அன்பெனும் நதி..

புதுக்கவிதை

அன்பெனும் நதி..

அன்பென்னும் நதியில் 
நனைகின்ற பொழுது
பட்டாம்பூச்சியாய் பறக்குதே  
மனது
கை நிறையப் பூக்கள்
அமர்ந்து போ தேவனே
மகரந்தச் சிறகினில்
மயங்குது என் ஜீவனே

கடந்து போகும் ஒற்றை மேகம்
சிலிர்ப்பை வழங்கும் மணியின் நாதம்
சாரல் வீசும்    மாலைத் தென்றல் 
சாய்ந்து  துயிலும் நிலவின் பேரெழில்
இதில் எதில் தான்      நீ இல்லை 
என் அன்பே?

நீ இல்லை என்றால்
 நான் என்னாவேன் சொல்?
வானில் முளைத்த 
ஒரு விண்மீனாவேன்
உன்னை மறந்த  நாளில்
தரையில் உதிர்வேன்

நனைந்த பறவை உலர்த்தும் சிறகு
அணையத் துடிக்கும் சுடரின் அழகு
நெளிந்து போகும்  நதியின் நகர்வு
துள்ளும் மீனின்   கொள்ளை வனப்பு
இதில் எதில் தான் நீ இல்லை அன்பே?

 நீ இல்லை என்றால்
 நான் என்னாவேன் சொல்?
நீ இல்லையென்றால்
நானிருப்பேனா?
அதை நினைப்பதற்கும்
நான் உயிர்த்திருப்பேனோ?

தங்கேஸ்