பெண்மையை போற்றுவோம் 040

புதுமைப்பெண் விருது கட்டுரைப் போட்டி

பெண்மையை போற்றுவோம் 040

பெண்மையை போற்றுவோம் 

ஆங்கிலேய ஆட்சியில் ஜான்சிராணியை மறக்க முடியுமா? ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

பெண்ணின் பெருமையை உலகிற்கு பறை சாற்றியதில் பாரதிக்கும் பெரும்பங்குண்டு. புதுச்சேரியில் தனித்திருந்த பாரதியார் தேநீர் தயாரித்து அருந்த தடுமாறிய நிலையில் செல்லம்மாளை உணர்ந்தார். பெண்ணின் விடுதலைக்காக பாடினார். வேதநாயகம் பிள்ளை குழந்தை மணத்தை கண்டித்தார். பெண் கல்வி வளர்ந்தது. சமுதாயம் உயர்ந்தது. மகளிரும் தொழில் வாய்ப்பை பெற்றனர். மாதவையா. கல்கி போன்றவர்களைத் தொடர்ந்து பின்வந்தவர்களும் பெண்ணின் பெருமை பேசினர். மகளிருக்கென சிறந்த ஊடகங்கள் பெண்களின் பெருமைகளை பறை சாற்றின.

பெண்மையைக் கொண்டாடும் தேசம் நம் தேசம். நதியை கங்கா. யமுனா. சரஸ்வதி என்று பெண்ணாகக் கொண்டாடுகிறோம். நிலாவைப் பெண்ணாகக் கொண்டாடுகிறோம். மொழியைத் தாய்மொழி என்று பெண்ணாகக் கொண்டாடுகிறோம்.

இருந்தும், இன்னொருபுறம் பெண்களின் தற்போதைய நிலை? சமீபத்தில் வெளியான "கட்டா குஸ்தி திரைப்படத்தில் பிறநாடுகளில் போட்டிகளில் சாதிக்கக் துடிக்கும் பெண்கள். களத்தில் நிற்கும் எதிரியை வென்றால் போதும். ஆனால் நம்நாட்டுப் பெண்கள் குடும்ப உறுப்பினர்களை வெல்வதே பெரும்பாடாக இருக்கிறது என்று பதிவு செய்திருக்கிறது. மேலும், அத்திரைப்படத்தில் வண். ஆண்களை எவ்வாறெல்லாம் பாதுகாக்கிறாள் என்றும் காட்டியிருப்பார்கள்.

நமது காப்பியங்களான. சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி ஆகியவற்றில் உள்ள பெண் பாத்திரங்களின் வரலாறுகள் பெண்ணியத்திற்கு பெருமையைத் தேடித் தந்துள்ளன. சிலம்பில் கண்ணகி, மாதவி கவுந்தியடிகள் போன்றவர்களின் வரலாறுகள் பெண்களின்

பல பண்புகளை உயர்த்தி நிற்கின்றன. கண்ண தெய்வமாகியது. பெண்மைக்கே உய்வைத் தந்த மாதவி. மணிமேகலையின் தறவு மேன்மை போன்றவற்றை மறக்க முடியாது.

இப்போதுதான். பெண்கள் முன்னேறி இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். சங்க காலத்திலேயே பெண்கள் கல்வியில் சிறந்தவர்களாக இருந்துள்ளனர். தலைமைப் பண்புமிக்கவர்களாக சரித்திர சாதனை புரிந்துள்ளனர். ஒளவையார். பாரிமகளிர், இளவெயின், காக்கை பாடினியார். நச்சென்ளையார் போன்றவர்களும் இன்னும் பலரும் காட்டப்படுகிறார்கள். மன்னர்களுடன் இப்புலவர்களின் தொடர்பு: அதியமான் ஒளவைக்கு நெல்லிக்கனி கொடுத்தது, மற்றும் பெண்கள் தூதுபோன காட்சிகளும் உண்டு.

பக்தி இலக்கியமாகிய பெரியபுராணம் 28 பெண்களைப் பற்றி குறிப்பிடுகின்றது. நாயன்மாரது மனைவியர். தாயார் நால்வர் மற்றும் காரைக்கால் அம்மையார். இசைஞானியார். மங்கையர்க்கரசியார் ஆகிய மூவரும் நாயன்மார்களுக்கு இணையான பேறு பெற்றனர்.

சங்க காலத்தில் வீரத்தின் விளைநிலமாகவும் பெண்கள் விளங்கினர். போர்க்களத்தில் தீரமுடன் போராடிய வீர மங்கையர்களையும் படித்திருக்கிறோம். மேடையை அலங்கரித்துக் கொண்டிருப்பவர்களுக்கும். மேடைக்கு முன்பாக இருக்கும் அனைவருக்கும் முதற்கண் "உலக மகளிர் தின" வாழ்த்துக்களையும். வணக்கங்களையும் தெரிவித்துக் கொண்டு என்னுரையைத் துவக்குகிறேன்.

