கிராமத்துக் காதல்

அந்தாதி இலக்கணம்

கிராமத்துக் காதல்


கனவுகள் நிறைந்தே  காத்திருக்கேன் ஏக்கத்தோடு!!

ஏக்கத்தினை நிறைவேற்ற ஏற்றமுடன்  கைபிடிக்க!!
கைபிடித்த நாள்  வரமாய் அமையுமே!!
அமையும் என்றே  ஆசையாய் என்னுள்ளமே!!

உள்ளம் உனக்காய் கலங்கும் கலக்கமே!!
கலக்கமின்றி வாழ்வினை துவங்கலாமென எண்ணியே!!
எண்ணியே  இந்த மானிடப் பிறவியே!!
பிறவிப்பயன் அடையா கோளையாய்
வயலோரம் !!


வயலோரம் பசுங்  காற்று வீசுயிலே!! 
வீசும் காற்றிலே நின்  வாசனை!!
 வாசனை நிறைந்த சந்தனமரம் தோற்றுபோகுமடி!!
தோற்றுபோகா வாழ்வு அமைய வேண்டுமடி!!

வேண்டுமடி மறுமலர்ச்சி வா அன்பே!!
அன்பாக நீல வானை இரசித்தே!!
 இரசித்துணர்ந்த   நாட்களும் மறக்கலையே கண்மணியே!!
மணியாய் நாத்து நடும்  வனப்பே!! 

வனப்பாய் உன் கால் கொலுசு!!
கொலுசு ஒலி காதில் ஒலிக்குதே!!
ஒலிக்கும் ஒலியில் இதயம் நொறுங்குதே!!
நொறுங்கிய உள்ளத்தை இயற்கையாய் காத்திட!!

காத்து கிடக்குது நேசமாய் என்னுயிரே!!
என்னுயிர் நீதானென்று
பிரம்மனும் எழுதியே!!
எழுதிய வார்த்தைதனை இனிதே நிறைவேற்றுவோமே!!

-கவிஞர் முனைவர் செ ஆயிஷா,
 பல்லடம்.