மு வரதராசனாரின் தமிழ்ப்பணி நெஞ்சில் நிற்கும் முள்...!

மு வரதராசனாரின் தமிழ்ப்பணி

மு வரதராசனாரின் தமிழ்ப்பணி  நெஞ்சில் நிற்கும் முள்...!

மு வரதராசனாரின் தமிழ்ப்பணி  நெஞ்சில் நிற்கும் முள்

சமூக சீர்திருத்தவாதி,
தமிழ் இலக்கியவாதி,
மொழி நூல் ஆய்வாளர்,
என்ற பன்முகப்  படைப்பாளர்!
தமிழாசிரிய மரபை உருவாக்கி, நாவல்களை அறிவு வாதங்களாக்கி, இளம்வாசகனிடம்  ஆசிரியரே பேசுவதான உரையாடல் தந்தவர்!திருக்குறள் தெளிவுரை  அளித்து, எழுத்தாணியால் தமிழ் எழுத்தளந்து,
இறுதிமூச்சுவரை
இலக்கிய தடாகத்தில்
இணையிலா தடம்  பதித்தவர் !

கரித்துண்டு  நாவலில்
நம் கண்ணீர்த் துளியை எழுதி,
பெற்ற மனம் நாவலை
திரைப்படமாக்கிய எழுத்தாளர்!
கீழ்த்திசை மொழிகளின் விரிவுரையாளராக
பச்சையப்பன் கல்லூரியில் பயணம்,
1944ல் தமிழ் வினைச்சொற்களின் தோற்றமும் வளர்ச்சியும்
தலைப்பில் ஆராய்ச்சி முன்னெடுத்து,
சங்க இலக்கியத்தில் இயற்கை
தலைப்பில் முனைவர் பட்டம் பெற்று சென்னை பல்கலைக்கழக தமிழ்த் துறைத் தலைமைப் பொறுப்பும்,
மதுரை காமராசர் பல்கலைக்கழகத் *துணைவேந்தர் பதவியும்  வகித்த
பண்பாளரான நல்லாசிரியர்!

வாலாஜா வட்டம் வேலம் உயர்நிலை பள்ளியில் தமிழ் வழிக் கல்வி,
திருப்பத்தூர் வட்டாட்சியர்
அலுவலக எழுத்தர் பணி செய்து,
முருகைய முதலியாரிடம்
தமிழ் கற்று/வித்வான் படிப்பில் மாநிலம் முதல் மாணவனாகி,
அண்ணாமலை,திருப்பதி பல்கலைக்கழக செனட் உறுப்பினர் பதவி வகித்து/ அமெரிக்க
பல்கலைக்கழக D. Lit பட்டம் பெற்ற
முதல் தமிழ் அறிஞர்!
மனைவிக்குத் தெரியாமல்
கல்லூரி/விடுதி/தேர்வு கட்டணத்தை மாணவர்களுக்கு மனமுவந்து
 செலுத்திய நல் உபகாரர்!

4 சிறுவர் இலக்கியம்/7 தழுவல் மொழிபெயர்ப்பு/3 இலக்கணம்/13 நெடுங்கதைகள் /3 சிறுகதைகள்,
4 நாடகங்கள்/5 கடித இலக்கியம்,  4 4 வாழ்க்கை வரலாறு/4 திறனாய்வு,
 20 இலக்கிய ஆய்வு உரையாடல்,10 சிந்தனை கட்டுரைகள்/ 14 நாவல்கள்,  
என 91  நூல்களை தமிழுலக
தேரில் பவனி வரச் செய்தவர்!

தத்துவம்/சமூகவியல்/வரலாறு, மெய்யியல் போன்ற கோணங்களில் இலக்கியத்தை அடைத்திடாமல்,
மரபு முறையில் தமிழ் கற்று நெடுந்தொகை விருந்து,
குறுந்தொகை விருந்து,
நற்றிணை  விருந்து எனும்
நூல்களின் எழுத்தாளராகி,
தமிழ்த் தென்றல் திரு. வி. க. வால்
தமிழ் பெர்னாட்ஷா   
என்று சிறப்பிக்கப்பட்டவர்!
இந்தி/மலையாளம்/தெலுங்கு, ஆங்கில /ருஷ்ய மொழிகளில்
நூல்களை மொழிபெயர்த்து,
மதுரை பல்கலைக்கழகத்தில்
அஞ்சல் வழிக் கல்வித் துறை
தோற்றுவித்து/ இளைய சமூகம்
வாழ்வில் உயர ஏணியானவர்!

திரு.வி.க பெயரிலான
உயர்நிலைப் பள்ளியை மேம்படுத்த,
தன் 4 நூல்களை உரிமைபடித்தி
வரும் வருமானத்தை முழுவதும்
அளித்த கர்ணப் பிரபு!

படிக்கும் போது மாணவர் தமிழ்ச் சங்கம் அமைத்து
தாய்மொழிப் பற்றினை நிரூபித்து,
5ம் உலகத் தமிழர் மாநாட்டில்
சங்க இலக்கியம் பற்றிய எழுச்சியூட்டும் சொற்பொழிவாற்றி,
இலங்கை அமைச்சர் நடேசபிள்ளை  இலக்கிய நோபல் பரிசு தருவதற்கு
தகுதி வாய்ந்தவராகி ,
முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டியானவர்!
பச்சையப்பன் கல்லூரி படிக்கட்டும் பைந்தமிழ் பாடும் எனக் கூறுமளவு,
மாணவர்கள் இலக்கிய உலகில் சிறந்து விளங்க செய்து,
இளைஞர்கள் மத்தியில் புதிய சிந்தனை ஏற்படுத்திய
நாவல்களை எழுதியவர்!

சோவியத் நாடு/பாரிஸ்/மலேசியா, சிங்கப்பூர்/இலங்கை/இங்கிலாந்து, பிரான்ஸ்/ஜப்பான்/ஜெர்மனி, இத்தாலி,கிரேக்கம்,எகிப்து, அமெரிக்கா முதலான நாடுகளில்
ஆய்வு மாநாடுகளில் பங்கேற்று,
எளிய/இனிய/தெளிந்த
தமிழ் நடையில் கை தேர்ந்தவராகி,
 தமிழ் இலக்கிய பண்பாட்டினை தரணியில் உயர்த்திய
நெஞ்சில் நிற்கும் முள்ளானவர்!

முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி
வாலாஜாப்பேட்டை.