புதுமைப்பெண் 028

புதுமைப் பெண் விருது கட்டுரைப் போட்டி

புதுமைப்பெண் 028

புதுமைப் பெண்

உலக பெண்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 8 ஆம் தேதி அன்று மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

 மங்கையராக பிறப்பதற்கே நல்ல
மாதவம் செய்திட வெண்டும், அம்மா!
என்று கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பாடியிருக்கிறார்.
பெண்மையின் சிறப்பைப் பற்றி பேசாதவர்களே இருக்க மாட்டார்கள்.
மகாகவி பாரதியார் பெண்களை போற்றி பேசியும் பாடியும் இருக்கிறார்.
இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.

பெண் என்றாலே புதுமை , புதுமை விரும்பிகள்.
எதிலும் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள்.
வீடு ஆனலும் நாடு ஆனாலும் ஒரு புதிய சிந்தனை கண்ணோட்டத்தோடு பார்க்க தெரிந்தவள். 

உலகளவில் பார்த்தோமானால் பெண்கள் பலர் புதுமையை முன் வைத்து செயல்படுத்தி அரிய சாதனைகள் படைத்துள்ளார்.
 நம் பாரத நாட்டின் சாதனை பெண்மணிகள் எத்தனையோ விஷயங்களிலும், போராட்டங்களிலும் கலந்து கொண்டுள்ளார் .

கல்வி பற்றி எடுத்து கொள்வோம்.
பாரதிதாசன் சொன்ன வரிகள், ஒரு ஆண் கல்வி கற்றால் அது குடும்பத்திற்கு  மட்டுமே பயன் தரும்.அதே சமயம் ஒரு பெண் கல்வி கற்றால் குடும்பம், சமுதாயம்,,நாடு எல்லோரும் பயனடைய முடியும்,என்றது
மிகப் பெரிய அளவில் பெண்கள் முன்னேற்றத்திற்கு வழி வகுத்தது. 

நம் தாய் நாட்டிற்க்கு பல விதமாக சேவை செய்து பெண்கள் பெயர் நாட்டி இருக்கிறார்கள். எங்கோ படித்த ஒருவர் பற்றி மட்டுமே எழுதாமல்
நம் தமிழ் நாட்டில் மக்கள் சேவை மகேசன் சேவை என்று இரவு பகல் உழைத்து சாதனை படைத்தவர் பத்மபூஷன்,
மருத்துவர்
முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் . இவர் சாதாரண சரா சரி பெண் அல்ல. முதல் பெண் மருத்துவர்.
இன்று பல பல பெண்கள் மருத்துவம் படித்து நல்ல நிலையில் உள்ளார்கள்.
அன்று அப்படி இல்லை. மிகப் பெரிய அளவில் பெண்கள் சமுதாய சீர்திருத்தங்கள்,போராட்டங்கள் நடந்தன.எளிதில் பெண்கள்  தங்களுக்கு என்று இடம் பெறும் வாய்ப்பு இருக்கவில்லை.

முத்துலக்ஷ்மி ரெட்டி அவர்கள் 1886 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30ஆம் தேதி அன்று தமிழ் நாட்டில் உள்ள புதுக்கோட்டை, (அன்று பிரி்தானிய இந்திய அரசின் கட்டுபாட்டில் இருந்தது), ஒரு தேவதாசி குடும்பத்தில் பிறந்தார். அவரின் தாயார் சந்திர அம்மாள் ஒரு தேவ தாசி.
இவரது தந்தை நாராயணசுவாமி பிரபல வழகறிஞர், பிராமன சமூகத்தை சேர்ந்தவர்.

 இரண்டு மிகவும் முக்கியமான சமுதாய சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டு முனைந்தார். வெற்றியும் கண்டார்.

அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று கேட்ட பழைய நோக்கு உடைய மனிதர்கள் வாழ்ந்த அந்த காலத்தில் எதிர் நீச்சல் போட்டவர் முத்துலட்சுமி அவர்கள். நான்கு வயதில் திண்ணை பள்ளியில் ஆரம்பித்து,
பள்ளி படிப்பு முடிந்து கல்லூரி யில் படிக்க விரும்பினார். தந்தையும் ஆதரித்த காரணத்தால் வெற்றி கண்டார்.
பேரும் எதிர்ப்புகள் இருந்தும் அப்போது இருந்த மன்னர் மார்தண்ட பைரவா தொண்டைமான் எதிர்ப்புகளை எதிர்த்து, முத்துலட்சுமி யை மன்னர் கல்லூரியில் படிக்க  அனுமதி கொடுத்தார்.

