சாதனைப் பெண்கள் ...! 004

புதுமைப்பெண் விருது கட்டுரைப் போட்டி

சாதனைப் பெண்கள் ...! 004

சாதனை பெண்கள்...

"ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே" 
ஓர் பெண் நினைத்தால் எதையும் செய்யது முடிக்கும் திறமை படைத்தவள் பெண்

இந்த உலகில் பல விதமான பரினாமங்களை ஒரு பெண் அடைகிறாள்.பிறந்ததில் இருந்து இறக்கும் வரை அவள் வேடங்கள் மாற்றிக் கொண்டேதான் இருப்பாள்.மென்மையாக படைக்கப்பட்ட அவள் பல கோடி ஆளுமைகளை உருவாக்கும் அஸ்திவாரமாக இருக்கிரால். உடலில் ஓர் ஆண் உறுதி கொண்டவனாக இருந்த போதிலும் பெண் அவனைவிட மனதால் வீரம் கொண்டவளாக இருக்கிராள். மன உறுதி கொண்ட பெண்கள் எப்போதும் சிறப்பு பெற்றவர்கள்தான். சாதனை பல படைக்கும் உறுதி கொண்டவர்கள் பெண்கள். பூவானவள் பூமியே ஆளும் வல்லமை படைத்தவர்கள் பெண்கள்.

    முன்னுரை 

அடுப்படியே வாழ்க்கை என்று இருந்து பெண் சமூகம் இப்போது இமயத்தை தொட்டு சாதனை படைக்கிரார்கள். பெண்கள் என்றாலே அன்பு, ஆதரவு, அடக்கம் இந்த மூன்று பொருளுக்கும் அர்தமாக பாரினில் வாழும் உன்னதமான படைப்பினம் பெண்கள்.
உலகிக்கு நல்லதை செய்ய வேண்டும் என்று  நாட்டின் முதல் மருத்துவராக முத்துலட்சுமியை ரெட்டி கருணை உள்ளம் கொண்ட அன்னை தெரசா , பாரதியாரின் மனைவி செல்லம்மா எப்படி ஒரு மகா கவிக்கு தனப்பெருந்துனணயாக இருந்தார் அவரை போன்று இவ்வுலகில் ஒவ்வொரு பெண்களும் ஆணிண் வளர்ச்சிக்கு அவனது வெற்றிக்கும் உறுதுணையாக இருக்கிறார்கள்.
 போன்றோரின் பெருமையை இந்த உலகம் அவர்களை பற்றி பேசிக் கொண்டுதான் இருக்கிறது. இல்லத்தில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் குடும்பத்துக்கு தூனாக இருந்து வருகின்றார்கள். 

 *சிங்கப் பெண்கள்* 

சிங்கப் பெண்கள்   அவர்கள் பிரசவ வலியையைத் தாங்குகின்ற அவர்களின் சுகமான இன்னல் தருணத்தை  நாம் மனதால் உணர்கின்றபோதுதான் அதன் பெருமையை கர்வத்துடன் புரிந்துகொள்ள முடியும்!

அது மானிட உலகிற்கு இயற்கையும் இறைவனும் ஒருசேர ஒருமித்த குரலுடன் பெண்ணிற்கு அளித்த பெரும்பேறுகாலம் அது. 
 

’ஆணுக்கு இங்கு பெண் இளைத்தவறில்லை’ என்பதை இந்தப் போட்டி உலகில் கண்டோம். இன்னும் கார்க்கி, மைத்ரேகி, அவ்வையார், காரைக்கால் அம்மையார் , சரோஜினி நாயும், செல்வி ஜெயலலிதா, பாத்திமாபீவி, தெலுங்கான கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் போன்ற எத்தனையோ பெரும் ஆளுமைகள் இன்னமும் இந்த சமூகத்திற்கு பெரும் ஊக்க சக்திகளாகவும், ஏனைய பெண்களுக்கு ஆகச்சிறந்த கிரியா ஊக்கிகளாகவும் இருந்து வழிநடத்திவருகிறார்கள். 
 

அத்தையையோர்கள் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் கூட சிறந்த முன்மாதிரிகளாகவே கண்களுக்குத் தெருகிறாகள். ஏனேன்றால் எத்தனையோ பெரிய நட்சத்திரப் பிரபலங்கள் நடிகர்கள்,அரசியல் ஆளுமைகள் தமிழக அரசியலில் காலூன்ற தடுமாறிக்கொண்டிருந்த சமயத்தில் திருமணம் புரியாமல் செல்வி ஜெ. ஜெயலலிதா என்ற ஆளுமை எம்.ஜி.ஆருக்குப் பிறகு தமிழகத்தில் முத்திரை பெற்ற தலைவராகி அதிமுக என்ற கட்சியின் ஒற்றைத் தலைவியாக பல லட்சம்மக்களின் மனதில் அம்மாவாக பிரதிபலிக்கிறார்கள் என்பது கண்கூடு. 
 

