?

பசுந்தளிர் இலைகளை மக்கச் செய்து, இளந்தளிர் சிசுக்கள் கழுத்தை நெறிப்பதா?

இயற்கையை அழிக்க நினைத்திட்டால், உயிர்க்கோளம் என்பது பொய்த்துவிடும்.

உயிர்மை என்பது இல்லையென்றால் உயிர்,மெய் என்பது நீர்த்துவிடும்.

பச்சையங்கள் வெளுத்துப் போனால் நிச்சயம் வறட்சிவிதி தலைத்தூக்கும்.

இயற்கையெனும் முதலாளி. நாமெல்லாம் தொழிலாளி.

ஒன்றுபட்டு, உடன்பட்டு வாழ்ந்திட்டால்,
(இயற்கை வளம் காத்திட்டால்) மனிதவளம் நீடிக்கும்.

    தன.மகேஸ்வரி.இயற்கைவளம் பாதுகாப்பு
 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 
052.
இயற்கை வளம் பாதுகாப்பு

செயற்கையாய் ஆயிரம் இருந்தாலும் இயற்கைக்கு எதுவும் ஈடாகாது

இயற்கை காற்றை சுவாசிக்கவே அனைவரும் விரும்புவர்

இயற்கை அன்னையின் கொடையே தென்றல் காற்று

இயற்கை வளமே மனித வாழ்க்கையின் வாழ்வாதரமே

இயற்கைக் காட்சிகள் இன்பத்தை அளிக்கும்

அருவியில் ஆனந்தக் குளியல்

ஆற்றில் ஆனந்தக் குளியல்

சாலை இரு ஓரங்களிலும் மரங்கள்
நடுவிலே பயணம் ஆனந்தமே

பச்சைபசேல் என வயல் வெளிகள் பார்த்து இன்புறலாம்

வயல்களை அழித்து வீடு கட்டினால் வயிற்றுக்கு உணவின்றி போய்விடும்

பசுமையை காத்து பசியையும் போக்கிடுவோம்

வயல்களை அழிக்காமல் வாழ்வாதாரம் காப்போம்
 
இயற்கை வளங்களை பாதுகாப்பது நம் கடமை

எங்கு சென்றாலும் அசுத்தப்படுத்துவது பலரின் செயல்

இயற்கையை அசுத்தப்படுத்தாதே

உன்னால் இயற்கையை உருவாக்க இயலாது

எதிர்கால தலைமுறையினரும்
இயற்கையை அனுபவிக்க

சுத்தமாக வைப்பது நம் கடமை

மரம் செடி கொடிகளால் மனிதனுக்கு எண்ணற்ற பயன்கள்

மரத்தை நட்டால் மழையை பெறலாம்

மண் வளம் காக்கலாம் மழைநீரை சேமிக்கலாம்

நீர் பற்றாக்குறையை தவிர்க்கலாம்

மரங்களை அழிக்காமல் மண் வளத்தை காப்போம் மழை பெறுவோம்

மரங்களை நடுவோம் மட்டில்லா பயன் பெறுவோம்

இயற்கையின்றி மனிதன் இல்லை

நலமாய் வாழ நாடுவோம் இயற்கையை

இயற்கை வளம் காப்போம் இன்பமாய் வாழ்வோம்.

முனைவர்.இ.பாப்பு ரேவதி,
திருநெல்வேலி.

 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 
053.
இயற்கை
 
மனதில்பல துன்பங்கள்
  இருந்தாலும் இனிய சாரலோடு
     மழையில் நனையும்போது
துன்பங்கள் கூட
     சந்தோசமாக மாறி விடுகிறது

பொழியும் மழைத்
     துளிகளுக்கு தெரிவதில்லை
பல உயிர்களின் தாகத்தை
தீர்க்கத் தான் சென்று கொண்டு
     இருக்கிறோம் என்று
தங்கள் வீடுகளை இழந்து
     அகதிகளாக அளையும்
     பறவைகளுக்கு தான் புரியும் மரங்களின் அருமை
தினமும் இரவு வந்தால்
     கருப்பு நிற உடையை
அணிந்தி கொள்கிறது பகல்
சில நொடிப் பொழுது
     வாழ்ந்தாலும் தானும்
குதூகலமாகவும் தன்னை
     ரசிப்பவர்களையும் பரவசமாக்கும் பனித்துளி
வானத்தில் இருந்து வரும்
     மழைத்துளி மண்ணை
ஒனைக்க முன் பல
விவசாயங்களின் மனதை நனைத்து விடுகிறது

ரெ.கலையரசி
கணிதத்துறை உதவிப் பேராசிரியர்
விநாயகா மகளிர் கலை அறிவியல் கல்லூரி
கீழப்பழுவூர்
 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 
054.
இயற்கையைக் காப்போம்.......

