தமிழர்களின் பெருமை...! 08

தமிழ் கதிர் விருது கட்டுரைப் போட்டி

தமிழர்களின் பெருமை...! 08

தமிழரின் பெருமைகள்
**************************
முன்னுரை
தமிழன் பாரம்பரியத்தை போற்றி கடைப் பிடிப்பவன்.வெளி நாட்டில் வாழ்ந்தாலும் தன் நாட்டை விட்டுக் கொடுக்க மாட்டேன். தன் கடமைகளில் இருந்து தவறியதில்லை அஞ்சா நெஞ்சம் கொண்டவன், நல்ல எண்ணமும் குணமும் அவனே விட்டு என்றும் நீங்காது.
இயற்கை வளம் 
*******************
தமிழ் நாட்டில் வீசும் தென்றல் தேன் மணம் கமழும் கனிகளும் தானிய கதிர்களும் விளையும்.தமிழ் நாட்டில் பயிர் விளையும்.நன்செய் நிலம் சிறப்புடையது.
தமிழுக்கு வளம்
********************
 சேர்க்கும் இலக்கியம்
*************************
பகைவரை வென்றதை பாடும் பரணி இலக்கியம்,
இசைப் பாடலால் இலக்கிய இன்பம் பருகும் பரிபாடல்,
பல்வகை உறுப்புகளால்
செய்யுள் படைக்கும் பரணி இலக்கியம் ,
அகமும் புறமும் நிறைந்த எட்டுத் தொகை நூல்கள், 
வான் புகழ் சிறப்பு வாய்ந்த உலகோர் போற்றும் திருக்குறள்,
அகம்,புறம் மெய்ப் பொருளாய் கொண்டு பாடப்பட்ட சங்க இலக்கியம் ஆகும்.
கொடை கொடுத்த
*********************
 வள்ளல்
***********
 இதயத்தில் இரக்க குணம் கொண்ட பாரி,
தன்னை தேடி வருபவருக்கு இல்லை என்று சொல்லாத காரி,
எல்லா உயிருக்கும் அன்பு செய்த பேகன்,
வேல் வீச்சில் சிறந்த அதியமான்,காரியைப் போல வென்று குறும்படை நாட்டை கைப்பற்றிச்  சாதனை புரிந்த ஓரி, நெடுங்கோடு மலைப் பகுதியை மாண்புடன் ஆண்ட நள்ளி கொடை கொடுத்த வள்ளலாக போற்றப்பட்டனர்.  
விருந்தோம்பல்
********************
தமிழனின் பண்பாட்டு கூறுகளில் ஒன்று விருந்தோம்பல் . தமிழர்கள் பண்பாடு கலாச்சாரம் நம்பிக்கைகள்,பழக்க வழக்கங்களில் சிறந்து விளங்கியவர்கள்,
தன்னலம் கருதாது பிறர் நலம் பேணுபவர்கள்.
ஈகை இரக்கம் உதவும் பண்பை கொண்டவர்கள். வந்தோரை இன்முகத்தோடு உபசரிப்பவர். ஒற்றுமை உணர்வோடு வாழ்ந்துக் காட்டியவர்.எல்லா உயிரையும் தம் உயிரைப் போல எண்ணி வாழ்ந்துக் காட்டியவர்கள் தமிழர்கள்.
உழவுத்தொழில்
*******************
பழந்தமிழகத்தில் உழுபவரே உயர்ந்தவராக மதிக்கப்பட்டார். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் திருக்குறள் கருத்தாகும். மருத நிலமானது  வயலும் வயல் சார்ந்த இடமாகவும் இருந்த மருத நிலத்தின் பெருமையை எண்ணி வேந்தனை முதன்மை படுத்தினர்.
இசையின் சிறப்பு
**********************
இயல் இசை நாடகம் இசையை நடுநாயகமாக வைத்திருந்தனர்.
மனிதன் உணர்ச்சியை வெளிபடுத்த இசையை கருவியானது.பண்டைய தமிழர் வாழ்வில் சிறந்த இசையை பிடித்திருந்தனர். பாணன்,பாடினி,கூத்தன்,விறலி என்று இயலிசை
கலைஞர் இருந்தமையை  தமிழ் இலக்கியம் மூலம் அறிய முடிகிறது.
உலகின் முதலிசை
**********************
 தமிழிசையே
*****************
இன்றைய கருநாடக இசைக்கு தாய் நம் தமிழிசை ஆகும் .
பண்ணொடு தமிழொப்பாய் என்னும் தேவாரப் பாடல் இசையும் தமிழும் பிரிக்க முடியாதொன்று
என்று மொழிகிறது.
ஐவகை நிலத்திற்கும் ஐந்திணைக்கும் ஏற்ற பண்ணிசை வகுத்தவர்கள் தமிழர்கள்.
இயற்கை மருத்துவம்
*************************
நோய் மிகும் போது சமப்படுத்த இயற்கை தரும் காய் கனிகளிலிருந்து மருந்து கண்டு உண்டனர் தமிழர்.
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்- திருக்குறள். 
கலைநுட்பங்கள்
*********************
அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும் என்னும் அறநெறி உலகாள்வோருக்கு உணர்த்தும் சிலப்பதிகாரம் கூறும் கலை நுட்பச்  செய்திகள் 
சங்ககாலத் தமிழர்களின் கலை இலக்கியத் தனித் தன்மைக்குச் சான்று பகிர்ந்தன.
முடிவுரை
**********
தமிழன் என்று சொல்லடா தலை உயர்த்தி நில்லடா என்ற வரிக்கேற்ப எந்த இடத்திற்கு சென்றாலும் வென்றிடுவானே தவிர தோற்றதிற்கான சரித்திரம் இல்லை.நாடு விட்டு சென்றாலும் மதிப்பு கூடுமே தவிர ஒரு நாளும் குறையாது தலை நிமிர்ந்து நிற்பவன் தமிழனடா.


-ம.செ.அ.பாமிலா பேகம்.
நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டம்