அவர், இருமுறை தொடர்ந்து முதல்வராகி புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைப் போலவே சாதைப் படைத்துள்ளார். அதுவும் தமிழகத்தில் வேறு எவரும் செய்யாத சாதனையே ஆகும்.இந்திய அரசியலில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, ஜெயலலிதா, மாயாவதி, நடிகை ரோஜா, சோனியா காந்தி, சுஷ்மா சுவராஜ், போன்ற தலைவர்களை தவிர்த்துவிட்டு அரசியல் சரித்திரம் எழுத முடியாது.
 
*பெண்கள் சாதனை*

*ரோசா பார்க்ஸ்* :

கறுப்பின மக்களுக்காக அமெரிக்காவில் குரல் கொடுத்தார் மார்டின் லூதர் கிங் என்று நமக்கு தெரியும். அவருக்கு இணையாக உச்சரிக்கப்படவேண்டிய பெயர் ரோசா பார்க்ஸ். பேருந்தை விட்டு கறுப்பர் என்று சொல்லி எழுப்ப நடத்துனர் முயன்ற பொழுது எழ மறுத்து கம்பீரமாக அவர் உட்கார்ந்து இருந்தது மிகப்பெரிய போராட்டமாக வெடித்தது. அமைதி வழியில் மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் கறுப்பின மக்கள் பேருந்துகளை புறக்கணித்தார்கள். உரிமைகள் மீட்கப்பட்டன. “எனக்கு நாற்பத்தி இரண்டு வயது தான் ; நான் களைப்பாக இல்லை. முதுமை என்னை அழுத்தவில்லை. ஆனால்,எழுந்து,எழுந்து அடக்குமுறைக்கு பயந்து பயந்து களைப்படைந்து விட்டோம் நாங்கள்.அதனால் எழ மறுத்தேன். என்று சொன்ன அவரை "விடுதலைப்போரின் தாய்" என்று அமெரிக்கா நினைவு கூர்கிறது.

*தில்லையாடி வள்ளியம்மை* :

காந்தியடிகளின் தென் ஆப்ரிக்கா போராட்டங்கள் வெற்றி பெற முக்கிய காரணம் அவர் பின்னே அணிவகுத்து நின்ற தமிழர்கள். கைரேகை பதிவு செய்தல், மூன்று பவுன் வரி,கட்டாய திருமணப்பதிவு ஆகியவற்றை எதிர்த்து நடந்த காந்தியின் போராட்டங்களில் பதினாறு வயது கூட நிரம்பாத நிலையில் கலந்து கொண்டு சிறை சென்றார் தில்லையாடி வள்ளியம்மை. அபராதம் கட்டவோ,மன்னிப்பு கேட்கவோ மறுத்து உடல்நிலை மோசமாகி உயிர் இழந்தார். காந்தி 'இந்தியன் ஒப்பீனியன்' இதழில் இப்படி எழுதினார் : இந்தியாவின் புனிதமகள் ஒருத்தியை இழந்துவிட்டோம். ஏன், எதற்கு என்று கேட்காமல் தனது கடமையைச் செய்தவள் அவள். மாதர்களுக்கே உரிய துன்பத்தைச் சகிக்கும் மனோபலமும், தன்மானமும் கொண்டவள் தில்லையாடி வள்ளியம்மை .அவளது தியாகம் இந்திய சமூகத்திற்கு நிச்சயம் பலனளிக்கும்!’’ . அவளின் நினைவாக ஒரு நினைவுச்சின்னமும் காந்தியால் எழுப்பப்பட்டது.

*மரியா மாண்டிசோரி* :

மரியா மாண்டிசோரி மருத்துவப்படிப்பு படிக்கப்போனார். அங்கே அவரைப்பெண் என்பதால் இழிவாக நடத்தினார்கள். பாடங்களை சொல்லித்தரக்கூட ஆசிரியர்கள் மறுத்தார்கள். விலங்குகளை அறுக்கிற பொழுது தனியாக ஒரு அறையில் விட்டு அறுக்க வைத்தார்கள். மனம் வெறுத்தார் அவர். இருந்தாலும் மருதுவப்பட்டம் பெற்று வெளியே வந்தார். உளவியலில் தன்னுடைய ஆர்வத்தை செலுத்தினார்.

கல்வி சார்ந்த இத்தாலியில் ஐம்பது ஏழைப்பிள்ளைகளுக்கு கண்காணிப்பாளராக அவர் ஆனார்.. பிள்ளைகளை மிரட்டுவதோ,அடிப்பதோ பிடிக்காத அன்பான நபர் அவர். அங்கே இருந்த பிள்ளைகளின் பொழுதை எப்படி உற்சாகம் நிறைந்ததாக ஆக்குவது என்று அவர் யோசித்தார். அப்படி எழுந்த அவரின் மாண்டிசோரி கல்வி முறையில் உலகம் முழுக்க இன்றைக்கு நூற்றி பத்து நாடுகளில் இருபத்தி இரண்டாயிரம் பள்ளிகள் உள்ளன. குழந்தைகளின் முகத்தில் புன்னகையை மீட்டவர் அவர். அந்தக்கல்விமுறையில் படித்தவர்கள் தான் கூகுள்,அமேசான், விக்கிபீடியா நிறுவனர்கள் !

