மண்டியிட மறுத்த நிலம்

சிறுகதை

மண்டியிட மறுத்த நிலம்

அதிகாலை கதிரவன் வெளிவரும் முன்னே கொல்லனின் பட்டறையில் அவித்து எடுத்து அச்சில் வார்த்த அகன்ற நெற்றியில் வைக்கும் வட்ட நெருப்பாய்ää காத்திருந்த காட்சியாய் ப10மி குளிர்ந்த வேளையில் மாசற்ற விடியலில் சமவெளிப் புல்லின் ஈரப்பதத்தில் உரமேறிய வெற்றுக் காலில் பாதத்தின் குளிர்ச்சி உச்சிவரை ஜில்லிடää கைகளில் உள்ள வாள் காற்றை சிதைக்க தாண்டவமாடிய உடம்பாய் கற்ற வர்மக் கலைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக வனம் அதிர வியர்வை தெரிக்க சுழற்றி ஓய்ந்து களைப்படைந்து உட்காரும் வேளையில் “உள்மனம்” எதிரிகள் எத்தனை முறை தோற்றாலும் நான் ஏன் மறைந்து திரிகிறேன் குருநாதா? எனக் கேட்டது.
இளுவிசை இயந்திர துப்பாக்கிகளையும் ஆமைபோல் அசைந்துவரும் பலம் கொண்ட பீரங்கியும் என் தினவெடுத்த ஆண்மைக்கு- முன்னால் ஒன்றுமில்லைதான். பொதுவெளியில் என் இடத்தானையும் வலத்தானையும் சுற்றி வளைந்து குடல் சரிய கண்ணுக்கு பயத்தை உண்டாக்கியதேää இப்ப நான் தனிமரம்ää என சிந்தித்தவாறு என் குதிரையின் திசையைää ஆர்ப்;பரித்து இரைச்சலுடன் நொங்கும் நுரையுமாக காட்டாறகப் பாய்ந்தோடும் நீரில் சுழற்றää ஆழத்தில் முங்கி எழும் முன் ஒற்றைப் பாறையில் என் மனம் குளிர எரியும் தேகத்தின் வேட்கையை தணிக்க ஆர அமர உட்கார்ந்து சிறிய ஓய்வுக்குப் பின் நீராடி என் குல தெய்வத்திற்கு சிறப்பு செய்து இடம் விட்டு இடம் நகர்ந்து செல்ல ஆயத்தமானேன்.
முப்போகம் விளையும் மலையடிவார மக்கள் களத்து மேடுகளில் ஆண்களும் பெண்களும் சரிசமமாக காற்றின் திசையறிந்து இடமாறி பொலி போட்டு சாவி சண்டுகளை ஒதுக்கி நெல்மணி அம்பாரக் குவியலாக திரட்டியதை வேடிக்கை பார்த்துää விலை பேச தரகர்கள் வந்து செல்வதுமாக இருக்கும் வேளையில் மறுநடுவைக்கு காணிகளை பண்படுத்தும் வேலையில் மாடுகளை ஓட்டிக்கொண்டு இருப்பதை அவ்வப்போது மாறுவேடத்தில் வந்து பார்த்துவிட்டு என் மண்ணிலும் இப்படி ஏன் இல்லை என வருந்தியதோடு காலம் கனியட்டும் எனக்கான தேசத்தை கட்டியெழுப்ப மனம் ஏங்கியவாறு ஊருக்குள் ரகசியம் அறிய வந்தேன்
குடியிருப்புகளின் கரையோர மேட்டில் அமைந்த வாழைää கரும்புää பலாக்களின் விளைச்சலின் தேவையை கவனித்தேன். மலைப்படுகைகளின் மேடு பள்ளங்களில் இருக்கும் தோப்புகளும் சமதள நிலங்களில் உழவு செய்து நெல் விளைச்சலும் எடுக்க இரவு பகல் பாராமல் மேகத்தின் தட்டுகள் பயமுறுத்தும். முகட்டு வெண்மேகங்கள் கீழிரங்கி கருங்காடுகளின் இருட்டு வனப்பில் மனித உடம்புகளில் தொட்டு உரசி இடம் மாறும் வெம்பாவின் குளிரில் ஆடுமாடு மேய்க்கும் மாட்டுக்காரனின் சத்தமும் கரைந்து செல்லும் பறவைகளின் கரைச்சலும் கலந்த காற்றானது புத்துணர்வைக் கொடுத்து கண்களை சொறுக ஓய்வெடுக்கும் இடத்தை நோக்கி எட்டு எடுக்க வைத்தது.
