நான் வியந்த கவிஞர் வைரமுத்து...

வைரமுத்து பற்றிய கவிதை...

நான் வியந்த கவிஞர் வைரமுத்து...

 

1.கருப்பாய் இருந்து
காந்தமாய் ஈர்த்தவரே...
2.கரும்பா தித்திக்குதே
உங்க  பேச்சு..
3கற்கண்டு தித்திப்புதானே உங்க மனசாட்சி.
4கிராமத்து மண் வாசன தானே
5கவியால கூட்டிட்டு போயிடும் மாயக்காரனே...
6கருவாச்சி காவியமா...
கருத்தா அள்ளிவப்ப...
7தெருவோரம் இருந்தாலும் அசைபோட   இழுத்திடுவ...
8துள்ளி  விளையாடும் அற்புத மானாய்...
9.அள்ளிப் பருக தோனுதய்யா நாளும்..
10.ஆனந்த வெள்ளத்தில்  மிதக்க வைக்குதைய்யா...
11.ஆத்தா பாசத்த அப்படியே சொல்லிடுவ..
12.காத்தா போர மனுசனோட  மரணத்தை உணரவப்ப...
13.வயக்காட்டு வரப்பு வனப்பு காட்டிடுமே...
14.வைரவரிதான் வைரமுத்துவென அழகா சொல்லிடுமே...
15.அணையா வெளக்கு போல இருக்குதய்யா...
16அழியா காவியமே    உங்க படைப்பைய்யா...

 முனைவர் செ.ஆயிஷா,பல்லடம்