செவிலியர் தினம் சேவைச் செம்மல் விருது

செவிலியர் தினம் "சேவை செம்மல் விருது" கவிதை போட்டி "வெள்ளுடைத் தேவதைகள்"

செவிலியர் தினம் சேவைச் செம்மல் விருது

செவிலியர் தினம் "சேவைச் செம்மல் விருது" கவிதைப் போட்டி கவிதைகள்-

001.வெள்ளுடைத் தேவதைகள்

அன்னையின் மாற்று வடிவம் நீங்கள்!

ஆருயிர்க்கெல்லாம் அன்பு செய்பவர் நீங்கள்!

இன்முகத்தோடு என்றும் இருப்பவர் நீங்கள்!

ஈடில்லா குணம் கொண்டவர் நீங்கள்!

உள்ளத்தில் இறக்கம் உள்ளவர் நீங்கள்!

ஊருக்காக உறக்கம் தவிர்த்தவர் நீங்கள்!

எண்ணத்தில் சுயநலம் அற்றவர் நீங்கள்!

ஏற்றமிகு சீர்பணி செய்பவர் நீங்கள்!
 
ஐம்புலனும் வணங்கும் ஆன்மா நீங்கள்!

ஒம்பிய சகிப்புத்தன்மை கொண்டவர் நீங்கள்!

ஓயாமல் நாளும் உழைப்பவர் நீங்கள்!

இஃதுபோல் வேறுயார் என வியப்பவர் நீங்கள்!

வெள்ளை மனதோடு,

வெள்ளை ஆடை அணிந்த,

வெள்ளுடைத்
தேவதைகள் நீங்கள்..!!

-சு.உஷா, திருவண்ணாமலை.

************************************************

002.வெள்ளுடைத் தேவதைகள் 
**********
மருத்துவர் பணி மிகவும் மகத்தானது/
உயிர் கொடுத்து உயிர் காக்கும் பணியது/
இரவு பகல் பாராமல் உழைத்து/
சேவை செய்யும் பணி மகத்தானது /
தன் நலத்தைப் பார்க்காமல் விட்டுக் கொடுத்து/
எத்தனை உயிர்களை காப்பாற்றியது/
புண்ணிய பூமியில் தேவ தூதர்கள்/
முகம் சுளிக்காமல் அரவணைத்து செல்வது/
ஒவ்வொரு வரையும் தனி தனியாக கவனிப்பது/
சரியான நேரத்தில் முதலுதவி செய்வது/
வெள்ளை உடையின் புனிதமது/
தன் குடும்பத்தைப் பாராது/
உயிர் காக்கும் உன்னத
சேவையது/
மருத்துவப் பணி புனிதமானது/
தினமும் ஓயாமல் உழைத்து/
நமக்காக தியாகம் செய்த மருத்துவரைப் பாராட்டுவோம்/
ம.செ.அ.பாமிலா பேகம், நாகர்கோவில்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

003.வெள்ளுடைத் தேவதைகள்

வெள்ளை தேவதையே

அன்பின் தாரகையே

நெஞ்சம் எல்லாம் அன்போடு

மனிதநேயத்தின் பண்போடு

உன்னை அர்ப்பணித்தாய் இந்த 

பணியோடு

செவிலி தாய் என்ற பெருமையோடு

உயிர்களை காப்பது முழுமனதோடு

கொள்ளை ஆனந்தம் கொண்டாய்

நெஞ்சோடு

மருத்துவ தொழில்லோடு 

மகத்துவம் வாய்ந்த புனிதமான

பணியோடு

-கவிஞர் சேலம் எஸ்.தாரா பி.ஏ

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

004.

வெள்ளுடை தேவதைகள்...

பணிகளிள் சிறந்தது தாய்மை பணியே 

பிறர் வாழ தன்னையே தியாகம் செய்வார்கலே 

அல்லும் பகளும் பாடு பட்டே 

உயிர்களை அன்பாக காத்திடும் கேடயங்களே 

பிறர் துன்பம் தன் துன்பமாக்கியே 

தினம் உழைக்கும் தேவதைகள் இவர்களே 

தாயுக்கு உவமையாய் மாறிய தாய்குலங்கலே 

விருப்பு வெறுப்புகளை மனதில் புதைத்து 

மனதை பாராங் கற்களாய் மாற்றியே 

மனமார்ந்து நோயாளிகளை புன்னகையுடன் 

அழகாய் கவனிக்கும் தியாக நெஞ்சங்களே 

தியாகத்திற்கே உரித்தான இலக்கண இலக்கியங்கலே 

கருனை உள்ளமே அவர்களின் அடையாளமே 

சலிக்காது கடாகார முள்ளாய் சுற்றிடும் 

சிறந்த  சுறு சுறுப்பான கடிகார முற்களே 

இவர்கள் சேவையாலே வாழ்கிறது உயிர்களே 

இவர்களே உயிர் காக்கும் செவிலியர்களே 

    -ஜஸூரா ஜலீல்

###################################

005.

செவிலியர் கவிதை

வெண்ணிற ரோஜாக்கள்!!!!

முள்ளில்லா வெள்ளை நிற ரோஜாக்கள் செவிலியர்கள்/

வெண்ணிற ஆடையில் வலம் வரும் தேவதைகள் /

தொற்றுநோய் காலத்திலும் தொய்வில்லாமல் வேலை செய்யும் தெய்வங்கள்/

வெண்ணிறம் வெறுமை ,விதைவை என இருந்த சமுதாயத்தில்?

வெண்மை என்றாலே கருணை, சேவை என்று அடையாளப்படுத்தியது செவிலியர்களின் ஆடைகள்/

சூரியனோ இரவில் ஓய்வெடுக்க!
சந்திரனோ பகலில் ஓய்வெடுக்க!
செவிலியருக்கு ஏது ஓய்வு?

இரவு பகலாய் பணி செய்தாலும் புன்னகையுடன் வேலை செய்யும் புனிதர்கள்/

மனதின் வலியை மறைத்து/
குடும்பத்தின் வலியை சுமந்து/
தரணியின் தடைகளைத் தகர்த்து/
மனித நேயத்துக்காகப் போராடும் அன்னை தெரேசாக்கள் இவர்கள்/

தன்னலம் இல்லாமல் பொதுநலத்தோடு சேவை செய்யும் அனைத்து செவிலியர்களுக்கும் செவிலியர் தின வாழ்த்துக்கள் ...!

இர.உஷா நந்தினி சதீஷ்குமார்
கோவை.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

006. 

செவிலியர் .....


நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்து மயங்கிய உலகில்  மாசில்லா மாண்பினாள் செவிலி
சங்காலம் தொட்டே அவள் தோழியாவாள்
இக்காலத்திலும் நீள்கிறது.....
உடையில் மட்டுமின்றி உள்ளத்திலும் வெண்மையானவள்
உயிர்வலித் தந்து உதிரம் உதிர்த்து பிறசவிக்கும் தருணத்திலும்
பிணி வந்து உடல் வற்றி தோய்ந்த நிலையில் தன் உறவுகள் அறுவெறுக்கும் போதும்....
கனிவும் அன்பும் கலந்து மருந்து இடும் அன்னையாவாள்
சகிப்புத்தன்மையின் அகராதி செவிலியர்
தன்இமை மூடா பிறர் நலம் காக்கும் பெண் அணங்கு உம் சேவைக்கு நிகர் ஏது உலகில்....

அ.சத்பதி
கற்பகநாதர்குளம்.

*************************************************

007 .வெள்ளையுடை தேவதைகள்

வெள்ளை ஆடைகட்டிய
வெண்மதி நிலாக்கள்
தொல்லைகள் பாராது
தொட்டலையும் தொண்டர்கள்
தூயமனதால் துன்பம்
போக்கிடும் தூயவர்கள்

தன்னை அர்ப்பணிக்கும்
தாயாள குணமானவர்கள்
தாதியெனும் அன்னையாய்
தன்னலம் இல்லாத தேவதைகள்

அருவெறுப்பு இல்லாத
அன்பின் சிகரங்கள்
வருவோரைக் காத்து
தாங்கி நலப்படுத்தும் பணியாளர்கள்

 முகம் சுழிக்கா
முன்னின்று முயற்சி
கொடுத்திடும் ஆதவன்கள்
இரவு பகல்
பாராது இயந்திரமாய்
இயங்கிடும் இனியவர்கள்

நேரத்திற்கு நேசமாய்
பார்த்துப் பார்த்துப்
பணி செய்திடும்
பாசக்காரர்கள்

கவித்தாரகை,
கிருஷ் அபி, மன்னார்.

***********************************************

008.

