உலக கண் பார்வை தினம்

உலக கண் பார்வை தினம் கவிதை

உலக கண் பார்வை தினம்

உலக கண் பார்வை தினம்..
&&&&&&&&&&&&&&&&&&&&&&
உலகினைப் படைத்தவன் இறைவனவன்
கண்தந்தான்...
படைத்தவற்றை
பார்த்திடவும்
இரசித்திடவும்
ஒளிதந்தான்...
பார்த்தபின்
கற்றவற்றை
கொண்டாங்கே
நடத்தலாகும்...
கண்பார்த்து
கைசெய்தல்
மேன்மையென
பெரியர்உரை..

பொருளது
வண்ணங்கள்
மனதிற்கு
இன்பமன்றோ..
இயற்கையின்
வனப்பினை
கண்டுகளிக்க
இலகுவாகும்..
இளங்காலைப்
பொழுதினிலே
காற்றினில்
அசைமரமும்...
எழுஞாயிறு
ஒளிவீசும்
இளஞ்சூடாய்
கதிரழகு...

வானவில் ஏழுவண்ணம்
நிறைத்திடுமே
பேரழகாய்...
துளித்துளியாய்
வீழ்கின்ற
மழையழகு
கண்நிறைப்பே...
துள்ளியோடும்
மான்ஓட்டம்
காணக்கண்
கோடியாகும்...
தாயினிடை
புகுந்தாங்கே
துள்ளல்நடை
கன்றழகு...

தூரப்பார்வை கிட்டப்பார்வை
என்றாங்கே
பிரித்திடுவார்...
கண்காப்பு
வேண்டுமென
உழைத்திடுவார்
மருத்துவரே...
வருமுன் காப்பதுவும்
நம்பணிதான்
அறிவோமே...
&&&&&&&&&&&&&&&&&&&&&&
           சா.சையத் முகமது
           கிருட்டிணகிரி
&&&&&&&&&&&&&&&&&&&&&&