*லிசே மெய்ட்னர்* :

அணுப்பிளவை முதன்முதலில் கோட்பாட்டு ரீதியாக உலகுக்கு தந்தவர் லிசே மெய்ட்னர் தான். ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த மெய்ட்னர் அறிவியலில் அதீத ஆர்வம் கொண்டவராக இருந்தாலும் அவரை பெண் என்பதால் புறக்கணிக்கவே செய்தார்கள். அதனால் ஆய்வகங்களில் ஷிப்ட்டில் தான் அவருக்கு ஆய்வு செய்யவே அனுமதி கிடைத்தது. எண்ணற்றோர் அவமானப்படுத்தவும் செய்தார்கள். ஆஸ்திரியாவில் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண் ஆனார் அவர். ஜெர்மனி உலகப்போரின் பொழுது அவர் நாட்டைப்பிடித்து கொண்டதால் யூதர் என்பதால் மெய்ட்னர் உயிருக்கு பயந்து ஸ்டாக்ஹோம் சென்று ஆய்வுகளில் ஈடுபட நேரிட்டது. "யுரேனியம் உட்கருவை பிளக்கிற பொழுது அதை விட நிறை குறைவான இரண்டு உட்கருக்கள் உருவாகும் ; பிளவின் பொழுது உண்டாகும் நிறை இழப்பு ஆற்றலாக மாறும் !" என்று அவரே முதன்முதலில் சொன்னார்.

அவர் பெயரை இணைத்துக்கொள்ளாமலே நோபல் பரிசு இவரின் ஆய்வின் அடிப்படையில் செயல்பட்ட ஆட்டோ ஹான்னுக்கு வழங்கப்பட்டது. அவரை மன்ஹாட்டன் திட்டத்தில் பணியாற்ற அமெரிக்கா அழைத்த பொழுது அமைதிக்கு எதிரான எந்த செயலிலும் நான் பங்குபெற மாட்டேன் என்று அணுகுண்டு தயாரிப்பு பணியில் ஈடுபட மறுத்தார் அவர். அவரின் பெயரால் தனிமம் ஒன்று அழைக்கப்படுகிறது. இன்றைக்கு எழுந்திருக்கும் அணு உலைகள்,குண்டுகள் எல்லாவற்றுக்குமான அடிப்படை இவர் தந்ததே

*ரோசலின்ட் பிராங்க்ளின்* :

டி.என்.ஏ.வின் வடிவத்தை கண்டறிந்தது வாட்சன் மற்றும் க்ரிக் என்று நோபல் பரிசு வழங்கப்பட்டாலும் அதிலும் முதல் முன்னெடுப்பு எடுத்ததும்,அந்த கண்டுபிடிப்பபில் மிகப்பெரிய பங்கு கொண்டவரும் ரோசலின்ட் என்பவர் தான். பெண்களுக்கு ஏற்படும் அதே தடைகள் அவருக்கும் ஏற்பட்டன. கல்வி கற்க அனுப்ப தந்தை மறுக்க போராடி தான் கல்வி பெற்றார். பெண் என்பதால் முழுமையான பட்டம் வழங்கப்படாவிட்டாலும் போராடி முனைவர் பட்டம் வரை பெற்றார். டி.என்.ஏ வடிவத்தைப்பற்றி ஆய்வுகள் செய்து அது சுருள் வடிவத்தை கொண்டிருக்கிறது என்று உறுதிபட முதன்முதலில் அவரே சொன்னார். டி.என்.ஏவின் வடிவத்தை பற்றிய மிகத்துல்லியமான் ஆய்வுகள் இவராலே முதன்முதலில் செய்யப்பட்டன. அவரின் செமினாரை கேட்டுவிட்டு சென்று அதன் அடிப்படையில் ஆய்வுகளை தொடர்ந்த வாட்சன் ,க்ரிக், வில்கின்ஸ் நோபல் பரிசை பெற்றார்கள். அதற்குள் கேன்சர் நோயால் இவர் இறந்து போயிருந்ததால் இவருக்கு நோபல் வழங்கப்படவில்லை

*ஹைப்பாஷியா* :

கணிதத்திலும் கலக்கிய பெண்கள் வரலாறு முழுக்க எண்ணற்றோர். கணிதத்தின் அன்னைகளில் ஒருவர் என்று அறியப்படும் ஹைப்பாஷியா இரண்டாயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்னர் தத்துவம் மற்றும் வானியல் ஆசிரியையாக அலெக்சாண்ட்ரியாவில் இருந்திருக்கிறார் என்பதை நீங்கள் நம்பத்தான் வேண்டும். அற்புதமான பல கண்டுபிடிப்புகள் செய்த அவர் பழமைவாத கூட்டத்தால் வெட்டிக்கொல்லப்பட்டார்.