வெள்ளுடை தேவதை

வெள்ளாடை அணிந்து பாதுகாக்கும் தேவதையை

போல  மக்களின் துயரத்தை அறிந்து

தன் இன்ப துன்பத்தை பிறருக்காக

விடுத்து தான் கற்று கொண்ட

பாடத்தை காட்டிலும் அதிக படியான

விஷயங்களை பணி செய்யும் போதே

கற்று கொண்டு அதனை சிறப்பாக 

செய்து முடியவில்லை என்று வருவோர்க்கு

எல்லாம் நான் இருக்கிறேன் என்று

ஆறுதல் வார்த்தைகளை இசைத்து அதை 

செய்து காட்டும் தங்களின் சேவையை

போற்றிட தமிழகராதியில் வார்த்தை இல்லை...!

-பா.கீர்த்தனா , திருப்பூர்.

**************************************************009.

வெள்ளுடைத் தேவதைகள்...

எங்கள் உலகில்.....

சூரியன் மட்டுமே

   தூங்க நிலவில்லை

பசி மட்டுமே

   உண்ண நேரம் இல்லை

பணி மட்டுமே

   ஓய்வுக்கு அனுமதி இல்லை

உழைப்பு மட்டுமே

   முன்னேற ஊதியம் இல்லை

வலி மட்டுமே 

    மருந்திற்கு அன்பு இல்லை

வாசகத்தில் தேவதை .....

    நிஜத்தில்.....!!!!

 

எங்களை தெய்வமாக கொண்டாட வேண்டாம் .... மனிதனாக மதியுங்கள் அதுவே போதும்....

    வெள்ளுடைத் தேவதைகள்...

 

செவிலியாக வாழ்கிறேன்...

நாட்கள் நிமிடமானதே!!!!

நாடுகள் ஊரானதே!!!!

மொழிகள் வசமாதே!!!!

நோயாளிகள் உறவானதே!!!!

பாசம் பரிசனதே!!!!

நம்பிக்கை பழகமானதே!!!!

வாய்ப்புகள் வலை விரித்ததே!!!!

வளர்ச்சிகள் தேடி வந்தத்தே!!!!

சிறகின்றி தேவதை ஆனேன்...

சேவை தூதுவனாய் மதிக்கப்பட்டேன்....

 

*வெள்ளுடைத் தேவதைகள்*

செவிலியராக வாழ்ந்துப்பார்...

இரவிலும் சூரியன் காண்பாய் 

பகலிலும் விண்மீன் காண்பாய் 

மணிநேரம் வினாடி என்பாய்

சாதனைகள் எளிதென்பாய்

வேகம் கற்றுக்கொள்வாய்

பொறுமை என் பெயரேன்பாய்

கடமை தெய்வமென்பாய்

விடுமுறை அறிதென்பாய்

நோய்கள் நண்பனென்பாய்

தூக்கம் எதிரியென்பாய்

வாழ்க்கையை ஆச்சரியமக்கிய அழகே!!! எங்கள் செவிலியத் துறை...

                         சாயிராம் ர.சி,

                          செவிலியன் 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

010 .

சிறகில்லாத் தேவதைகள் ...

பிணி காலத்திலும்  பணியென்று பாராமல் 
நலம் விசாரித்து பக்குவமாய் 
பார்த்துக் கொள்பவர்கள்... 
மனச்சுமையை போக்கி 
காயம்பட்டோரை
கண்மணியாய் காத்து பாதுகாப்பவர்கள்...

ஆறுதல் மொழி பேசியே
அன்பை மருந்தில் கலந்து தந்திட்டே
அன்னையாய் திகழ்பவர்கள்.. 
தளர்ந்த மனதை
தாயுள்ளத்தோடு வருடி தருபவர்கள்.. 
தன்னலமற்ற சேவையில்
தன்னை மனதார முழுதாய் 
ஈடுபடுத்திக் கொண்டவர்கள்..

உற்றாரும் மற்றாரும் செய்யாத
உன்னத செயல்களை அருவருப்பின்றி
முகம் கோணாமல் செய்பவர்கள்.. 
சகிப்புத் தன்மை கொண்டு
செவிலியர் செய்வது தொழிலல்ல அது தன்னலமற்றத் தொண்டு... 

மொத்தத்தில்.. 
தன்னுயிரைச் துச்சமாக மதித்து
பிறர் உயிரை காக்கும் 
சிறகில்லாத் தேவதைகள் ...

செல்வன் கோ. ஶ்ரீஅஹிலேஷ்
கும்பகோணம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

011..

மனிதரில் புனிதர்கள்.. 

அன்னை அரவணைக்கும் முன்
நம்மை  அரவணைத்தத்தவர்கள்
அன்பால் நம்மை அசரவைத்தவர்கள்... 

காலநேரம் கருதாமல் பாரபட்சம் பார்க்காமல்
கடமையே கண்ணாய் கொண்டு
கருணையுடன் உழைப்பவர்கள்
கவனிப்பில் நோயாளிக்கு கடவுளாய்த் தெரிபவர்கள்

செய்யும் தொழிலையே
சேவையாய் செய்கின்றவர்கள்
அவர்கள் தான்
மனிதரில் புனிதராய் திகழும்
செவிலியர்கள்... 
அவர்களின் அன்பான பணிவிடையும் ஆறுதல் வார்த்தையும்
வலி சுமக்கும்  மனதிற்கு 
அருமருந்தாய் அமைந்திடும்.. 

சாதி மதம் மட்டுமல்ல
நாடும் மொழியுங்கூட இவர்களுக்கு
பேதமில்லை...
இதில்  உயர்வாய் எண்ணி
உயர்ந்தவர் சிலர்
இன்னும் உன்னதமாய் எண்ணி
உழைப்பவர் பலர்... 

நமக்கு உதவும் அவர்களின்
உணர்வுகளை மதிப்போம்
அவர்களைக் கொண்டாடுவோம்... 

செல்வன். கோ. ஶ்ரீஆதேஷ்
கும்பகோணம்.

###################################

012.

அன்னை தெரசாவின் அன்பு வாரிசுகள்...

பளிச்சென்று மின்னிடும் பௌர்ணமியாய்
வெண்ணிற ஆடையில் 
உலா வரும் தேவதைகள்...
மண் மீது இறங்கி வந்த இறை தூதர்கள்
உயிர் காக்கும் செவிலியர்கள்...

நோய் தாக்கும் போர்க்களத்தில்
வேகத்துடனும் விவேகத்துடனும்
நோயோடு போராடிட
முன் நிற்கும் வீராங்கனைகள்...
உடைகள் மட்டுமல்ல
உள்ளமும் வெள்ளையாய் விளங்கிடவே
நம் கண்களில் புலப்படும் தெய்வங்கள்..

தன் மனதின் காயங்களை மறைத்து
பிறரின் காயங்களுக்கு மருந்தாகிடுபவர்கள்...
கொரோனா போன்ற
கொள்ளை நோய் காலத்திலும்
நம்மை கருத்தோடு கவனித்துக் கொண்டவர்கள்...

தொட்டால் தொற்றிக்கொள்ளும்
தொழுநோயாளிகளிடமும்
அருவருப்பின்றி அக்கறை காட்டிடும்
அன்னையும் அவர்களே...
எந்நிலையிலும் புன்னகை மாறா பூக்களாய்
வலம் வரும் அவர்கள்
அன்னை தெரசாவின் அன்பு வாரிசுகள்...

கண்ணில் காணாதத் தெய்வங்களை
போற்றிடும் நாம்
நம் கண்கண்ட தெய்வங்களையும் போற்றுவோம்.. 

கவிஞர் சசிகலா திருமால்
கும்பகோணம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

013.வெண்ணிற புறாக்கள். 
வெண்மை தூய்மையின் அடையாளம் முகவரி. 
ஓய்வறியா தேனீக்கள் தன்னலமற்ற தாரகைகள். 
பசி அறிந்திலர் தூக்கம் இல்லை
தன் குடும்பம் மக்கள் சிந்தியார்
உறவுகளே சேவை ஆற்ற யோசிக்கும் காலம்
கட்டிய மனைவியும் பெற்ற பிள்ளையும்
தொட்டுத் தூக்க துடைக்க முகம் சுளிக்க 
எந்த வித உறவும் உரிமையும்
அற்ற செவிலியர் செவ்வனே
கடமை செய்து முடித்திடுவர்
அருவருப்போ சலிப்போ இன்றி
சத்தமின்றி சேவை செய்திடும்
நடமாடும் நல்லெண்ண தெய்வங்கள். 
அவர்களும் மனிதர்தானே உணர்வு யாவருக்கும் ஒன்றுதானே
தொழிலாக பார்க்கவில்லை மனித நேயமும் தாய்மையும்
அங்கே கோலோச்சுகிறது. 
பிணவாடையும் ரத்தமும் சதையும் அலுக்கவில்லை. 
சோற்றில் எல்லாம் புறந்தள்ளி
கை வைத்து உண்கின்றனர். 
இரவு பகல் குளிர் கோடை பனி
உறைக்கவில்லை. 
எந்நேரமும் பணி எக்காலமும் கடமை
குப்பைகளை நறுமணமாக்கும்
வாடா வாச மலர்கள்
குறைத்து மதிப்பிட வேண்டாம். 
நோவு வந்தால் அனைவரும் அநாதை தான்
உற்ற உறவுகளாய் உரிமைகளாய் தேவதைகள். 
ல. மதுமதி லட்சுமணன் உசிலம்பட்டி மதுரை மாவட்டம் உதவி தலைமை ஆசிரியை

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

014.

