பெரியார் கவிதை

பெரியார் பிறந்த தினம் கவிதை

பெரியார் கவிதை

பெரியார் பிறந்த தினக் கவிதை


கிழக்கே உதித்தக்   
       கதிரவன் ஒளியே                                
உலகின் இருளை      
        அகற்றியது சரியே

பாரதத்துத் தெற்கே
     பிறந்திட்ட ராமசாமியே
பகுத்தறிவு ஒளியை
       பரப்பியது முறையே

ஆசாமி பசியிலிருக்க
       சாமிக் கெதற்கு
சாம்பார் சாதம்
      சர்க்கரைப் பொங்கல்

நினைத்துப் பார்க்கச்
     சொன்னாரே பார்ப்பனரையும்
கிடைத்திட்டத் தயிர்சாதம்
      கிடைக்காது போயிடுமோ

என்றுணர்ந்து எதிர்த்தாரே
      எதிரியாவும் சித்தரித்தே
புரிந்துணர்வு இல்லாமல்
     கொடிபிடித்தார் சிலபேரும்

ஈரோட்டில் உதித்த
    ஒளியிதுவே எங்கிலும்
தாரோடு போகுமிடம்
      போய்ப்பரவிய விந்தையே

அண்ணாவையும் இணைத்தாரே
      அருங்கலையால் விந்தைகள்
பலபுரிந்திடவே திக்கெங்கும்
       பகுத்தறிவைப் பரப்பினாரே

கள்ளினது மோசத்தால்
      கடையடைக்கச் சொன்னாரே
தன்வீட்டுத் தென்னந்தோப்பை
     வெட்டியே சாய்த்தாரே

வெண்தாடி வேந்தரென
     மெய்யன்பர் மொழிந்தனரே
சிந்தனைச் சிற்பியாக
    சிறப்பம்சம் கண்டாரே

பெண்களுக்கு நீதிவேண்டி
     சமூகநிலை உயர்த்திடவே
பெருங்குரல் கொடுத்த
     மாமனிதர் இவரிங்கே

பெரும்வியாதி பிடித்தாலும்
     கொண்ட கொள்கை
மாறாது வாழ்ந்தாரே
      மனிதர்தரம் உயர்த்தினாரே.

கு.கதிரேசன்
திருச்சி.