பெண்மையை போற்றுவோம்

புதுமைப்பெண் விருது கட்டுரைப் போட்டி

பெண்மையை போற்றுவோம்

பெண்மையை போற்றுவோம் 
*****************************

முன்னுரை
**************

" பெண் என்பவள் வியக்கத்தக்கவள்"
   " பெண் என்பவள் கடவுளின் மறு உருவம் "
  "பெண் ஒரு வாழ்க்கையின் முழுமை"
   
   இப்படி பெண்மையை பற்றி பேசிக் கொண்டே போகலாம். "பெண் "என்ற சொல் மிகவும் அழகானது. அதனால்தான்  பெண்ணுக்கு மயங்காத ராஜ்யமே இல்லை . வீட்டில் ஒரு பெண் இருந்தால் எப்பொழுதும் அந்தப் பெண்ணின் "ஸ்பரிசம் "அந்த வீடு முழுவதும் நிறைந்திருக்கும் .எப்படி எனில் அவள் அணிந்திருக்கும் கொலுசின் ஓசை வீடு முழுவதும் ஒலித்துக் கொண்டே இருக்கும் அவள் வைத்திருக்கும் மல்லிகை பூ அந்த வீட்டின் மணக்கச் செய்யும். அந்தப் பெண்ணின்  நெற்றியில் வைத்திருக்கும் குங்குமம் 
சூரியனைப் போல் ஒளி வீசும். அவள் மெட்டியின் ஓசை தன் திருமணமாக பெண் என்று மற்றவர்களை உணர வைக்கும். அவள் அணிந்திருக்கும் வளையல் சத்தம் வீட்டில் அவள் இருக்கும் இடத்தை அடையாளம் காட்டும். இப்படி பல அடையாளங்களை கொண்டவள் தான் "பெண் ".
இப்படி பெண்மையின் பெருமையை பற்றி அடுக்கிக் கொண்டே போகலாம்


பெண்ணின் பெருமை
**************************

பொறுமை மற்றும் பண்புக்கு உள்ளடங்கிய சொல்    "பெண் "

பொறுமைக்கு  இலக்கணமாய் இருந்தவள்  கண்ணகி .என்னடா கண்ணகி  தனது கணவருக்காக மதுரை எரித்தவளே எப்படி பொறுமைக்கு  இலக்கணம் ஆக முடியும் என்று கேட்கலாம் ?ஆம்
கண்ணகி திருமணம் செய்து சில ஆண்டுகள் கழித்து கோவலன்  மாதவியுடன்  வாழ ஆரம்பித்தான்.
அப்பொழுது ஊர் மக்கள்  அனைவரும் கண்ணகிடம் கேட்பார்கள்? உனது கணவர் மாதவியுடன் இருக்கிறார் . நீ அவரிடம் போய் ஏதும் கேட்கவில்லையா ? என்று பலர் கேட்டதற்கு ,அதற்கு கண்ணகி  கொடுத்த பதில் தனது கணவன் தன் " அன்பை "புரிந்து கொண்டு ஒரு நாள் வருவான் அதுவரை காத்துக் கொண்டிருப்பேன் !என்று கூறினாள்.  இதைவிட பொறுமைக்கு உதாரணம் உண்டா?

பல புராணங்களும் இதிகாசங்களையும் பெண்ணின் பொறுமையை  உணர்த்தி உள்ளது .ஏன் இக்காலங்களிலும் வாழும் பல பெண்கள் உயர்     பதவிகளிலும்,
அதிகாரத்தில் இருந்தாலும் ,தனது வீட்டில் பொறுமை     காத்து  தான் வாழ்ந்து  கொண்டிருக்கிறார்கள்.

அதேபோல பண்புக்கு சீதையை கூறலாம்.    மன்னன் ஜனகனின் வளர்ப்பு மகளாக வளர்க்கப்படுகிறாள்.  சீதை, தனது இளமை பருவத்தில், ஒரு சுயம்வரத்தில் அயோத்தியின் இளவரசரான
ராமனை தனது கணவராகத் தேர்ந்தெடுத்தார் . சுயம்வரத்திற்குப் பிறகு. அவள் கணவனுடன் அவனது ராஜ்யத்திற்குச் செல்கிறாள், ஆனால் பின்னர் தன் கணவனுடன், அவனது
மைத்துனரான லக்ஷ்மணனுடன், நாடுகடத்தலில் உடன் 
செல்கிறார்கள். 
 மூவரும் தண்டகா காட்டில்
குடியேறுகிறார்கள்,
ராமரும் சீதையும் அயோத்திக்குத்
திரும்புகின்றனர், அங்கு அவர்கள் ராஜா மற்றும் ராணியாக. முடிசூட்டப்பட்டனர். ஒரு நாள், ஒரு மனிதன் சீதையின்
தூய்மையைக் கேள்விக்குள்ளாக்குகிறான்,  அவள் குற்றமற்றவள் என்பதை நிரூபிக்கவும், தனது சொந்த மற்றும் ராஜ்யத்தின் கண்ணியத்தை நிலைநாட்டவும், ராமர் சீதையை வால்மீகி
முனிவரின் அருகே காட்டிற்கு அனுப்புகிறார்
பல ஆண்டுகளுக்குப் பிறகு, சீதா தனது தாயான பூமியின் கருப்பைக்குத் திரும்புகிறாள். 