பாலைவன வெப்பம் போல சுட்டெரிக்குதே
பாரமது நெஞ்சில் ஆழ அமிழ்த்துகின்றதே
ஓங்கி வளர்ந்த மரங்களை வெட்டியதாலே
ஒவ்வொரு சொட்டு நீருக்கும் தவிக்கின்றாயே

மணல் அள்ளி சுயநலமாய் இருப்பதாலே
மண்ணுலகில் நீரின்றி கானலும் ஆச்சே
நெகிழி அதை விரும்பித்தான் ஏற்றதினாலே
நெஞ்சக நோய்கள் பலதையும் ஏற்றிட்டாயே

விடமான பூச்சிக் கொல்லி பயன்படுத்தாதே
வருங்கால சந்ததியை கருவில் கொல்லாதே
இயற்கைதனை அடிக்கடி மறந்து போகிறாய்
இப்போதே அதற்காக அழுது புரள்கிறாய்

காலமுன்னை கடந்து இன்னும் போகவில்லையே
கவனாக நடந்திட்டால் தீரும் தொல்லையே
மண்ணை கொல்லும் செயலெதும் செய்திடாதே
கண்ணைப் போலே பூமியினை காத்திடுவாயே

தாய்ப்பால் ஊட்டும் தாயுக்கும் தாயானவள்
தாங்கி உனை வாழவைக்கும் கடவுளானவள்
அன்னை ஒருத்தி மட்டுமென எண்ணிடாதே
இயற்கையன்னை மூத்தவள் மறந்து விடாதே

உண்ண உணவு தினமுனக்கு தருகின்றவள்
உடுக்க உடையுனக்கு போட்டு விடுபவள்
இருக்க இடம் தந்துனக்கு மகிழ்விப்பவள்
உன்னாலே தினம் தினம் வருந்துகின்றவள்

தாய்மனதை குளிரவைக்க முயற்சி செய்திடு
தாமாக முன்வந்து இயற்கை காத்திடு
குளிர்விக்கும் மரக்கன்று பலவும் நட்டிடு
குருவி காக்கை மகிழ்ந்திடவே முயற்சித்திடு

இயற்கையை காப்போம் என்றே சூளுரைத்திடு
இதயமது மகிழ்ந்திடவே செயல்பல செய்திடு
சுற்றுச்சூழல் தினமன்று நட்டிடு மரக்கன்று
சுற்றமெலாம் வாழ்த்தும் உன் செயல்கண்டு

தகடூர் சு.தமிழரசன்
ஒருங்கிணைப்பாளர்
இயற்கையைக்காப்போம் அறக்கட்டளை
தருமபுரி.
 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 
055.
 
இயற்கையை காப்போம்.

இயற்கையை மாய்த்து செயற்கையை புகுத்தி//
நவீனம் எனும் பெயரில் நாசகாரமாய் நசுக்கப்படுகிறது வளங்கள்//
அபிவிருத்தியின் உச்சம் அழிக்கப்படும் இயற்கை//
பாதுகாப்பதே கடமையென உருவாக்கப்டுகிறது சட்டங்கள்//
எத்துனை சட்டங்கள்,சமவாயங்கள்,
கழகங்கள்//
இயற்கையை போற்றி பாதுகாக்க//
சில அறிவீனர்களின் இழிசெயலால்
விடையின்றி போகின்றது அத்தனையும்//

காடும் பாலை நிலமாகி
மழையும் அமிலமாகி//
இயற்கையின் சமனிலையும் சீர்குலைந்து சீற்றமாகிறது//
காடுகளையும் கழனிகளையும்
அழித்து தீயிட்டு//
காட்டு விலங்குகளும் தீயிற்கு இரையாகி//
பருவநிலை மாற்றமும்
பூதாகரமாக மாறியது//

தரிசு நிலமெல்லாம் தொழிற்சாலை அமைத்து//
தொழிற்சாலை புகையும் வானோடு கலந்து//
சுவாசிக்க காற்றும் நஞ்சாகி போனது//
ஆழ்துளை கிணறு தோண்டி  நிலத்தடி நீரை உறிஞ்சி//
விவசாயத்திற்கு தண்ணீரின்றி விளைச்சலும் பாழாகி//
பஞ்சமும் தலைவிரித்தாட பட்டினியில் விவசாயி//
மரங்களின் உரசலில் காட்டுத்தீ உருவாகி//
காடெல்லாம் சுடுகாடாடகி போனதே//
வெப்பமும் அதிகரிக்க வெக்கையில் மனிதகுலம்//
பனிமலையும் உருகி கடலோடு கலந்து//
கடல்மட்டமும் உயர மூழ்கிப்போகிறது தீவுகள்//

