அண்ணாவிற்கு அன்பு கடிதம்...66

அறிஞர் அண்ணா அறிவுச்சுடர் விருது கவிதை போட்டி

அண்ணாவிற்கு அன்பு கடிதம்...66

அண்ணாவிற்கு அன்புக்கடிதம் தங்கையிடமிருந்து!

அண்ணா ! 
ஏதற்காக வந்தாய்! திராவிடம் கற்றுக்கொடுக்க வந்தாயோ! தினக்கூலியின் கனவான ஒருபடி அரிசியினை நனைவாக்க வந்தாயோ!
 தரணியில் தமிழ்நாடு எனும் சொல் தர வந்தாயா!- அனைத்தையும்

 தந்தவனாய் தமையனாய் நீ எங்கோ இருக்க 

தம்பிகள் நீயின்றி தவிப்பதை அறிவாயா!

 தமிழகம் தவமிருக்கு அண்ணா!
 தங்களை மீண்டும் காண!

- ப.இராஜபிரியா
தாராபுரம்.