*சோபி ஜெர்மைன்* :

மேரி சோபி ஜெர்மைன் அவர் காலத்தில் வேலையில்லாத ஒரு பெண் என்றே அரசாங்க குறிப்புகள் குறித்த பிரெஞ்சு பெண். அவர் அற்புதமான ஆற்றல் கொண்டிருந்த கணித மேதை. பெண்களுக்கு பாடங்கள் நடத்தப்படாது என்கிற சூழலில் குறிப்புகளை மட்டும் பெற்று தேறினார் அவர் காஸ்,லேக்ராஞ்சே முதலிய கணித மேதைகள் அவரின் மேதமையால் கவரப்பட்டார்கள். லே பிளான்க் என்கிற ஆண் பெயரிலேயே அவர்களோடு முதலில் அவர் தொடர்பு கொண்டார். அவரின் எண் கோட்பாடு சார்ந்த பணிகள்,பெர்மாட் கடைசி கோட்பாட்டை பற்றிய கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. அவரின் மீள்தன்மை கோட்பாடு பாரிஸ் அறிவியல் அகாடமியின் பரிசைப்பெற்று தந்தது. அந்த கோட்பாட்டின் அடிப்படையில் எழுந்த ஒரு கட்டிடத்தில் அவரைப்பற்றி எந்த குறிப்புமே இல்லை.பட்டாம் அது ஈபிள் கோபுரம் !

*ஜெர்ட்ரூட் எலியன்* :

முனைவர் பட்டம் பெறாமலே மருத்துவத்தில் நோபல் பரிசு பெற்ற மிகச்சிலரில் ஜெர்ட்ரூட் எலியன் முக்கியமானவர். குடும்பத்தின் வறுமையில் இலவசக்கல்லூரியில் பாடம் படித்தார் இவர். வேலை செய்து கொண்டே முனைவர் பட்டம் செய்ய அனுமதியை கல்லூரி மறுக்கவே அந்த ஆசையை விட்டார். ஹிட்சிங்க்ஸ் என்பவருடன் இணைந்து மனித செல்லின் மூலக்கூறுகள், நோய் உண்டாக்கும் கிருமிகளின் மூலக்கூறுகள் இரண்டையும் படித்து அதைக்கொண்டு மருந்துகளை உருவாக்கினார். உறுப்பு மாற்றின் பொழுது நோயெதிர்ப்பை தடை செய்யும் இமுரான் ,ரத்த புற்றுநோய்க்கான மருந்தான மெர்காப்டோபியூரீன்,கீல்வாதத்திற்கான ஆலோபியூரினல் (Zyloprim),. மலேரியாவுக்கான பைரிமெத்தமைன் மூளைக்காய்ச்சல், செப்டிசிமியா மற்றும் சிறுநீர் ,சுவாசத்தட பாக்டீரிய தொற்றுகளுக்கான மருந்தான ட்ரைமெத்தொப்ரிம் இவற்றை விட மிகமுக்கியமாக ஹெச் ஐ வி சிகிச்சைக்கு பயன்படும் AZT இவரின் ஆய்வுகளின் தாக்கத்தில் உருவானது . அவருக்கு முனைவர் பட்டம் வழங்க மறுத்த கல்லூரியே நோபல் பெற்றதும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

*ஐரினா செண்ட்லர்* :

ஐரினா போலந்து நாட்டில் நர்சாக பணியாற்றிக்கொண்டு இருந்தார். இரண்டாம் உலகப்போரின் பொழுது ஜெர்மனி போலாந்தை பிடித்த பொழுது ஜெர்மனிக்கு எதிரான போராட்டங்களில் மறைமுகமாக இவர் பங்குகொண்டு இருந்தார். ஜெகோட்டா எனும் ஜெர்மனிக்கு எதிரான குழந்தைகள் பிரிவுக்கும் அவர் தலைமை தாங்கினார். இந்த ஜெகொட்டாவின் உறுப்பினர்களை கொண்டு அவர் முன்னெடுத்த செயல் சிலிர்க்க வைப்பது. ஹிட்லரின் படைகள் யூதர்களை கொன்று குவித்துக்கொண்டு இருந்தன. இருபதுக்கும் மேற்பட்ட தன் அமைப்பின் உறுப்பினர்களோடு இணைந்து போலியான ஆவணங்களை தயாரித்து 2,500 க்கும் மேற்பட்ட யூத சிறுவர்களை வதை கூடங்களில் இருந்து தப்பிக்க வைத்து அவர்களின் உயிர்களை காப்பாற்றினார் 

“மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும்” என்று பாடியுள்ளார் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை. ஆனால் மாதவம் புரிந்து பிறந்துள்ள பெண்கள் பலரும் இன்றைய சமூகத்தில் பெரும்பாலும் சமமாகவும், மரியாதையுடனும் நடத்தப்படுவதில்லை. ஆனாலும் தைரியத்தையும், நம்பிக்கையையும் ஆயுதமாக கொண்ட பெண்கள் இந்திய வரலாற்றில் வியக்க வைக்கும் பல்வேறு செயல்களை புரிந்துள்ளனர். அவர்கள் தொடங்கி வைத்தது தான் இன்று பெண்கள் பல்வேறு துறைகளில் கால் பதிக்க உதவி புரிந்துள்ளது. அந்த வகையில் சமூகத்தில் மாற்றம் வந்துள்ளது

