தமிழும்.. பாரதியும்..009

தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி

தமிழும்.. பாரதியும்..009

தமிழும் பாரதியும்

சின்னாசி ஐயருக்கும்,இலட்சுமி அம்மாளுக்குமே 

எட்டயபுரத்தில் பிறந்திட்ட அறிவுச் சுடரே 

 ஏழு வயதிலே கவிதையால் கர்ஜித்தவரே 

பதினொரு வயதிலே கவிபாடும் ஆற்றலாலே 

மன்னரால் பாரதி பட்டத்தை சூடிப்பெற்றவரே 

புகழ் ஓங்க வந்ததே பாரதியார் 

எனும் சிறப்பு பெயரே இவருக்கு 

ஒம்பது வகுப்புவரை படித்த மேதையே 

தமிழ் அறிஞ்சர்களோடும் ,பண்டிதர்களோடுமே 

சொற் போரில் சுதந்திரமாய் ஈடுபட்டவரே 

இதுவே இவர் தமிழ் பணிக்கோ 

வித்திட்டு வளர்ச்சியை கொடுத்த விதைகளே 

சீமையில் வசித்தவர்களையே புலமையாலே வியக்கவைத்தவரே 

நவீன தமிழ் கவிதைகளுக்கு தந்தையே 

மீசை கவஞ்சன் என்று அன்பாயே 

அழைக்கப்பட்ட தமிழ் தென்றல் இவரே 

நூற்றாண்டுக்கு முன்பே தன் கவிதைகளாலே 

தமிழ்,தமிழர் நலன் ,பென் விடுதலை,

தீண்டாமை போன்றவற்றிற்கு உரக்கச் சொன்னவரே 

தேசத்திக்கே தேசிய கவிஞனாய் உருவாகிவரே 

எழுத்துக்களுக்கு உயிர் ஊட்டி எழுத்தாளரானவரே 

எட்டுத்திசைக்கும் புகழ் பரவிட பத்திரிகையாசியரானவரே 

பெண்ணுரிமைக்கு குரல் கொடுத்த தாயே 

எழுத்துக்கள் மூலமாய் மக்கள் மனதிலே 

விடுதலை உணர்வை ஊட்டிய மன்னனே 

    -ஜஸூரா ஜலீல்
    மலேசியா .