வரலாற்றில் பெண்கள் 046

புதுமைப்பெண் விருது கட்டுரை போட்டி

வரலாற்றில் பெண்கள் 046

வரலாற்றில் பெண்கள்

குறிப்புச் சட்டகம்

1. முன்னுரை

2. அகற்று அதுகற்று

3. முதன்மை தாய்மை

4. சாவிலா விண்வெளி

5. புயலான பூ

6. சிலம்பு கொதிப்பு

7. அன்னிய அம்மை

8. மாமாவின் மாணிக்கம்

9. சேவையின் சிகரம்

10. கற்க நிற்பவர்

11. பிற பெண்மணிகள்

12. முடிவுரை

வரலாற்றில் பெண்கள்

முன்னுரை

மனிதகுலம் வரலாற்றுக்கு முந்திய காலம் என்னும் இருளிலிருந்து வெளியே வந்த போது  கடவுளே ஒரு பெண்ணாக இருந்தார் என்கிறது பவனியின் ஒரு பதிப்பு. இதன் மதிப்பு இப்போது அதிகரிப்பு என கருத்துக் கணிப்பு கூறலாகிறது. மனிதர்களின் குற்றங்கள் மடமைச் செயல்கள் மற்றும் இன்னல்களின் ஒரு பதிவேடே வரலாறு என்ற கூற்றை தொட்டிலாட்டும் கை எழுதுகோலைக் கையிலேந்தி வரலாற்றில் பெண்களும் உள்ளனர் என்றதாம். பெண்கள் வெளவால்கள் அல்லது ஆந்தைகளைப் போல் வாழ்கின்றனர். விலங்குகளைப் போன்று உழைக்கின்றனர். புழுக்களைப் போல் இறக்கின்றனர் என்கிறார் பதினேழாம் நூற்றாண்டின் மார்க்கரேட் பெண்களே வரலாறு. அவர்கள் வரலாற்றைப் படைக்கின்றனர் என்றார் மேரி விட்டர் பியேர்ட். அடுப்பங்கரையில் கண்ணீர் விட்டவர் அடுக்கடுக்காய் வெற்றிப் பாதையில் ஆகாயம் வரை பயணிக்கின்றனர் என்பது ஆச்சரியம் கலந்த அதிசயம்... பெண்ணின் பரிணாம வளர்ச்சி மாணிட இன வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றுவது அளவிட முடியாத முக்கியத்துவம் வாய்ந்தது. எனவேää உலகை உருப்பெறச் செய்வதில் பெண்களின் ஜீவாதாரண பங்;கு குறித்த வரலாற்றுச் செய்திகளை இக்கட்டுரையின் வழி அறிவோம்.....

அகற்று! அது கற்று!

மாதர்கள் உதவியின்றி எந்தவொரு தேசமும் எவ்விதமான அபிவிருத்தியும் அடைய முடியாது. கரண்டி பிடிக்கவும் தெரியும். கராத்தே கற்கவும் முடியும். தோசை சுடவும் தெரியும். துப்பாக்கி சுடவும் முடியும். உடைதாங்கி நகைதாங்கி சுமைதாங்கி என்பதெல்லாம் தாண்டி படைதாங்கி தேசத்தை பாதுகாக்கவும் முடியும். அரிசி உலை இறக்கும் கை அணு உலையை திறக்கும் கை என்றாயிற்று.

செறிவும் நிறையும்

செம்மையும் செப்பும்

அறிவும் அருமையும்

பெரும்பாலான - என்று பெண்மை இலக்கணத்தை பெருமைப்படுத்துகிறார் தொல்காப்பியர். எனவேää எட்டாவது பெண்ணாய் இனித்து எள் கருப்பாய் உருவமெடுத்து பனிரெண்டில் திருமணமாகி பதினான்கில் பெண் குழந்தை ஈன்று மாலை வந்தால் அடி வாங்கி சொன்னால் அவமானம் என்றெண்ணி சமுதாய சமதர்மம் மண்ணும் விண்ணும் பெண்ணாயினும் மதிப்பிழந்த காலம் மலையேறி ஆதி அடையாளம் களைந்து காணப்படும் பெண்ணே காவியமாகிறாள்.