கிட்டுர் சென்னம்மா (23 அக்டோபர் 1778 – 21 பிப்ரவரி 1829)
கர்நாடகா மாநிலம் பெல்காம் பகுதியில் உள்ள கிட்டுர் எனும் ஊரின் ராணியாக வாழ்ந்து வந்தவர் கிட்டுர் சென்னம்மா. சிறுவயதிலேயே குதிரையேற்றம், வாள் பயிற்சி, வில் வித்தை போன்ற பயிற்சிகளை பெற்றவர் இவர். கிட்டுர் சென்னம்மா சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். ஆங்கிலேயர்களின் ஈஸ்ட் இந்தியா கம்பெனிக்கு எதிராக தொடர்ந்து சண்டையிட்டு வந்த இவர், ஆங்கிலேயர்களால் சிறை பிடிக்கப்பட்டார். சிறையில் இருக்கும் போதே இறந்த இவரை கர்நாடகா மாநிலத்தின் வீர மங்கையாக மக்கள் அழைத்தனர்.


ராணி லக்ஷ்மிபாய் (19 நவம்பர் 1828 – 17 ஜூன் 1858)
வட இந்தியாவில் உள்ள ஜான்சி எனும் மாநிலத்தின் அரசியான ராணி லக்ஷ்மிபாய் ஆங்கிலேயர்களுக்கு எதிராக தொடர்ந்து கிளர்ச்சியில் ஈடுபட்டவர். இவர் வில்வித்தை, குதிரையேற்றம், தற்காப்பு ஆகியவற்றில் நன்கு பயிற்சி பெற்றவர். இந்திய சுதந்திரத்தில் லக்ஷ்மிபாயின் பங்கு அளப்பறியது. மாவீரரான ராணி லக்ஷ்மிபாயின் பெயரில் தான் பெண்களுக்கான தனிப்படை உருவாக்கப்பட்டது. 1800ஆம் ஆண்டுகளின் மத்தியில் ராணி லக்ஷ்மிபாய் தனக்கு சொந்தமாக தனியே ஒரு படை திரட்டி ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்டு வந்தார். நாட்டுக்காக தன் 30வது வயதில் உயிர் தியாகம் செய்ததால் இவர் தேசத்தின் நாயகி என அழைக்கப்படுகிறார். 

 *சுனிதா கிருஷ்ணன்*:
தனது 16 வயதிலே, ஒரு கும்பலின் கொடூர வன்புணர்ச்சி தாக்குதலுக்கு ஆளானவர். இப்போது, சமூகத்தில் வன்புணர்ச்சியால் பாதிப்படைந்த பெண்களுக்கு மறுவாழ்வளிக்கும் அரசு சாரா அமைப்பை நடத்திவருகிறார்.
சுனிதா கிருஷ்ணன் எல்லா பகுதியில் வாழும் பெண்களின் மனதிலும் ஒரு முன்னுதாரண தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த மறுவாழ்வு அமைப்பை ஏற்படுத்துவதற்கு மரண அச்சுறுத்தல்களையும் அவதூறுகளையும் சந்தித்தார்.

 *சாந்தி டிக்கா*:
சாந்தி டிக்கா, தனது 35 வயதில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான நிலையில் முதல் பெண் போர்ப்படை சிப்பாயாக இந்திய ராணுவத்தில் சேர்ந்தார்.
அவர் உடல் தேர்வின்போது, சக ஆண் வீரர்கள் அனைவரையும் தோற்கடித்தார். 50 மீட்டர் ஓட்டத்தை 12 வினாடிகளில் ஓடினார்.

*சோனி சோரி*:
சோனி சோரி ஒரு ஆசிரியை. ஆதிவாசி சமூகத்தை சேர்ந்த இவர் சட்டீஸ்கர் காவலர்களால் துன்புறுத்தப்பட்டார். இவருக்கு மாவோயிஸ்ட்டுகளோடு தொடர்பு இருப்பதாக பாலியல் வன்கொடுமை உட்பட பல தாக்குதல்களுக்கு ஆளாக்கப்பட்டார்.
ஆனாலும், இறுதிவரை அஞ்சாமல் பல மரணங்களையும் வலிகளையும் கடந்து, இன்று ஒரு அரசியல் தலைவராக உயர்ந்து நிற்கிறார்.