தெய்வங்கள் குடிகொள்ளும் இடங்கள் அச்சமூட்டும் குகைகள் நிறைந்த பனியுறையும் மேக தட்டுகள் தழுவிச் செல்லும் கரும் பாறைகள்ää சுனைகள்ää ஆறுகள் மூலிகைகள்ää கொடிய மிருகங்கள்  நிரம்பிய மையப்பகுதியாகவும் அவ்வப்போது வந்து செல்லும் மனிதக் கூடங்கள் அடர் வனப் படு;கைகளின் ஆரம்பம் அடர் காட்டுச் செடிகளின் வேலியைத் தாண்டி ஆடுää மாடு மேய்க்கும் பண்ணைகளின் அடிமைகள் காடுகளின் ரகசிய சூட்சமங்களின் சிறு பொறியினைத் தேடி அலையும் மெய்ஞான சித்தர்கள் நடமாட்டம் காட்டைப் பாதுகாத்து கொள்ளைகளை தடுக்கும் காட்டுவாசிகள்ää கூலிகளின் வேட்டைக்களமாக இயங்கியபடியே முடிவில்லா ஓட்டமாக நகர்கின்றன.
பூர்வீகமாய் குடிகொண்ட இறையருள்ää எங்கிருந்தாலும் பரம ரகசியமாய் வந்துபோகும் இடமாக கண்காணிக்கவும் அன்று சுற்றி வளைக்கவும் முடியும்தான் ஆனால் அப்படி ஏதுவும் அற்ற இடத்தில் என் பாதுகாப்பு தேடி நெஞ்சுரம் பிசகாமல் அன்பானவளின் துன்பத்தை நினைத்து வைராக்கியத்துடன் என் படைகளுக்கு ரகசிய தகவல்களை அனுப்பி வலிமையாக்கினேன்.
மண் அரிப்புகளால் வேர்க் குவியலாக உறைந்து நிமிர்ந்து நிற்;கின்ற மரங்களின் வாழ்வு பல பாடங்களை புகட்டியபடியால் வேர்களின் நழுக்கள்களில் மிதித்து நடந்து சுற்றித் திரியும் பல சமயங்களில் சூரிய மாய வர்ண முலாம் கலவைகளின் சிதறல்கள் கண்களில் புகுந்து மெய்யுணர்வைத் தூண்டி அமைதியாக ரசித்துää புல் தரைகளின் பச்சையமும் அதன் வனப்பும் என்னை குழந்தையாக நெகிழ்வாக்கியது.
அந்த நேரங்களில் என் மனம் நிரம்பியவளின் நினைவுகள் ஏக்கம் கொண்டு இன்புற்ற நாட்களை காதலை நினைத்து ஏங்கி உருகிய நிலையில் மலர்கள் நிரம்பிய இடங்களைத் தேடி அசைவற்ற தெளிந்த நீரில் தெரிவதை ரசித்துää எப்படி இருக்கிறாளோ எனக்காக அவளைப் பிடித்து விடுவார்களோ துன்பப்படுத்துவார்களோ என மனது துடித்தது. பறவை சிறகடித்து மறைவது போல் தன் உயிரை விடுவாளே அன்றி என்னைக் காட்டிக் கொடுக்க மனசு வராது. வானத்தை வெறித்தேன் நேரம் தெரியவில்லை பசி எடுத்தது.
தீண்டப்படாதவளாய் தனிமைப்படுத்திக் கொண்ட நாட்களில் என் கருகரு கூந்தலை அள்ளிமுடியாமல்ää மாளிகையின் மாடத்தில் நின்று நீல வான வென் மேகங்களை ரசித்தவாறு சொக்க வைக்கும் அடர் வண்ண மினுங்கலாக மார்புக்கு முன்னால் அள்ளிப்போட்டு தோரணையாய் கைகளால் கோதிவிடும் அழகில் சதைப்பிட்டங்களின் மென் பட்டொளிபட்ட கதிர்களின் சேர்க்கையால் வியர்வைத் துளிகளை துடைக்கும் விரல்களின் தீண்டல்களில் தசைப் பிதுக்கங்கள் அழகு.