வெள்ளாடை தேவதை

அன்னை எனை அரவணைக்கும் முன்னே

ஆசையாய் கையிலேந்தி முத்தம் தந்தாய்

இரவும் பகலும் அயராத உன் உழைப்பிற்கு

ஈடுஇணை இவ்வுலகில் ஏதும் உண்டோ

உலகமே தொற்று வந்து மூழ்கிய போதும் 

உடலில் பிணி அண்டினால் உற்றார் கைவிட்டாலும்

ஊழலின்றி சிறப்பாய் உன் பணி தொடர்ந்தது

எத்தனை எத்தனை மன காயம் இருந்தாலும் அத்தனையையும்

ஏர் முகத்துடன் மறந்து மற்றவர்கள் காயங்களுக்கு மருந்து அளித்து

ஐயத்துடன் இருப்பவர்களுக்கு புன்முகத்துடன் நற்செய்தி சொல்லி ஆற்றுபடுத்துபவளே

ஒதுக்கிவிட்டு புறம் தள்ளும்போதும் நம்மை

ஓயாமல் பணி செய்து மூத்தவருக்கு சகோதரியாக

ஔடதம் இல்லாமலே முதியவருக்கு மகளாய் 

வெள்ளாடையை நேர்த்தியாய் உடுத்தி உலாவரும் தேவதை நீ

உன் சேவை இந்நாட்டிற்கு தேவை.

கு.வேலம்மாள்
கமுதி வட்டம் இராமநாதபுரம் மாவட்டம்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

015.

 வெள்ளுடை தேவதைகள் ...

பூமியை 
வெளுக்க
 நீரோடை 
இந்த
 வெள்ளுடை!

புனித 
கோபுரங்கள்
 வெள்ளுடைய
 அணிந்த
 தாய்மார்கள்!

நோயாளி
 நோகாமல் 
நோய்
 தீர்க்கும்
 தாய்மார்கள்!

கைமாறு 
கருதாத 
கருணையின்
 வடிவங்கள்!

உண்ண
 நேரமில்லை 
உங்கள் 
சேவையை 
சொல்ல 
சொல்லோ
 போதவில்லை!

புன்னகைத்தே
 பூத்திருக்கும் 
பூவுலக 
பூவினங்கள்!

தன் வலியை
 பொறுத்துக் 
கொண்டு நம் 
வலியை 
நீக்கும்
 தேனீக்கள்!

தன் சுகத்தை
 மறந்து நம் 
சுகம் பேணும்
 தேவதைகள்!

அன்னை
 தெரேசாவின்
 அவதாரங்கள்!
 சேவையில்
 தென்னையாய்
 உயர்ந்த 
வெள்ளுடை
 தேவதைகள்!

 அருவருக்கும்
 தொழுநோய்
 உங்களால் 
அறுவடை 
ஆனது!

 மதங்களில்
 நீங்கள்
 விழுவதில்லை!
 ஆதங்கமாய்
 ஒரு வார்த்தை
 சொன்னதில்லை!

 சாதியின்
 சகதியில்
 நுழைவதில்லை!
பாதி
 நிலவாய் 
தேய்வதும் 
இல்லை!

எனக்கு
 வந்த நோயை
 உனக்கு என்று
 நினைக்கிறாய், 
கால நேரம் 
பாராமல்
 காதலால் 
காக்கிறாய்!

முககவசம்
 அணிந்து 
கொண்டு 
எங்கள் 
சுவாசத்தை
 மீட்டெடுத்தாய்!

 கொரோனாவின்
 கொடுக்குகளை
 போராடி 
வெட்டி 
விட்டாய்!

 மருத்துவ
 சேவையின்
 மகத்துவம்
 உங்களுக்கே,
 மனித உருவில்
 தெய்வமாய்
 கிடைத்தது
 எங்களுக்கே!

குருதியோடும்
 போர்க்களத்தில்
 உறுதியோடு
 நிற்கிறாய்!

 பொதுநலத்தில்
 தென்றலாய்
 பூமியெங்கும்
 தவழுகிறாய்!

நீங்கள்
 வெள்ளுடையில்
 புகுந்து 
கொண்ட 
உயிர் காக்கும்
 தெய்வங்கள்!

பகலில் 
சூரியனாய் 
வந்தாலும்
 சுடுவதில்லை!

உங்கள் 
வார்த்தை
 இரவில் 
நிலவாய் 
வந்தாலும் 
சேவையில்
 தேய்வதில்லை!

 நீங்கள் 
உயிர்களை 
இயக்கும்
 காற்று ,
அன்பினை 
சுரக்கும்
 ஊற்று!
இனியும்
 ஓயாது 
உன் பணியை 
ஆற்று!
உன் புகழை
 தினம் பாடும்
 நான் ஒரு
 தென்னங்கீற்று!

பெயர்: மிஜினா
 வகுப்பு:12
 முகவரி: 180, சண்முகா நகர் முதல் குறுக்குத்தெரு, கருவடிக்குப்பம், புதுவை - 605008
 @@@@@@@@@@@@@@@@@@@@@@@

வெள்ளுடை தேவதைகள்

 தாய்க்கு முன் குழந்தையை அரவணைக்கும் தாயே !

 குழந்தையை தாய் போல் காக்கும் தாயே!
 சொந்தமில்லாமல் நோயாளியை தன் பந்தமாக எண்ணி சேவை செய்யும் தாயே!

 தன் வாழ்க்கையை சேவைக்காக அர்ப்பணிக்கும் தாயே!

 தன்னலமற்று பொதுநலத்திற்காக பாடுபடும் தாயே!

 எவ்உயிரையும் தன் உயிராய் என்னும் தாயே!
 சகிப்புத்தன்மையை சரளமாய் செய்யும் தாயே!

 மருத்துவருக்கு மேலான தாயே, உன்னையன்றி உலகம் இயங்காதே!

 கண் உறங்காமல் நீ இருப்பாய், எங்கள் கண் கலங்காமல் நீ பார்ப்பாய்!

 ஊரார் குழந்தையை ஊட்டி வளர்த்தால் தன் குழந்தை தானே வளரும் என்று அனைவரையும் தன் குழந்தையாய் நினைத்து சேவை செய்யும் தாயே!

 உன் வலியை பொறுத்து எங்களின் வலித்தீர்க்கும் தாயே!

 தூய்மைக்கு அடையாளமான வெள்ளாடை அணிந்து கொண்டு நோயாளியின் நோயைகளையும் களையும்  தாயே!

 மருத்துவர் மருத்துவம் செய்வார் நீயோ நோயாளிக்கு அனைத்தையும் செய்வாய்!

 தீண்டாமை என்பது உன்னிடத்தில் இல்லை.

 நோயாளியிடம் இன வேறுபாடின்றி இனிதாய்  அவர்களின் இன்னலைப் போக்கும் தாயே!

 செவி என்பது மனிதனின் உடலின் அற்புத படைப்பு அதனாலே அற்புதமான உங்களுக்கு வந்ததோ பெயர் செவிலியர்?

 நோயாளி கேட்கும் முன் அவன் தேவை அறிந்து செயல்படும் தாயே!

ஆறுதல் மொழி பேசி அன்னையின்  அன்பை மருந்தில் கலந்து சேவை செய்யும் நீயே மனிதரில் புனிதர்!

 கதிரவனுக்கு இரவில் ஓய்வு, நிலவுக்கு பகலில் ஓய்வு, உனக்கோ இல்லை ஒரு ஓய்வு!

 வெட்டப்பட்ட கை, குத்தப்பட்ட வயிறு, கிழிக்கப்பட்ட தோல், உடைக்கப்பட்ட கால், சிதைக்கப்பட்ட குருதி எதுவானாலும் அஞ்சாமல் சுத்தப்படுத்தி கட்டு போடும் துணிவரே!

 தலைமை மருத்துவரின் எரிச்சல், ஊசி போடும் நோயாளியின் கதறல், காயத்திற்கு மருந்து போடும் நோயாளியின் அலறல், உடல்நிலை சரியில்லாதவர்களின் உளறல் இவற்றை தாங்கிக் கொள்ளும் பூமா தேவியே!

 இரவில் நோயாளி நன்கு தூங்க நீ விழிப்பாயே!

 அன்னை தெரேசாவாய், நைட்டிங்கால் அம்மையாராய் வாழும் செவிலிருக்கு செவிலியர் தின வாழ்த்துக்கள்!!!

மிஜினா,
புதுவை.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

016.