இரசாயன கழிவுகளும் நீரோடு கலந்து//
குடிநீரும் பாழாகி குளோரின் நீர் பாவணையில்//
குடிப்பதற்கோ காசு கேட்கும் நிலை//

கடலில் கப்பல் விஷமாக எண்ணெயும்//
கசிந்து கடலின் மீது தடுப்பாக//
தவிக்கிறது சுவாசத்திற்கு கடல் உயிரினம்//

எத்தனை பேரழிவுகளும்  கண்முன்னே நிகழ்ந்தாலும் //
மாற்றம் வேண்டி இருப்பது மனிதனில் மாத்திரமே//
இயற்கையை காப்பது உயிர் எனக்கொண்டு //
செயற்கையை அளவோடு பாவித்து //
மரங்களையும் வளர்த்து இயற்கையை பேணுவோம்//

மு.நௌ.பா.சஹ்றா
இலங்கை.
 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 
056.
இயற்கையைக் காப்போம்: 
இறைவன் படைத்த படைப்பில்/
 இயற்கை ஓர் அற்புதம்/ செயற்கை விரும்பி மனிதா/ 
இயற்கையை அழையா விருந்தாளியாய் ஒதுக்காதே/
 நெகிழியைப் புதைக்கும் மனிதா/ 
உனக்கு நீயே/ 
குழியைத் தோண்டிக் கொள்கிறாய்/ 
மண்ணின் வளமட்டும் அல்ல/ 
மனிதனின் ஆயுளும் குறையுமப்பா இதுகேள்/
மரத்தை வெட்டி/ 
காற்றைக் குறைத்த மனிதா/ 
கற்றுக்கொள்/ 
சாதி,மதம்,இனம் பாராமல்/
பரந்த வெளியில்/ 
பரவசமாய்க் காற்று வீசும்/ 
இயற்கையைக் காத்து நில்!/ 
நிலத்தை அழித்து/ நீரைக்குறைத்து/ 
காற்றை மாசுபடுத்தி/ கை நொடிப்பொழுது கூட/ 
கனவிலும் வாழமுடியாது நீ!/ 
பசுமை இனிக்கும்/ அது உனக்குத் தெரியுமா?/ 
காற்றின் குளுமையை/ நீ என்றாவது/ 
கட்டியணைத்தது உண்டா?/ 
இயற்கை நமக்கு/ 
வளைந்து கொடுக்கும் பண்பு/ 
நல்வாடைக்காற்று/ 
நமக்கு தந்த தெம்பு/ ஆதலால்....../ 
அனைவரும் இயற்கையை நேசி!/ 
 
-ஆய்வாளர் ரத்னா முனைவர் ஆ.முனியாண்டி,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,மதுரை.
 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 
057.
இயற்கை அரசி 
 
சிறு வயது முதலே பேராசை
 மரக்கன்று மீது ஆசையோ ஆசை
 கண்டேன் ஒரு விதையை நான்
 மண்ணில் குழி தோண்டி   புதைத்தேன்
 சில நாள் சென்றது விதை முளைக்குமா?
 பல  கேள்விக் கணைகள் என்னுள்
 தண்ணீர் விட்டேன் நாள்தோறும் நான்
 கண்ணீர் விட்டேன் விதையே
முளைப்பாயா?
 நீ முளைத்தால் தரணி செழிக்கும்
 என் கூக்குரல்  விதைக்கு கேட்டதோ?
 விதை முளைக்க பார்கடலில் பரவசமே
 மெல்ல  வளர மனம் சிறகடிக்க
 வசந்த வானில் கற்பக  விருட்சமே!
 மரமே! நீ  பறவைகளின் சரணாலயமோ?
 தேனன க்களின் சிங்காரத் தோட்டமோ?நீ!
 சிட்டுக்குருவிகளின் ஆசை கூடு உன்னிடமே?

