பாரதி

பாரதியார் நினைவு தினம் கவிதை

பாரதி

பாரதி
 நீ பாரத கவி மட்டுமா? 
அல்ல... அல்ல பார்கவி
ஆம் 
இந்த 
பாரின் கவி வித்தக கவி நீ! வியப்பின் விளிம்பு நீ!

தீர்க்கதரிசி நீ! ஆம்,

அடிமை காற்றின் சுவாசத்தின் போதே

ஆனந்த சுதந்திரம் பெற்றோம் என்று கவி பாடிய

தீர்க்கதரிசி நீ!

அக்கிரஹாரத்து அதிசயம் நீ!

சுயமரியாதைக்காய் பதவி துறந்த பகலவன் நீ

காக்கை குருவியோடு உறவாடிய எங்கள்

இயற்கை காதலன் நீ!

புதிய ஆத்திசூடி மட்டுமல்ல புதுமை பெண் என புதுஇலக்கணம் தந்த புதியவன் நீ!

இன்றே கூட ஆயிரம் ஆணவ கொலைகள் இருப்பினும் நூற்றாண்டு முன் சாதி விலங்கு

உடைத்து எறிந்த இமயம் நீ!

நூறாண்டு என்ன நூறாண்டு

நீ இன்னும் வாழ்வாய் பல்லாண்டு

உன் பாவால் பல்லாயிரத் தாண்டு!

எட். பிரியதர்ஷினி
உதவி பேராசிரியை, 
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி), 
திருநெல்வேலி.