அப்பொழுது சீதையின் பண்பு எங்கெல்லாம் வழிபடுகிறது  "வளர்ப்பு தந்தையின் வார்த்தைகளுக்கு கட்டுப்படுதல்  "
"தன் கணவரின் சொற்களுக்கு  கீழ்ப்படிதல்"  
"கணவரின் குடும்பத்திற்காக அனைத்தையும் இழந்து காட்டுக்குச் சென்றவள்" 
"தனது கணவரின் ராஜ்யத்திற்காக அவரை விட்டு பிரிந்து வாழுதல் "
இப்படி பல பண்புகளை 
கூறலாம். 

" பொறுமை""பண்பு ""நிதானம்" "சகிப்புத்தன்மை"இப்படி பல வடிவங்களில் உருவம் தான் பெண். பெண்ணின் பெருமையை  பற்றி அடுக்கிக் கொண்டு போனாலும் மிகை ஆகாது .


சங்ககாலத்தில் பெண்களின் சிறப்புகள் 
***************************

*தனது ஒரு வரியில் புலமையை    வெளிப்படுத்தியவர் தான்  "ஔவையார் "

*இராணி" வேலு நாச்சியார் "இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆவார்.

*" ஜான்சி ராணி " இவர்        இந்திய சுதந்திரத்திற்காக நடந்த முதல் போரில் கலந்து கொண்ட முன்னணி வீரர்களில் ஒருவராவார்.

*"பண்டித இராமாபாய் சரஸ்வதி "ஒரு சமூக சீா்திருத்தவாதி, பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவா் மற்றும் எழுத்தறிவு இயக்கத்தின் ஒரு முன்னோடி ஆவாா்.

*"மூவலூர் ராமாமிர்தம் "தமிழகத்தைச் சேர்ந்த ஓர் பெண் சமூக சீர்திருத்தவாதி, எழுத்தாளர், முன்னாள் தேவதாசி ஒழிப்பு இயக்கம் மற்றும் திராவிட இயக்கத்தைச் சேர்ந்த அரசியல் செயற்பாட்டாளர்.

இப்படி சங்க காலத்தில் பெண்கள் தனது புலமை' அறிவு ,ஆற்றல், ஆட்சி ,திறமை, போராட்டம் , எதையும் கண்டு அஞ்சாமை, துணிச்சலாய் எதிரிகளை   போரில்  வீழ்த்துதல்,  திறமைகளையும்  வெளிப்படுத்துதல்  தனக்கென்று ஒரு ஆளுமை திறனை கொண்டவர்கள்.  பெண்களுக்கெல்லாம் முன் உதாரணமாக வாழ்ந்து வரலாற்றில் முக்கிய இடத்தை பிடித்தவர்கள்.


பாரதியும் பெண்ணியமும்
**********************7
 
பெண்மையை பற்றி 
 பேசினாலே முதலில் ஞாபகத்துக்கு வருவது  மகாகவி  "பாரதியார் " .
அவர் பாடிய ஒவ்வொரு வரிகளும் பெண்களுக்கு  புத்துணர்வையும், உத்வேகத்தையும் ,ஏற்படுத்தும் . அவருடைய  வரிகள் 

"வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போமென்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்" என்றும்
"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம் எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே
பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி"

இப்படி பெண்களுக்கு அவர் பாடிய பல பாடல்கள் பெண்களுக்கிடையே பல மாற்றங்கள் தந்தது. அவர் பாடிய பாடலுக்கு கேட்டவாறு வாழ வேண்டும் என்று பெண்கள்  " புதுமைப் பெண்களாக " வெளியே வர ஆரம்பித்தார்கள்.
பாரதியார் பாடல்கள் பெண்களுக்கு  கல்வியை   முக்கியத்துவத்தை உணர்த்தியது  , தனக்குள்ள ஆளு திறமையை உள்ளது என்பதை உணர  வந்தது,  தன்னால் எதையும் செய்ய முடியும் என்ற உத்வேகத்தை தந்தது. தன்னை எப்படி வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற அறிவு ஆற்றலை ஊட்டியது.
இப்படி பல கோளங்களின் மகாகவி பாரதியாரின் வரிகள்  பெண்களின் மனதில் ஆழமாக பதிந்தது. "பெண் உரிமை" பற்றி அனைத்து பெண்களும் மனதில் பதியும்     படியாக விதைத்தூவியவர்.