முதன்மை தாய்மை

எது வறண்டு போனாலும் உலகில் தாய்மை வறண்டு போவது இல்லை. ஒரு தாயானவள் தன்மகன் யுத்த களத்திலே வலியழிந்து புறங்கொடுத்து ஓடி வந்து விட்டான் என்று சிலர் சொல்லைக் கேட்டுää ‘அப்படி அவன் யுத்த களத்திலே புறங்கொடுத்து ஓடியது உண்மையாயின் அவன்பால் உண்டு வளர்ந்ததற்குக் காரணமாயிருந்த என் முலைகள அறுத்திடுவேன்’ என்று வாளைக் கையிலே கொண்டு போர்க்களத்திற்குப் பேர்ää அங்கே வீழ்ந்து கிடக்கும் பிணங்களை வாளினால் புரட்டித் தேடுகையிலேää அப்பிணங்களிடையில் தன் மகன் உடலம் இரண்டு துண்டமாகக் கிடந்ததைப் பார்த்துää அவனைப் பெற்ற பொழுதைக் காட்டிலும் திக மகிழ்;சியடைந்தாள் என்பது வாழ்ந்து காட்டிய பெண்ணின் வரலாறு. இது ஏட்டிலும் பாட்டிலும் கைத்தட்டலிலும் முதன்மையே.....

கல்பனா சாவ்லா

விசித்திர உலகில் உலகத்தையே வசியம் செய்து உலகத்துடன் என்றுமே வாழ்ந்து வரும் சாவிலா பெண்ணே! விண்வெளி கனவை மெய்யாக்கி சராசரி நிலையை பொய்யாக்கி அமெரிக்க டெக்சாஸ் பல்கலையில் முதுகலையாகி விண்வெளி பொறியியல் பெண்ணாகி விண்ணை எட்டிப்பிடித்து விண்மீன்களோடு விளையாடிய வீரப்பெண்ணினமே நமது கல்பனா சாவ்லா. அமைதியும்ää கூச்ச சுபாவமும் கொண்டவர் எனினும் தைரியசாலிää சாதிக்கும் போராட்ட குணம் படைத்தவர். நாசா ராக்கெட்டில் பயணித்தவர். கொலம்பியா விண்கல் இவரின் இரண்டாவது விண்வெளிப்ப பயணம்.

விடா முயற்சியும்ää தன்னம்பிக்கையும் இருந்தால் இவ்வுலகை மட்டுமல்ல வானுலகையும் ஆளலாம் என்று உலகிற்கு உணர்த்தி காட்டிய சிறந்த கண்மணி இவரே. பூமியை சுமார் 252 முறை சுற்றி விண்கலத்தில் 10 மில்லியன் தொலைவு பயணம் மேற்கொண்ட அற்புத மேதை. விண்வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுகோளிற்கு கல்பனா சாவ்லா என்று பெயர் சூட்டப்பட்டிருப்பது காற்றைவிட கடும் வேகம் கொண்டது பெண்களின் எண்ணம் என்பதற்கு சான்றாகும்.

 

ஜான்சிராணி லட்சுமிபாய்

பூ ஒன்று புயலான கதை தான் ஜான்சிராணியின் வீர வரலாறு. இளவயதிலேயே விடுதலை வேட்கையுடன் வளர்ந்த ஜான்சிராணி மரணத்துடன போராடி நாட்டைக் காக்க புயலாக மாறி இறுதி வரை போராடி போர் களத்திலேயே உயிர் துறந்தார் என்பது உண்மையே.

குழந்தை இறந்ததால் துக்கம் தாளாமல் மகாராஜாவும் மரணம் அடைந்துவிட்டார். ஒரு மன்னருக்கு வாரிசு இல்லையென்றால் அந்த ராஜ்ஜியம் எங்களுக்கே சொந்தம் என உரிமை கொண்டாட வந்தவர் பிரிட்டிஷார். இதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் ஜான்சிராணி பிரிட்டிஷாருக்கு அடிபணிய மறுத்தார். இதனால் கோபமடைந்த பிரிட்டிஷார் அரண்மனையை சூறையாடி பொருள்களை கொள்ளையடித்தனர். ஜான்சிராணியையும் விரட்டியடித்தனர்.

கொதித்தெழுந்த ஜான்சிராணி பிரிட்டிஷாருக்கு எதிராக படைகளை திட்டினார். 1857 ஆம் ஆண்டு முதல் சுதந்திரப் போரில் தீவிரமாக குதித்தார். தனது வளர்ப்பு குழந்தையை மடியில் சுமந்தபடியே ஆண் வேடம் பூண்டு பிரிட்டிஷாருடன் கடுமையாக மோதினான். எனினும் பிரிட்டிஷாரின் நவீன போர்க்கருவிகள் மூலம் தாக்குதல் நடத்தியதால் போர்க்களத்தில் வீரமரணம் அடைந்தார் அந்த வீரப்பெண்மணி.