 பட்டாம்பூச்சி சிறகடிக்க கிளை தருவாயா?
உன் மலர்களை எனக்கு? தருவாயா?!
 தோழியே!  மடியில் நான் உறங்கலாமா?
 பஞ்சு மெத்தையடி என் பெண்ணே!
 உன் பழமோ எனக்கு அமுதமே!
 என் உயிர் உன்னிடமே கண்ணே!
  உன் அழகை நான் ரசிக்கவோ!!
 பெருமை  மனிதன் பலருக்கு தெரிவதில்லையே!
நீ  வளர்ந்தால் இயற்கை செழிக்குமே! அகிலமும்உன்னில் அடங்கும் பெண்ணே!
 இயற்கை தேவியே! இறைவனின்! படைப்பே!
 மரமே நீ இயற்கை அரசி
 கற்பனைக்கு  எட்டாத அழகே! ஓவியமே!
 உன்னால் மானிடம் செழிக்குமே!எழிலரசியே!
 கருணை கடலே எல்லையில்லா ஆனந்தமே!
 உன்னை வளர்த்ததால் நாட்டிற்கே பெருமை!
 மரமே! அரசியே! இறைவியே! வாழ்க!
 
 ஜே. கே. சுந்தரி,
திருவள்ளூர்,
உதவிப் பேராசிரியர்,
 டி. ஆர். பி. சி.சி.சி. இந்துக் கல்லூரி,
பட்டாபிராம் ,சென்னை -72
 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 
058. 

இயற்கை

கட்டுடைப்பில் தொடங்கி 
கருத்துருவாக்கத்தில் 
நிரம்புகின்றது
 கானகத்தின் எதார்த்தம் .
கடவுளின் எச்சில் எச்சங்கள்
 இயற்கை.
 அறக்கூவலில்
 ஆணி அறைந்தேன்.
 மாரு குடித்த மானுடா 
மழுங்கிய உன் புத்திக்கு 
எனது அறிவுரை.
 அண்டச் சிதறல்களின் 
அன்னியமாகப்பட்ட 
அடையாள 
எண்ணிக்கை பல.
 வெள்ளை நூல்களின் 
வகைமைக்குள் 
ஐந்து என 
 அடக்குமுறைக்கு உட்பட்டன.
 சுருங்கி விரியும்
 உன் சுவாசப் பையை கேள்
 வாயுவின் வாய்ப்பாடு தெரியும்
 வருங்கால நாக்கினை கேள்
 தண்- நீரின் தன்மை அறிவாய்.
 பெருகிய மனிதக் கூட்டத்தைக் கேள்
 நிலத்தின் நிழல் நயம் புரியும்.
 என் முன்னோர் ஆன்மா சொல்லும் 
ஆகாயம் எத்தகையது என்று.
சுடலை இடம் கேள் 
தீயின் தீரா பசியை.
ஐந்தும் உன்னுள்ளடக்கம்.
இது உன் ஆறறிவிற்கு எட்டாத விளக்கம்.
 வெட்டி எறிந்த பின்பும் 
புன்னகை பூக்கும்
 விரல் அரியனையும் 
தலை மகுடமும் .
மூத்திரத் துளையில் 
அடுத்த சந்ததியின்
 திரவ கூட்டம்.
 குழந்தையின் அழுகைக்கு
 சுரக்கும் முளைக்காம்புகள்.
 புலப்படாத சிந்தைக்கு 
புல்லரிக்கும் புலன்கள்.
 போதி மதம் சென்ற உனக்கு
 போதனை இல்லை .
இயற்கை உன்னுள் அடக்கம்.
 ஓரறிவின் உழைப்பு ஆறறிவின் உழையா தீனி .
மா- களின் எச்சம் 
உனக்கு கிடைத்த மிச்சம்.
 கா- களின் அடர்த்தி
 உன் கனவுகளின் கத்தி.
யோனி பிழந்து பிறந்த நீ 
இன்று 
பூமி பிழக்கிராய். 
பசி விடுத்த நிலத்திற்கு
 நீ 
பால் ஊற்றுகிறாய்.
இயற்கை உன்னுள் அடக்கம்.
 உன் வாழ்க்கையை நெறிப்படுத்து
வாகனம் விடுத்து கால்நடை பயணம் கொள்.
 ஜன்னல் திற
 காற்றை நேசி
 குழாய் அடைத்து குடிநீர் குடி 
கட்டந்தரையை காடுகள் ஆக்கு
 செயற்கை மோகம் விடுத்து
 இயற்கை வாசம் கொள்.
இயற்கை உன்னுள்ளடக்கம்.
 ஒட்டகத்தை போல் சேமி,
 மண்புழுவைப் போல் 
பண்படுத்து,
 பன்றியைப் போல்
 உழு,
பறவையைப் போல்
 பயிரிடு,
எலியைப் போல்
 அறுவடை செய்,
ஐந்து அறிவு இடம் இயற்கையை கேள்.
 அதன் பின் ஆறறிவாய் வாழ்.
 இயற்கை உன்னுள் அடக்கம்.
 இயற்கையை நேசி வருங்கால மானுடமே.