 *சம்பத் பல் தேவி*:

சம்பத் பல் தேவி மிகவும் தைரியமானவர். குலாபி சமுதாயத்தில் ஒரு பெண்கள் கூட்டத்தை வைத்துக்கொண்டு, அங்கு நடக்கும் குடும்ப வன்முறைகளுக்கு பிரம்பு அடியாலேயே தீர்வு கண்டுள்ளார்.
மனைவியை அடித்து துன்புறுத்தும் கணவர்கள் யாராக இருந்தாலும் அவர் திருந்தும் வரை கும்பலாக சேர்ந்து பிரம்பால் அடித்து திருத்துகின்றனர்.

இப்போது அங்கு மனைவியை கணவன் அடிக்கும் குடும்ப வன்முறை குறைந்துள்ளது இவரின் சாதனை.

 *பான்வாரி தேவி*:
ராஜஸ்தானை சேர்ந்த பான்வாரி தேவி, தனது சமுதாய மேம்பாட்டுக்காக போராடி வருகிறார். நிலம், பண்ணை அதிகாரம், ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை அஞ்சாமல் எதிர்க்கிறார்.
இதனால், மிருகத்தனமான கும்பலால் கொடூரமாக வன்புணர்ச்சிக்கும் ஆளானார். ஆனாலும், குழந்தைகள் உரிமை உட்பட்ட சமூக பிரச்சினைகளில் அவர் போர்குணம் தொடர்கிறது.

. *ரோஷினி சர்மா*:
ரோஷினி ஒரு சிறந்த பைக் பயணி. இவர் தனியாக, இந்தியாவின் தென்முனையான கன்னியாகுமரியிலிருந்து வடக்கு பகுதியான லெஹ் வரை பைக்கில் சென்று வெற்றியடைந்த முதல் இந்தியப்பெண்.
துணிவான இந்த பயணத்தில் மிகக் கடினமான மலைப்பாதைகள் பனிப்பாறைகள் ஆபத்தான பள்ளமேடுகள் என கடந்துள்ளார்.

 *இஷிதா மாளவியா*:

25 வயதுடைய இந்த இஷிதா மாளவியா, ஆண்களுக்கு மட்டுமே உரியதாக உள்ள கடல் உலாவை துணிவோடு, செய்துவரும் முதல் இந்தியப்பெண்.
கடலில் மீன்பிடிப்பது உட்பட பயணத்தை ஆண்கள் மட்டுமே செய்கின்றனர். பெண்கள் வீட்டில்தான் இருப்பர். பெண்கள் கடற்கரைக்கு செல்வது, காற்றுவாங்க, சூரியஒளி உடம்பில் விழ, அலைகளை கரையில் நின்று ரசிக்க என்று இருந்த திரைகளை கிழித்து, இவர் கடலில் துணிவோடு தொழில்செய்பவர்.
8. ஐரொம் ஷர்மிளா:
மணிப்பூரின் இரும்புப் பெண்மணி. இவர் 14 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு ராணுவமும் துணை ராணுவமும் அதிகாரங்களோடு நடத்திய அட்டூழியங்களுக்கு எதிராக போராடி வருகிறார்.
மணிப்பூரில் ராணுவ அதிகாரத்தின் கீழ் நடந்த தவறுகள் நீதிமன்ற வரையறைகளுக்கு உட்பட்டும் வெளியிலும் இருப்பதை நீதிபதிகள் மறுத்தாலும், சிவில் உரிமைகள் அடிப்படையில் அதை உறுதியாக ஏற்க மன உறுதியோடு மறுத்து எதிர்கொள்பவர்.

. *லக்ஷ்மி ஷா*:
லக்ஷ்மி தனது 15 வயதில் ஆசிட் வீச்சில் உயிர் பிழைத்தவர். அவருடைய முகம் அகோரமாக மாறியது. ஆனாலும், மனம் தளராமல் வாழ்ந்து, Chhanv என்ற அரசு சாரா அறக்கட்டளை நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார்.
ஆசிட் வீச்சால் பாதிப்படைந்த பெண்கள் வாழ்க்கையை மீட்டெடுத்து, அவர்களுக்கு வேலைவாய்ப்பு, திருமணம் போன்ற சமூக நலபணிகளை அந்த நிறுவனம் மூலம் செய்து வருகிறார்.

. *பச்சேந்த்ரி பல்*:
பெண்கள் தாங்கள் அடைய வேண்டிய லட்சியங்களை தீர்மானிப்பதற்கும் அதை எட்டுவதற்கும் சுதந்திரம் இல்லாத காலத்திலே, தானே ஒரு லட்சியத்தை உருவாக்கி தான் முயற்சியால் அதை அடைந்தும் காட்டியவர்.
1984 ல் இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியப் பெண். அப்போழுது அங்கு நிலவிய பல்வேறு குரூரமான சூழல்களை சமாளித்து எவரெஸ்ட் உச்சியை அடைந்து சாதனை படைத்தார்.

இப்பொழுது மலையேற்ற பயிற்சியை இளம்பெண்களுக்கு அளித்து வருகிறார்.