தனது கணவர் உயிரோடு இருந்தால் ஒரு மன்னராக தனது நாட்டை காப்பாற்ற எந்த அளவு போராடுவாரோ அதற்குச் சிறிதும் குறைவில்லாமல் போராடி உயிர் நீத்ததாலேயே சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிக முக்கிய இடத்தை பெற்றுள்ளார் ஜான்சிராணி லட்சுமிபாய்......

கண்ணகி

பெண்கள் சமையலுக்காக உலையை எரித்துக் கொண்டிருந்த காலத்தில் நீதிக்காக மதுரையை எரித்த மங்கை இவள். காசிற்காக காற்சிலம்பை விற்று வரத் தந்தவள் கற்புக்கரசி. பொற்கொல்லன் பொய்யில் தேரா மன்னன் தீர்ப்பில் களவுப் பழியேற்று மாண்டான் பாவம் ஒன்றுமறியா கோவலன். கணவன் நிலை கேள்வியுற்ற கண்ணகி அரசசபையில் தொடுத்தவைகளை தொகுப்பதற்கே எனக்குத் துணிவில்லை. என்னே சபதம்! என்ன பதம்! கோப்பெருந்தேவியின் சிலம்பை கோவலன் திருடினான் என்பது குற்றம். அதற்காக மரண தண்டனை. அது ஆராயாமல் அளித்த தீர்ப்பு. அதற்கு மன்னன் பொறுப்பு. இது என் வழக்கு. ஆயிரம் கேள்விகள் என்னைக் கேட்டு உன்னைக் குற்றமற்றவனாக ஆக்கிக் கொள்ள துடிக்கிறாயே! இப்படி ஒரு கேள்வி நேருக்கு நேர் என் அத்தானைக் கேட்டிருந்தால் நீதி வழுவா நெடுஞ்செழியன் என்ற பெயர் உனக்கு நீடித்திருக்கும். என் அத்தானின் உயிரும் தங்கியிருக்கும். உயிர் போனதால் தொங்கி விட்ட என் அத்தானின் தலை போல் உங்கள் தலைகளை தொங்க வைக்கிறேன். நீதிää நேர்மைää மானம் போனதா அமைச்சர்களேää சான்றோர்களே.... தலை தொங்கி விட்டதா? வாய் அடைத்து விட்டதா? நெடுஞ்செழிய பாண்டியனின் அறம் மறம் துயர் அத்தானையும் மண்ணோடு மண்ணாக  கலைந்து விட்டதா? இதுபோன்ற எண்ணற்ற கணைக்குள் சிக்கி சிலம்பின் புலம்பல் கேட்டு மன்னவனும் மாண்டான் நீதி செத்த பின் என்பதெல்லாம் சிலப்பதிகார காவியத்தலைவியின் வீரக் கொந்தளிப்பு.....

 

அன்னிபெசன்ட் அம்மையார்

உலக வரலாற்றில் இந்திய நாட்டின் சுதந்திரப் போராட்டம் தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். தம் நாட்டின் அடிமைத் தளையை நீக்க ஒவ்வொரு காடும் கத்தி ஏந்தி படை திரட்டிப் போர்க்களம் பூண்டன. ஆனால் இந்திய நாடு சுதந்திரம் பெற கத்தியின்றி இரத்தமின்றி அகிம்சை முறையில் போராடி வெற்றியும் கண்டது. இந்திய மண்ணில் பிறக்காது ஆங்கிலப் பெண்மணியாக அன்னிபெசன்ட் அம்மையார் நம் நாட்டின் விடுதலைப் போரட்டத்தில் ஈடுபட்டது வியப்பிற்குரியது என்றாலும் உண்மையாகும். அம்மையாரின் வரலாறு இந்தியாவில் பிறந்தவர்களுக்கே நாட்டுப்பற்றை உண்டாக்கும் வண்ணம் இருந்தது என்றால் மிகையாகாது. அவருக்கு தான் நினைத்தால் ஏராளமாக சம்பாதிக்கவும் முடியும் எனவும் பிறர் தயவின்றி சுயேச்சையாக வாழ முடியும் என்ற நம்பிக்கையும் துளிர்விட்டது. இவர் மிகச்சிறந்த எழுத்தாளர்ää பேச்சாளர் ஆவார். 1875ல் ‘ஒழுக்கத்தின் உண்மையான அடிப்படை” என்னும் தலைப்பிலான இவர் பேச்சு அச்சாகி 70ää000 பிரதிகள் விற்பனையானது பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இவரின் ‘மக்கள் தொகை’ கட்டுரை ஐரோப்பா அமெரிக்கா நாடுகளில் இலட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனை சாதனையை எட்டியது....