             ஈஸ்வரன். க   (இடக்கை)

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

059.

மருத்துவர் ஜேகுணசுந்தரி ஒத்தக்கால் மண்டபம்..

கவிதை தலைப்பு:-
"இயற்கையைக் காப்போம்"
*****************

அகிலத்தை இறைவன் அழகாய்ப் படைத்தான்!!

 சுற்றும் பூமி! சுழலும் காற்று!

 கத்தும் கடலும் கதிரவன் ஒளியும்!!

 வானும் ! நிலவும் வைகறைத் தென்றலும்!!

 பூக்கும் மலர்களும்!
 வீசும்  மணமும்!!

 காடும் மலையும்! பாயும் ஆறும்!!

 வீழும் அருவியும்  காயும் கனியும்!!

 பாடும் பறவைகள் ஆடும் மயில்கள்!!

 இயற்கை அழகை அள்ளிப் பருகிட!!

 இறைவன் தந்தான் பரிசாய் நமக்கு!!

 அறிவியல் தாக்கத்தால் அனைத்தும் நீக்கம்!!

 அணுவைப் பிளந்தான் அழிவைத் தேடினான்!!

 இயற்கையை எதிர்த்தான் இன்னல் கண்டான்!!

 விளைச்சலை அழித்தான் மாடிகள் கட்டினான்!!

 மரங்களை 
வெட்டினான் சாலைகள் போட்டான்!!

 மண்ணை கெடுத்தான் மலடாய் ஆக்கினான்!!

 நீரைக் கெடுத்து விலைக்கு வாங்கினான்!!

 காற்று மாசால் மூச்சு முட்டியது!!


 பசுமையை நீக்கினான் பறவைகள் மாண்டது!!

 எல்லாம் கெட்டிட தொற்றுக்கள் தொற்றியது!!

 நோயின் பிடியால் மடியும் அவலம்!!


 மரங்களை நடுவோம்! மானுடம் காப்போம்!

வளங்களைச்
சேமிப்போம்!
வாழ்வாதாரம்
பெறுவோம்!!

 இயற்கையைக் காப்போம்! இன்னலை நீக்குவோம்!!

 

கொங்கு பாரதி!
தமிழ் தாரகை!
ஜே.குணசுந்தரி.

@@@@@@@@@@@@@@@@@@######

060. 

*சுற்றுச்சூழல் காப்போம் !* 


சூழல் மிக முக்கியம் 
அதுவே நமது லட்சியம் ! 
காப்பது நம் கடமை ! 
அதுவே நம் பெருமை ! 
இயற்கை மாசுபடாமல் 
இணைந்து வாழ்வோம் 
இயற்கைக்கு கைகொடுத்து ! 
கவலைகளைத் துடைத்து 
இயற்கையை பேணுவோம் 
இயற்கையுடன் கைகோர்த்து !‌
இன்றியமையா இயற்கை 
அது தருமே பல வியப்பை ! 
மரத்தைக் காப்போம்
மனபாரத்தை ஒழிப்போம் ! 
கடுகளவு நினைப்போமே
கழனியெங்கும் நிறைப்போமே!
கருவிலே விதைப்போமே ! 
காடுகிளிலே இயற்கையை ! 
இயற்கை இறைவனின் அருட்பிரசாதம் ! 
இன்னல் தீர்க்கும் வரப்பிரசாதம் ! 
இன்றிலிருந்து மாறுவோம் 
இயற்கையை காத்திடவே ! 
எப்போதும் உரைப்போமே இயற்கைக்கான விதையை ! 
விருட்சமாக வளரட்டும் 
விதையாக நாம் விதைத்தது 
விடிவெள்ளியாக விஸ்வரூபம் எடுத்தே !
தடம் மாறாமல் தனிவழி அமைப்போம் 
தாரகமான பஞ்சபூதங்களுக்கு ! 
தடைகள் ஏதுமில்லை 
தாயக மண் காத்திடவே ! 
தங்கமகனாக எழுந்துவிடு 
கையிலொரு விதையோடு 
கைகொடுக்கும் இயற்கைக்காக ! 
இயற்கையை காப்பது நம் கடமை ! 
தமிழ்மகனாய் அதுவே நம்‌ பெருமை ! 