இன்றைய பெண்களுக்கான சுதந்திரம் எளிதாக தங்கத்தட்டிலே வைத்துப் பரிமாறப்பட்டதல்ல. அடுப்படியிலே இருந்த பெண்கள் சமுதாயம் இன்று ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கிறது என்றால். அதற்கு வித்திட்ட பல்வேறு போராட்டங்களின் கொண்டாடப்படுகிறது. வெற்றி தினமே உலக மகளிர் தினமாக

ஆண்களுக்குச் சமமான ஊதியம் பெண்களுக்கு வழங்கப்படாமல் அநீதி'

இழைத்ததை ஒட்டி அமெரிக்காவில் 1857-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி பெண் தொழிலாளர்கள் கிளர்ந்தெழுந்து போராட்டத்தில் குதிந்தனர். அந்த தினத்தைத்

தான் உகை மகளிர் தினமாக கொண்டாடுகிறோம். பெண்ணின் பெருமையை உயர்த்தும் நாடுதான் இந்த மண்ணுலகில் உயர்ந்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பல்வேறு துறைகளில் "ஆணுக்குப் பெண் இளைப்பில்லை" என்று மட்டுமல்ல. ஆண்களை விட

அதிகமாகவே முன்னேறி வருகின்றனர்.

பெருமைமிக்க புராண காலத்துப் பெண்களான சாவித்திரி சந்திரமதி, தாரா. மண்டோதரி. சீதா போன்ற பெண்ணரசிகளை இன்றும் கற்றோரும். மற்றோகும் போற்றுகின்றனர்.

அரசியல் அதிகாரம் ஆண்களுக்கான களம் என்றிருந்த காலத்திலேயே 1966-ம் வருடம் இந்தியாவின் முதல் பெண் பிரதமராக இந்திராகாந்தி பதவி வகித்தார்.

அமெரிக்காவில் சமீபத்தில் துணை அதிபர் என்ற உயர்ந்த பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டு சாதனை படைத்துள்ளார். இதில் ஒரு விஷயம் அசாதாரணமானது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வழக்கமான உடல்நலம் சார்ந்த மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டபோது, மயக்க மருத்து செலுத்தப்பட்ட சிறிதுநேரம். மட்டும் (85 நிமிடங்கள்) தம்முடைய அதிபர் அதிகாரத்தை அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு வழங்கினார். இதனால் கமலா ஹாரிஸ் அவர்கள் அமெரிக்க வரலாற்றிலேயே அதிகாரத்தைப் பெற்ற முதல் பெண் அதிபர் என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறார்.

விஜயலெட்சுமி பண்டிட் 1953-ல் ஐக்கிய நாடுகள் பொது அவையின் தலைவரான முதல் பெண்ணும், முதல் இந்தியருமாகப் புகழ் பெற்றார். இசைத்துறையில் உலகப் புகழ் பெற்ற எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் கூறா சபையில் இசைக்கச்சேரி நடத்திய முதல் இந்தியராகப் பெருமை பெற்றார்.
தங்களின் உழைப்பு, விடாமுயற்சி, சாதனைகள் மற்றும் பேராட்டங்களால் உலகமெங்கும் உள்ள பெண்கள் பலருக்கும் ஆதர்ச வழிகாட்டியாகத் திகழ்ந்த ஆளுமைப் பெண்கள் இந்தியாவில் இருந்தார்கள் இருக்கிறார்கள் இன்னமும் இருப்பார்கள்.

எழுத்தாளர்கள். இசையரசிகள். சொற்பொழிவு தலைவர்கள்.

ஆராய்ச்சியாளர்கள் எனப் பெண்கள் பல்வேறு துறைகளிலும் கொடி கட்டிப்

பறப்பது நாட்டிற்கும். வீட்டிற்கும் பெருமையே பெண்களால் எதையும் சாதிக்க

முடியும் என்று நினைத்து சாதிப்பதோடு அன்றாடம் கிடைத்த ஊடகங்கள்

அனைத்தின் மூலமும் போதித்து பெண்ணுரிமையை பேணி காக்க அயராது

முயல வேண்டும். நாட்டை ஆட்சி செய்ய மன்னன் இருந்தாலும், ஒரு வீட்டை

ஆட்சி செய்ய ஒரு பெண்தான் வேண்டும் என்பது எவராலும் மறக்க முடியாத

உண்மை,

மகளாய். மனைவியாய். தாயாய். கல்வியாளராய். கவிதாயிணியாய். கதாசிரியராய், கப்பலோட்டியாய், விமானயோட்டியாய். சேவகியாய் என பலப் பரிமாணங்களில் மின்னுகிறார்கள். சட்டம், மருத்துவம். நடனம், நாடகம். ஓவியம், இசை, பத்திரிக்கை, திரைப்படம், இயக்கம், ஃபேஷன், விளம்பரம். விளையாட்டு என பெண்கள் தடம்பதிக்காத துறைகளே இன்று இல்லை. குடும்பச் சூழ்நிலையும். சமூகச் சூழ்நிலையும் எதிர்கொண்டு பல்வேறு கலைகளில் கற்றுத் தேர்ந்து எதிர்ப்புகளை வென்று நிற்கின்றனர்.

பட்டங்கள் ஆள்வதும். சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்" என்ற மகாகவி பாரதியின் கனவை இன்றைய புதுமைப் பெண்கள் நிறைவேற்றி சாதனை படைத்து வருகிறார்கள்.

இத்துறை, அத்துறை என்றில்லாமல் எத்துறையிலும் பெண்களின் சக்தி மகத்தான சக்தியாய் உருவெடுத்துள்ளது.

"எங்கெங்கு காணினும் சக்தியடா" என்ற பாவேந்தரின் கூற்று நிலமாகியுள்ளது. ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே" என்ற ஒரே செயலோடு

போவதல்ல பெண்ணின் பெருமை.

முடிந்து

சாதிக்கப் பிறந்தவள் பெண்.

சாதனை படைப்பவன் பெண்

ஆகவே புதியதோர் உலகம் படைக்கப் புறப்படுங்கள் பெண்களே!

படைப்பு

- கவிதாயினி லலிதா சியாம் மதுரை-625016