மைதீட்டிய இமைகளின் உள்ளே தெளிந்த நீரோடையில் மூழ்கிய குண்டு குண்டான ஊதாநிற கூளாங்கற்களாய்ää கால்களிலும் கைகளிலும் அணிகளற்ற விரல்களில் எதிர்வினையாற்றும் மருதாணியின் கவர்ச்சியில்ää காதில் மினுங்கும் கடுக்கனும் மூக்கில் மின்னும் கீர்த்தியும் அழகூட்டும்.
சரசரக்கும் அடர் மஞ்சள் பட்டு புடவையின் நிறத்தை என் நிறமென்று விழுங்கும் கண்ணாடி பிம்பத்தின் நிறமேறிய ஒளியாய் என் கண்களின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலை கவிழ்ந்து செல்வோரைப் பார்த்து எனக்கும் அன்பும் கனிவும் காமமும் வெட்கமும் கலந்து தலை கவிழ்ந்த புன்முறுவல் ப10க்கும் உதடுகளின் அசைவுகளில் வார்த்தைகளின் வீச்சு நெஞ்சைத்தாக்கும்.
சில நொடிகளில் ப10த்து விரிந்து உதிர்ந்து விழும் மலர்களாய் உதடுகள் அசைய குளுமை மாறா செடியாய் கொடியாய் வசிய கண்கள் பசுமையாய் முகம் மலர காட்சியளித்து அசைவேன்.
என் தேகத்தின் மனம் மேகங்கள் தவழ்ந்து பழத்தோட்டத்தின் நடுவே துளிர்ந்து மிளிரும் மூலிகைத்தோட்டத்தின் வாசனையுடன் பனித்துகள்கள் கலந்துவரும் காற்றின் குளிர் சிதறல்களின் மனத்தைப் போல கிறங்கடிக்கும்.
எனக்குப் பிடித்த கருஞ்சிவப்பு குங்குமத்தை என் நெற்றியின் மையத்தில் இட்டதும் கணம் தாங்காமல் புருவங்கள் வளைந்து மரியாதை செய்யää என்னைப் பார்த்து பிறர் ஏங்கும் கண்களின் திரிஸ்டியைää காமத்தைää ஆசையை சத்தத்தை என் ஒரே பொட்டில் வீழச்செய்ய பருவத்தின் அடர்த்திக்கு ஏற்;ப வட்டமிட்டு உதடு கவ்வி சிரித்து மகிழ்ந்த காலம் முடிந்தது.
என் வரவை எதிர்பார்த்து அழகிய காந்தள்ää முல்லைமலர்கள் ப10த்துக் குலுங்கும் கார்காலத்துக்கு முன்னால் என்னிடம் என்னவெல்லாம் சொன்னார்ää அவரின் ஆசை மகவுகளைப் பெற்ற மனிசி மேல் அன்பு இருந்தாலும் எனக்கும் அந்த இடத்தை கொடுத்தாரோ அவரின் ராஜதந்திரம் முழுவதும் அறிவேனேää கருவிழியின் அசைவுகளின் அர்த்தம் எனக்கு மட்டுந்தானே புரியும். இந்த நெறிபிரழா ராஜ்யத்தில் ஆசானுக்குப் பின் என்னைத்தானே நம்பினார்.
அவரின் இயக்கமே நான்தானே! இந்த மண்ணின் பலநூறு தேசத்தை ஆளும் பரங்கியர்கள் இவரின் திறமைக்கு அறிவுக்கு இணையானவர்களா? இயற்கையான குணமே குறுக்கு வழிக்கு பெயர்பெற்றவர்கள்! ஏன்? பெண்கள் மூலம் அவரிடம் திறமையை காட்டுகிறார்கள். என் தேகத்தைப் பெண்கள் பார்த்து நமக்கான மனிசின்னு எண்ணினானோ? இந்த ஒற்றை மனிதனின் வீரம் எனதன்புக்கு மட்டும்தானே!