வெள்ளுடைத் தேவதைகள் 

செய்யும் சேவையில் மகிழ்ச்சியோடு
இரவு பகல் பார்க்காமல்
விழிக்கு உறக்கம் கொடுக்காமல்
உயிரைக் காக்கும் பணியை
வாழ்க்கையில் தெய்வமாக நினைத்த
வெள்ளுடை அணிந்த அழகு தேவதைகளே

உடலுக்கு ஓய்வு கொடுக்காமல்
மனிதனின் காயங்களை மறைத்து
உணவென்னும் மருந்தை நேரத்தோடு
புன்னகையால் அருகில் கவனித்த
வெள்ளுடைத்  அணிந்த அழகு தேவதைகளே

குடும்பம்  நினைவுகளை நினைக்காமல்
மாற்ற கவலைகளை எண்ணி
முகத்தை சோகத்தில் விழுகாமல்
செய்யும் பணியில் தவறாமல்
உயிர்களுக்கு அன்பு செலுத்திய
வெள்ளுடைத்  அணிந்த அழகு தேவதைகளே

இரா.மோகனதாஸ் சிவலிங்கம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

017.

வெள்ளாடை  அணிந்தவளே
வெள்ளை மனம் உடையவளே!! 
சகிப்புத்தன்மை உடையவளே
நீ செய்வது தொழில் அல்ல தொண்டு!! 
காலை வரும் சூரியனுக்கு
மாலை வரும் நிலாவிற்கும்  கூட ஓய்வுண்டு! 
கால நேரம் பார்க்காமல் உழைக்கும்
எம் தேவதைகளுக்கு ஓய்வில்லை!! 
ஒன்றும் ஆகாது என ஆறுதல் கூறுவாள்
ஒற்றை ஆளாய் பாதுகாப்பாள்!! 
அவளின் அன்பான பணிவிடையும், 
ஆறுதல் வார்த்தையும், 
வெந்த மனதிற்கு மருந்தாக அமையும்!! 
காவல் காக்கும் தெய்வங்களாய்,
செவிலியர் என்ற புனைப்பெயரில், 
இறக்கை வைத்திருப்பவள்  தான் தேவதை என்பார்கள், 
இரக்க குணம் உடைய செவிலியரும் தேவதைகள் தான்!!! 

ச. மதுமிதா,
இளங்கலை தமிழ் இரண்டாம் ஆண்டு, 
தூய வளனார் கல்லூரி, திருச்சிராப்பள்ளி.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

018.

"அவள்"

அன்பு அவளின் அடையாளம்

அரவணைப்பு அவளின் பிரதானம்

 இன்பம் ஆவளால் வரவழைக்கப்படுவது

 துன்பம் அவளால் தொலைக்கப்படுவது

 தன்னலம் அவள் அகராதியில் இல்லாத ஒன்று

பிறர் நலம் அவள் அகத்தில் பிறந்த ஒன்று

 உறக்கம் அவளிடம் உடன் இருக்காது

 ஊண் உண்ணிட அவளிடம் நேரம் இருக்காது

ஓய்வு அவளிடம் ஓய்வெடுக்காது

 விடுமுறை அவளிடம் எதிர்பார்க்காது

ஒரு உயிருக்கு உயிர் தந்தால் அவள் தாய்..

பல உயிர்களின் உயிர் காத்தால்
......அவள்
வெள்ளுடைத் தேவதை செவிலியர் தாய்

 -செவிலியர் திருமதி து. சுபா

அரசு ஆரம்ப சுகாதார நிலையம்,
 ஜமீன் கொல்லன் கொண்டான்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

019.

*வெள்ளுடைத் தேவதை* ..!

அன்னை வடிவில் அதிசய தேவதை
என்றும் வணங்கனும் ஈடணம் போற்றிட
உன்னுயிரை காத்திடுவாள் உண்மையின் தெய்வமாய் 
என்னுயிரை தந்தாள் இவள்...

கண்ணுறங்கும் நேரம் கடமை தவறாது
மண்ணுறங்கா நாளாய் மனமும் தளராது
புண்ணான தேகத்தைப் புன்னகையாய் கையாண்டு
விண்ணையும் மெய்பிப்பாள் வென்று...

வெள்ளாடை போத்திய வெண்மதியின் நாயகி
கள்ளமனம் கொள்ளா கதையின் இளவரசி
துள்ளியோடும் மான்போல் துணிவின் செவிலியரே
வள்ளல் குணத்தின் வளர்ப்பு...

தவிக்கும்நோ யாளிக்கு தாகமும் தீர்ப்பாள்
செவிகேட்டு வேலைசெய்வாள் சேய்போல் தினமும்
புவியின் மருத்துவத்தில் பூமகளே நாளும்
செவிலியரின் மாண்பே செகம்...

ஈ.தவணிதன்,
பல்லடம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

020. 

*செவிலியர்  வணக்கும்* *தேவதை* 

அன்னைப் போன்று மறுவடிவம்

ஆதரவற்றோர்க்கு
உதவிடும் அன்புள்ளம்

இன்முகத்துடன் வருகை தருவார்

ஈடில்லா சேவை 
ஆற்றிடுவார்

உழைப்பில் எந்நேரமும்
பணிபுரிவார்

ஊக்கமளித்து உடல்நலம் பேணுவார்

எல்லா நாட்டவரும்
உடன்பிறந்தவளாய் மதித்திடுவார்

ஏழைக்கு உதவிட
வெள்ளாடையில் வருவார்  

ஐயமிருப்பின் ஆலோசனை தருவார்

ஒளிதரும் மெழுகாய்
இருப்பார்

ஓடோடிச் செல்லும்
நடமாடும் தெய்வமாவார்

ஔவை தமிழ்மகளெனில்
செவிலியர் தேவதையாவாள்

-படைப்பாக்கம்
கவிஞர்.ச.குமார்
சிவகங்கை

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

021

செவிலியர் 

செவிலியர் ஒரு மருத்துவருக்கு நிகரானவர்//
செவிலியர் நோயாளியிடம் அன்பாய் பேசுபவர்//
நோயாளிக்கு நோய் போக்கும் கடவுளே//
இரவு பகல் பாராமல் சேவை செய்பவரே//
தாயின் வயிற்றில் தவம் செய்தவர்களுக்கே//
மருத்துவர் பதவியும் செவிலியர் பதவியும்//
நோயாளிகளுக்கு ஆறுதலாக தாயாக சகோதரனாக//
செயல்பட்டு மருத்துவம் செய்பவள் நீயே//
கொரோனா காலத்தில் தன் உயிரை நினைக்காமல்//
பிற உயிர்களை நினைத்து ஓடி ஓடி//
 மருத்துவ உதவிகளை செய்தது செவிலியர்களே//
உண்மையை கூறும் இரண்டு இடங்கள் //
ஒன்று மருத்துவரிடம் இரண்டு ஆசிரியரிடம்//
பிற உயிர்களைக் காப்பாற்றும் கடவுள் நீயே//
இருபத்து நான்கு மணி நேரமும் //
ஓய்வே இல்லாமல் சேவை செய்யும் கடவுளே//

-ப.பஞ்சாபகேசன்
முதுகலை ஆசிரியர் அரசு மேல் நிலைப்பள்ளி பொன்ரப்பி.

###################################

022 

வெள்ளுடைத் தேவதைகள்!   

வெளியில்  தெரியாத வெள்ளுடைத் தேவதைகளே!

வெயிலென்றும் பாராமல் மழையென்றும் பாராமல்

வெள்ளை உடையோடும், வெள்ளை உள்ளத்தோடும்

வேகமாய்ச் சுழன்று வேலை செய்யும் வீராங்கனைகளே!

உங்களின் பணி உலகுக்கு மிகவும் உன்னதமானது   

தியாகத்தில் நீங்களொரு எரியும் மெழுகுவர்த்தி!

நோயாளிகளுக்கு நீங்களொரு கலங்கரை விளக்கம்!

குணமடைந்தவர்களுக்கு நீங்களொரு மணக்கும் ஊதுபத்தி!

உங்களின் ஆறுதல் வார்த்தைகள் என்றும் அணையாவிளக்கு! 

தங்கமான உங்களின் இதயம் இமயத்தைவிட மிகவும் உயர்ந்தது

பலரின் இதயத்துடிப்புகளை நீங்கள் நீட்டிக்க உதவியதாலேயே 

அது பலரின் இதயங்களில் நிரந்தரமாய் இடம்பிடித்துள்ளது!

அன்புகாட்டுவதில் நீங்கள் கனிவு கொண்ட ஓர் அன்னை 

கண்டிப்பாய்க் கவனித்து மருந்து கொடுப்பதில் ஒரு பாட்டி  

பாசமழையைப் பொழிந்து பக்குவம் செய்வதில் ஒரு சகோதரி

துன்பத்தில் தோள்கொடுத்துத் தூணாய் நிற்பதில் ஒரு தோழி 

ஒப்பற்ற மனுஷியாய் இருந்து ஊருக்கே பணிசெய்து

ஊண்உறக்கம், துறந்தாலும் இன்முகமாய் வளைய வந்து 

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமெனும் நீவிர்  

நோய்நொடியின்றி நீடூழி வாழிய வாழிய வாழியவே......... ! 

