உனக்குள்ளே உள்ள சக்தி 058

புதுமைப்பெண் விருது கட்டுரைப் போட்டி

உனக்குள்ளே உள்ள சக்தி 058

உனக்குள்ளே உள்ள சக்தி.


முன்னுரை
         "பெண் சுதந்திரம் வேண்டும். இட ஒதுக்கீடு வேண்டும்" இன்னும் பல கோஷங்கள். பெண்ணே யார் உன் சுதந்திரத்தைப் பறித்தது? கொடுப்பதற்கு.
உள்ளுறை :
     பாரதி பாடிய பிறகுதான் பெண்களுக்கு விடுதலை வேட்கயா? இல்லையே! ஜான்சி ராணி, வேலுநாச்சியார், குந்தவை, ஆண்டாள், அங்கவை சங்கவை, அவ்வை, கண் ணகி, ஐயோ கூறிக்கொண்டே செல்லலாமே! நம் கூட்டை உடைத்து கொண்டு நாமே தான் வெளிவர வேண்டும். உலகைப் படைத்த சிவனே அன்றே சரிபாதி கொடுத்து விட்டானே! பிறந்த உடனே பெண் குழந்தைகளுக்கு கள்ளிப் பால் எந்த ஆணும் அரைத்து கொடுக்க வில்லை. பெண்ணே பிற ப்பது ஆணா பெண்ணா என்ன முடிவு செய்யும் க்ரோமோசோம் கூட உன்னிடம் இல்லை.
    எழுந்து நிலை எதிர்த்துக் கேள்வி கேள். இன்று வரை தேர்ச்சி விகிதத்தில் பெண் தான் அதிகம். பின் ஏன் வெளிவர தயக்கம்? பாதுகாப்பு குறைபாடா? பெண்ணே நீ ஆடை சுதந்திரம் எடுத்த பின்தான் பாதுகாப்பு குறைய தொடங்கியது. நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை அத்துடன் நேர்த்தியான உடையும் கொண்டால் நீதான் புதுமைப் பெண்.
    இன்று பெண்கள் இல்லாத துறையே இல்லை. புழுவாக இருக்கும் பட்டாம்பூச்சி கூட அதான் கூட்டை தானே உடைத்தால் தான் உயர பறக்கமுடியும். அதைப்போல் தான் நீயும். உன் முன் இருப்பது பூவே லிதான். வாசனையோடு உயரப்பற. ஆகாயம் உன்னிடம். படைப்பவன் கடவுள் என்றால் நீயும் கடவுள். உயிர் வாழ நீர் முக்கியம் எனில் ஓடும் அனைத்தும் பெண்கள் பெயர் கொண்ட நதிதான்.
    எந்த ஒரு கோவிலிலும் கோழியோ ஆடோ பலி கொடுக்க படவில்லை. காயாகிப் பழம் ஆகும் எந்த பூவையும் தலையில் சூட்டிக்கொள்ளும் பழக்கம் இல்லை. இயற்கையிலேயே பெண்மை போற்றப் படுகிறது, பாதுகாக்கப் படுகிறது, பாராட்டப் படுகிறது. மாதத்தின் மூன்று நாட்கள் நீ ஒதுக்கப் படுவதாக எண்ணுகிறாயா? பேதை பெண்ணே நீ பத்திரப்படுத்தபடுகிறாயாடி. அது உன் உடலிர்க்கும் மனதிற்கும் கொடுக்கப் படும் ஓய்வு.
முடிவுரை :
    நாம் பார்க்கும் விதம்தான் இவ்வுலகம். வீசும் காற்று உன் வியர்வையைத் துடைக்க என நினை. பெய்யும் மழை உன்னைக் குளிர்விக்க என எண். எதையும் நேரம் மறையாகப் பார்க்க பழகு. குறிக்கோளோடு வாழ் ஒரு நாள் மேற்கோளாக பேசப்படுவாய். வாழ்த்துக்கள்.

-ரா. இந்திரா பிரியதர்ஷினி,   இராஜபாளையம்