சாதனை படைத்த பெண்கள்
*********************

***பெண்கள் என்றாலே சாதனை தான். அப்படி சாதனை செய்த பெண்கள் இருவரை பார்ப்போம்.

*அனைவருக்கும் தெரிந்த நபர் அன்னை மதர் தெரசா  .இவரைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால்  பல சமூக சேவைகளை  செய்தவர். பல சோதனைகளை சாதனையாக்கி காட்டியவர். ஒரு சிறிய கதை அன்னை மதர் தெரசாவை பற்றி இவர் ஒரு நாள் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வேண்டி பல முக்கிய பிரமுகர்களை சந்திக்க சென்றார் அப்பொழுது ஒருவருடைய அலுவத்தில் உள்ளே செல்லும் பொழுது இவர் தன் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவுக்கு பணம் கேட்டு உள்ளார் அப்பொழுது அவர் தர முடியாது. வெளியே செல் என்று கூறினார். அதையும் மீறி அன்னை மதர் தெரசா அவரை நோக்கி மீண்டும் உதவி கேட்டார். ஆனால் அவர் அன்னை தெரசா முகத்தில் உமிழ் நீரை துப்பினார். உடனே அன்னை  அன்னை தெரசா எனக்கு தர வேண்டியது தந்து விட்டீர்கள் அந்த  ஆதரவற்ற குழந்தைகளுக்கு தாருங்கள் என்று  கேட்டார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அன்னை தெரசா கால்களில் இருந்து மன்னிப்பு கேட்டார். இப்படி தனது சேவைகளை பல சாதனைகளாக செய்தவர் அன்னை மதர் தெரசா அவர்கள்.  பெண்ணின் இனத்திற்கும் பெருமை சேர்த்தவர் .

***விண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய கல்பானா சாவ்லா, பல பெண்களுக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழ்கிறார் என்றால் அது மிகையாகது. 
இவர் முதலில்   விண்வெளி பயணம் சென்று வெற்றிகரமாக இறங்கினார்.  பின்பு இரண்டாவதாக ஐந்து ஆண்டுகள் கழித்து  விண்வெளி
 ஆய்வை முடித்து வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பிய அவர்கள் சென்ற அந்த விண்கலம், அமெரிக்காவின் டெக்ஸாஸ் வான்பரப்பில் வெடித்துச் சிதறியது. கல்பனா சாவ்லா உள்பட ஏழு விலைமதிப்பற்ற விண்வெளி வீரர்களும் பலியாகினர்.
ஐயா "அப்துல் கலாம் " அவர்கள் சொன்னது போல "நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் -"  என்று நிரூபித்து காட்டியவர் கல்பனா சாவ்லா.

இப்படி பல சாதனைப் பெண்கள் உள்ளார்கள். அவர்களைப் "போற்றும்" "வணங்குவோம் " "ஜெய்ஹிந்த் "


முடிவுரை 
************

பெண் என்பவள் பொக்கிஷம். காற்றை சுவாசிக்கலாம், உணரலாம் ,ஆனால் அதை பார்க்க இயலாது .அதேபோல தான் பெண்ணின் பெருமையும்.

"கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்ஆற்றுங் கொல்லோ உலகு."

(பிறர்க்கு உதவுவது, அவ்வுதவியைப் பெற்றவர் திரும்பச் செய்வதை எதிர்பார்த்து அன்று; ஒருவர் செய்ததற்குத் திரும்பச் செய்துதான் ஆகவேண்டும் என்றால் மழை தரும்    மேகங்களுக்கு இந்த உலகம் திரும்ப என்ன 
செய்துவிட முடியும்)

என்ற திருக்குறளுக்கு ஏற்றவாறு  வாழ்பவள்  தான் "பெண்"

-க. சைலஜா, கோவில்பட்டி.


              *******

எனக்குள் இருந்த ஆற்றலை தூண்டி அதை எழுத்துக்களாக எழுத வைத்த மகிழ்ச்சிய fm அவர்களுக்கு எனது நன்றியும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்????????