உன் ஒட்டுமொத்தப் படையும் தேடினாலும் கண்டுபிடிக்க முடியாத கள்ளன்டாää வெள்ளையனின் வெற்றியே  “பகடைக் காயாக பயன்படுத்தி வெற்றி கொள்வதே! இது எனக்குத் தெரியாதா! இந்த ஆட்டமே எங்க ஆட்டமடா! இதுக்கு நான் உடந்தையா! இதுக்கு நானே சாட்சியா! என்ன தைரியம் இருந்தால் எனக்கு சிறையாம்ää என் வீட்டில் என்னை வந்து மிரட்டுவது. போகட்டும் பார்த்துக் கொள்கிறேன். சிவனின் அருளால் கொள்ளை நோயிலிருந்து மக்களைக் காப்பாற்றும் குருநாதனின் கருணையால் சித்துக்கள் பல கற்று மீண்டு வருவார்.
என்னை பரிசிக்காமலேயே யாசகனாய் அற்;ப வயசில் போய்ச் சேர்ந்த பின் நான் ஏன் வாழ்ந்தேன்? இவருக்காகத்தானே? ஏன்? அவரின் மனைவிää மக்கள்ää படைகளை நெருங்க முடியவில்லை? ஒரு வேளை! அவர்களையும் தீர்த்துக் கட்டிவிட்டார்களா! அப்படியென்றால்ää இல்லை! அவர்களை நெருங்க முடியவில்லையா! மக்களின் பாதுகாப்பு அரணில் மக்களோடு மக்களாக கலந்து விட்டார்களா? ஏன்? எதுவும் எனக்குத் தெரியாமல் இருந்ததுää நானும் மக்களோடு மக்களாக கலந்திருப்பேனே! எல்லாம் சரி! என்னை காட்டிக் கொடுத்தது யார்? அந்த கள்ளாளி யார்?
என் மனவலிமையால் பொறுமை இழந்த நாட்கள் கசந்தன. உறவுக்காரர்கள் கம்பெனியின் கவுரவ அடிமைகளாக வாரிச் சுருட்டித் தர ஒப்பந்தகாரர்களாக இருந்த நிலையால் எனக்கான கவுரவம் படி தாண்டவில்லை. தனிமைப்படுத்தினார்கள் வேலையாட்கள் என சகலமும் மாறியது. சுதந்திரமற்ற காற்றை என் வீட்டிற்குள்ளேயே சுவாசித்து அடஞ்சு கிடந்தேன். எனக்கான உணவு முறைகள் மாற்றப்பட்டனää மறுக்கப்பட்டன. மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்தனர். மாறா மன உறுதி பாறையானது.
சில நாட்களில் என் உணவு வேளைக்கு மட்டுமே நிதானத்தில் இருக்கும்படியும் நீண்ட துயிலுரித்த இரவாக செதுக்கப்பட்டேன்.
எனக்குத் தெரியாமலேயே தூக்கத்தில் பேசும் பேச்சுக்கள் குறிப்பெடுக்கப்பட்டன. நினைவு தூண்டப்பட்டன. என் உளரல்களின் வழியே நிலப்பரப்புகள்ää இருக்குமிடத்தை கண்டறியப்பட்டு கணிக்கப்பட்டன. நய வஞ்சகத்தால் நான் தொடர்ச்சியாக தோலுரிக்கப்பட்டு ஏதுமற்ற சக்கையாக்கப்பட்டு ஆசைகள்ää நினைவுகள் ரகசியங்கள் அனைத்தும் திருடப்பட்டு வெற்றிடமாக்கப்பட்டேன்.
அதே நாட்களில்
உலகையாலும் மகாராணியின் தளபதிää அதிகாரத்தின் உச்சம் என் கையில்ää சிம்ம சொப்பனமாய் மாறிய போரிடல் பல தோல்வியால் வைசிராய்க்கு நெருக்கடிää உயிரிழந்த சிப்பாய்களின் குடும்பம் அந்தோ கதிää நவீன ஆயுதம் என் கையில்! பயிற்சி முடிந்த படைää திட்டமிட்டு கைவைக்க சமண மலையின் வழுக்கு செம்பாறையின் உச்சியில் நின்று சதுரகிரியின் அடிவாரத்தை  சந்தேகித்தேன். அகத்திய மலையின் நீர் வீழ்ச்சியைத் தாண்டி போக இடமில்லை. நிச்சயமாக பிடித்துவிடுவேன் என கர்ஜித்தேன். மாலை நேரங்களில் காட்டுக்குள் எந்தெந்த இடங்களில் புகைமூட்டமும்ää நெருப்பும் வருகிறதோ அங்கெல்லாம் கண்காணிக்க பலபேரை அனுப்பியும் வன எல்லைக்குள் நுழையவே முடியவில்லை. நாட்களை வீணாக்க விரும்பாமல் நானே மாறுவேடம் போடத் தயாரானேன்.
