நாம் யார்? 35

சிந்தனைச் சிற்பி விருது சிறுகதைப் போட்டி

நாம் யார்? 35

நாம்  யார்?

முனைவர் இரா சீதா,  இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை,  புனித பிலோமினாள் கல்லூரி, மைசுரு

உம் பேரு என்ன?
சற்றே பயத்துடன், மெலிந்த குரலில்,  ’தேவிகா’  என்றாள் அந்த சிறுமி.  மெலிந்த உடல்,  குளிரால் நடுங்கியபடியே, துண்டை இன்னும் இழுத்துப் போர்த்தி உட்கார்ந்துக் கொண்டாள்... மாடிப்படிக்குக் கீழே உட்கார்ந்தவளைப் பார்த்ததும் ரியாவிற்கு பூனை ஞாபகம் வந்தது.
சிரித்தாள் தாங்க முடியாமல்.
ஏன்  சிரிக்கிறே?  தேவிகா கேட்டாள்.
பூனை மாதி ஒக்காந்திருக்கே  நீ!
குளிருது.. 
ஏன் என்னை மாதிரி டிரஸ் போட்டுக்கலே..! –ரியா கேட்டாள்.
இது நன்னாயில்லையா?பாரு புது ஷிம்மி போட்டுருக்கேன்..
கையை விரித்துச் சிரித்தாள் ரியா ..இ..ல்..ல..!
தேவிகா என்னும் குழந்தையின் முகம் சற்று வாட்டம் கண்டது.  இரு குழந்தைகளுக்கும் சற்றேற எழு எட்டு வயதிருக்கும்.  அவ்வளவுதான்.
ஒன்று செல்வத்தில் திளைப்பது.. இன்னொன்று வேலைக்காரியின் மகள்.
சரி.. நீ ஏன் என் பேரு கேட்கல.?.
...சொல்லேன்.. சற்று கீழ்ப்பார்வை பார்த்து பேசினாள் தேவிகா.
ரியா..
அப்படினா..?


எனக்குத் தெரியாது.. அப்பாதான் பேரு வச்சாரு.. நீ அவரேயே கேட்டுக்கோ..- அதற்குள் ரியாவின் அம்மா வந்து அவளை உள்ளே இழுத்துக் கொண்டுப் போனாள். 
ஏம்மா? இப்படி பிடிக்க்ற.. கை வலிக்குது..
நீயேன் அதுகிட்டே  பேசறே.. உள்ளே வா.. அந்த பொன்னுக்கு சளி பாரு.. இருமலு வேறே.. உனக்கும் உடம்புக்கு தொத்திக்கும்..
.. அந்த பொண்ணோடே அம்மாதானேம்மா சமைக்கிறா.. எனக்கும் ஊட்டி விடறா.. அப்ப.. எனக்கு , உனக்கு, அப்பாக்கு அண்ணாக்கு...எல்லாருக்குமே

வருமேமா ,!.. நேத்திக்குகூட அண்ணாக்கு அந்த அம்மாதான் ஊட்டி விட்டாங்க...
ரியாவின் அம்மா திகைத்து நின்றாள்.. !

Dr.சீதா ராமசாமி, மைசூர்.