- டி.என்..இமாஜான், சிங்கப்பூர்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

023. 

அன்பான வார்த்தை ஆயிரம் மாத்திரைகளும் சமம்

தேவைப்படும் போது அளவை உயர்த்தி

அன்பில் இமயமாய் ஆறுதல் பேசி

 ஆயிரம் சோகங்களை மறைத்து புன்சிரிப்பால்

 அச்சத்தை துட்சமெனப் போக்கும்  மருந்து

 இன்னல் நீக்கி இன்பத்தை தந்து

 வெள்ளை உடையில் வலம் வரும் தேவதைகள்...

கடமையை கண்ணாக உயிராக போற்றி

 நேரத்தை தன்  சேவைக்காகவே செலவிட்டு

 பினியை குணமாக்கும் அதிசய தேவதை 

கண்டிப்பில் தந்தையாய் பாசத்தில் சகோதரியாய்

 புத்திமதி புகட்டுவதில் நல் ஆசானாய் 

உணர்வை பரிமாறும் பராசக்தி

 தன் நலன்  கருதா விடிவெள்ளி

  கொரோனா முதல் அலை இரண்டாம் அலை

 மூன்றாம் அலை அத்தனை அலையும் சமாளித்த 

நோயளியின் பிணி நீக்கிய நங்கைகள்

-முனைவர் ப. விக்னேஸ்வரி
தமிழ்த்துறை
 உதவிப் பேராசிரியர்
 நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

024. 

வெள்ளை தேவதை

வெள்ளை தேவதையே வெண்ணிரபூவே
உன் மனம் வெள்ளை 
உலகிற்கு பணிவிடை செய்கிறாய்
சமுதாயத்திற்கு சேவை செய்கிறாய்
உயிரை காக்க நீ உழைக்கிறாய்
இரவு பகல் பாராது பிறர் உடல்நலனை காக்கிறாய். பிறர் உயிரை தன் உயிர் என மதிக்கறாய்
இறைவன் தந்த தேவதையே 
மருத்துவரின வலக்கை நீ
உதிரம்  வேண்டும் என்றால் அதற்க்கும் உதவி செய்தாய்.
கொரனா காலத்தில் இன்முகத்துடன் பணி
செய்தாய் . அப்போது  குழந்தைகளை பாதுகாக்க செவிலியரும் உண்டு
தெய்வத்திள மறு அவதாரம நீயே

இறைவன் அனுப்பிய வெள்ளை தேவதையே

கவிஞர் லலிதா ஷ்யாம் 
மதுரை.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

025. 

செவிலியர் தினம் சேவைச் செம்மல் விருது

செவிலியர்கள் தன்னலமில்லா   தாயுள்ளம் கொண்டவர்கள்...!

தனிப்பெரும் தொண்டின்  வடிவமாக திகழ்பவர்கள்...!

குருதி வாடையிலும் பச்சிளம் குழந்தையை...! 

கண்விழித்துத்  தனைவருத்திக்  கருத்தாக காப்பவர்கள்...!

கோமகளாம் செவிலித்தாயை வணங்குதல் சிறப்பே...!

அருவியைப் போன்றே  அருளினை வழங்கும்...!

கருணையின் வடிவாம் கண்மணித் 
செவிலித்தாயே...! 

தன்பசி மறந்து சகிப்புளம் கொண்டு...!

தியாகத்தின் உருவமாக திகழும் உன்னதமானவர்களே...!

பூமியிலுள்ள  உயிர்கலேல்லாம்
சுயநலத்தோடு வாழ்கின்றது...!

செவிலித்தாயே 
நீ மட்டும்  பொதுநலம் பார்க்கிறாய்...!

மக்களுக்கென்றே அக்கறை உற்று   ஆற்றலாய் உழைப்பவர்கள்...!

மருத்துவப் பணியின் உன்னதம் உணர்ந்தவர்கள்...!

மருந்து வாடையிலும் 
மனிதநேயம் காப்பவர்கள்...!

மனதிற்கும் உடலுக்கும் மருந்திடும் சேவகிகள்...!

பூலோகத்தின் சிறகில்லா வெள்ளுடைத்  தேவதைகள் செவிலியர்கள்...!

-முனைவர் .ம.ப.சாந்தி சங்கரி ஆதித்யா, வித்யாஷ்ரம், புதுச்சேரி.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

026. 

மகிழ்ச்சி எப் எம் *கவிதை தலைப்பு* *வெள்ளுடை* *தேவதைகள்* 

தன்னலமில்லா தாய் உள்ளம்கொண்டவர்கள் !

தனிப்பெரும் தொண்டின்வடிவமாக திகழ்பவர்கள்!

 கண் விழித்து தனை வருத்தி கருத்தாக காப்பவர்கள்!

 கடவுளுக்கு நிகராக காட்சிஅளிப்பவர்கள் !

கருணையின் வடிவாம் கண்மணி செவிலித்தாய் !

வெள்ளுடை தேவதையாய் வலம்  வருபவர்கள்!

 பிறர் நலனுக்காக உழைக்கும் தியாகச் செம்மல் !

மருத்துவப் பணியின் உன்னதம்உணர்ந்தவர்கள் !

மருந்து வாடையிலும் மனிதநேயம்காப்பவர்கள் !

மனதிற்கும்உடலுக்கும்மருந்திடும்சேவகிகள்!

 எவ்வித ரத்த உறவும் இன்றி!

 உதிரத்தோடு இருந்த என்னை இன்முகத்தோடு !

கையில்ஏந்திய கருணைத்தாய் நீ!
 அன்புமழைபொழிவதில் அன்னை தெரசா நீ !

உன் கனிவான பேச்சில் காயம் ஆறிவிடும்!

 இரக்கமான பார்வையில் இன்னல் தொலைந்திடும்!

 உன் நயமான பேச்சில் நம்பிக்கை பிறந்திடும்!
 வாழ்வையேசேவைக்காக அர்ப்பணித்த செவிலி தாயே !வாழ்க! நீவிர்! எந்நாளும் !

 -தலைமை ஆசிரியர் ந.மலர்க்கொடி கருப்பூர் பொய்யூர்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

027.

வெள்ளுடைத் தேவதைகள்!


பொறுமை என்ற சொல்லின்
அருமையினை உலகுக்கு உணர்த்திய
வெறுமையறியா வெள்ளையுடை தேவதைகள்!

பள்ளிக்கு செல்லும் பச்சிளம் பாலகர் முதல்
பல்லில்லா தள்ளும் தளர்வுற்ற முதியவர் வரை
கள்ளம் கபடமின்றி பேணிக் காக்கும்
உள்ளமும், திறமையுடைய
வெள்ளையுடை நாயகிகள் நீங்கள்!

சின்னப் பெண் முதல் 
கன்னம் குழி விழுந்த முதியவர் வரை 
எண்ணம் முழுவதும் சேவை இருப்பது
திண்ணம் என நிரூபிக்கும்
வண்ண உடை மறந்த 
வெள்ளையுடை தேவதைகள்!

அடம் பிடிக்கும் நோயாளியையும்
திடமாக பேசி மருந்து கொடுக்கும்
கடமையுடைய உங்களின்
கொடை போன்ற பொறுமை
தடையில்லாது இயங்கும் கருணை
குடையில் நிழல் கொடுக்கும் உங்களின்
உடையும் மனம் போல வெள்ளையே!

எத்தனை முறை அழைத்தாலும்
அத்துணை முறையும் முகம் சுளிக்காத
சுத்தமான மனதுடன் ஓடி வரும் உங்களின்
நித்தமான பணி சேவை என்பதால்
சுத்தமான வெள்ளை உடையில்
மத்தவருக்காக வாழும் நடமாடும் தேவதைகள்!

ஊசியை வலிக்காமல் செலுத்துவதிலும்
தூசியில்லா அறையில் நோயாளியின்
மாசுகளை சுத்தம் செய்து அன்புடன்
பேசும் உங்களின் குரல் கேட்டே
குணமடையும் நோயாளிகள் பலர்!
செவிலியர்களே..... தொடரட்டும்
தவிப்பவர்களை காக்கும் உங்கள் பணி!


த.வேல்முருகன்,
ஈரோடு.
செல்: 8825553939

@@@@@@@@@@@@@@@@@@@@@@

028.வெள்ளுடை தேவதை
...... ...... ..... ..... ..... ..... .... 
மகப்பேறுக்கு தவமிருக்கும் மகளிருக்கு

  மத்தியில் வெள்ளுடை தேவதைகளாக

அகங்குளிர அணிவகுக்கும் அன்புடையோரே

 அன்றாடம் உமது பணியால்

ஜகமெங்கும் மனித க்குழந்தைகள்

ஜனித்திட உதவும் உம் கரங்கள்

யுகந்தோறும் உங்கள் புகழ்

என்றும் நிலைபெற வாழ்த்துக்கள்.