 -  கவிஞர் கு. ஜனனி ,
    நாமக்கல்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

061.

வேப்பமரம்

யாரும் விதைக்காமலே! நீர் ஊற்றாமலே!

பூமியைப் பிளந்தே முளைத்த வேப்பஞ்செடியே!!

ஒவ்வொரு நாளும் உன் வளச்சியைக்

கண்டே! மகிழும் வளர்ந்த சேயானேன்!!

நீயோ என் கண்முன்னே வேகமாக 

வளர்ந்தே நிழல் தரும் தாயானாய்!!

இளந்தளிராய் என் குடும்பத்திற்கே மருந்தானாய்!!

வெள்ளை சிறுப் பூக்களாய் உன்சிரிப்பு

பார்த்துச் சொக்கிப் போனேன் நான்!!

பல காகம் கூடுகட்ட படர்ந்த

பசுந்தழையால் ஆன கம்பளமாய் விரிந்தாய்!!

காற்றில் ஆசைந்து இலைகள் நடமாட

பழத்த சிறு மஞ்சள்நிற பழங்கள்

உதிர்த்தே தரையில் பல்லாங்குழி ஆடுகிறாய்!!

ஆடிமாத ஞாயிறுகளில் உன் தழைக்காக

வரிசையில் கூட்டம் அலைமோத பிரசித்தியானாய்!!

எங்கள் வீட்டின் அடையாளமும் ஆனாய்!!

வேப்ப மரமே! உன் மருத்துவ

குணங்கள் படித்தே வியந்துப் போனேன்!!

அடிமரத்தில் அழகாய் மஞ்சள் குங்குமம்

வைத்தே சிறு தெய்வமாக கைத்தொழுதேன்

உன்னையே!! இலையுதிர் காலத்தில் பழுத்த

இலைகள் காற்றில் பறக்க! நம்பிக்கையின்

சின்னமாய் சிறு இலைகள் துளிர்த்தாய்!!

'கொரானா' கால கட்டத்தில் 'கிருமிநாசினியாய்'

எங்கள் தெருவில் உள்ள அனைவருக்கும் 

'காக்கும் கடவுளாக' வீட்டின் வாயிலில் 

தோரணமானாய்!! மின்சாரம் இல்லா நேரத்தில்

வீட்டில் உள்ளோருக்கு இயற்கை விசிறியானாய்!!

அதிகாலையில் அணில்கள் கிளைகளில் ஓட!! 

காகம் கரைய! பார்த்தே மனம்மகிழ!!  

இறைவன் அளித்த இயற்கை பிரசாதமானாய்!!

*கவிதைத் தருவோர் உறுதிமொழி*    

இது என் சொந்தப் படைப்பென்றும், இக்குழுவிற்கு மட்டுமே எனது இக்கவிதையை தருகிறேன் என உண்மை சான்றளிக்கிறேன்.  

முனைவர் வே.விஜி, சென்னை

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

062.

சூழல் காப்பு நம் பொறுப்பு....

தென்றல் காற்றோடு தேன்கலந்து
கவி பாடும் குயிலே
சில்லென்ற காற்றால் 
தோகை விரிக்கும் மயிலே
பச்சை கொடி
கட்டிய புல் இனமே
புல் இனத்தில் படுத்துறங்கும்
வெண்பணி தேவதையே...!
உயர்ந்த மலையில் படர்ந்த 
அழகைக் கூட்டும் கார்மேகக் கூட்டங்களே...!
எண்ணிலடங்கா பறிக்க முடியாத 
வானத்தில் பூத்துக் குலுங்கும் 
வைர நட்சத்திரங்களே...!
கண்ணுக்கு குளிர்ச்சி நிறைந்தவளாய் 
கவிஞர்களை கொள்ளையடிக்கும் 
மாமதி நிலவே...!
அண்டத்தில் ஒளி நிறைந்தவனாய் உயிர்களில் ஆதவனான  கதிரவனே...!
எல்லாவற்றையும் படைத்த 
இறைவனையே கலங்கவைக்கும் 
அறிவியலின் சாதனங்களே..!
சோதனையில் சிக்கித் தவிக்கவைக்கும்
வாகனத்து நச்சுப்புகையே...! 
அலைபேசி அலை கதிர்வீச்சே...!
தொழிற்சாலை கழிவே
அழியாத  நெகிழிப் பொருளே
உம்மை விரட்டியடிக்கும் காலம்
 வெகு தொலைவில் இல்லை..!
விலகும் காலம் விரைவில் ...!
இயற்கையோடு வாழும் எமக்கு 
விரைந்து காலம் பதில் சொல்லும்..