. *சுஹாசினி முலே*:
இவர் மராத்திய நடிகை, இவர் தனது திருமணத்தை தனது 60 வது வயதில்தான் செய்துகொண்டார். காலத்தோடு திருமணம் செய்துகொள்ள குடும்பத்தில் வற்புறுத்தப்பட்ட போதும், தனக்கு சரியான நேரம் என மனதில் பட்டபோதுதான் திருமணம் செய்துகொண்டார்.
அனாலும், 60 வயது காதல் மற்றும் திருமணத்துக்கு ஏற்ற வயதில்லை என்றாலும் அவர் ஒரு நடிகையாக இருந்ததால் தனக்கு பொருத்தமானதை துணிவோடு செய்தார்.

. *கல்கி கோயச்லின்*:
இவர் 'Margarita' போன்ற படங்களில் தைரியமான பெண் பாத்திரங்களில் நடித்தவர் மட்டுமல்ல, பெண்பாலின தனித்துவத்தை சிந்திக்கவும் துணிவாக குரல் கொடுக்கவும் கூடியவர்.
ஊடகங்களில் அவர் தோன்றுவது, அவருடைய செய்திகளை தெரிவிப்பதற்கில்லை. பெண்ணுரிமை, பெண்பாலின அளுமை, மற்றும் ஊடகங்களில் பெண்கள் ஒரு பொருளாக பயன்படுத்தப்படுவதற்கு எதிரான கருத்தாக்கங்களுக்காகவே. இதற்காக தனி நடிப்பு மற்றும் பாடல்கள் மூலமும் எழுச்சியூட்டி வருபவர்.

. *நந்திதா தாஸ்*:
Fire, Earth, Ramchand Pakistani போன்ற ஹிந்தி படங்களில் தைரியமான பாத்திரங்களில் நடித்தவர்தான் நந்திதா தாஸ்.
இவருடைய சிறப்பு ‘கறுப்புதான் அழகு’ என்ற உறுதியான நிலைப்பாட்டில் நடிகையாக இருந்தும் பின்பற்றியதுதான்.

வெண்மை நிறத்தில் 'Cream' பூசிக்கொள்பவர்கள் நிஜ அழகை தூசுகளால் மறைக்கிறார்கள் என்றார். முகப்பூச்சு இல்லாமலே மாநிற முகத்தோடு வலம் வந்தார்

. *சுஸ்மிதா சென்*:
சுயமான முடிவுதான் இவருக்கான பெருமை. இவர் மிகவும் பிஸியான நேரத்திலே, தனது முதல் குழந்தையை 25 வயதில் யாருடைய வற்புறுத்தலும் இல்லாமலே பெற்றுக்கொண்டார்.
அடுத்து 10 ஆண்டுகள் இடைவெளிவிட்டு இரண்டாவது குழந்தையையும் அவர் விருப்பம் போலவே பெற்றெடுத்தார்.

. *நீனா குப்தா*:
இவர் திருமணம் செய்துகொள்ளாமலே குழந்தை பெற்றுக்கொண்டவர். தன் குழந்தைக்கு தந்தை மேற்கு வங்க கிரிக்கெட் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் என்பதை தைரியமாகவும் பெருமையாகவும் 1980 களில் அறிவித்தார். இன்றுவரை அவரை திருமணம் செய்துகொள்ளாமல் தனி தாயாக வாழ்கிறார்.
நீனா குப்தா இந்திய பெண் பிரபலங்களில், திறமையும் முரட்டுத்தனமும் கொண்டவர்.

. *ஷாபனா ஆஸ்மி*:
சமகாலத்து நடிகைகள் தங்களுக்குரிய பாதுகாப்புக்கு ஏற்ப குரல் எழுப்புகையில், ஷாபனா ஆஸ்மி, படங்களானாலும் சமூக பிரச்சினைகளானாலும் தைரியமாக குரல் கொடுப்பவர்.
விருது நிகழ்ச்சிகளில் பங்குபெறும்போதும் முக்கிய பிரச்சினைகளிலும் மீடியாக்கள் உட்பட சகலரும் அவர் கருத்தை அறிய விரும்புகிறார்கள். அவரும் தான் நம்புகிற விஷயங்களில் கருத்துச் சொல்ல தவறுவதில்லை.
17. அம்ரிதா ஷெர்கில்:
இந்தியாவின் ஃப்ரிடா கஹ்லோ, இவர் ஆண்கள் மற்றும் பெண்கள் இடையிலான உறவுமுறைப் பற்றி மனம் திறந்த கருத்துக்களை கொண்டவர். மடைதிறந்த, மரபுகடந்த இவருடைய ஓவியங்களே புரட்சிகரமான பொருள் பொதிந்ததுதான்.
இவர் 1900 களில் தனது உறவுமுறையில் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகும், ஆண்களோடும் பெண்களோடும் வெளிப்படையாக காதல்கொள்வதில் தவறில்லை என வாழ்ந்தார். மரபுக்காக அதை தவறென்பதை ஏற்காமல் மனது அடிப்படையில் வாழ்ந்தார். தன் கருத்துக்களை ஓவியங்களிலும் கையாண்டார்.