இந்திராகாந்தி

தோன்றிற் புகழொடு தோன்றுக அ‡திலார் 

தோன்றலின் தோன்றாமை நன்று

- குறட்பாவிற்கு இணங்க இவ்வுலகில் தோன்றி புகழ்க்கொடி ஏற்றிய சிலருள் அன்னை இந்திராகாந்தி இவரே.... சாதி மத மொழி இன வேறுபாடு கடந்து சமதர்ம நோக்குக்குச் சிறந்த எடுத்துக்காட்டாளர். அவரின் சாதனைகளை பட்டியல் போடலாம். சோதனைகளை பட்டியல் போட முடியாது. வானரப்படை அமைத்து ஆனந்த பவனில் அணிவகுப்பு நடத்தி சுதந்திரப்போர் கொந்தளிப்பு குறைக்க தொண்டு செய்து பாராட்டைப் பெற்றவர். இந்தியாவை தன் உயிரிலும் மேலாக நேசித்த ஒரு தலைவி இந்திரா. உலக அரங்கில் இந்தியாவின் புகழும் கௌரவமும் உயர அவர்தானே காரணம். இமயத்தை தன் இடுப்பளவாக்கிப் புகழால் உயர்ந்து திறமையால் வளர்ந்து தகுதியால் நிலைத்த இந்திராகாந்தி தனது மறைவால் வீர மரணத்தால் உயிர்த் தியாகத்தால் இமயத்தைத் தன் கணுக்கால் அளவு ஆக்கிவிட்டார்....

17 ஆண்டுகள் சிறப்பு ஆட்சி இணையற்ற பிரதமர்.... ஈடில்லா சமாதான சேவகர்...

அன்னை தெரசா

வானம் வசப்படும் எவ்வாறு? வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீங்களாக இருங்கள் என்பதாலும்ää இறக்கத்தான் பிறந்தோம் அதுவரை இரக்கத்தோடு இருப்போம் என்பதாலும் என்றாகியது... அருள்ää பொறுமைää நன்றி உணர்வுää பரிவுää இன்சொல் பேசுதல் ஆகிய குணங்களே மனிதநேயத்திற்கு அடிப்படை. அத்தனைக்கும் ஒட்டுமொத்த இலக்கணமாய் வாழ்ந்தவர். கோடிக்கணக்கான உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர். 27.08.1910ல் அல்பேனியாவில் ஆக்னஸ் கோன்ஸா இலக்காகக் கொண்டு வாழ்ந்து 24 வயதில் உயிரிழந்த தெரசா என மாற்றி பிற்காலத்தில் அன்பின் முகவரியாக அந்த குழந்தை வளர்ந்து 19 வயதில் கொல்கத்தாவில் காலடி வைத்தார். 5 ரூபாய் 2 சேலை நிறைய அன்பு மூலதனம் இவற்றைக் கொண்டு 1950இல் மிஷினரி ஆ‡சரிட்டியை  தோற்றுவித்தார். நிர்மல் இல்லத்தின் அன்னை கைக்குள் விழுந்த எச்சில் எனக்கு எனச் சொல்லி செல்வந்தரிடம் கையேந்திய நிகழ்ச்சி நம்மையெல்லாம் இன்றளவும் நெகிழ்ச்சியுற வைக்கிறது. 1979ல் அமைதிக்கான நோபல் பரிசுää 1980ல் பாரத ரத்னாää 1962ல் பத்மஸ்ரீää 1985ல் அமெரிக்க சுதந்திர பதக்கம் என வரலாற்றில் இடம் பிடித்தவர் நம் அன்னை தெரசா.....

