மீசைக்கார பாரதி..! 010

தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி

மீசைக்கார பாரதி..! 010

மீசைக்காரர் பாரதி..

கண்ணியமான தமிழ் மகன்/
வீரத்திருமகன்/
ஆண்மையின் அடையாளமாம்
கட்டுமீசைக்கு‌ சொந்தக்காரர்/

கண்களில் ஒளி கொண்டவர்/
கண்ணியம் தவறாதவர்/
கண்ணனுக்கு காதலன்
கண்ணமாவின் நாயகன்/
தேசப்பற்றை தெருக்கோடி
மக்களுக்கும் தெரியும்படி
தெளிவாக கவி மூலம்
கருத்துரைத்தவர்/
தமிழை செழிக்கவைத்தவர்/
பெண் அடிமையை 
அடியோடு வெறுத்தவர்/
"நரைகூடி கிழப்பரும்பெய்தி
வெறும் கூற்றுக்கு இரையாகிபோவேனோ"-என்று தமக்குதாமே "அறம்"-பாடியவர்/

"காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கின்றேன் ...
காலருகே வாடா! சற்றே 
உனை மிதிக்கிறேன்"-
என்று கூறி மரணத்திற்கு அஞ்சாதவர்/

வாழ்க பாரதியின் புகழ்!
வாழ்க தமிழ்!

கவிப்புயல் தி.கோமதி
வேளச்சேரி
சென்னை.