தமிழரின் பெருமைகள் 031

தமிழ் கதிர் விருது கட்டுரைப் போட்டி

தமிழரின் பெருமைகள் 031

தமிழரின் பெருமைகள்
------------------------------

உலகம் தோன்றி பல நூற்றாண்டுகள் கடந்து விட்டது. சிறிய உயிரினங்கள் முதல் மனிதர்கள் வரை அனைத்து உயிரினங்களும் தனக்கான வாழ்க்கை யை வாழ்ந்து கொண்டிருக்கின்றது.இதில் ஒவ்வொரு நாட்டில் வாழும் மனித இனமும் ஒவ்வொரு பண்பாட்டை கடைபிடித்து வாழ்ந்து வருகிறது.இவ்வாறு மனித இனத்தின் பண்பாட்டை ஒப்பிட்டுப் பார்க்கும் போது தமிழினம் முதன்மையாக இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

தமிழினத்தின் பண்பாடும், கலாச்சாரமும் தனக்கென்று தனி அடையாளத்தைக் கொண்டது.தமிழர்களின் வாழ்வியல்,கட்டிடக்கலை, உணவுமுறை, திருமணச் சடங்குகள், கல்வி & மருத்துவம் என்ற ஒவ்வொன்றும் தனிச்சிறப்புகள் கொண்டது.


தமிழர்களின் உணவுமுறை மிகவும் முக்கியமானது.நமது உணவே நமக்கு மருந்தாகும். உடலில் ஏற்படும் நோய்களை குணமாக்கும் மருத்துவம் நம் உடலிலேயே உள்ளது.அதனால்தான் இன்றும் மேலை நாடுகளில் நம் மருத்துவ முறையை வியப்பாகப் பார்க்கின்றனர்.நமது சித்த மருத்துவ நூல்களில் பல அறிய தகவல்கள் உள்ளது. அவற்றை நாம் உள்வாங்கிக் கொண்டாலே போதும். நோய்நொடி இல்லாமல் பல காலம் வாழ முடியும்.

ஆன்மீகத்திற்கு புகழ் பெற்றது நம் மண்.நமது கோவில்கள் எல்லாம் வெறும் பக்தியை மட்டும் சொல்லாமல்  அறவியலையும் கற்றுத் தருகிறது. நமது இறை வழிபாடும் மருத்துவக் குணங்கள் நிறைந்தது.இதை பல சம்பவங்களிலிருந்து நாம் உணர்ந்து கொள்ளலாம். கொரோனோ காலகட்டத்தில் பல நாடுகளில் பல உயிரிழப்புகள் ஏற்பட்ட போதிலும் நம் நாட்டில் அதிக பாதிப்புகள் இல்லாமல் இருந்ததற்கு நம் வாழ்க்கை முறை காரணமாகும்.


கல்வி முறையை எடுத்துக்கொண்டால் நம் கல்வி முறை வெறும் அறிவை மட்டும் வளர்ப்பதற்காக உருவாக்கப்படவில்லை.அறிஞர்களின் வரலாறு, நம் முன்னோர்களின் ஆராய்ச்சி ,உயிரினங்களைப் பராமரித்தல்,சுற்றுச்சூழல் பாதுகாப்பு,பெரியவர்களை மதித்து நடத்தல்,பெண் உரிமை, வீரம் போன்ற அனைத்தையும் உள்ளடக்கியதாக உள்ளது. நம் கிராமப்புறத்தில் உள்ள பள்ளியில் படித்தவர்கள் பெரிய ஆளுமைகளாக உருவானதை நாம் பார்க்கின்றோம்.நமது மறைந்த முன்னாள்  ஜனாதிபதியும் ,விஞ்ஞான ஆராய்ச்சியாளருமான  ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மற்றும் பலரை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.அறிவில்  சிறந்தவர்கள் தமிழர்கள் என்பதை ஆராய்ச்சியாளர்களும் நிரூபித்துள்ளனர்.

வானியலிலும் தமிழர்கள் சிறந்து விளங்கினர்.சூரியன், சந்திரன் , நட்சத்திரங்கள் & கோள்கள் போன்றவற்றவற்றின் செயல்பாடுகளை நன்கு உணர்ந்திருந்தினர்.அதை மையமாக வைத்து விஞ்ஞான வளர்ச்சி இல்லாத காலத்திலேயே கால நிலைகளையும், பருவ மாற்றங்களையும் கணக்கிட்டனர்.

தமிழர்கள் வெளி நாட்டினருடன் பண்டைய காலத்திலேயே பல்வேறு வணிகத் தொடர்பு வைத்திருந்தனர்.விலை உயர்ந்த கற்கள் மற்றும் நவரத்தினங்கள் போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன.தமிழர்கள் உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவி வாழ்ந்து வருகின்றனர்.இணைத்தில் அதிக அளவில் தேடப்படும் மொழியாக தமிழ் பரவியுள்ளது. வரும் காலங்களில் தமிழ் மொழி உலகத்தை ஆளும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. பொங்கல் பண்டிகையானது இங்கிலாந்து, பக்ரைன் போன்ற பல்வேறு நாடுகளில் கொண்டாடப்பட்டதை நாம் கண்டு மகிழ்ந்தோம்.

எதிர்காலம் தமிழர்களுக்கு சிறப்பான காலமாக அமையும். தமிழர்கள் உலகம் முழுவதும் பரவி தங்கள் பண்பாட்டைப் பேணிக் காப்பாற்றுவார்கள்.

நாம் அனைவரும் தமிழராகப் பிறந்ததில் மிகவும் பெருமை கொள்வோம்.

 - முனைவர்.கோ.சுதாதேவி,கரூர்.