இயற்கை சூழலை காப்போம்!
மனிதன் வாழ்வை இயற்கையோடு
நிலை நிறுத்துவோம்!

கவிஞர் முனைவர் ந.கல்யாணி
உதவி பேராசிரியர் (தமிழாய்வுத்துறை)
தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) பெரம்பலூர்-621212.

@@@@@@@@@@@@@@@@#@@@@@@@

063. 

சுகாதாரம் ....!!

நோயற்ற வாழ்விற்கு ஆதாரம் சுகாதாரம்/

ஆரோக்கியமாக நாம் வாழ /

சுற்றுப்புற சூழலைக் காத்திடுவோம் /

கூழ் ஆனாலும் குளித்துக் குடிப்போம்/

கந்தையானாலும் கசக்கிக் கட்டுவோம்/

சமச்சீரான உணவைப் உண்வோம்/

சந்தோஷமாக நாமும் வாழ்வோம் /

வீடுகள் தோறும் மரங்கள் வளர்ப்போம்/

இல்லங்கள் தோறும் தோட்டம் அமைப்போம்/

சுவாசிக்கும் காற்றும் தூய்மையாய் அமைய/

இயற்கை பாதுகாப்போம்/

கழிவு நீரும் தேங்காமல் பார்ப்போம்/

தூசு  சேராமல் தடுப்போம்/

இருக்கும் இடத்தை சுத்தமாய் வைப்போம்/

நோய் இல்லாத வாழ்வு வாழ்வோம்/

சுகாதாரம் காப்போம்/

இர.உஷாநந்தினி சதீஷ்குமார்
கோவை.

@@@@@@@@@@@@@@@@@@@@@

066

"இயற்கையைக் காப்போம்"
*****************

அகிலத்தை இறைவன் அழகாய்ப் படைத்தான்!!

 சுற்றும் பூமி! சுழலும் காற்று!

 கத்தும் கடலும் கதிரவன் ஒளியும்!!

 வானும் ! நிலவும் வைகறைத் தென்றலும்!!

 பூக்கும் மலர்களும்!
 வீசும்  மணமும்!!

 காடும் மலையும்! பாயும் ஆறும்!!

 வீழும் அருவியும்  காயும் கனியும்!!

 பாடும் பறவைகள் ஆடும் மயில்கள்!!

 இயற்கை அழகை அள்ளிப் பருகிட!!

 இறைவன் தந்தான் பரிசாய் நமக்கு!!

 அறிவியல் தாக்கத்தால் அனைத்தும் நீக்கம்!!

 அணுவைப் பிளந்தான் அழிவைத் தேடினான்!!

 இயற்கையை எதிர்த்தான் இன்னல் கண்டான்!!

 விளைச்சலை அழித்தான் மாடிகள் கட்டினான்!!

 மரங்களை 
வெட்டினான் சாலைகள் போட்டான்!!

 மண்ணை கெடுத்தான் மலடாய் ஆக்கினான்!!

 நீரைக் கெடுத்து விலைக்கு வாங்கினான்!!

 காற்று மாசால் மூச்சு முட்டியது!!

 பசுமையை நீக்கினான் பறவைகள் மாண்டது!!

 எல்லாம் கெட்டிட தொற்றுக்கள் தொற்றியது!!

 நோயின் பிடியால் மடியும் அவலம்!!


 மரங்களை நடுவோம்! மானுடம் காப்போம்!

வளங்களைச்
சேமிப்போம்!
வாழ்வாதாரம்
பெறுவோம்!!

 இயற்கையைக் காப்போம்! இன்னலை நீக்குவோம்!!

கொங்கு பாரதி!
தமிழ் தாரகை!
ஜே.குணசுந்தரி.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@064

(ஆலமரம்) 
ஆயிரம் பேரமர
ஆலமரம் நிழலைத்தரும்! 

அனைவருமே இளைப்பாறி
அகமகிழ்வு பெற்றிடுவர்! 

சித்திரை பிறந்துவிட்டால்
எத்தனையோ கொண்டாட்டம்! 

நித்திரையே கொள்ளாது
நீண்டகூத்து நடக்குமங்கே! 

வடமோடி தென்மோடி
வகைவகையாய்க் கூத்தங்கே

பாய்விரித்துப் பார்த்தபடி
பார்த்திடுவார் ஊரார்கள்! 

தேனீர்க்கடையும் வரும்
தித்திப்புக்கடையும் வரும்! 