     .. மு. கிருஷ்ணன்

கவிஞர்

கல்லிடைகுறிச்சி

நெல்லை மாவட்டம் .

**************************************************029.

வெள்ளுடைத் தேவதைகள்
*********************
*ஞாயிறு எழுமுன்னே
விழித்து...
வீட்டு வேலைகளையெல்லாம்
செய்துமுடித்து...
காலத்தை கையில் கட்டிக்கொண்டு...
பெண்மை...
எப்பொழுதும் ஆசைப்படும்
பூவையும்... வளையலையும்...
கொலுசையும்...
கை விளக்கேந்திய தாரகையின்
வழியில் செல்ல
தியாகம் செய்துவிட்டு...
அலமாரியை அவள் பார்க்க-அங்கே
அடுக்கடுக்காய்...
அழகழகாய் இருக்கும் 
வண்ண ஆடைகள்...
வஞ்சியிவளை வசியபடுத்த நினைக்கவே...
பெண்மை ஏனோ.!?
வெண்மையை தேடியது!அது
இலைமறை காய்போல்நின்று 
வெட்கப்பட்டது!
கூட இருந்த ஆடைகளுக்கு
சமாதானம் சொல்லிவிட்டு 
அவள் தேகத்தோடு 
காதல் கொண்டது!
காதலர்கள் இருவரும்
மருத்துவமேடை ஏறி
பம்பரமாய் சுழன்று...
இரவும் பகலும்
சேவைக்கவி பாடினார்கள்!

*"நேரத்திற்கு சாப்பிட வேண்டும்...
நேரத்திற்கு தூங்க வேண்டும்" என்று
நோயாளிகளிடம் சொல்லும் இவர்கள்...
நேரத்திற்கு சாப்பிட்டதும் இல்லை...
தூங்கியதும் இல்லை-இந்த
பாவையின் சேவை
பாரத நாட்டுக்கு தேவை!
சாதிமத இனமொழி
பேதமின்றி
தாய்மையின் குணத்தையும்
பொறுமையையும்
இரு கரங்களாக கொண்டு
சமத்துவத்தை நாளும்
நிலைநிறுத்தும் 
செவிலியர்களே.!
 என்றுமே நீங்கள்...
பூமியில் உலாவரும் 
வெள்ளுடைத் தேவதைகளே!
சேவையின் விதைகளே!!
               இப்படிக்கு
எழுத்தாளர் எஸ்.மோகனாMsc.,
திருநங்கை சமூக ஆர்வலர்.,
சென்னை
7639951182.

###################################

030.

கவிதைத் தலைப்பு:
 *வெள்ளுடைத்   தேவதைகள்** 

வாழ்வையே சேவைக்காக அர்ப்பணித்த.... 

வெள்ளுடைத் தேவதையே....! 

அன்னைக்கும் அன்னை ஆகியவள் நீ....! 

அறிவுரை கூறுவதில் ஆன்றோரும் நீ...! 

இறைவனின் இன்னொரு பிறவியும் நீ....! 

ஈன்றெடுக்காத இன்னொரு தாயும் நீ...! 

அரிவை அகவையில் இருந்தாலும் அறியாமல் கூட.... 

அலங்காரம் செய்வதைத் தவிர்த்தாய் நீ....! 

எவ்வித ரத்த உறவும் இன்றி.....! 

உதிரத்தோடு இருந்த என்னை இன்முகத்தோடு..... 

கையில் ஏந்திய கருணைத் தேவதை நீ.....! 

அன்புமழைப் பொழிவதில் அன்னைதெரேசா நீ....! 

அகிலம் போற்றும் ஆளுமை நீ....! 

உன் கனிவானப்   பேச்சில் காயம் ஆறிவிடும்.....! 

இரக்கமான பார்வையில் இன்னல் தொலைந்துபோகும்....! 

உன் நயமானப் பேச்சில் நம்பிக்கை வளர்ந்திடும்....!

வெள்ளுடைத் தேவதையே.... 

உன் சேவை என்றும் தேவையே.....! 

 ப. லாவண்யா,

       விக்கிரவாண்டி

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

031.வெள்ளுடைத்   தேவதைகள்//     உடலிலிருந்து         உருக்குமந்த கொடுநோயை விரட்டுவதே// கடனென்று சூழலுமந்த செவிலியரை போற்றிடுவோம் //         புழுநெளியும் புண்களின்  கொடுநாற்றம் சகித்தபடி//   குறுநகையை       துணைக் கொண்டு துடைத்தேதான் மருந்திடுவார்// பெற்றெடுத்த அன்னையவள் அன்புக்கு இணையாக// குற்றமேதும் இல்லாமல் கருணையுடன் பணிபுரிவாள்//வெள்ளுடையை       தரித்தபடி பவனிவரும் தேவதைகள்//          கள்ளமில்லா உள்ளத்துடன் கடமையாற்றும் காரிகைகள் //கழிவுகளை நாம்கழித்து கிடக்கையிலே கிடந்தாலும்//   இழிவின்றி அதையகற்றி தூய்மையிடும் ஔதூயவர்கள் //              நோய் கொண்டு பாய்படுத்து புரளுகின்ற பேர்களையும்//               சேய்போன்று பாசத்துடன் பராமரிக்கும் தெய்வங்கள்// இறைவனின் படைப்பினிலே இருக்கின்றார் உயர்ந்தோர்கள்// உயர்ந்தோரில்                 மிகஉயர்வு நமைகாக்கும் செவிலியரே//             பிணிநீக்கும் கல்விகற்று பணிபுரியும் தியாகிகளை//              இனியாகிலும் மேன்மையிட்டு மனதார வாழ்த்திடுவோம்//                   

 அன்புடன் கோவை சேகர்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

032.

தலைப்பு
 வெள்ளை உடை தேவதைகள்

 பசித்ததோ  புசித்தாரோ தெரியாது!

 பகல் முழுவதும் பலவித மருந்தோடு!

 ஒவ்வொரு வீடாய் நோயாளியை தேட!

 இருக்கும் வீடெல்லாம் இன்  முகத்தோடு பேசும்!

 அன்பால் உயர்ந்தவர் அக்கறையாய் பார்ப்பவர் அனைத்தும் கற்று  வளர்ப்பவர்!

 மாத்திரையும் மருந்தும் ஊசியும் நேசமும் கொண்டு உழைக்கும் அன்பான சகோதரி!

 அனைத்து நேரமும் அயராது ஓடும் கடிகார முட்கள் போல் ஓயாமல் உழைக்கும் உன்னத பணி!

 கடின உழைப்பால் கரோனா தொற்றை
 கலைந்து நீக்கிய
 கண்முன் வாழும் தெய்வங்கள்!

 வெள்ளை உடை தேவதைகள்
 விரும்பிய வண்ணம் வாழ வாழ்த்துக்கள்!

 ஆ. பொன்னரசு முதுகலை ஆசிரியர் கள்ளக்குறிச்சி.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

033.

*செவிலியர்*

மங்கையராய்ப்
பிறப்பதற்கே
நல்லமாதவம்
செய்திட

வேண்டுமே
என்ற 
பொன்
மொழிக்கேற்பவே

பொன்னாய்ப்
பிறந்த
மாணிக்கமே
மண்ணில்

வந்த தேவதையே
பொறுமையின்
பிறப்பிடமே
அருமையென

வந்திட்ட வரமே
வைகறை நிலவே

என்கடன்
பணி செய்து
கிடப்பதே
என்றே


அர்ப்பணிப்பு உணர்வோடு
அறப்பணியை
அன்பால்

ஆற்றிட  வந்த
அணங்கே
அகிலத்தின் அச்சாணியே

உன்னைக்
கண்டிடவும்
எல்லையில்லா
உவகை

கொண்டதே
நலமும் வளமும்
பெற்றே

அனைத்துயிரும்
மண்ணில்
வாழ்ந்திடவே

அன்னையென வந்த ஆரணங்கே
ஆருயிரே

உந்தனது வரமே
எந்தனுக்கே நலமே என்றுமே

வாழ்வுக்கே
வழிகாட்டிடும்
பொன்னனைய
மனங்கொண்ட

பொறுமையின்
இருப்பிடமே
நற்றாய்பெற்ற
மரகதமாய்

வாசம்
மணக்கும்
ஏந்திழையே
ஏழைக்கிரங்கும்
தேவதையே


முனைவர்
கவிநாயகி
சு.நாகவள்ளி
.மதுரை

 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

034. 

வெள்ளுடை தேவதை :- 

செவிலி இவள் தாய் மறுவி :- 

சிடுசிடுன்னு இருந்தாலும்...
 சின்னப் புள்ள சிரிப்புக்கு 
 சிலாகித்து தான் போவாள் ...

கரச்சல்  பிடிச்சவன் வந்தா 
 கராராவும் பேசிட தயங்கமாட்டா..

 ராத்திரி
 வெட்டுக்குத்து கேஸ் வந்தா...

