முத்தமிழ் வித்தகர் அண்ணா...! 025

அறிஞர் அண்ணா அறிவுச்சுடர் விருது கவிதை போட்டி

முத்தமிழ் வித்தகர் அண்ணா...!  025

முத்தமிழ் வித்தகர்

காஞ்சிபுரத்தில் பிறந்த
கலைநயம் கொண்டவரே
முத்தமிழின் சொத்தான முத்தமிழ் வித்தகரே

தமிழகத்தின் முதலாவது
முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவே
தென்னாட்டு வெர்னாஷா எனவும் அழைக்கப்பட்டவரே

சிந்தனைச் சிறப்பும்
ஆழ்ந்த புலமையுமுள்ளவரே
எழுத்தாழுமை கடமை கண்ணியத்தாலும் உயர்ந்தவரே

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு 
என்றுரைத்தவரே
தலைசிறந்த பேச்சாளரும் எழுத்தாளரும் கதையாசிரியரும் ஆனவரே

அடுக்கு மொழியால்
அன்னைத் தமிழுக்கு
அமுது ஊட்டி
அழகு பார்த்தவரே

மதராஸ் மாநிலத்தை
தமிழ்நாடென பெயரிட்டவரே
தமிழக வரலாற்றில்
நீங்கா இடம்பிடித்தவரே

நலப்பணிகளையும் சமூதாய
சீர்திருத்தங்களையும் செய்தவரே
திராவிடநாடு எனும்தலைப்பில்
தமிழ் இதழ் வெளியிட்டவரே

புத்தொளிவீசும் புத்தகம் இலட்சிய வரலாறு பேசிட
பாவைப் பயணம்
பலவழி காட்டியதே

மெரினா கடற்கரையில்
அண்ணா சதுக்கத்தில்
நினைவலைகளோடு துயின்றாலும் என்றும்

 நினைவுகள் மக்கள் மனதோடு மணம் பரப்பி வாழ்ந்து கொண்டிருக்கிறதே

கிருஷ் அபி, இலங்கை.