பொன்மனச் செம்மல்

எம்ஜிஆர் கவிதை

பொன்மனச் செம்மல்

பொன்மனச் செம்மல்..

மூன்று
எழுத்து 
மந்திரம்
எம்.ஜி.ஆர். 

மருதூர்
கோபாலன் 
இராமச்சந்திரனே 
எம்.ஜி.ஆர். 

சிங்கம்
வளர்த்தக்
கலையின்
சிங்கம்.

மக்கள்
திலகமாய்
நாடறிந்த
தங்கம்.

ஏழினை 
விரும்பிய 
எண்ணத்தின் 
நாயகன்.

எழுபதினைத் 
தொட்ட 
ஆயுளின்
தாயகன். 

பிறந்தநாள்
கொண்டாடாத 
காலத்தின்
காவலன். 

பொங்கலினைக் 
கொண்டாடிய
ராமாவரம்
மன்னவன். 

தாய்க்குப்பின் 
தாரம்
வாழ்க்கையில் 
திருப்புமுனை !

அறிவுரை 
வழங்கும்
வசனத்தில்
கூர்முனை !

கல்கண்டு
கற்கண்டாய்த் 
தந்தது 
மக்கள் திலகம்.

வாரியர்
வாஞ்சையுடன்
அருளியது
பொன்மனச் செம்மல்.

எளியவர்
வறியவர்
உதவிடும்
உன்கரம் ..

நடிகர்
முதல்வர் 
பளிச்சிடும்
உன்முகம் ..

பிறர்
துன்பத்தை 
தனதாக
நினைத்துருகுவார். 

பிணக்கினைப் 
போக்கிட
நல்நண்பனாய்
துணையாகுவார்.

நாகரிக
அரசியலின்
அரசியல்
ஆளுமை !

தோட்டாத்
துளைத்தும்
அசராத 
பேராண்மை !

சத்துணவுத் 
திட்டத்தை
விரிவாக்கித்
தந்தாய்..

சேவை 
நிலையங்களைத்
தேவையாய்த் 
தொடர்ந்தாய்..

தமிழ்ப்
பல்கலைக்கழகம்
தமிழுக்குத்
தந்தாய்..

பாமரனின்
இல்லங்களில்
இதயமாய்
மலர்ந்தாய் ..

மீனை 
விரும்பிய
இதயங்களின் 
படகோட்டி.

பட்டங்களை 
மறுத்த 
மன்னாதி
மன்னன் .

நான்
ஏன்
பிறந்தேன்
சுயசரிதையாய் ..

எனது
வாழ்க்கைப்
பாதையிலே 
தொடர்கதையாய் ..

அண்ணாவின்
இதயத்தின்
கனி 
நீயன்றோ !

அண்ணாவின்
அருகில்
மெரினாவில்
நல்லிடமன்றோ !

இருந்தாலும்
மறைந்தாலும்
மனங்களில்
வாழ்கிறார் ..

அன்றும்
இன்றும்
என்றென்றும்
வாழ்கிறார்..

முனைவர் இராமகுமார்