விடுதலைக்கவி பாரதி ! 075

தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி

விடுதலைக்கவி பாரதி ! 075

விடுதலைக்கவி பாரதி !

மகாகவி, முறுக்கு மீசைக்காரன், முண்டாசுக் கவி. பாட்டுக்கொரு புலவன், சிந்துக்குத் தந்தையாம்!

கவிபாடும் ஒப்பற்ற கவிஞர்;
கவிதைகள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்திய வீரக்கவிஞன்;
மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவரராம்!

தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம், பிரெஞ்சு, தெலுங்கு ஆகிய மொழிகள் அறிந்தவராம்!

"யாமறிந்த மொழிகளிலே தமிழ் போல் இனிதாவதெங்கும் காணோம்” என்று தமிழை வியந்து போற்றியவராம்!

தமிழையும் தன் தேசத்து மக்களையும் நேசித்து மக்களிடையே பகுத்தறிவினை வளர்த்தவராம்!

இருண்டு கிடந்த மக்கள் வாழ்வில் தன் எழுத்துக்களால் வெளிச்சம் கொடுத்து “எனி ஒரு விதி செய்வோம்” என்று பாடி பாரதி காட்டிய வழியில் நாமும் தமிழையும் எம் சமூகத்தையும் நல்வழியில் இட்டுச்செல்வோம்!
 

திருமதி  ச. இராமலக்ஷ்மி

கணித ஆசிரியை

சின்மயா வித்யாலயா,

ஸ்ரீமதி பி.ஏ.சி ஆர் சேது ராமம்மாள் மழலையர் மற்றும் துவக்கபள்ளி.
ராஜபாளையம்.
விருதுநகர் மாவட்டம்.