வணங்க வேண்டிய ஆலயம் அரசு மருத்துவமனைகள்

மருத்துவமனை கவிதை

வணங்க வேண்டிய ஆலயம் அரசு மருத்துவமனைகள்

திருநெல்வேலி அரசுமருத்துவ மனையில்,,!

   அவசரபிரிவுதொட்டு!
அதை அடுத்த பிரிவிற்கு குணமாகிய நண்பர்களோடு!! பயணம்!! ஓர்இருவாரங்கள்!

பலர் இங்கே வலியோடு கூடிய ஓலங்கள்!!

பயங்கரவேகமுடன்,
பயங்கரசப்த்தமுடன்,
பாய்ந்து வரும் வாகனங்கள்!!

  கிடுகிடுவென
மருத்துவர்கள்! செவிலியர்கள் பணிதுரிதமாய் பார்க்கிறார்கள்!

நவீன முறை ஸ்கேன் வசதி !நுண்பிரிவு ஸ்கேன் வசதி சிறப்பு!

வலிகள் நிறைந்த பிரிவுகள் சில!
வறுமையில்நோயில்வாடுவோரை வாழவைக்க
தமிழக அரசின் பணிசிறப்பு!

 கற்றுக் கொண்டேன்! வலிகளின் வகைகளை!!
வண்டி இடித்தவர்!
மது அருந்தி பாதித்தவர்கள் பலர்! விஷம் அருந்தியவர் சிலர்!

இதயம் பாதித்தவர்கள்! எலும்பு முறிந்தவரகள்! இன்னல்களுக்கு இடையே வலம் வந்து கொண்டிருக்கிறேன்!

 அனைவரையும் கண்டு ஆதரவு சொல்லி அவர்களுக்கு உதவி செய்தும் வருகிறேன்!

ஆறுதலற்று அவசர சிகிச்சையில்! சிகிச்சை பெறும்வேறுசில நண்பர்களுக்கு! அவர்களை தூக்கி விடவும் தேநீர் வாங்கி கொடுக்கவும்!

உணவுகளை வாங்கி கொடுக்கவும்! உயரிய தொண்டாய் கருதி ஒரு சில நாட்கள் செய்து கொண்டிருக்கிறேன்!

கையேந்தி கேட்க நாணிக் கொண்டு! கண்ணீர் வடித்து கேட்டால் ஒரு மங்கை!
பிரசவம் முடித்த அக்கா குழந்தை குழந்தை கதறி அழுகிறது !
பால் வாங்க காசு இல்லை அண்ணா என்று!

உதவி கேட்டவுடன் ஒரு சிறுபண உதவி  கொடுக்க! 
அவள் முகத்தில் புன்னகைபூக்க !
என் மனதில் ஒரு ஆனந்தம்!

தொலைந்து போன மன நோயாளியை! இரவு பகலாக தேடி அலைந்தோம்!
அந்த மங்கைக்கு உதவியாக!

தள்ளுவண்டியில் வரும் நண்பர்களை! எல்லாம் ஏற்றி விடவும் !இறக்கி விடவும் !நாம் வெருதே தானே அங்கே இருக்கிறோம்!
 இது ஒரு முடியாதவர்க்கு செய்யும் உதவி!கடமை !  இது ஒரு மனிதநேயம் எனமனதில் மகிழ்வோடு செய்து கொண்டு இருந்தேன்!

 காலையும்! மாலையும்! மருத்துவமனை வளாகத்தில் காக்கைகளும்! பறவைகளும்! மருத்துவமனைக்குள் வேதனையில்  கத்தும்
பாதிக்கப்பட்டவர்களின் அழுகுரலைபோல! கண்ணீரை வரவழைக்கிறது!

பிரசவ அறையில் பக்கம் சென்றால் தாயின் அழுகுரல்! நம்மை அலற வைக்கிறது! குழந்தையின் அழுகுரல் நம் மனதில் ஆனந்தத்தை ஏற்படுத்துகிறது!

முடிந்தவரை பிறருக்கு உதவி செய்வோம் !
எனமனநிலைமாறுகிறது!
 நாம் வரும்போது என்ன! கொண்டு வந்தோம்!! போகும்போது என்ன கொண்டு போகும்!! என்ற வரிகள் ஆழப் பதிந்துவிடுகிறது!

கவிதை மாணிக்கம்