அப்பம்சுட்டு விற்கின்ற
ஆச்சியும் வந்திடுவார்! 

கடலையும் வறுப்பார்கள்
கச்சானும் வறுப்பார்கள்! 

கமகமக்கும் வாசனையால்
களைகட்டும் ஆலையடி! 

குடும்பமெலாம் ஒன்றாக
குதூகலமாய் இருப்பார்கள்! 

குழந்தைகளும் குறும்புசெய்து
குதூகலத்தில் மிதப்பார்கள்! 

அமைதியாய்ப் பார்த்துநிற்கும்
அதையெல்லாம் ஆலமரம்! 

ஆர்வந்து போனாலும்
ஆலமரம் அகமகிழும்! 

போரொன்று வந்ததனால்
ஊரெல்லாம் ஓடிற்று! 

யாருமே ஊரிலில்லை
ஊரிப்போ உறங்குகிறது! 

களைகட்டி நின்றவிடம்
நிலையிழந்து நிற்கிறது! 

ஆருமே வருவதில்லை
ஆலமரம் நிற்கிறது! 

ஆலமரம் மட்டுமிப்போ
அப்படியே இருக்கிறது! 

ஆலடியைப் பார்ப்பதற்கு
அழுகைதான் வருகிறது! 

மரம்மட்டும் பேசிவிடின்
வக்கிரங்கள் தெரிந்துவிடும்! 

மரமாக இருப்பதனால்
வக்கிரங்கள் தொடர்கிறது! 

ஆலமரம் அழுதுவிடின்
ஆறாக ஆகிவிடும்! 

வேர்கள்வீழ்த்தமுடியாமல் 
புயல்கள் புலம்பினர்! 

நீரைதேடி நிலத்தில் ஓடினர் வேர்கள்! 

வறட்சியை தாங்கி 
வளர்ந்த மரம்! 

உழைக்கும்பறவைகளின் உற்சாகக் கூடாரம்! 

என் வேர்கள் எப்போதும் உழைக்கும்! 

விதைகள் கடந்தாலும் 
கனிகள் இனிமையே! 

ஆயிரம் ஆண்டுளுக்கு
வாழக்கூடிய மரம்! 

ஊருக்கு ஊர் ஆலமரம் நடுவோம் !! 


அதுமரமாய் நிற்பதனால்
நாமழுது நிற்கின்றோம்!


கவிஞர். இ. ஜீனத் நிஸா
பி. ஏ. தமிழ்
காயல்பட்டினம்

@@@@@@@@@@@@@#@@@@@@@@@@

065.

வாழை மரம்

தன்னை முழுவதும் அளித்து மகிழும்
பச்சை நிறத்தால் கண்ணுக்கு குளிர்ச்சி
பூ முதல் கனி வரை அனைத்தும் கொடையே
இயற்கையின் அதிசயத்தில் உண்டான மரம்
வாழை இலையில் விருந்து மணமாக இருக்குமே
வாழை மரம் இல்லாத திருமணம் இல்லையே
வாழைத் தண்டு நார்ச் சத்துக் கொண்டதே
இதில் மருத்துவ குணமும் அதிகம் உள்ளதே
வாழைக்காய் மூத்தோருக்கு அமாவாசையில் படைப்போமே
வாழைக்காய் சத்தான காய்கறியில் ஒன்றே
முக் கனியில் வாழைப்பழம் முத்தாய்ப்பானதே
வாழைப் பழத்தின் திதிப்பும் அருமையானது
இப் பழத்தில் உள்ளதே அதிக சத்து
வாழை மரம் வாழையடி வாழையாய் 
வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதே
வாழைப்பூ பார்க்க அழகாக இருக்குமே
கடவுளின் படைப்பை அதில் ரசிக்கலாமே
வாழைப்பூ துவர்ப்பு உடலுக்கு நல்லதே
வாழைத்தண்டு திரியில் விளக்கேற்றினால் செழிப்பே
அனைத்தையும் தியாகம் செய்து மற்றவர்களுக்காக
பயன்படுவதால் தன்னை அழகாக்கி கொள்ளும் வாழை மரம் சிறப்பே
வாழை குலை தள்ளினால் நல்லது என்பார்களே
வாழை இலை முதல் கனி வரை என்றும்
தரமானதே
வாழைப் பழத்திலோ அத்தனை ரகம்
ஒவ்வொன்றும் தனி தனி சுவை
எண்ணற்ற சிறப்புகள் தன்னகத்தே கொண்ட வாழை வாழியவே


கவிஞர் தி.மீரா
ஈரோடு.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

066.