கரிசல் காடு

சிறுகதை

கரிசல் காடு

கரிசல் காடு

சுப்பனும் குப்பம்மாளும்  அந்தியூர் என்னும் கிராமத்தில் வசித்து வந்தனர்.
அவர்களுக்கு மூன்று பெண் பிள்ளைகள் 
அவர்களைப் படிக்க வைக்கவே முடியாத நிலையில் திணறித்தான் போனான் சுப்பன். வறுமானம் போதவில்லை.
வறுமை வாட்டித்தான் வதைத்துப் போட்டுக் கொண்டே இருந்தது.
ஒரு வேளை உணவில் வயிற்றைக் கழுவி
இருவேளை காயவைத்து காலத்தைக் கடத்தினர்
இருந்தாலும் தன்பிள்ளைகளை ஒரளவாவது படிக்க வைத்து கரை சேர்த்திட வேண்டும் என்னும் கவலையே கணவன் மனைவி இருவர் மனதிலும் ஆழமாய் ஓடியது..

நாட்கள் மாதங்கள் வருடங்களாகியது
பெரியவள் பத்மா பன்னிரொண்டாம் வகுப்பில் மாநிலத்தில் முதல் மாணவியானாள்.
பாராட்டுக்கள் குவிந்தாலும் மேற்படிப்பு படிக்க வைக்கவே முடியாத நிலை சுப்பனின் குடும்பத்திற்கு இருந்தது.. ஒருநாள் "அப்பா "அப்பா" என்று அழைத்தவாறு பத்மா வந்தாள்.
என்னம்மா சொல்ல வந்த சுப்பனும்
கேட்டவாறு
அப்பா உங்களால் என்னை மேற்படிப்பு படிக்க வைக்க முடியாது நம்மிடம் பணம் இல்லை. அதனால் நான் படிக்கவில்லை அப்பா 
என்றாள்.
நானும் உங்களோட சேர்ந்து வயலில் வேலை பார்த்து தங்கைகள் இருவரையாவது நன்றாகப் படிக்கவைப்பேன் என்றாள்.
சுப்பன் கண் கலங்கி நின்றான். 
நன்றாகப் படிக்கும் தன் மகளைப் படிக்க வைக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் வேறு வருமானம் போதவில்லை என்ன செய்வது அவனாலும் முடியவில்லையே

"அப்பா கவலைப் படாதீர்கள்" நாங்கள் இருக்கிறோம். என்று ஆறுதல் கூறினாள்.

மறுநாள் காலை குப்பம்மாள் கணவனிடம்
என்னங்க.. ... நம்ம பக்கத்து வீட்டுக்காரங்க. வெளி நாட்டுக்குப் போறாங்களாம் அவுக கரிசல் காட்ட குறைஞ்ச விலைக்கு கொடுக்கப் போறாகளாம்  என்று அவங்க அண்ணன் கிட்ட பேசிக்கிட்டாங்க..
"அடடே" அப்படியா" இப்படி ஒரு சந்தர்பத்தில் கூட நம்ம கிட்ட பணம் இல்லையே... இந்தா பக்கத்துல தானே இருக்கு
 வாங்கினா  நல்லா சாகுபடி விளையிற மண்ணு  ...கைராசி நிலமாச்சே..
என்றான்.
அவர்கள் பேசியது பத்மாவின்  காதில்
விழுந்தது. உள்ளிருந்து வெளியில் வரும்பொதே சிறு பொட்டலம் ஒன்றைக் கொடுத்து
நான் சேர்த்து வைத்த பணம் இதில் உள்ளது அப்பா  அத்தோடு நமது கிராமத்து மகளிர் சங்கத்தில் லோன்  வாங்கி அந்தக் கரிசல்காட்டை வாங்கிடலாம் அப்பா என்றாள். வாங்கினால் நானும் அம்மாவும் நீங்களுமே சேர்ந்து அதைவைத்து ஏதாவது செய்து உழைத்து  முன்னேறிடலாம் அப்பா.வாங்கிய லோனையும் சிறுகச் சிறுக அடைத்திடலாம் என நல்ல யோசனையைக் கூறினாள்.

சுப்பனின் மனதில் மகிழ்ச்சி கொள்ளவில்லை.   தன் மகளை கட்டியணைத்துக் கொண்டான்.
ஆண்பிள்ளை இல்லை என்றாலும் பெண்பிள்ளை இல்லாத ஆண்பிள்ளை நீயம்மா என்று வாழ்த்தினார்.
அதன் பின் பத்மா சொன்னது போல அந்த நிலத்தை தன் வசம் பணம் கொடுத்து பத்திரம் முடித்துப் பெற்றுக் கொண்டனர்.
பின் மூவரும் சேர்ந்து  இரவு பகல் பாராது கஷ்டப்பட்டு உழைத்து கரும்பு சாகுபடி செய்து நல்ல வருவாய் ஈட்டினர்.
பத்மா தன்னால் படிக்க முடியாத கல்வியை தன் தங்கைகளுக்குப் பெற்றுக் கொடுத்தாள்.
முன்பை விட தற்போது நல்ல நிலையில் சுப்பன் குப்பம்மாவின் குடும்பம்
வசதியாகிவிட்டனர். பத்மாவிற்கு உள்ளுரிலே நல்ல வரன் வந்தது.
அதைப் பேசி திருமணமும் முடித்துக் கொடுத்தனர். அந்தக் கரிசல் காடு இன்னும் அந்தக் குடும்பத்தை வாழ வைக்கும சொர்க்க பூமியான சொத்தானது.

முற்றும்.

எழுத்தாளர் கிருஷ் அபி
இலங்கை