ஓற்றர்களின் ஒவ்வாமைத் தகவல்கள் ஒவ்வொரு தடவையும் பெருத்த ஏமாற்றத்தையளித்தது. தானே களத்தில் இறங்கி காதுவழிச் செய்திகளை அறுவடை செய்யத்திட்டமிட்டு யாருக்கும் தெரியாமலேயே பல பருவங்களை கடந்து அலைந்து திரிந்து உருமாறி காலம் கடந்தும் காத்திருந்தேன்.
தனக்கிருந்த ஏகபோக அதிகாரத்தினால் எத்தனை பெண்களையும் வளைத்துப் போட தகுதி இருந்தும் ஓர் ஏழைப் பெண்ணின் அழகில் மயங்கிää அவளின் இளம் வயதையும் மீறி ஆசைகொண்டு உள்ளுர் மணியக்காரனோடு கலந்துவிட்டேன். ஊர்காரர்கள் சந்தேகிக்கவில்லை. குறுகிய காலத்தில் நெருங்கி விட்டேன்.
தன் மனம் கவர்ந்த நினைப்புக்காரியின் வீட்டுக்கு வந்துபோன வாடை வருவதாக கசிந்த தகவலை மிக கச்சிதமாக மடைமாற்றம் செய்ய பெரிய வீட்டு பண்ணையில் நடக்கும் கசமுசா காட்சிகளை கசியவிட்டு கண்டும் காணாதது போல் மடைமாற்றம் செய்து மனிதர்களை கிளர்ச்சியற்ற ஜடமாய் இல்லாமல் அதற்கான அரணாய் பாதுகாத்து இச்சைகளை அடக்கியாளாமல் இதனால் என்ன கிடைக்கப் போகிறது. வாழும் காலத்தில் மகிழ்ச்சிதானே முக்கியம் அனுபவிக்கட்டுமே என நினைக்கும் மக்களிடம் எந்தவித ரகசியத்தையும் கறந்துவிட முடியாது என தெரிந்தும் நானே அந்தக் காரியத்தைச் செய்ய தயாரானேன்.
என் மனம் அதிக சுதந்திரம் தந்தது. அதனால் பழைய ப10ர்வீக ஜாதியில் உள்ள வசியக்காரியை கண்டடைந்து ஊடுருவினேன். இந்த உடல் மூலம் எளிய மனிதர்களின் அன்பு பாசம் கனிவு உபசரிப்பு நேர்மறையான வாழ்வு இன்பமாகக் கழிவதை தெரிந்து வியப்பாக இருந்தது.
அந்த மேட்டுத்தெரு பங்களாவுக்கு குதிரை வந்து போகிற நடமாட்டம் இருப்பதாக பொம்பளைக பேசிக்கிருதாக ஏன்? அத்தான் உங்களுக்கு குதிரை ஓட்டத் தெரியாதா? நீங்களும் ராசா மாதிரி வந்திட்டு போனா? எனக்கும் இந்த ஊருல ஒரு மருவாதி கிடைக்கும் என்கிற ஆசை இருக்கு என கலவிக்கு முந்திய கொஞ்சல்களின் நடுவே சொன்னாள். உன் ஆசையே என் ஆசையும் நிச்சயம் நான் குதிரையில் வருவேன் பார்ப்பாய். அதற்கு பிறகும் நீ எனக்கு வேணும் கடைசிவரை என அவளுக்குள் மறைந்தேன்.
அடுத்து வருவதற்குள் யார் அந்த குதிரைக்காரன் என தடயம் சேகரித்து வைää முக்கியமா உன்னை விட அழகியானு போய்ப்பாருää உன்னிடம் இல்லாதது அங்கு புதுசா வேறு எதுவும் இருக்கா? என சந்தேகி என கிளுகிளுப் பேற்றினேன். சிறு முனங்கல்களில் புன்னகைத்து கிறங்கினாள்.
