சிறகுகள்...

உணர்ச்சி கவிதைகள்

சிறகுகள்...

முத்தமிட்ட பின்பு 
எடையற்றுப் பறக்கிறது 
விண்வெளியில் 
ஒரு பெயரற்ற பறவை

வளைந்த கொக்கி   கால்களால்
மேகங்களை கிளறி 
புழு தேடுகிறது
உன்மத்தத்தில்

விம்மும் இதயத்தை
 அமைதி கொள்ள
சிறகுகளை நிலவில் உரசி
 உரசி
உதிர்க்கிறது
சுய இறகுகளை காற்றோடு
உலர்த்தும் பாவனையில்

மொழியற்ற மொழியில்
வெட்ட வெளிதனில்
உளறிக்கொட்டுகிறது
பித்து தலைக்கேறி

தானே தானாகி
சரிபாதி சகியாகி
அர்த்தநாரியாய் 
கூடிகளிக்கிறது
அண்ட வெளியெல்லாம்

எல்லாம் முடிவுற
சித்து காட்டும் அந்தரத்தில்
தலைகீழாய் குதித்து
அசைவற்று நிறுத்துகிறது
சிறகுகளை
ஒரு முறை
ஒரே. ஒரு முறை

தங்கேஸ்.