தானும் சிறிது காலம் உடல் நலம் இல்லாமல், அத்துடன்
தாயாரும் நோயில் சிரமம் பட்டு இறந்த காரணத்தால் ,அவருக்கு மருத்துவராக வேண்டும் என்றும், மக்கள் நோய் இல்லாமல்
இருக்க உதவ வேண்டும் என்றும் உறுதி பூண்டர் முத்து லட்சுமி. 

1907-ல் சென்னை மருத்துவ கல்லூரியில் சேர்ந்து, மிக அருமை பெருமைகளை பெற்று 1912- ல், நாட்டின் முதல் பெண் மருத்துவர் என்ற பெறுமை பெற்று பெண்கள் சமூகத்திர்கே பெருமை வாங்கி நாட்டுக்கு பெருமை சேர்த்தார்.

 தேவதாசி முறையை ஒழிக்க கடுமையாக போராடினார். கோவில்களில் தேவதாசி முறை ஒழிப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது.குழந்தைகள் திருமண த் தடுப்புச் சட்டம், விபச்சார தடுப்பு சட்டம் இவைகளை உருவாக்குவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.

1914- ல் அவர் டாக்டர் சுந்தர் ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அவர் இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் ஆனார். 

1925- ல் போட்டி இன்றி சட்டசபைத் துணைத் தலை வராக தேர்ந்து எடுக்கப் பட்டார்.

1926 -ல்அவர் இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் ஆனார். சென்னை மாநகர ஆட்சியின் முதல் துணை மேயர் என்னும் பெருமையும் இவருக்கு உண்டு. 

அனாதை குழந்தைகளை வளர்த்து அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்று தொடங்கியது அடையாறில் உள்ள அவ்வை இல்லம்.

 சென்னை அடையார் புற்று நோய் மருத்துவமனை இவரால்1952-ல் தொடங்கிய பின்னர் இன்று வரை மக்களுக்கு உதவி கொண்டு இருக்கும் மிகப் பெரிய புகலிடம். 

பல மொழிகளில் தேர்ச்சி பெற்று, தமிழ் மொழி மீது அதிக அளவில் ஆர்வம் கொண்டு
பன்மொழி பேச்சாளராக திகழ்ந்தார்.

இப்படி அடுக்கி க்கொண்டே போகலாம் அவருடைய சிறப்புக்களை.மக்களோடு மக்களாக ,பெண்களுக்கு ஒரு பெரும் பலம் ஆகவும் , சமூக சேவையிலும்
1968 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை மக்களுக்கு உதவி கொண்டு பல விதமாக சேவை செய்து ஒரு முந்நோடியாக வாழ்ந்து இவ்வுலகை விட்டு மறைந்தார் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள்.

இவரை பற்றி மேலும் பேசிக் கொண்டே போகலாம். இவருடைய சேவைகளை கணக்கில் எடுத்து மதிய அரசு  1956 -ல் இவருக்கு பத்ம
பூஷன் விருது வழங்கி கௌரவித்து நமக்கும் நாட்டிற்கும், மேலாக பெண் இனத்திர்கே பெருமை சேர்த்தது என்று சொன்னால் மிகையகாது.

பல வீராங்கனைகள் பிறந்த நாடு நம் தாய் நாடு. பூகோளம், சரித்திரம், கணிதம் மற்றும் அறிவியல்,நாட்டு சுதந்திரம் போராட்டம்,சட்டம் நீதி, இயல் இசை, நாடகம் என்று கலைகளில பல பல பெண்கள் சாதனை. படைத்து பெருமை சேர்த்துளளார்கள்.
இன்று சாதனைளைச் செய்வது அத்தனை கடினமான விஷயம் இல்லை.
எல்லாம் சௌகரியமா உள்ள போதில் பெயர் வாங்க முடியும்.
அன்று அப்படி இல்லை. எதற்கும் அஞ்சாத நெஞ்சம், பொறுமை, ஒரு பெரிய அளவில் விடா முயற்சி செய்ய துணிவு இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும் காலம் அது.
எத்தனையோ விஷயங்களிலும் போராட்டங்களிலும் கலந்து கொண்டுள்ளார்.
இவரை பற்றி பேசுவதும் எழுதுவதும் புதிய தலைமுறைக்கு தெரிய வைப்பதும் முக்கியம் வாய்ந்தது.
நாம் இன்று கொண்டாடும்
பெண்கள் தினம் முத்துலட்சுமி ரெட்டியும், இவரை போல பலரும் சிந்திய வியர்வையும், உழைப்பும், செலவிட்ட நேரமும் தான் காரணம்.
வாழ்க பெண்கள் சமுதாயம்!
வளர்க நம் தாய் நாடு!!

-விஜயலட்சுமி கண்ணன், சென்னை.