. *பாராஹ் கான்*:
இந்தியாவின் பெண் பிரபலங்களில் ஒருவரான பாராஹ் கான். திருமண வயதில் மிக புகழோடு விளங்கியவர். அதனால், தனது 40 வது வயதில் ஷிரிஷ் குந்தரை திருமணம் செய்துகொண்டார்.
செயற்கை முறை கருத்தரிப்பின் (IVF- in-vitro fertilization Technique) மூலம் மூன்று குழந்தைகளை பெற்றார். இதனால், செயற்கை முறையில் குழந்தை பெற்ற முதல் இந்திய பெண் என்ற முறையில் பிரபலம் ஆனார்.

. *ரவீணா தாண்டன்*:
ரவீணா தனக்கு 21 வயதாகும் போது சாயா, பூஜா என்ற இரண்டு மகள்களுக்கு தாயானார். அது நடந்தது 1995 ல். அந்த இரண்டு மகள்களில் ஒருவர் திருமணம் செய்துகொண்டு ரவீணாவை பிரிந்தார். தனது அணுகுமுறையால், அதை வென்றுள்ளார்.

. *கொங்கொனா சென் சர்மா*:
இவர் திருமணத்திற்கு முன் கர்ப்பிணியாக இருப்பதை தனக்கு தாலிகட்ட இருந்த ரன்பீர் ஷோரேயிடம் சமுதாய வசையை பொருட்படுத்தாது, தைரியாமாக தெரியப்படுத்தினார்.
ஒரு நடிகையான இவர் சினிமாவிலும் நிஜவாழ்க்கையிலும் ஒரு பெண் என்ற அச்சமின்றி திறந்த மனதை தைரியமாக வெளிப்படுத்தியவர்.
பெண்களுக்கான வெளிச்சம்:
ஏதோ ஒரு அளவுகோலை வைத்து இந்த 20 பெண்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், பிரபலங்களை அல்லாமலும் நம் ஊர்களிலும் தெருக்களிலும் கூட திறமையான துணிவான பெண்கள் இருப்பதும் அவரவர் மனங்களில் படும்.
நம் பெண்குலத்தில் இதுபோல பட்டியலிட ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். அதை ஒப்புக்கொள்வதும் உண்மைக்கான ஒரு வெளிச்சமே!
-மருசரவணன்

 

 *விளையாட்டு* 

அதேபோல், இந்தியப்  பெண்கள் கிரிக்கெட் கேப்டன்  மிதாலி ராஜ், 16 வயதிலேயே சச்சினைப் போல் உலகப் பெண்கள் கிரிக்கெட் அரங்கில் ராஜபாட்டை செய்திவரும் வீராங்கனை ஷஃபாபி வர்மா, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, சாய்னாநேவால், பிவி சிந்து, பல உலகச் சாம்பியன்சிப் பட்டங்களை தன்வசம்படுத்திய மேரிகோம் ஆகியவர்களும் இந்தியா உலகத்தரத்தில் சாதனைப் படைத்துவருவதற்கு உதாரணமாகக் கூறலாம்.
 

ஆண்கள் கோலோச்சிக் கொண்டிருந்த சினிமாவி இன்று, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, கரின்னா கபூர், கத்ரினா கைப், தீபிகா படுகோனே, கங்கனா ரனாவத் , வித்யா பாலன், நயன் தாரா, கீர்த்தி சுரேஷ், அனுஷ்கா, அனுஷ்கா ஷெட்டி,  போன்ற சிறந்த நடிகைகள்  சிறப்புடன் செயல்பட்டு ஆண்களுக்கு நிகராகப் இதே துறையில் புகழ்பெற்று விளங்கிறார்கள். 
 
*முடிவுரை* 

இப்படி இன்று, விவசாயம், தொழிற்சாலை, ஏற்றுமதி, அழகுதுறை,அரசியல்,  நகை வடிவமைப்பு, சமூக வலைதளம், கார்ப்பரேட் உலகம், விமானம், விளையாட்டு,சினிமா, விண்வெளி, ராணுவம், காவல்துறை, கப்பல்துறை,  போன்ற எல்லாவகைத் துறையிலும் மகளிரின் பங்களிப்பு என்பது உலகிற்கு மழையைப் போன்று அளப்பரியதாக உள்ளது. வீட்டு வேலைகளை செய்வது மட்டுமல்ல பெண்கள் ஆளவும் முடியும் என்பதை நீரூபித்தும் காட்டி உள்ளார்கள். பெண்களின் கால் தடையங்கள் பதிக்காதே இடமே இல்லை அவ்வளவு சாதனைகளை படைத்து காட்டி உள்ளார்கள்.  
 

இன்னும் உலக வரலாற்றையே திரும்பி பார்க்க வைத்த வீராங்கனை பெண்கள் எத்தனையோ பேர் உள்ளார்கள். அவர்களின் வீரத்தையும் ஆளுமையும், சாதனையையும் போற்றும் விதமாகத்தான் மகளிர் தினம் மார்ச் 8ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. 

     - ஜஸூரா ஜலீல்.