அவளின் வற்றாத வனப்பை திகட்டத் திகட்ட பகிர்ந்து கொண்டாள். அதில் மூழ்கி முத்தெடுத்தேன் விரும்பிய பொழுதுகளில் வந்துபோக ஏதுவாக சிறிய மாளிகை ஒன்றை உருவாக்கி குடியமர்த்தினேன். ஓவ்வொன்றாக என் ரகசிய முடிச்சை அவிழ்த்தேன் ஒற்றனாக வந்து உறவாடியது என் முகம் நிஜத்தில் உலக மகாராணியாரின் தளபதி என்றதும் வாய்பிளந்து ப10ரித்துப்போனாள்ää கம்பீரமானாள் நான் என் பெண்மையை வீரனிடமே கொடுத்துள்ளேன் இது எனக்கான கவுரவம் தனிப்பெருமை என் வயிறு பெருக்கின்றது வாரிசு துள்ளி இன்பமளிக்கிறது என்றாள்.
நான் தேடி வந்த விடயம் கன கச்சிதமாக எந்த நாள் எத்தனை மணிää எந்தபாதை எங்கிருந்து எங்குவரை எப்படிவருவான் என்று தெரியாமலேயே எப்பேர்ப்பட்ட தப்புகளையும் மீறி கருடப் பார்வையில் மண்ணைப்போட்டு கண்கட்டு வித்தை கற்றவனாய் வந்து செல்லும் தகவலை உறுதி செய்தும் ஒன்றும் நடக்கவில்லை
சிறிய ஏமாற்றத்திற்குப் பின்
கடைசி ஆயுதமாக ஒருநாள் மேட்டுத்தெருவின் கடைசி பங்களாவை பரங்கியரின் இந்திய காக்கிகள் சுற்றி வளைத்து காவல் காத்து பரபரப்பும் பயமும் தொற்றிக்கொள்ள ராணுவமிடுக்கோடு குதிரையில் வந்து இறங்கி முகமன்னை ஏற்றுக்கொணடு வீட்டுக்குள் நுழைந்தேன்.
இந்த மண்ணை எங்களை மீறி சொந்தம் கொண்டாடும் அவர் எனக்கு வேண்டும் நீங்கள் சொல்லாதவரை ராணுவ கட்டுப்பாட்டில் இருந்து மீள முடியாது நல்ல முடிவாக சொல்லுங்கள் என உபசரிப்புடன் நடந்து கொண்டேன்.
சுற்றி வளைத்து விட்டார்கள் கையும் களவுமாக பிடித்து விட்டார்கள் என்ற சேதி கேட்ட உடன் உயிரே அற்றுப் போய்விட்டது. என் குல தெய்வத்திடம் சண்டையிட்டேன். மனமுருகி வேண்டினேன் என் கழுத்து உணர்விழந்து சொரணை இல்லாமல் போனதாய் இருந்தது. எப்படி இது நடந்தது என மண்டையைக் குடைந்தேன். பட்லர் “அம்மா” உங்கள் தூக்கத்தில் நீங்கள் சொன்ன “உளறல்கள்;” குறிப்பெடுக்கப்பட்டது. அதற்கு மேல கேட்காதீக!
