பெண்மையை போற்றுவோம்...! 022

புதுமைப் பெண் விருது கட்டுரைப் போட்டி

பெண்மையை போற்றுவோம்...! 022

மண்ணுக்குள் எவ்வுயிரும்
தெய்வமன்றால்
மனையாளும் தெய்வமன்றோ என்று என்றோ சொன்னான் பாரதி...
பெண்மையை போற்றுவோம் என்ற சொல்லே பாரதி உருவாக்கியது தானே...!
அவனின்றி பெண்மையை அத்துணை அளவிற்கு உயர்த்திப்பிடித்தவர் எவரேனும் உளரோ?...

பெண்ணின் பெருமயை பேச பல நூற்றாண்டுகள் முன் சென்று நாம் கான வேண்டும்...!
புராண காலத்துக் காரைக்காலம்மையார், நளாயினி, சாவித்திரி, சந்திரமதி, தாரா, மண்டோதரி, சீதா போன்ற பெண்ணரசிகளை இன்றும் கற்றோரும் மற்றோரும் போற்றுகின்றனர்.
சிலம்பில் கண்ணகி, மாதவி, கவுந்தியடிகள், தேவந்தி, போன்றவர்களின் வரலாறுகள் பல பண்புகளை உயர்த்தி நிற்கின்றன. சங்க காலத்தில்,கண்ணகி தெய்வமாகியது, பெண்மைக்கே உய்வு தருவது மாதவி, மணிமேகலையின் துறவு மேன்மை போன்றவற்றை மறக்க முடியாது.
ஒளவையார், காவற்பெண்டு, பாரிமகளிர், குறமகள் இளவெயினி, வெண்ணிக்குயத்தியார், நன்முல்லையார், வெண்பூதியார், காக்கைபாடினியார், நச்செள்ளையார் போன்றவர்களும் இன்னும் பலரும் காட்டப்படுகிறார்கள். மன்னர்களுடன் இப்புலவர்களின் தொடர்பு, அதியமான் ஒளவைக்கு நெல்லிக் கனி கொடுத்தது, தூது போன காட்சிகளும் உண்டு. ஆதி சங்கரருடன் வாதம் செய்த பெண் பற்றியும் வரலாறு உண்டு.


 *இக்காலத்தில் பெண்:* 

தங்களது லட்சியத்தில் சற்றும் தொய்வோ, சலிப்போ இன்றிச்செயல்படும் பெண்கள், முன்னேற்றத்துடிப்புடன் இயங்கும் பெண்கள் தேவையற்று தடைகளை, சர்ச்சைகளை சந்திக்க வேண்டியுள்ளது.
பல்துறையில் பெண்கள் தங்கள் சாதனையை நிகழ்த்திக் காட்டிய வண்ணம் உள்ளனர். வீட்டில் இருந்தபடியேயும் தனக்கான உலகத்தை படைத்தும் தன் குழந்தைகளின் எதிர்காலத்தை கட்டமைக்கும் பெண் பெருமைக்குரியவள் தானே...! 

கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார சுதந்திரம் போன்றவற்றோடு இணைந்து, குடும்ப வன்முறை, பாலியல் ரீதியான ஒடுக்குகளில் இருந்தும் பெண்ணை காப்பாற்ற வேண்டியது இன்றைய சூழலின் அவசியமாகும். ஆம்....!
பெண்கள் மீதான வன்முறை நிகழ்வுகளை நிமிடக்கணக்கிலும், நொடிக்கணக்கிலும் புள்ளிவிவரங்கள் பட்டியலிடுகின்றன....

அதற்கு வீதிகள் தோறும் பெண்ணை போற்றும் பதாகைகள் வைத்தால் மட்டும் போதாது.*ஆணுக்கு பெண் இங்கு சரிநிகர் சமானம்* என்று கூறிய பாரதியின் வார்த்தைகளை மெய்கொண்டு செயல்பட வேண்டும்....!
பெண்ணின் பெருமையை உயர்த்தும் நாடே இந்த மண்ணுலகில் உயர்ந்துள்ளது. தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள இன்றைய கால கட்டத்தில் பெண்கள் பல்வேறு துறைகளில் ஆணுக்கு சமமாகவும், ஆண்களை விட அதிகமாகவும் முன்னேறி வருகின்றனர். சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் இந்தநேரத்தில் பெண்களின் பெருமையை அனைவரும் கொண்டாடுவோம்...!

-R.சரண்யா கோபால், காஞ்சிபுரம்.