 ராக்கோழி  போல அவனை  பாதுகாத்து வச்சுடுவா..
 
பால் காய்ப்பு 
காதுகுத்து 
 கல்யாண வீடு மறந்திடுவா ...

பால் கட்டி ஒரு தாய் துடிச்சா..
 இவளும் துடியா துடிச்சிடுவா ..

உடம்புல
 எந்த இடத்துல காயம் பட்டாலும்..
 உள்ளம் சுழிக்காமல் மருந்து போடுவா ..
தாய் செய்ய
 தயங்கினதையும் ..
தான் செய்ய துணிஞ்சிடுவா..

 விஷம் குடிச்சு வந்தவனையும் ..
விவரம்
 உள்ளவனா 
மாத்திடவா ..

பாம்பு கடிச்சு வந்தவனையும்...

 பதட்டப்படாமல் பாத்துக்குவா..

 தன்னை
 வசை பாடியவர்கள் வந்தாலும்
 தாமதம் 
செய்யாமல்
 தக்க சமயம்
 உயிர் காத்திடுவா...

தான் குடும்பம்  மறந்திடுவா ..
 சில நேரம்
 தன்னையே மறந்திடுவா..

 தன் கதை
 தடுமாறிக் கொண்டிருந்தாலும்..

 அடுத்தவர் கதைக்கு ஆறுதலாகிவிடுவா..

 தன் 
மனச் சுமையை
 மனம் சுருங்காமல்
 எதிர்கொள்ளுவா..

நோயாளியின் தலையமிக்கி
 விடக்கூட 
தயாராக 
இருக்கும் 
அவளுக்கு 
தல வலிச்சா
 என்ன செய்வா...

 நோயாளியின்   குமுறலுக்கு
 காது கொடுக்கும் அவளுக்கு ..
அவளின்
 குமுறலை 
என்ன செய்வா..

 பொத்தி
 பொத்தி
 வளர்ந்து கொண்டிருக்கும் பிள்ளைகளின் நினைவுகளை வெள்ளையங்கியின் பொத்தானுக்குள் அல்லவா பூட்டி வைப்பா..

 உயிர்  பிழைத்து வந்தவனின் உயிரிலிருந்து வரும் புன்னகைதான்..

 அவளுக்கு உயரிய விருதாய் விளங்கும் காலம் தோறும்....

  பிரசவம்
 மட்டும் 
பாக்குறவ இல்ல
 இவ...
 பிறர்
 உயிர் 
அனைத்தும் தன்னுயிராய் பார்ப்பவ இவ... 

செவிலி
 இவள்
 தாய் மறுவி...

தனது பணியை
 மிகவும் நேர்த்தியாகவும், அன்போடும், அக்கறையோடும் ,
முழு மனதோடும் 
செய்யும் செவிலியர்கள் அனைவருக்கும் உலக செவிலியர் தின நல்வாழ்த்துக்கள்கள்

-கவிஞர்
 ஆ . சுதா 
அம்பாசமுத்திரம்..

 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

035.

தலைப்பு
 வெள்ளை உடை தேவதைகள்

 தாய்மை உணர்வு கொண்ட
 தங்கமான செவிலியர் அன்பு சகோதரிகள்!

 உடலில் உள்ள ஒவ்வொரு பாகமும் தொட்டுப் பார்த்து!

 அங்குள்ள குறையை அழகாய் போக்கும் அருமையான சேவை!

 வெள்ளை உடை தேவதை வீதிகளில் வளம் வர!

 வீட்டில் இருக்கும் பெரிய வரும் விரும்பி சென்று தன் விளைவுகளை கூற!

 பல வண்ண மாத்திரை பக்குவமாய் பார்த்து!

 ஒவ்வொரு நேரமும் உண்பதற்கும் முன் உண்பதற்கு  பின் என உரைப்பது செவிகளில்!

 கடவுள் வந்து வரம் தருகிறார் என மகிழ தோன்றும் உயிர் மீது கொண்ட ஆசையினால்!

 கவிஞர் 
இரா.  வாசுகி பொன்னரசு
 அரசு பள்ளி ஆசிரியர் கள்ளக்குறிச்சி.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

036.

செவிலித் தாய் 

&&&&&&&&&&&&&&&&&&&&&&&

மருத்துவப்  பணியின்
மகத்துவமே செவிலியரன்றோ

அன்பான பணிவிடை
ஆறுதல்  வார்த்தைகள்

இன்முகம் கொண்டே
ஈடில்லா  சேவையில்

உள்ளமும் நெகிழ்ந்திடும்
ஊக்கமும் பிறந்திடும்

தாயுள்ளம்  கொண்டவரே
தர்மநெறி  தவறாதவரே

மருத்துவர் அறிவுரைப்படி
மறுக்காமல் பணிசெய்வாரே

மனிதநேயம்  கொண்டவரே
மாதற்குலமும்  போற்றுதுமே

செய்யும்  தொழில்கள்
பலவிதம்  உண்டே

செவிலியர்  செய்வது
சேவை  அன்றோ

கைவிளக்கு ஏந்திய
காரிகை பிறந்தநாளிதுவே

செவிலியர்   தினமாம்
வையம்  கொண்டாடுதே

புனிதமான  உலகதனில்செவிலியரை
போற்றிடுவோம்

புன்னகைப்பூவே   எங்களின்
பொன்னான வெள்ளைதேவதையே

பொறுமையின் கடலே
பெருமையம்மா உன்னாலே

கடவுளரும்  கைதொழும்
கண்ணான  சேவகியே

செந்தமிழே நறுந்தேனே
செகம்போற்றும் செவிலித்தாயே                       சி. மீனாட்சி ( ஆன்மிக லட்சுமி  ) சென்னை.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

037.

கவிதை தலைப்பு:செவிலியர் சேவை 
மானிடர்க்குத் தேவை!....

இறைவன் அவனே இப்புவிக்கு ஈந்த!
இறை உள்ளம் கொண்டவள் இவளே!
இவள் அணியும் ஆடையும் வெண்மையே!
இவளது ஆழ்மனம் கூட தூய்மையே!

அஞ்சா நெஞ்சமே இவளது உடமையே!
ஆருயிர் காப்பதே இவளது கடமையே!
அன்னை உள்ளம் கொண்டவள் இவளே!
அகிலமே போற்றும் அன்னைத்தெரசாவும் இவளே!

நித்தம் நித்தம் ஓர்  போராட்டமாய்!
நித்திரை இழந்தும் ஓர் போராளியாய்!
நலிந்தோர் நலம் பெற வேண்டி!
நாளும் போராடும் ஓர் போராளியாம்! 

கொடிய நோய் கொல்லி கொரோணாவாம்!
கொன்று குவிக்கும் அரக்கன் இவனாம்!
கொடியவனும் கண்டு அஞ்சி நடுங்கிட!
கருணை உள்ளமாய் காப்பவள் இவளே!

(போற்றித் தொழுதிடுவோமே இப்புவன தெய்வங்களை!)

-கவிதாயினி 
ச.கலைச்செல்வி திருப்பூர்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

038.வெள்ளுடைத் தேவதைகள்


உடையும் உள்ளமும் வெண்மையாய் மிளிரும்//
நடையும் விடையும் அன்னையாய் ஒளிரும்//
தடையோ மடையோ தேவதையர்க்கு இல்லை//
அடைமழையில் குடையாய் தேவைதீர்க்கும் முல்லை//

அரும்பும் அன்பினால் தீர்ந்திடுமே வருத்தம் //
அருவருப்பு முகச்சுளிப்பு  சேர்ந்திடா மகத்துவம்//
அகத்தின் மென்மையால் இனித்திடும் மருத்துவம்//
அகிம்சைப் பெண்மையால் சனித்திடும் வரம்பெறும்//

நோயாளர் பிணிபோக்கும் செவிலியர் அணி//
நேயமாய்ப் பணிவிடை செய்திடும் பாணி//
நயமுடன் இறைவனும் உவந்திடும் பணி//
நலமுடன் உயர்த்திடும் உன்னத ஏணி//

பஸ்லா பர்ஸான் 
காத்தான் குடி 
இலங்கை.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

039.

அன்னையாகத் திகழும் செவிலியர்
**********************************
மென்மையிலே நாளும் 
மேன்மை கண்டு/
தன்னலம் பாரா தியாகத் சுடராக/
பொண்ணாக காலத்தை 
மதிக்கும் நிலையுண்டு/
 கண்ணின் இமையொப்ப காக்கும் 
மனமுண்டு/

சுறுசுறுப்பின் இலக்கணமாக இருப்பவர் நீங்களே/
சுத்தமான வெண்ணிலா 
போலே குணமும்/
சோர்வில்லா இயந்திரமாக நாளும் சுழண்டு/
வார்த்தெடுத்த சிலையாக தீட்டப்பட்டது 
ஞானமே/

மங்கையரின் பிரசவ பொழுதினில் தெய்வமாக/
மனித நேய காட்சி காண்பதுண்டு/
புன்னகைத்த முகத்தோடே புதுமலராக/
புனிதமாக கலந்துரையாட உங்கள்த்தவிர யாருண்டு/

சீற்றம் அடக்கி சிந்தைதனை ஓர்முகமாக்கி/
ஏற்றம் கண்டிட வேண்டும் பெண்ணிலையென/
தாய்மை அடையும் பெண்ணை கவனிப்பதில்/
தாயாகத் திகழும் அன்புச்செவிலியரைப்
போற்றிடுவோமே/

கவிஞர் முனைவர் செ.ஆயிஷா
பல்லடம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

040.

