உலக கண் பார்வை தினம்

உலக கண் பார்வை தினம் கவிதை

உலக கண் பார்வை தினம்

தாயின் கருவறை இருளிலே !
விழிகளுக்கு பார்வை இருந்தும் பயனில்லை!

தாயின் கருவறை வெளியிலே! இயற்கையை பார்க்கின்ற அதிசயம்!

படைப்பிலே கிடைத்த
இரு விழி என்னும் தொலைநோக்கி!!

உன்னையும்! என்னையும் பார்த்து நேசிக்கின்ற ஒரு நுண்ணோக்கி!

நல்லவைகளை கண்டு ரசிக்க!
 நாம் அனைவரும் காட்சியில் பயணிக்க!

இரு விழிகள் இல்லாது இவ்வுலக ரசனை இல்லையே!

தன் உருவத்தில் உருவான மழலையைகண்டு ரசிக்க!
இரு விழிகள் இல்லாது!
இது நடப்பதில்லையே!

காதலின் முன்னோடி!
காட்சியில்! நீ ஒரு மாயக்கண்ணாடி!

இரு விழிகள் செய்த தவறுக்கு !சில நேரம்!! இதயத்திற்கு வலி என்னும் தண்டனை கொடுத்து விடுகிறாய்!

நல்லதைப் பார்க்க! நல்வழியில் நடக்க!
நாளும் நன்மையில் பயணிக்க!!
விழிகள் அவசியம்!

 விழிகளை பாதுகாப்பது நம் இதயத்தில் ரகசியம்!

விழிகள் பேசும் மொழியிலே! உண்மை இருக்கிறது!

இதயம் மறைத்தாலும்! விழிகள் காட்டிக் கொடுத்து விடுகிறது

இன்பத்தில் ஆனந்த கண்ணீராய்! துன்பத்தில் அழுகையின் கண்ணீராய்!

உலக விழிகள் தினம் மதில்!
நாம் மறைந்தாலும்! நம் விழிகள் வாழ கண் தானம் செய்வோம்!!

கவிதை மாணிக்கம்!