“இறந்த வார்த்தையால் மனம் வெறுத்தது” எப்படி ஏமாந்தேன்! கண்ணீர் விட்டேன்! நான்தான் காரணமா கடவுளே! என்னை நம்பினாரே என் புலன்கள் என்னை மீறி செயல்பட்டதுää என் மூளை புலன்களில் வராதா! காதுக்கும் வாயிக்கும் அறிவுக்கும் என்னை மீறி எப்படி நடந்தது. என் குலம் செயிக்குமா? பாவத்தை சுமக்கணுமே! ஊர் வாயில் விழவேண்டுமே! இதுக்கு நானே அவரை என் கையால் கொலை செய்து இருக்கலாமே! என் கையாலேயே ஊர் பேர் தெரியாத இடத்தில்ää பல பேர் முன்னிலையில் எதிராளியின் வெற்றிக்களிப்பில் இந்த மண்ணுக்கான போராட்டத்தில் துப்பாக்கியை முத்தமிடுவாரா? இல்லை... பீரெங்கியின் குண்டுகளுக்கு உடல் சிதற நடந்துவிடுமோ! இல்லை... சுறுக்குக் கயிறுக்கு முத்தமிடுவாரோ.. எதுக்காக இது! இந்த மண்ணின் மீது காதாலா?... என் மீது காதலா?... இந்த மக்கள் மீது காதலா?... யாருக்காக இந்தப் போராட்டம்ää இந்த அவமானம்ää தலைகுனிவு? இங்கு வராமல் என்னைப் பார்க்காமல் இருந்திருந்தால் இவரை நெருங்க முடியுமா? எத்தனை வெற்றியை கொடுத்தவர்? ஆயுதங்கள் மாறியதும் வீரம் மண்டியிடுமா? இதுதான் கடைசி ஆயுதமா? நயவஞ்சகத்தால் என்னை தோற்கடித்து அவரை ஜெயிப்பது இதுதான் உன் ஆயுதமா இதுதான் காலத்தின் அறமா? நான்... நான்... அய்யோ... கையிலும் கழுத்திலும் இரும்பு வளையங்களால் பின்னப்பட்ட பிணைப்பை சுமந்தபடி குதிரையின்மேல் அமர்ந்து எந்தவித சோர்வுமின்றி மார்புமுடிகள் சிலிர்க்க தலைமுடியை அள்ளி முடிந்தபடி தன் மழிக்காத மீசையை தடவியபடி சீற்றம் கொண்ட செறுமலுடன் மண்டியிடாத பார்வையுடன் அழைத்து வரப்பட்டபோது ஜன்னல் கம்பிகளின் வழியேஎன் கண்கள் அதை பார்த்து நம்ப மறுத்தது.
தேவையா? என் உயிர் என்னைவிட்டுப் போகும் முன் அவர் உயிர் காப்பாற்றப்பட வேண்டும்ää என்ற உறுதியோடு தளபதியாரிடம் பேசவேண்டும் என வேண்டுதல் வைத்தேன் நிரகரிக்காமல் ஆங்கல சிப்பாய்களின் ஓய்வு நேரத்தில் என்னை சந்திக்க நேரம் கொடுத்ததை பயன்படுத்தி முழுசக்தியையும் பயன்படுத்தினேன்.
நீங்கள் கேட்கும் கப்பம் பொன்பொருள்; எங்கள் மண்ணைத் தவிர ஓப்படைக்க அவரிடம் பேசுகிறேன்...என் மன்னிப்பற்ற விடுதலை என்ற கோரிக்கையை எந்தவித கேட்பதுவும் இல்லாமல் நிராகரிக்கப்பட்டன.
என் கோரிக்கைகளுக்கு பதில் வெளிரிய பார்வைகள் மட்டுமே “ஒன்றுமற்ற பார்வைகள் மட்டுமே” உறவாடியது. ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட நடக்கப்போகிற காட்சிகள் தளபதியின் கண்களில் தெரிந்தது.
அவருக்கான கடைசி  ஆசையைச் சொன்னால் நிறைவேற்றுகிறேன் என பதில் வந்தது. உடைந்து நொறுங்கினேன். மவுனங்கள் கடந்து... இனி நடப்பது என் கையில் இல்லை என்ற முடிவில் மண்டியிடாத புன்னகையுடன் அவரின் முகத்தை கடைசி தடவை நினைத்துப்பார்த்துவிட்டு அவரின் உயிரை கொடுமைப்படுத்தாமல்ää துடிதுடிக்காமல்ää நீண்ட அவஸ்தை இல்லாமல்ää கத்தியின்றி ரத்தமின்றி உங்கள் வெற்றி கொண்டாட்டமில்லா நிகழ்வாக! அவருக்கு தெரியாமலேயே ஐம்ப10தங்கள் பார்க்காத வண்ணம் வதைக்காமல் சிதைக்காமல் கவுரவமாக தூக்கத்திலேயே பிரியாவிடை கொடுங்கள்....ம்...கடைசியா சொல்கிறேன் தளபதியாரே இந்த மண்ணின் வேராக...நாங்கள் துளிர்ப்போம்...காத்திருங்கள்.


                                                           கபிலன் சசிகுமார்,
                                                             சங்கரன்கோவில்,
                                                               9952533779.