*செவிலியர்*
உறவினர் அல்ல ஆனால் உணர்வரிவர்
அயலார் அல்ல ஆனால் பண்பு அதிகம்
சகோதரர் அல்ல ஆனால் மனிதம் அதிகம்
உழைப்பு அல்ல ஆனால் பொருப்பு அதிகம் 
தூக்கம் அல்ல ஆனால் துறையில் கண் அதிகம்
விலை அல்ல ஆனால் உண்மை அதிகம்
மகிழ்ச்சி அல்ல நோயாளர் புரிதல் அதிகம்
கேள்வி அல்ல ஆனால் நோய்க்கு பொருப்பு அதிகம்
கால நேரம் அல்ல ஆனால் கண்ணும் கருத்தும் அதிகம்
தன் கலைப்பு அல்ல ஆனால் வேலையில் இனக்கம்
என வந்தோர் பார்த்தோர் பலம் பெற உழைக்கும் நபர் செவிலியர்.

கவிஞர் முஹம்மத் ஷரீப் முஹம்மத் சஜ்ஜாத்(கபூரி)
இளம்கலை பட்டதாரி மாணவன்,
இலங்கை.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

041 .

வெள்ளாடை தேவதைகள் ...

மருத்துவரின் உதவியாளராக படைக்கப்பட்ட ஊக்கமுள்ள செவிலியர்கள் //

கடவுளுக்கு சேவை செய்பவர்கள் விண்ணுலக தேவதைகள் //

மண்ணுலகில் மனிதர்களுக்கு சேவை செய்பவர்கள் செவிலியர்கள் //

எப்பொழுதும் ஓட்டமும் நடையுமாக உலா வருபவர்கள் //

மருத்துவரின் ஆலோசனைக்கிணங்க நோயாளிகளை பார்த்துக் கொள்பவர்கள் //

வாய் பேச்சிலேயே நோய்க்காண ஊசியிடும் வித்தைக்காரிகள்//

கனிவுடன் நோயாளிகளிடம் கலந்து பேசும் மாண்புடையவர்கள் //

கருணையுடன் சேவைகளை நோயாளிக்கு செய்திடும் தேவதைகள் //

அன்புடன் நலம் விசாரித்து நோயை கட்டுப்படுத்துபவர்கள் //

விபத்து காலங்களில் சிட்டாய் பறந்து கவனிப்பவர்கள் //

அறுவை சிகிச்சையில் மருத்துவரின் கையாக இருப்பவர்கள்//

மாத்திரைகளின் தன்மையறிந்து நோயாளிகளுக்கு விளக்கம் கொடுப்பவர்கள்//

மருத்துவமனை எண்ணும் கோவிலில் நோயாளிகளின் குறைத்தீர்க்க //

வெள்ளாடை அணிந்து துயர் நீக்க வந்திருக்கும் செவிலியர்கள் // 

பொ.ச.மகாலட்சுமி.
கோவை..

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

042.

செவிலியர்களுக்கு   சமர்ப்பணம்

***********************************


அன்னை தருவது போல் அரவணைப்பு

 ஆசான் தருவது போல் கண்டிப்பு 

 இமயத்தை  போல் சகிப்பு 

ஈகை போல் உழைப்பு 

உறவு தருவது போல் அன்பு

ஊக்கம் தருவதில் பிரமிப்பு

எப்போதும் முகம் மலர்ந்த சிரிப்பு

ஏற்றத்தாழ்வு கருதாத பண்பு

ஐயப்படாமல்      பினியாளர்களை கவனிப்பு

ஒன்றே குலம் என்ற அர்ப்பணிப்பு

ஓடும் நதிகள் போல்  பிரதிபலிப்பு 

ஔவை   கூறியது போல சேவைக்கு இவர்களின் பங்களிப்பு

அஃது மருத்துவத்   துறைகளுக்கே இவர்கள் ஒரு படைப்பு.

க. சைலஜா கணேசன்,

கோவில்பட்டி , துத்துக்குடி மாவட்டம்.

###################################

043.

*இறைவனின் தூதுவர் செவிலியர்*

செவிலியரே கனிவான உங்கள் சேவையிலே//

சேருமே கருணையினால் புண்ணியம் நாளை//

மனிதனில் மென்மையை உடன் ஏற்கும்//

கடமையைக் கண் என மனம் பார்க்கும்//

பார்த்ததும் புன்னகை முகம் சேர்க்கும்//

வார்த்தைகள் நல்லதாய் செவி கேட்கும்//

நேர்த்தியாய் உடுப்பதில் குறையேது//

நேரத்தில் மருந்து கொடுப்பதில் தவறேது//

உன் கண்களில் அக்கறை குறையாது//

மகவினை பெற்ற தாய் போல சிசுவுடன் உன் முகம் ஜொலிக்கும்//

பிணியிடம் மீண்ட முதியோருக்கும் உனை பிள்ளையாய் அவர் மனம் அபதரிக்கும்//

எத்துயர் வீட்டினில் வாட்டினாலும், வதைத்தாலும் உங்கள் சேவையிலே அதன் உரு தெரிவதுண்டோ//

இறைவனின் தூதுவர் இவர்தானோ//

-ரம்யா துவாரக்தாஸ்
 சென்னை.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

044.

கடவுளின் கரங்கள்...

இறைவன் பெற்றெடுத்த
வெண்ணிற தேவதையே
மனதால் மற்றவரையும்
நேசித்திடும் மங்கையே
மனங்கள் கசந்தாலும்
மழலையாய் புன்னகையிட்டவளே
வலிக்கும் என்பவனுக்கும்
அன்பை தந்திட்டவளே
குருதி சேனையும்
கரத்தில் சுமந்துட்டவளே
நேரங்கள் பாராமல்
வருபவர்களை தாங்கிட்டவளே
கடவுளின் உருவமாய்
மண்ணில் பூத்திட்டவளே...

- கவிஞர் முனு.சரோ.சரத்குமார்
அரசம்பட்டு கள்ளக்குறிச்சி.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

045. வெள்ளை தேவதைகள்

விரும்பி வேண்டி நின்றதெல்லாம் ..விடியலை மட்டுமா கண்மணியே.. வெள்ளாடை மலர் அன்றோ. .

வெள்ளை மனம் கொண்டவர் அன்றோ. பணிவு ஒன்றே குறிக்கோள் என துணிவை மட்டும் துணை கொண்டு...

தேசத்தில் நாளும் நடைபோடும் தேசமங்கையர். நீ அல்லவா...

காணாத செல்வம் இல்லை ..

பிறரிடம் கை கேட்டு நின்றதில்லை ...

பிடிக்காத வேலை என்று பலர் பிடிவாதம் செய்வது உண்டு...

பிறர் படும் துன்பம் அதை...

என் துன்பம் என்று எண்ணி..

அவர் துயர் துடைக்க தந்த கரம்... கடவுளை கண்முன்னே தந்த வரம்... என்றும் கலங்காதே . கனிவோடு உரையடு...

வெற்றி பல சூடிடுவாய் ...

பட்ட துயர் போனதென்றே...

பாரில் நாளும் நடைபோடு...

பூ.வனிதாமணி, கமுதி 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

046. வெள்ளுடைத் தேவதைகள்

வெண்மை நிற ஆடை உங்கள் அடையாளம்//
தூய்மையான சீருடை தங்களின் பண்பாகும்//
பளிச்சென்ற பளிங்கு சிரிப்பு இனிமையே//
செவிலித் தாய் என்பதில் பெருமையே//
தாயின் வயிற்றிலிருந்து சேயை தாங்கும்//
முதல் பாக்கியம் பெற்ற பெருமையே//
காலம் நேரம் பார்க்காமல் பணியே//
காலில் சக்கரம் கொண்டு சுற்றும் பம்பரங்களே//
மருத்துவருக்கு ஒப்பாக சிறப்பு பெற்றவர்களே//
உதவும் காக்கும் கரங்கள் நீங்களே//
புன்னகை பூக்களாய் வலம் வரும் அழகே//
பொறுமையாய் அணுகும் முறை வியப்பே//
வாழ்வில் அற்புதமான அர்ப்பணிப்பு உங்கள் தொழிலே//
இறைவனின் பரிபூரண ஆசி பெற்றவர்களே//

கவிஞர் தி.மீரா
ஈரோடு.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@