இரா. திரிவேதி

முப்பதின் ஊக்கம்

எழுத்தில் தாக்கம்

செயலில் ஆக்கம் - கூடவே

குதிரையின் போக்கு - என  அதிவேகத்தில் விவேகத்துடன் செயலாற்றும் 32 வயது திரிவேதி.... சளைக்காத உழைப்பும் களைக்காத அழைப்பும் இவரின் ஆற்றலை சாற்றுகின்றது போற்றுதலுக்குரியதே. வெளி நடிப்பிற்காக நம்மளை நாமே ஒதுக்கிக் கொண்டால் நமக்குள் ஒளிந்து கிடக்கும் எல்லையற்ற திறமைகள் முடங்கி விடும். நம்முடைய வரம்பற்ற திறன்களை பயன்படுத்த முடியாவிட்டால் உலகத்தில் இருந்து நாம் தனிமைப்பட்டு விடுவோம். தன்னுடைய சிறந்த எழுத்தின் மூலம் கல்வியின் முக்கியத்துவத்தை புரிய வைக்க முடியும் எனவும் லாப நோக்கற்ற நடவடிக்கைகள் மூலம் மக்களின் மனதையும் எண்ணங்களையும் மேம்படுத்த முடியும் எனவும் கூறியவர். இக்காலப் பெண்ணாகிய இவர் ஒரு சிங்கப்பெண்ணே!

 

பிற பெண்மணிகள்

பெண்கள் கலியுகச் சிற்பிகளாய் தங்களுக்குள் இருக்கும் பயம்ää தயக்கம்ää சோம்பல் இவற்றை செதுக்கு எறிந்து விட்டு தங்களுக்குள் இருக்கும் அற்புதமான நிர்வாகியை எழுத்தாளரை கவிஞரை கணக்காளரை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கும் காலம் இது.....

 ஒரு முறையல்ல... இருமுறையல்ல... மும்முறை எவரெஸ்ட் சிகரத்தை எட்டிப் பிடித்து உலக சாதனை படைத்தவர் பச்சேந்திரபால்

 பத்து பல்கலைக் கழகங்களில் டாக்டர் பட்டம் பெற்ற இலாட்

 எட்டு முறை ஆஸ்கார் விருது பெற்ற எடித் ஹேட்

 ஐஊஐஊஐ வங்கியை வழிநடத்திச் செல்லும் சந்தா கோச்சர்

 குழந்தைகளைப் பெற்ற பிறகும் ஒலிம்பிக்கில் நான்குமுறை தங்கப் பதக்கம் வென்ற ரெனகாசிவிங்ஸ்டன்

 இங்கிலாந்தின்  உயரமான ஹாரிசான் மலை மீது ஏறி சாதனைப்புரிந்த பார்வையற்ற பெண் காஞ்சன்காபா....

 ரெப்ளிகோ கம்பெனியின் தலைவர் இந்திரா நூயி.....

இதையும் தாண்டி கருத்துக் கணிப்பு அறிவிப்பிலும் கூட ஹார்வோர் பிசினஸ்; ரிவ்யூ இதழ் தனது கட்டுரையில் பெண் நிருவாகிகளை அதிகம் கொண்டிருக்கும் அமெரிக்க நிறுவனங்கள் அதிக லாபத்துடன் இயங்குவதாக கூறியுள்ளது.

முடிவுரை

பெண்ணைக் கதாபாத்திரமாக சித்தரிக்காமல் சித்தத்தில் அங்கீகரிக்கக்கூடிய அங்கமாக பாவிக்கும் இலக்கு எட்டுவதே வரும் மகளிர் தினத்தில் நாம் ஏற்கும் சபதமென பறைசாற்ற வேண்டும். யானையின் பலம் தும்பிக்கையில் மனிதனின் பலம் நம்பிக்கையில் என்பது போல கலங்குவதற்காகப் பெண் பிறக்கவில்லை மாறாக ஒளிவீசுவதற்கே பிறந்துள்ளாள் என்ற நம்பிக்கை நம்மில் துளிர் விடட்டும். ஆகையால்ää போராடி உயரும் வித்தையை மனதுக்குள் கற்பித்து அது தரும் உத்வேகத்தை உரமாகக் கொண்டு வாழ்க்கையின் உயரத்தை எட்டுத் திசையிலும் எட்டிப் பிடிக்கத் துடிப்பவள் பெண் என நிரூபிப்போம்.

அழகென்றும் அறிவென்றும்

கறுப்பென்றும் சிகப்பென்றும்

அடையாளம் எத்தனை

யாயினும் அனைத்திலும்

சிறப்பு பெண்மையே!!!   

 

-  டாக்டர். அ.ஜமீலா,

தலைமையாசிரியர்,

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,

மதுக்கூர் வடக்கு - 614 903

தஞ்சாவூர் மாவட்டம்.